07302021வெ
Last updateபு, 28 ஜூலை 2021 10am

சனல் 4 ஆவணத்தில் 5 நிமிடங்களை நீக்கியது யார்? நீக்கியது ஏன்? (முழுமையான வீடியோக் காட்சியை பார்க்க)

இதுவெல்லாம் யாரை முட்டாளாக்க!? பாவம் தமிழ்மக்கள். இலட்சக்கணக்கானவர்கள் பார்த்து இதுதான் முழுமையான காட்சி என்று நம்பிய காட்சிகளில் 5 நிமிடங்களில்லை.

இந்தப் போர்க்குற்ற ஆவணத்தினைத் தயாரிக்க இதன் பின்னணியில் இருந்தவர்கள், இந்தக் குற்றத்துக்கு எதிரான சிங்கள இனத்தைச் சேந்தவர்கள் தான். அவர்கள் இராணுவத்திடம் இருந்து சேகரித்த, யுத்தத்தின்  பின்னணியில் அரங்கேறிய காட்சிகள் தான் இந்த ஆவணத்துக்கு வலுச்சேர்கின்றது.

 

புலிகள் நடந்ததை மூடிமறைக்க, காட்சிகள் ஆவணமாக ஆக, இதை வைத்து பிழைக்க முனைகின்றனர். ஆவணத்தின் ஓரு பகுதியை நீக்கி, மக்களை ஏய்த்துப் பிழைக்க  முனைகின்றனர்.

இப்படி புலி ஊடகங்களை நம்பி வாழும் வரை, உண்மைகள் புதைக்கப்படும். தமிழ் மக்களின் வாழ்வு புதைக்கப்படும். இதுதான் கடந்தகாலத்தில் நடந்தது. அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராகவே திட்டமிட்டு இதை அரங்கேற்றுகின்றனர். தமிழ் மக்களை முட்டாளாக்கும் "அறிவுஜீவிகள்", 5 நிமிடம் தமிழ்மக்கள் பார்க்கக் கூடாத காட்சியாக கருதி அவற்றை நீக்கியிருக்கின்றது.

மகிந்த குடும்பம் மட்டும் இதைப் பொய்யாக்க உரைக்கவில்லை. புலிகளும் தான் 5 நிமிடம் நீக்கியதன் மூலம் இதை பொய்யாக்குகின்றனர்.

மக்களைப் பணயம் வைத்து பலியிட்டவர்கள், சரணடைய வைத்து கொன்றவர்கள், போர்க்குற்றத்தை செய்தவர்கள், தொடர்ந்து மக்களை முட்டாளாக்கிப் பிழைக்கின்றனர். மக்கள் முன் வேஷம் போடுகின்றனர். அதை நீங்களே பாருங்கள்.

பி.இரயாகரன்
16.06.2011


1. முழுமையான காட்சி 48 நிமிடம் 40 செக்கன் (பார்க்க  வீடியோ காட்சியை)

2. புலிகள் ஊடகங்கள் சனல் 4 காட்சியில் 5 நிமிடங்களை நீக்கியே தமிழ் மக்களுக்கு காட்டியது. இக் காட்சி 43 நிமிடம 40  செக்கன் கொண்டது. (பார்க்க  புலி காட்டிய வீடியோ காட்சியை)


பி.இரயாகரன் - சமர்