05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழ் தேசியத்தை கவிழ்த்தது கம்யூனிச பூதமாம்- முகப்புத்தக உரையாடல்

குமரன்:

எஞ்சி இருக்கும் புலிகளின் வலை அமைப்பையும் துடைத்த்ழிக்கும் ஒப்பரேஷன்..

"ஒபரேஷன் கொனொக்! புலிகளை முற்றாக அழிக்க முழுச் சதி: அதிரடி ரிப்போர்ட் !

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1813

குமரன் :

ஐ.நா அறிக்கையில் இது தொடர்பாக இரண்டு முக்கிய விடயங்கள் கூறப்பட்டிருந்தது

1. விடுதலைப் புலிகள் மக்களைக் பணயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது, இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காகவும் மக்களைக் காக்கவும் தம்முயிரைப் பணயம் வைத்த ஆயிரமாயிரம் போராளிகளின் 30 வருட தியாகம் தூக்கி எறியப்பட்டது.

 

 

2. புலம்பெயர் நாட்டில் உள்ள மக்கள் விடுதலைப் புலிகளுக்கு கண் மூடித்தனமான ஆதரவை வழங்கினார்கள் எனபது, இதில் இலங்கை மக்களைப் படுகொலை செய்வதற்குதவிய எந்த நாடும் குறிப்பிடப்படவில்லை, மாறாக விடுதலைக்கு உதவிய புலம்பெயர் மக்கள் இப்போது நாடு நாடாகக் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

3. விடுதலைப் போராட்டத்துக்கென புலம்பெயர் சமூகத்தால் சேகரிக்கப்பட்ட பணம், சொத்து எல்லாம் இலங்கையில் உள்ள மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும், என்று ஐ.நா அறிக்கையில் கூறவைக்கப்பட்டதன் பின்னணி தான் இப்போது விடுதலைப் புலிகளின் சகல வலைஅமைப்பும், நிதிசார் நடவடிக்கையும் நெதர்லாந்தின் பெயரால் உலகின் வல்லரசொன்றால் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

குமரன்:

இந்தத் திட்டத்தின் இன்னொரு பரிமாணம் தான் நாடுகடந்த தமிழீழ அரசு, விடுதலைக்காகப் போராடும் மக்களின் அத்தனை சக்தியையும் நம்பிக்கையையும், சட்ட ரீதியான அங்கீகார மாயையையும் ஒரே இடத்தில் குவிக்கப்பண்ணி ஒரு கட்டத்தில் அதை அப்படியே அழித்துவிடுவது தான் அது. western sagara விடுதலைப் போராட்ட அமைப்பு மொறாக்கோவுக்கெதிராக இப்படித்தான் போராடியது, ஆயுதப்போராட்ட மன நிலையில் நின்றவர்களுக்கு நாடுகடந்த அரசு என்கிற மாயைப்பால் ஊட்டி அவர்களை அரசியல் நோக்கி நகர்த்தினார்கள், இந்தியாகூட இவர்களுக்கு தம்முடைய நாட்டில் தூதரகம் அமைக்க உதவியது, எல்லாம் சிறிது காலம் தான், காலம் வர எல்லாம் சத்தமில்லாமல் மூடப்பட்டது, ஏன் பஞ்சாப்பில் உள்ள காலிஸ்தானுக்கும் நாடுகடந்த அரசு உருவாக்கப்பட்டது என்ன ஆனது அதற்கு..?.ஆக விடுதலைப் போராட்ட இயக்கங்கள் எதுவுமே உலகில் இருக்கக்கூடாது என்ற அமெரிக்க ஐரோப்பிய சீன, இந்திய ஏன் வல்லாதிக்க சக்திகளின் சிந்தனை இப்போது ஈழத்தமிழர் விடயத்தில் மிக வேகமாக அமுல்படுத்தப்படுகிறது.

அரசன் :

ஏற்கனவே இந்த உண்மையை கூறியவர்களை "கோடரிக் காம்புகள், தமிழினத் துரோகிகள்" என்று திட்டித் தீர்த்த குமரனா இப்படிப் பேசுகிறார்? நம்பவே முடியவில்லை.

அரசன் :

கம்யூனிச வெறுப்பினால், எடுத்ததெற்கெல்லாம் சீனா, ரஷ்யாவை குறை கூறிக் கொண்டிருந்த தமிழ் தேசியவாதிகளுக்கு இப்போது தான் ஞானம் பிறந்திருக்கிறது.

தரன் :

இதே விடயங்களை கொஞ்ச காலத்துக்கு முன்னர் உங்களுடைய பதிவொன்றிலேயே நாம் விவாதித்தோம். அப்போது எம்மை முடிந்தவரையில் துரோக முத்திரை குத்தியும் ஏளனம் செய்தும் பலர் ஆர்ப்பரித்தார்கள். இப்போது உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன....

அண்மையில் கூட ஐ. நா அறிக்கை யின் இந்த பரிமாணம் பற்றிச்சொன்னபோது, வழக்கம் போல நாடோடிப்பாடகன் ஓடிவந்து இடதுசாரிகளே இப்படித்தான் என்றும், தீர்வை முன்வையுங்கள் என்றும் என்னைப்பார்த்துக்கேட்டார்.

ஐ நா அறிக்கையின் உள்ளார்ந்த அரசியல்கள், அதன் வரலாற்றுப்பின்னணி பற்றித் தோழர் அஸ்வத்தாமா தொடர் ஒன்றை எழுதுகிறார்.

அதனைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

தரன்:

நான் மிகவும் அழுத்திச் சொல்லவிரும்பும் விடயம் இதுதான், உண்மைகளை எவர் முதலில் சொன்னார் என்பதில் பெரிதாகப் பெருமைப்பட ஒன்றுமில்லை. முதலில் ஒரு விடயம் பற்றி நாம் கூறிய கருத்து தவறெனக்காணும் இடத்தில் அதனைத் திருத்திக்கொள்வது மிகச்சிறந்த அறிவின் நேர்மை. குமரன் உண்மையொன்று தனக்கு உவப்பானதாய் இல்லாவிட்டாலும், அது உண்மை என்பதற்காக ஏற்றுக்கொள்வாரானால் அவரை நான் போற்றி வணங்குவேன்.

ராசன் :

கொடுமைய பாருங்க அண்ணா. நாங்க முன்னாடி சொன்னோம் பின்னாடி சொன்னோம் நீங்க கேக்கல என்று இவர்கள் நீட்டி முழங்கும் நிலை வந்துவிட்டது. நீங்கள் போட்ட ஒரு ஸ்டேடஸ் மெசேஜ். ... இவனுங்க என்னைக்கு உண்மையை பேசி இருக்கிறார்கள்? இதில் நாங்கள் முன்னமே உண்மை... கூறினோம் என்று கூறி பெருமை பட ஒன்றுமில்லை என்று வேறு சொல்கிறார்கள்... இதுவரை நீங்கள் போட்ட எத்தனையோ செய்திகளுக்கு கருத்து கூறாதவர்கள்.. இந்த செய்திக்கு ஓடி வந்து கருத்து கூறுகிறார்கள்... அவன் அவன் ஒரு பாதையில் பயணிக்கட்டும்.. நாம் ஒரு பாதையில் பயணிப்போம்.. இனி இவர்களை போன்ற _____ வாய்க்கெல்லாம் அவல் போடாதீர்கள்...

ஆதித்தன்:

அதிர்வு செய்து கொண்டிருக்கும் குழப்பங்கள் பற்றி நீங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். எந்த அரசியலுமின்றி வெறுமனே சார்பு நிலைப்பாடுகளை செய்து மக்களை பிளவுபடுத்தும் அல்லது மக்களின் மனங்களில் நிலையற்ற தன்மையை உருவாக்கி விடுதலை பற்றிய சிந்தனைகளை குழப்பும் உளவியல் ரீதியான புலனாய்வுகளும் இப்படியான செய்திகளிளால் செய்யப்படுவதுண்டு. அதிர்வு மற்றும் தமிழ் ஊடகங்களின் நிலை பற்றி விரைவில் பதிவாய் இடுகிறேன். ஊடகங்கள் எமது தலமை இல்லை என்பதையும் விடுதலைக்கான பயணத்தில் இந்த ஊடகங்கள் மக்களுக்காக செயற்படுவதுமில்லை என்பதை தயவு செய்து எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். எல்லா விடையங்களையும் ஊகித்து சொல்வதற்கு அல்லது ஆதாரமற்று சொல்வதற்கு அதிர்வு கண்ணன் ஒன்றும் ஊடகவியலாளனோ அல்ல ராஜதந்திரியோ அல்ல. வெறுமனே இணையம் நடாத்தும் ஒரு நபர் மட்டுமே......

அரசன் :

கடந்த வருடம், கைது செய்யப்பட்ட செய்தியை அதிர்வு உட்பட பல தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வந்தன. நெதர்லாந்தின் உள்துறை அமைச்சு இணையத்தளம் வெளியிட்ட செய்தி இதோ. போர்க்குற்றங்களை விசாரிக்கும் போலிஸ் பிரிவு இவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிட...த் தக்கது. The National Crime Squad today arrested four suspects again, in a major investigation into illegal activities of the Tamil Tigers in the Netherlands.

http://www.om.nl/onderwerpen/oorlogsmisdaden/nieuwsberichten/@153708/opnieuw_aanhoudingen.../

Financial or economic support of this organization is prohibited.

The National Crime Squad seeks tips and witnesses on the activities of the Tamil Tigers. This requires a special phone number opened: 0800 to 6070. On the internet a web site is opened, where information can be given to the police. www.nationale-recherche.nl/தமிழ்ச

ஆதித்தன், இந்த செய்தியை தமிழர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கூறுகிறார். அப்போது தானே இன்னும் பல தமிழர்களை கைது செய்ய முடியும். குமரன் இப்போதாவது உறக்கத்தில் இருந்து விழித்து விட்டார். ஆதித்தனும், ராசனும் தூக்க மாத்திரை கொடுத்து தமிழர்களை உறங்க வைக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களது சேவை, சிறிலங்கா அரசுக்கு தேவை.

ஆதித்தன்:

எதையும் நம்ப சொல்லியோ நம்ப வேணாம் என்று சொல்வதோ எங்கள் நோக்கமல்ல. மாறாக கைதுகளும் அதன் பின்னணியுயும் குறித்த முரண்பாடுகளை அதாவது அதன் பின்னணியில் ஒரு வல்லரசு இருக்கிறது. அது தான் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது என்ற பூச்சாண்டி அரசியல்கள் தேவை இல்லை என்று சொல்கிறேன். நண்பரே.... காட்டிக் கொடுப்புகளும் குழிபறிப்புகளும் அதிகம் கொண்ட தமிழ் இனத்திற்கு வல்லரசு ஒருத்தன் வந்து புலிகளை தேடி பிடிக்கிறான் என்ற வல்லூறுத்தனமான கதைகள் இந்தியாவை காப்பாற்றுவதற்கும் தமிழ் மக்களை குழப்புவதற்குமே அன்றி வேறெதுவுமில்லை. தவிர விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு விடுதலை என்ற மாத்திரையை தவிர வேறெந்த மாத்திரையும் தெரியாது தெரியாது போக கொடுப்பதையெல்லாம் குடிப்பதற்கு தமிழ் மக்கள் ஒன்று டக்களசின் அரசியலில் வளர்ந்தவர்களல்ல... ..

ராசன்அண்ணா, நாடு கடந்த தமிழீழ அரசு மாயை என்கிறீர்களா?

அரசன்:

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கியது, சிறிலங்கா அரசின் உளவாளியான கேபி. இப்போதும் அது இலங்கைப் புலனாய்வுத் துறையால் இயக்கப்படுகின்றது என்று சந்தேகிக்கப்படுகின்றது. இதன் காரணமாகத் தான் அதற்குள் பிளவு ஏற்பட்டது.

ராசன்:

அண்ணா நீங்களும் வீணாப்போன அரசனும் ஒரே நேர்கோட்டில்??

குமரன்:

நண்பர்களே நான் இதில் குறிப்பிட்ட வல்லாதிக்க சக்திகள் என்ற சொற்பதத்துக்குள் கம்யூனிச நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் இருக்குதென்பதையும் நான் குறிப்பிட்டிருக்கிறேன், நான் தான் குறிப்பிட வேண்டும் என்பதுமில்லை, இதில் நான் என்ன விசயத்தை சொல்லி இருக்கிறேன் என்று விளங்காமால் நான் தான் முதலில் சொன்னேன் இப்போது தான் இவர் விளித்திருக்கிறார் என்ற விளல் பேச்சுகளை முதலில் விடுங்கள், உலக வல்லாதிக்க நாடுகள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து எம்முடைய இனத்தைக் கருவறுத்தன, இன்னும் கருவறுத்துக் கொண்டிருக்கின்றன எனபதைத்தான் எனக்கும் கிடைத்த சில தகவல்களை வைத்து நான் இதில் பகிர்ந்து கொண்டேன். உங்களது ஈழவிடுதலை எதிர்ப்பு நிலைப்பாடு இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, இதில் உங்கள் புலி எதிர்ப்பு நிலைப்பாடு எதனை நான் இதில் சொல்லி இருக்கிறேன். இத்தனை கால போராட்டத்தையும், தியாகத்தையும் அழித்த உலக வல்லாதிக்க சக்திகள் எஞ்சி இருக்கின்ற எம்முடைய பிள்ளைகளின் செயற்பாடுகளின் வலையமைப்பையும் பல தந்திரங்கள் வழியாக அழிக்கின்றார்களே என்ற கவலையின் ஆதங்கம் தானே இது. வேறேன்ன, உலக வல்லாதிக்க சக்திகள் எமக்கெதிராக செயற்படுகின்றன என்று செய்தி போட்டவுடன் உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட புழுகம் தாங்காமல் எழுந்த பேச்சுக்கள் தான் இவையே தவிர வேறொன்றும் இல்லை. இதில் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக உங்களால் சொல்லப்படுவது போன்றதான ஒரு கருத்து இருக்கிறதா காட்டுங்கள்.., இது புரியாமால் நான் அவர்களுடைய கோட்டில் நிற்கிறேன் என்று பேசுவது அருவருக்கத்தக்கது. நான் நடந்து வந்த பாதையையும், நடக்கப் போகிற பாதையையும் நான் நன்கு அறிவேன்.

குமரன்:

‎////ஏற்கனவே இந்த உண்மையை கூறியவர்களை "கோடரிக் காம்புகள், தமிழினத் துரோகிகள்" என்று திட்டித் தீர்த்த குமரனா இப்படிப் பேசுகிறார்? நம்பவே முடியவில்லை//

.///என்ன இதில் சொல்லி இருக்கிறேன் விடுதலைப் போராட்டத்துக்கெதிராகவா கருத்துச் சொல்லி இருக்கிறேன், ஒரு கதையை இன்னொன்றாக மாற்றிப் பிழைப்பது உங்களுக்கு மட்டுமே கைவந்த கலை, எம்முடைய விடுதலைப் போராட்டத்துக்கெதிராக செயற்படுவோரை நான் விமர்சித்திருக்கிறேன், இல்லை என்று சொல்லவே இல்லை, விமர்சிப்பேன் நிறுத்தப் போவதும் இல்லை, அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு, ஈழ விடுதலைப் போராட்டம் அழிய வேண்டும் என்ற உங்களுடைய கனவுக்கும் கருத்துநிலைப்பாட்டுக்கும், இதில் பகிரப்பட்டுள்ள செய்திக்கும், சொல்லப்பட்ட செய்திக்கும் என்ன தொடர்பு. இந்தச் செய்தியில் எம்முடைய விடுதலைப் போராட்டம் நசுக்கப்படுகின்றதே என்ற ஆதங்கம் இருக்கிறது. உங்கள் செய்திகளில் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, எப்படி உங்களால் இப்படியெல்லாம் ஆட்டுக்குள் மாட்டைக் கொணர்ந்து கட்ட முடிகிறது, உலக வல்லாதிக்க சக்திகளால் எம்முடைய போராட்டம் எப்படிப்பட்ட ராஜதந்திர வழிகளால் நசுக்கப்படுகின்றது என்று இதில் சொல்லி இருக்கிறேனே தவிர உங்களுடைய தனிப்பட்ட விடுதலைப் போராட்டத்துக்கெதிரான நிலைப்பாடு எதுவும் இதில் சொல்லப் படவில்லை, எம்முடைய போராட்டம் இன்று வரை உலக அரசுகளால் நசுக்கப்படுகிறது என்று சொல்வது உங்கள் போன்ற விடுதலைப் போராட்ட எதிர்ப்பு நிலைப்பாடா என்ன..? இது புரியாமல் ஒரு தோழர் நானும் அவரும் ஒரே கோட்டில் என்று வேறு சொல்கிறார்.

அரசன்:

//வல்லாதிக்க சக்திகள் என்ற சொற்பதத்துக்குள் கம்யூசிச நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் இருக்குதென்பதையும் நான் குறிப்பிட்டிருக்கிறேன், //

சீனாவும், ரஷ்யாவும் முதலாளித்துவ நாடுகளாகி இருபது வருடங்கள் கடந்து விட்டன. இப்போதும் அவற்றை கம்யூனிச நாடுகளக குறிப்பிடும் உலக அரசியம் ஞானம் புல்லரிக்க வைக்கிறது. அடிப்படையே தவறு. வல்லரசுகள் வேறு, வல்லாதிக்க சக்திகள் வேறு. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லாதிக்க சக்திகளுக்கு நிகராக சீனா, ரஷ்யாவை வைத்து பார்க்க முடியாது. இரண்டாவது தவறு.

//உலக வல்லாதிக்க நாடுகள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து எம்முடைய இனத்தைக் கருவறுத்தன, இன்னும் கருவறுத்துக் கொண்டிருக்கின்றன, எனபதைத்தான் எனக்கும் கிடைத்த சில தகவல்களை வைத்து நான் இதில் பகிர்ந்து கொண்டேன்.//

நாற்பது வருடங்களுக்கு முன்னர் தமிழ்தேசியவாதிகள் இதே வல்லாதிக்க சக்திகளை நம்பித் தான் தமிழீழம் கேட்டார்கள். தமிழீழம் இன்னொரு இஸ்ரேலாக, இன்னொரு சிங்கப்பூராக மாறும் என்று வல்லாதிக்க சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக பேசினார்கள். திருகோணமலையில் இருந்து பிரிட்டிஷ் வல்லாதிக்க சக்தியின் கடற்படை தளம் அகற்றப்பட்டபொழுது, பிரிட்டனை ஆதரித்தார்கள். அப்போதெல்லாம், உலக வல்லாதிக்க நாடுகள் எம்முடைய இனத்தை கருவறுக்கும் என்று தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியாதாம். இலங்கையில் இனப்பிரச்சினை தொடருவதும், சிறிலங்கா அரசும், புலிகளும் முப்பது வருடங்களாக மோதிக் கொண்டதும் வல்லாதிக்க நலன்களுக்கு உட்பட்டது என்பது இவர்களுக்கு தெரியாதாம். வல்லாதிக்க சக்திகள் இரண்டு பக்கமும் தட்டிக் கொடுத்து ஆதரித்தார்கள் என்பது இவர்களுக்கு தெரியாதாம்..

குமரன்:

முன்னுக்கு பின் முரணாய்க் கதைக்க உம்மைவிட இங்கே யாரும் இல்லை, முதல் இடுகையில் கம்யூனிச வெறுப்பால் சீனா, ரஸ்யாவை தமிழ்தேசிய வாதிகள் வெறுக்கிறார்கள் என்கிறீர், பின்னைய பதிவில் சீனா, ரஸ்யா கம்யூனிச நாடுகள் கிடையாது அவை முதலாளித்துவ நாடுகள் என்கிறீர், உம்முடைய அறிவு வாந்தி வரவைக்கிறது, உம்முடைய அனேகமான பதிவுகளில் சீனா, ரஸ்யா கம்யூனிச நாடுகள் என்பதற்காக வக்காலத்து வாங்கி இருக்கிறீர், இப்ப்போது நீரே அவை முதலாளித்துவ நாடுகள் என்கிறீர், அப்ப நீர் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறீரா..? அல்லது நீர் சொன்னது போல சீன, ரஸ்யா முதலாளித்துவ நாடுகள் என்று வைத்துக்கொண்டால் அந்த முதலாளித்துவ நாடுகளை எதிர்க்கும் தமிழ்த்தேசியவாதிகளை எதிர்க்கிறீரா..? கம்யூனிச நாடுகளை எதிர்த்தாலும் எதிர்க்கிறீர், முதலாளித்துவ நாடுகளை எதிர்த்தாலும் எதிர்க்கிறீர், ஆக உம்முடைய ஒரே கொள்கை கொடுத்த காசுக்கு மேலாக தமிழ்த்தேசியவாதிகள் என்ன சொன்னாலும் அவர்களை எதிர்ப்பது.மேலும் பார்க்க

அரசன் :

எல்லாவற்றையும் "ஈழவிடுதலை எதிர்ப்பு, புலி எதிர்ப்பு" என்று சிறுபிள்ளைத் தனமாக சிந்திக்கிறீர்கள். ஈழவிடுதலைப் போராட்டம் முற்றுமுழுதாக வல்லாதிக்கத்திற்கு சார்பான வலதுசாரித் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதனை புலிகளின் தலைவர் பிரபாகரனே மறுக்கவில்லை. தமிழீழம் திறந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் என்று, பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.

நீங்கள் வல்லாதிக்க ஆதரவை எதிர்பார்த்து ஈழப் போராட்டம் நடத்தினால், இறுதியில் அவர்களின் ஆணைகளுக்கு அடிபணிய வேண்டி இருக்கும். நோர்வே மத்தியஸ்தம் வகித்த சமாதானப் பேச்சுவார்த்தை தான், தமிழர்களுக்கு வல்லாதிக்க சக்திகள் வழங்கிய இறுதிச் சந்தர்ப்பம். "இலங்கை அரசும், புலிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காண வேண்டும். புலிகள் மீண்டும் போருக்கு செல்வதை நினைத்துப் பார்க்க கூடாது. அப்படி போர் தொடங்கினால், நாம் சிறிலங்கா அரசை ஆதரிப்போம்." என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாக அறிவித்தார். கனடிய அரசு, கனடாத் தமிழர்களை அழைத்து இதே கருத்தைக் கூறியது. அப்போதே நீங்கள் உறக்கத்தில் இருந்து விழித்திருக்க வேண்டும். இது விழல் கதை அல்ல, நண்பரே. அப்படிக் கூறுவீரானால், இப்போதும் உண்மை தெரிந்தும் உணர மறுக்கிறீர்.

குமரன்:

ஆமாம் அது தான், அவர்கள் புலிகளை பேச்சுவார்த்தையில் இருந்து விலக வைத்தார்கள், அல்லது ஒரு கட்டத்தில் தம்மைச் சுற்றி நடப்பதை உணர்ந்து விலகினார்கள், அல்லது விலகுவதற்கு ஏற்ப மனநிலையை உருவாக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன, யாரும் யாரையும் நம்பவில்லை, போராட்டத்தை நிறுத்துங்கள் பேச்சுவார்த்தைக்குப் போங்கள் என்று கத்தியதும் உங்களைப் போன்ற ஒன்றும் புரியாதவர்கள் தான், உண்மை இன்றல்ல என்றோ தெரியும் அதை நன்றாக நாம் உணர்ந்தும் இருக்கிறோம், அது சரி விடுதலைப் போராட்டத்தை விரும்பாத உலக வல்லாதிக்க சக்திகள் எம்மை பல சூழ்ச்சிகள் மூலம் அழிக்கிறார்கள் என்று நான் சொன்னதற்கும், விடுதலைப் புலிகளே அல்லது அவர்களால் நடாத்தப்பட்ட விடுதலைப் போராட்டமே அழிக்கப்பட வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாடுக்கும் என்ன சம்பந்தம். நீர் தான் விதண்டாவாதமாகப் பேசவேண்டும் என்பதற்காக என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறீர்.

அரசன்:

இந்த செயற்பாடுகளும், வலையமைப்புகளும் சீனாவிலோ, ரஷ்யாவிலோ இருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் தான் இருந்தன. பல நாடுகளில் பகிரங்கமாக செயற்பட அனுமதித்தார்கள். கொடி பிடிக்கவும், கூட்டம் போடவும் தடை செய்யவில்லை. நிதி சேகரிப்பது கூட ஆதரவாளர்கள் மட்டத்தில் நடந்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. பல வருடங்களுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தார்கள். அது புலிகளை சமாதான பேச்சுவார்த்தைக்கு கொண்டு செல்வதற்கான நெருக்குவாரம் மட்டுமே. அன்று அதனை யாரும் புரிந்து கொள்ளவில்லை. மேற்கத்திய நாடுகளின் திடீர் கைது நடவடிக்கைக்கு பின்னர் தான் உங்களுக்கு நிலைமை புரிகின்றது.

நண்பரே. வல்லாதிக்க சக்திகள் தமிழீழம் பெற்றுத் தரும், அல்லது தமிழீழத்திற்கு ஆதரவானவை, என்று கடந்த நாற்பது வருடங்களாக நம்பினீர்கள். அதைத் தான் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றீர்கள். ஏகாதிபத்தியம் (வல்லாதிக்கம்) என்றால், இவ்வளவு காலமும் "சிங்கள ஏகாதிபத்தியம்" என்று தான் பேசி வந்தீர்கள். இப்போது தான் மேற்குலக வல்லாதிக்க சக்திகள் உங்கள் கண்களுக்கு தெரிந்தனவா? "வல்லாதிக்க சக்திகள் பிரிவினையை ஆதரிக்கவில்லை, சிறிலங்கா அரசு கவிழுவதையும் விரும்பவில்லை. தமது நலன்களுக்காக சிங்களவர்களையும், தமிழர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன." என்று நாங்கள் வருடக்கணக்காக பேசி வருகிறோம். அப்போது அதனை மறுத்தீர்கள். இப்போது நீங்களாகவே அதனைக் கூறுகின்றீர்கள். மேலும் பார்க்க

குமரன்:

இந்த செயற்பாடுகளும், வலையமைப்புகளும் சீனாவிலோ, ரஷ்யாவிலோ இருக்கவில்லை. // ஏனெனில் சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் கொடி பிடிக்கவோ கூட்டம் போடவோ கூட விடமாட்டார்கள், சீனாவின் மனித உரிமையின் தன்மை எல்லாம் தெரிந்த உமக்கு இது தெரியாததல்ல, அவர்கள் அப்பட்டமாகவே இலங்கை அரசின் முகவர்கள் போலச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள், இவ்வளவு நடந்த பின்னாலும் கூட, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை தோற்கடித்தது மேற்கு நாடுகள் அல்ல, இவர்கள் தான், அடிப்படை மனித உரிமையை பின்பற்றும் ம்னப்பாங்கோ,அல்லது விடுதலைப் போராட்டம் குறித்து பேசுவதை செவி மடுக்கவோ கூட இவர்கள் இடமளிப்பதில்லை, எத்தனையோ கம்யூனிச நாடுகளிடம் இது பற்றி விளக்க முயன்ற போது அவர்கள் அதைச் செவி மடுக்கக்கூடத்தயாராய் இருக்கவில்லை, பிடல் கூட..,

அரசன் :

‎//தமிழ் மக்கள் தங்களது தலைவிதியை உங்கள் கைகளில் ஒப்படைத்திருப்பது போல நினைத்துக் கொண்டு பேசுகின்றீர்கள். இங்கே உங்களது கருத்தை மட்டுமே தெரிவிக்கின்றீர்கள்.... அது சரியா, பிழையா என்று தமிழ் மக்கள் தீர்மானிக்கட்டும். ஏதோ, நீங்கள் மட்டும் தான் விடுதலைக்கு ஆதரவானவர் என்பது போன்ற அதிமேதாவித்தனமான பதில்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஈழ விடுதலைப் போராட்டம் அழிய வேண்டும் என்று எதிர்பார்த்ததும், அதற்கான செயல்களில் இறங்கியதும் வல்லாதிக்க சக்திகள். இதை நீங்கள் தான் கூறினீர்கள். நாங்கள் அந்த வல்லாதிக்க சக்திகளின் சுயரூபத்தை ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தோம். அப்போது நீங்கள் நம்ப மறுத்தீர்கள்". எங்களுடைய கனவு, கருத்து நிலைப்பாடு இதுவென்று" நீங்களாகவே தீர்மானித்து விடுகின்றீர்கள். நன்றி. ஈழப்போராட்டத்திற்கும், அதனை வலதுசாரிப் பாதையில் கொண்டு சென்ற வல்லாதிக்க ஆதரவாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அரசன்:

‎//எம்முடைய போராட்டம் இன்று வரை உலக அரசுகளால் நசுக்கப்படுகிறது என்று சொல்வது உங்கள் போன்ற விடுதலைப் போராட்ட எதிர்ப்பு நிலைப்பாடா என்ன..? //

ஆக்குவதும், அளிப்பதும் வல்லாதிக்க சக்திகளின் செயல். இந்த அரசியல் அடிப்படையை புரிந்து கொள்ளாததால் தான்... இந்த குழப்பம். இலங்கையில் வல்லாதிக்க ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, அவர்களே போராடச் சொல்லி ஆதரவளிப்பார்கள். பின்னர் தேவை முடிந்த பின்னர் அவர்களே அழிப்பார்கள். சதாம் ஹுசைன், பின்லாடன் போன்ற பலர் வல்லாதிக்க சக்திகளால் ஆதரவளிக்கப்பட்டு, பின்னர் அழிக்கப்பட்டார்கள். இந்த உண்மையை நீங்கள் எப்போதோ புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஈழப் போராட்டத்திலும், இந்தியா ஆயுதம் வழங்கி ஆதரித்ததும், பின்னர் அதே இந்தியா அழித்ததும் நடந்துள்ளன. ஈழப்போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறிக் கொள்வோர், வல்லாதிக்க சக்திகளின் பகடைக் காய்களாக மாறக் கூடாது. அதைச் சொன்னால், விமர்சிப்பேன், எதிர்ப்பேன் என்று துள்ளுவது, உங்களது அரசியல் வங்குரோத்துத்தனத்தைக் காட்டுகின்றது.

அரசன் :

‎//நான் சீனா, ரஷ்யாவை கம்யூனிச நாடுகள் என்று எங்கே குறிப்பிட்டேன்? நீங்கள் தான் மறுபடிய.ம் கம்யூனிச நாடுகள் என்ற வார்த்தையை பிரயோகித்தீர்கள். தமிழ் தேசியவாதிகள், சீனா, ரஷ்யாவை கம்யூனிச நாடுகள் என்று இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் மனதில் குடி கொண்டுள்ள கம்யூனிச வெறுப்பு தான், நண்பரே.

அரசன் :

//அது சரி விடுதலைப் போராட்டத்தை விரும்பாத உலக வல்லாதிக்க சக்திகள் எம்மை பல சூழ்ச்சிகள் மூலம் அழிக்கிறார்கள் என்று நான் சொன்னதற்கும், விடுதலைப் புலிகளே அல்லது அவர்களால் நடாத்தப்பட்ட விடுத்லைப் போராட்டமே அழிக்கப்பட வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாடுக்கும் என்ன சம்பந்தம். //

மீண்டும் எனது நிலைப்பாடு இது தான் என்று, நீங்களாகவே தீர்மானிக்கின்றீர்கள். விடுதலைப்புலிகள் குறித்த நிலைப்பாடு எடுப்பதற்கு நான் ஒரு வல்லாதிக்க நாட்டின் பிரதிநிதி அல்லவே. ஈழ விடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பு தலைமை தாங்க வேண்டும் என்று, இந்தியா உட்பட பல வல்லாதிக்க நாடுகள் விரும்பின. ஆரம்பத்திலேயே ஈழப்போராட்டம் வலதுசாரி முதலாளித்துவப் பாதையில் போக வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. நீங்களும் அதைத் தானே பிரதிபலிக்கின்றீர்கள்.

அரசன் :

//ஏனெனில் சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் கொடி பிடிக்கவோ கூட்டம் போடவோ கூட விடமாட்டார்கள், சீனாவின் மனித உரிமையின் தன்மை எல்லாம் தெரிந்த உமக்கு இது தெரியாததல்ல//

அங்கேயெல்லாம் விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழ் மக்கள் தான் வாழ்கின்றார்கள். அப்படி இருப்பவர்களும் வசதியாக வாழ்வதில்லை. அது தான் முதல் காரணம்.

அந்த நாடுகளில் கொடி பிடிக்க, கூட்டம் போட விட மாட்டார்கள் என்று எதை வைத்துக் கொண்டு கூறுகின்றீர்? ரஷ்யா கம்யூனிச நாடாக இருந்த காலத்திலேயே பாலஸ்தீனர்கள் கூட்டம் போட்டார்கள், நிதி சேகரித்தார்கள். அந்த நாடுகளின் நலன்களுக்கு எதிராக இல்லாத யாரும், கொடி பிடிக்கலாம், கூட்டம் போடலாம். மேற்கத்திய நாடுகளிலும், அரசுக்கு எதிரானவர்களை, பிரிவினை கோரும் சக்திகளை அடக்கினார்கள். இப்போதும் அடக்கி வருகிறார்கள். அமெரிக்காவில் அல்கைதாவை ஆதரித்து கூட்டம் போட அனுமதி கொடுப்பார்களா? புலி ஆதரவாளர்களும், தமிழ் தேசியவாதிகளும் மேற்கத்திய நலன்களுக்கு எதிராக செயற்படவில்லை. அதனால் தான் அவர்களை அடக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இறுதிக் கட்டத்தில், அவர்கள் எதிர்பார்த்த வண்ணம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாததால் தான் அடக்க கிளம்பினார்கள். இதற்கு முன்னர், ஈரானியர்கள், குர்த்தியர்களுக்கும் எதிராக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போதே வல்லாதிக்க சக்திகளின் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்..

அரசன் :

//அவர்கள் அப்பட்டமாகவே இலங்கை அரசின் முகவர்கள் போலச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள், இவ்வளவு நடந்த பின்னாலும் கூட, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை தோற்கடித்தது மேற்கு நாடுகள் அல்ல, இவர்கள் தான்,//

சர்வதேச அரங்கில் நடக்கும் வல்லரசுப் போட்டி உங்களுக்கு புரியாத விடயம். எல்லோரும் தங்களது நலன்களை பற்றியே சிந்திக்கின்றார்கள். மனித உரிமைகள், போர்க்குற்றம் எல்லாம் அந்த நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தான். நீங்கள் நல்லவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் மேற்கு நாடுகள், எதற்காக இஸ்ரேலிய அரசின் முகவர் போல செயற்பட வேண்டும்? எதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை தோற்கடிக்க வேண்டும்?

அரசன் :

எத்தனையோ கம்யூனிச நாடுகளிடம் இது பற்றி விளக்க முயன்ற போது அவர்கள் அதைச் செவி மடுக்கக்கூடத்தயாராய் இருக்கவில்லை, பிடல் கூட..,//

நாங்கள் எப்போதும் கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருப்போம். மேற்குலக விசுவாசிகளாக இருப்போம். ஆனால், கம்யூனிச நாடுகள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

அரசன் :

//சீன, ரஸ்யா முதலாளித்துவ நாடுகள் என்று வைத்துக்கொண்டால் அந்த முதலாளித்துவ நாடுகளை எதிர்க்கும் தமிழ்த்தேசிய வாதிகளை எதிர்க்கிறீரா..? //

இதற்குப் பெயர் தான் விதண்டாவாதம்.

குமரன்:

அரசன் , நீங்கள் சீனாவும் ரஸ்யாவும் கம்யூனிச நாடுகள் அல்ல அவை முதலாளித்துவ நாடுகள் என்று திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள், இந்த உலகத்துக்கு கம்யூனிச சித்தாந்தத்தை கொணர்ந்த முக்கிய நாடுகளான இவையே இன்று முதலாளித்துவ நாடுகளாக மாறி இருக்கின்ற என்றால்... கம்யூனிசம் என்பது முதலாளியாக மாறுவதற்கான ஒரு ஏறுபடிதானா..? அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை இனிமேல் சீன முதலாளித்துவக் கட்சி என்று அழைக்கலாமா..? நானாக எதையும் சொல்லவில்லை நீங்கள் சொன்ன கருத்தின் அடிப்படையில் இருந்து எனக்குள் எழுந்த கேள்விகளையே கேட்கிறேன், சரி இவற்றை விடுவோம், 21 ம் நூற்றாண்டில் கண் முன்னே மிகப்பெரிய இனப்படுகொலை நடந்திருக்கிறது, நடந்த போது தான் எந்த நாடுகளுமே தட்டிகேட்கவில்லை, நடந்த பின்னராவது மனித உரிமைக்காக மனித உரிமையை விடுங்கள் ஒரு அடிப்படை மனிதாபிமானத்துக்காகவாவது ஒரு கம்யூனிச நாடு ஒரு பேச்சுக்கேனும் இதைக் கண்டித்திருக்கிறதா...? மாறாக கொலையாளிகளை இப்போதும் நியாயப்படுத்துகிறது, ஏதேனும் ஒரு கம்யூனிச நாடாவது மனிதப்படுகொலை என்ற அடிப்படை மனிதாபிமான ரீதியில் கண்டித்திருந்தால் சொல்லுங்கள்..? ஒரு கம்யூனிச நாடு போதுமானது, விடுதலைப் போராட்டத்தை அழிக்க வேண்டும், விடுதலைச் சிந்தனை உடைய இன்னும் எஞ்சி உள்ள அது சார்ந்த அமைப்புக்களையும் அழிக்கவேண்டும், என்று தன்னுடைய பிராந்திய நலனுக்காக முதலாளித்துவ நாடுகள் செயற்படுகின்றன என்று வைத்துக்கொண்டால் கம்யூனிச நாடுகள் எந்த நலமெடுப்புக்காக இனப்படுகொலையை கண்டிக்காததுடன் இலங்கையை ஆதரிக்கின்றன...? மீண்டும் பிராந்திய நலனுக்காகவே முதலாளித்துவ நாடுகளால் மனித உரிமைக்கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், அந்த நேரத்தில் அங்கிருந்த பழைய, புதிய கொம்யூனிச நாடுகள் எந்த நலனை நோக்காகக் கொண்டு கொலையாளியைக் கூடத் தண்டிக்க முடியாதபடிக்கு எதிராக வாக்களித்தன..? இப்படிப்பட்ட சித்தாத்தங்களை உடைய இசம் என்ன மயித்துக்கு எமக்கு..? எனக்குத் தெரிந்ததெல்லாம் இது தான் எம்முடைய விடுதலையை வென்றெடுக்கக் கூடிய வழிகளை நாமே தான் உருவாக்க வேண்டும், அதை போராடித்தான் பெற்றாக வேண்டும், இதைவிட வேறு எந்த வழியிலும் எமக்கான விடுதலை சாத்தியமாகாது. நாம் பெற்ற அனுபவங்களை வைத்து இந்த இசங்களை விட்டுத்தள்ளி விட்டு இனியேனும் ஏமாறாமல் எல்லோரும் சேர்ந்து மண்ணின் விடுதலை என்ற ஒன்றுக்காக கருத்து வேறுபாடிருந்தாலும் கொள்கை வேறு பாடில்லாமல் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்பதே இந்த நீண்ட உரையாடல் வழியாக நான் உங்களைக் கேட்டுக் கொள்வது.

அரசன் :

குமரன், ரஷ்யா, சீனா எவ்வாறு கம்யூனிசத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறின என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. அவற்றை எல்லாம் நீங்கள் பார்த்திருந்தாலும், தெரியாதது போலக் கேட்பீர்கள். என்ன இருந்தாலும், ...கம்யூனிச வெறுப்பு என்பது கூடப்பிறந்த குணமல்லவா?

//21 ம் நூற்றாண்டில் கண் முன்னே மிகப்பெரிய இனப்படுகொலை நடந்திருக்கிறது, நடந்த போது தான் எந்த நாடுகளுமே தட்டிகேட்கவில்லை, நடந்த பின்னராவது மனித உரிமைக்காக மனித உரிமையை விடுங்கள் ஒரு அடிப்படை மனிதாபிமானத்துக்காகவாவது ஒரு கம்யூனிச நாடு ஒரு பேச்சுக்கேனும் இதைக் கண்டித்திருக்கிறதா...? //

உலகில் இருக்கும் தேசியவாதிகள் எல்லோரும் தங்கள் இனத்தவர்கள் கொல்லப்படும் நேரத்தில் பாவிக்கும் சொற்கள் இவை. இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இனப் படுகொலைக்கு பிறகு, அந்தச் சொல் எழுந்தமானமாக பலரால் பயன்படுத்தப்படுகின்றது. இஸ்ரேலில் அரபு இனப்படுகொலை நடந்ததாக பாலஸ்தீன அரேபியர்கள் கூறுவார்கள். ஆனால், நீங்கள் அதனை கவனத்தில் எடுக்க மாட்டீர்கள். இவ்வாறே காஷ்மீர் இனப்படுகொலை, குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை, காங்கோ இனப்படுகொலை, சூடான் இனப்படுகொலை.... இவையெல்லாம் சமீப காலத்தில் நடந்த இனப்படுகொலைகள் தான். காங்கோவில் 5 மில்லியன் மக்கள் இறந்ததை 21 ம் நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை என்று குறிப்பிடலாம். ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் உங்களுக்கு அக்கறையோ, வருத்தமோ ஒரு நாளும் இருந்ததில்லை. தமிழர்கள் இனப்படுகொலையான காலத்தில், கம்யூனிச நாடுகள் என்ன செய்து கொண்டிருந்தன? என்று நியாயம் கேட்கக் கிளம்பி விடுவீர்கள். நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சிந்திப்பதால் தான், உலகம் புரிவதில்லை. மேற்குறிப்பிட்ட இனப்படுகொலைகள் பற்றி எல்லாம் சர்வதேச மட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. வரலாற்றில், உலக நாடுகள் மத்தியில் ஒரே மாதிரியான கருத்தொற்றுமை இருந்ததில்லை. அதற்குக் காரணம், வல்லரசு நாடுகள் தமது நலன் குறித்து மட்டுமே சிந்திக்கின்றன. எந்தவொரு சித்தாந்தமும் சாராத பூகோள அரசியல் இது. அது அமெரிக்காவாக இருந்தாலும், சீனாவாக இருந்தாலும் ஒன்று தான்.

இஸ்ரேலில் நடந்த பாலஸ்தீன இனப்படுகொலை நீங்கள் அறியாததல்ல. ஐ.நா.வில் இனப்படுகொலை செய்த இஸ்ரேலிய அரசை அமெரிக்கா ஆதரிப்பதும், உங்களுக்கு தெரியும். அதற்காக நீங்கள் அமெரிக்காவை எதிர்த்துப் பேச மாட்டீர்கள். ஏனென்றால், அது உங்களது வர்க்க குணாம்சம். உங்களது வருமானத்திற்கும், நீங்கள் அனுபவிக்கும் வசதியான வாழ்க்கைக்கும், அமெரிக்க விசுவாசம் அவசியமானது. அமெரிக்கா இறுதியுத்தம் முழுவதும் இலங்கை அரசுக்கு துணை நின்றது. செய்மதிப் படங்களை வழங்கி உதவியது. இஸ்ரேல் வழங்கிய விமானங்கள், யுத்த கப்பல்கள் தமிழ் மக்களை கொன்று குவித்தன. இதையெல்லாம் நீங்கள் கண்டு கொள்ள மாட்டீர்கள். இனப்படுகொலையில் துணை நின்ற இஸ்ரேலையும், அமெரிக்காவையும் தமிழ் மக்கள் வெறுக்க வேண்டுமென்று கூற முடியாதவாறு நாக்கு ஒட்டிக் கொள்ளும். ஆயுத சந்தையில் இலங்கை நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர் என்பதை கண்ட பிறகு தான், ரஷ்யாவும், சீனாவும் ஆயுதங்களை விற்க ஆரம்பித்தன. நீண்ட காலமாக ஆயுத விற்பனை செய்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு போட்டியாகத் தான் அவை வந்தன. சந்தையில் நிலவும் வியாபாரப் போட்டி, ஐ.நா. வில் எதிரொலிக்கிறது. இதற்கு கம்யூனிச முலாம் பூசுவது, உங்களது வக்கிர புத்தியை எடுத்துக் காட்டுகின்றது.

குமரன்:

நான் ஈழ இனப்படுகொலயைப் பற்றி பேசினால் நீர் உலகில் நடந்த இனப்படுகொலைகளை நாங்கள் ஏன் கண்டிக்கவில்லை எனக்கேட்கிறீர்,/// உலகில் இருக்கும் தேசியவாதிகள் எல்லோரும் தங்கள் இனத்தவர்கள் கொல்லப்படும் நேரத்தில் பாவிக்கும் சொற்கள் இவை// நீர் தேசிய வாதி ...இல்லைத் தான் விடும், நீர் எந்த இனம் என்றாவது தெரிந்து கொள்ளலாமா..?, நீர் ஒருவேளை வேற்றுலக வாசியோ..? எப்படி தமிழ் எழுதப்பழகினீர்..? ஆச்சரியம் தான் எல்லாமே..? அரசன் உங்களைப் போல் உலகில் உள்ள அனைத்து சமூகங்களின் விடுதலைக்காகவும் ஒரே நேரத்தில் போராடும் கெட்டித்தனம் எமக்கில்லை. எனக்கிருக்கிற சக்திக்கு என் இனத்தின் விடுதலைக்காக மட்டுமே என்னாலும் என் போன்ற சகோதரர்களாலும் போராட முடியும், ஏனெனில் எங்கள் வாழ்க்கைக் காலத்தில் நாங்கள் இணையத்தில் மட்டுமே நின்று போர் புரியவில்லை,////நீங்கள் அமெரிக்காவை எதிர்த்துப் பேச மாட்டீர்கள். ஏனென்றால், அது உங்களது வர்க்க குணாம்சம். உங்களது வருமானத்திற்கும், நீங்கள் அனுபவிக்கும் வசதியான வாழ்க்கைக்கும், அமெரிக்க விசுவாசம் அவசியமானது./// நான் ROYAL FAMILY ஐச் சேர்ந்தவன் என்பதையும் இப்போது எங்கள் உறவு முறைக்காரர்களான பிரித்தானிய மகாராணி குடும்பத்தின் பக்கிங்காம் பலசில் தான் வாழ்ந்து வருகிறேன் என்ற தகவலையும் உமக்கு யார் சொன்னது..? நான் வாழ்ந்த வாழ்வு என்னவென்பதையும் வாழுகிற வாழ்வு என்ன என்பதையும் உமக்குச் சொல்லுமளவுக்கு இந்த உரையாடல் வழி உம்மைப் புரிந்ததில் இருந்து நீர் ஒன்றும் அதற்கு அருகதையான ஆள் என்று நான் கருதவில்லை, ராசன் நீர் ஒரு வெத்து வேட்டு என்று சொன்ன போதும் அதைக் கவனிக்காமல் விட்டது என் தவறுதான், உரையாடல் தொடங்கியதில் இருந்தே கவனித்தேன், எனக்கு அறிவில்லை என்றும், குறுகிய அறிவுள்ளவன், என்றும் உலக அரசியல் தெரியாதவன் என்றும்,உலகே புரியாதவன் என்றும் தனிப்பட என்பற்றிப் பேசிவந்தீர்கள் சரி உரையாடல் தானே என்று விட்டு விட்டேன், இப்போது என் வர்க்கம் பற்றியே பேசத்தொடங்கி விட்டாய் இதன் பிறகு உம்மோடு பேச்சைத் தொடர்வது ஆரோக்கியமானதல்ல என்று நான் கருதுகிறேன். சரி உமக்கு உலகில் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் பார்க்க வேண்டிய பொறுப்பிருக்கிறது, இதில் வந்து ஒரு தனிப்பட்ட மனிதனை, இனத்தை பற்றி பினாத்துவதை விடுத்து உலக அரசியலில் கவனம் செலுத்துங்கள், சேகுவராவின் பின் இந்த உலகின் விடுதலைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீர் தான் என்பதை உம் உரையாடல் வழி புரிந்து கொண்டேன், நீர் கொஞ்சம் அசந்தாலும் உலகே ஒழுங்கே மாறி விடும், என்பதால் உலக நன்மை கருதி இதில் தொடர்ந்தும் பேசுவதில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

ஆதித்தன் :

கம்யூனிஷம் என்பது கடந்த நூற்றாண்டு சித்தாந்தம் என்பதை இவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதண்ண... அரசியல் என்பது உலக நடைமுறையியலுடன் மாறுபடும் ஒன்று என்பதை விளங்கிக் கொள்வதற்கு சுயசிந்தனை தேவையண்ண. அது இவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒட்டுமொத்த குழிபறிப்பாளர்களால் ஆயுதப்போரட்டம் சிதைக்கப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகளே தங்கள் ஆயதப்போராட்டம் இனி இல்லை என்று அறிவித்தாகி இரண்டு வருடங்களிற்கு மேலாகிவிட்டது. ஒட்டு மொத்த இனமாய் சேர்ந்து எமக்கான விடுதலையை பெறுவோம்... கருத்து வேறுபாடுகளை கழைந்து இனமாக எமது விடுதலையை பெற்றெடுப்போம் என திரும்ப திரும்ப கத்திக் கொண்டிருக்கும் போது தமிழ் மக்களின் சிந்தனைகளை சிதைத்து சிங்கள பயங்கரவாதத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பது போன்றான தோற்றப்பாடுகளை வளர்ப்பதும்... தருவதை பெற்றுக் கொண்டு பொத்திக் கொண்டு இருப்பது தான் நல்லமென்று டக்களசின் மந்திரத்தை திரும்ப திரும்ப உச்சரிப்பதும் இவர்களிற்கான வணிக குறிக்கோள். இவர்கள் ஒரு இனமாக நின்று போராட தில் இல்லாதவர்கள்... உரிமைகளை கேட்க திராணியற்வர்கள்... அச்சத்தை தவிர்த்து எங்களுடன் இணையுங்கள்... எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தானே உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் கேட்கிறோம். ஆயுதம் தாங்கி கொலைக்களங்களில் தாயக மீட்பு நடாத்தியபோது மரண அச்சத்தால் எதிரியோடு சேர்ந்து இனத்தை சீரழித்தவர்களுக்கு இப்போது உள்ள அச்சமென்ன?? இனத்திற்காக அரசியல் உரிமை கேட்புக்கு கூட கைகோர்க்க முடியாதவர்கள் தமிழர்கள் என்று சொல்வதை விடுத்து வேறெதாவது சொல்லட்டும்....

அரசன் :

//கம்யூனிஷம் என்பது கடந்த நூற்றாண்டு சித்தாந்தம் என்பதை இவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதண்ண... //

ஆதித்தன் முகமூடி கிழிந்து விட்டது. கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளாத ஒருவர் எதற்காக சே குவேராவின் படத்தை முகமூடியாக அணிந்து கொண்டு வருகிறார்? யாரை ஏமாற்றுவதற்காக இந்த வேஷம்?

ஆதித்தன் :

கம்யூனிச கொள்கையை சிறந்த முறையில் முன்னெடுத்த சேகுராவா எனது வழிகாட்டி. கடந்த நூற்றாண்டில் பின்பற்றப்ட்ட கம்யூனிச கொள்கைகளை சுய ஏகாதிபத்தியத்திற்கு பயன்படுத்த கூச்சலிடும் நீங்கள் சேகுராவா வை பற்றி பேசக்கூட அருகதையற்றவர். கடந்த நூற்றாண்டில் பயன்படுத்தப்ட்ட கம்யூனிசக் கொள்ளை அடிமைப்படுத்தப்படும் மக்கள் சார்பானது... விடுதலைக்காக போராட தூண்டியது ஆனால் உங்களை போன்றவர்களால் செய்யப்படும் கம்யூனிசம் என்பது அடிமைப்படுத்தப்படும் மக்களை அடிமைகளாகவே வைத்திருப்பது அல்லது அவர்களின் விடுதலைப்போராட்ட உணர்வை சிதைப்பது. சேகுராவா விடுதலைக்காக போராடிய முறைகளும் கோட்பாடுகளும் உங்களை போன்ற "போலி கம்யூனிச வாதிகளுக்கு" பொருந்தாது. சேகுராவாவின் வாழ்க்கையையும் அவர் மக்கள் தொகுதியின் விடுதலைக்காக பயணித்த முறைகளையும் கோட்பாடுகளையும் திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் நான் ஏன் அவரின் படத்தை போட்டிருக்கின்றேன் என புரியும். ....

அரசன் :

ஆதித்தன், என்னை விமர்சிப்பதற்கு முன்னர், ஒரு தரம் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். அன்று முதல், இன்று வரை நீங்கள் பேசியதெல்லாம் பிற்போக்குத்தனமான இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதம். சேகுவேரா தனது நாட்டை விட்டு வேற்று நாட்டு மக்களுக்காக போராடிய சர்வதேசியவாதி. உங்களுக்கும், சேவுக்கும் இடையில் ஏணி வைத்தாலும் எட்டாது. இருவரும் எதிரெதிரான கொள்கைகளை கொண்டிருக்கிறீர்கள். சே கியூபாவின் எதிரி நாடான அமெரிக்காவின் உழைக்கும் வர்க்க மக்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். நீங்கள் எப்போதாவது ஒரு நாள், தமிழீழத்தின் எதிரி நாடான சிறிலங்காவின் சிங்கள உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக பேசினீர்களா? ஈழத்தமிழரான முஸ்லிம்களையே நீங்கள் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகெப்படி சிங்கள உழைக்கும் மக்களை சகோதரர்களாக கருதுவீர்கள்? அடிக்கடி மறக்காமல், "சிங்களவனோடு சேர்ந்து வாழ முடியுமா?" என்று இனவாதம் பேசுவீர்கள். சேகுவேரா இவ்வாறு இனவாதம் பேசியதாக நான் அறியவில்லை.

சேகுவேரா முன்னெடுத்த கம்யூனிசக் கொள்கை எதுவென இங்கே விளக்க முடியுமா? நீங்கள் கருதுவதைப் போல, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்து சே பேசவில்லை. அது உங்களது தவறான புரிதல். சே குறிப்பிட்ட "அடிமைப்பட்ட மக்கள்", அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பற்றியது. முதலாளிகளால் அடிமைப்படுத்தப்படும் உழைக்கும் வர்க்க மக்கள் பற்றியது. தமிழ்தேசியவாதிகள் எப்போது ஐயா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்கள்? நமது தமிழ் தேசியவாதிகள், தமிழ் இனவழிப்பில் அமெரிக்காவின் பங்கு குறித்து முணுமுணுப்பது கூட இல்லை. அந்த அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் ஏகாதிபத்திய விசுவாசிகளாக இருக்கிறார்கள். சே யின் கம்யூனிச கொள்கையை ஏற்றுக்கொள்ளும் ஒருவராக இருந்தால், இங்கே வந்து தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக பேசியிருக்க முடியாது. இன்றைக்கும் தமிழ் தேசியவாதிகள் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறார்கள். (சே முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடினார்.) அமெரிக்க, இஸ்ரேலிய விசுவாசிகளாக இருக்கின்றனர். (சே அமெரிக்காவையும், இஸ்ரேலையும் வெறுத்தார்.) தமிழ் தேசியவாதிகள் அயலில் இருக்கும் முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் சேர்த்துக் கொண்டு போராட தயாராக இல்லை. (சே ஆப்பிரிக்க கண்டம் சென்று காங்கோ மக்களுக்காக போராடினார்.) ஹிட்லர் தனது கட்சிக்கு "தேசிய சோஷலிசக் கட்சி" என்று பெயரிட்டார். ஜெயவர்த்தனே இலங்கையின் பெயரை "ஜனநாயக சோஷலிசக் குடியரசு" என்று மாற்றினார். இவர்கள் எல்லோரும் நடைமுறையில் சோஷலிசத்திற்கு விரோதமான கொள்கைகளை பின்பற்றியவர்கள். ஒரு தமிழ் இனவாதி, சேகுவேரா முகமூடி போட்டுக் கொண்டு, தான் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் என்று கூறுவதும் அப்படித் தான்.

அரசன் :

‎//// கடந்த நூற்றாண்டில் பயன்படுத்தப்ட்ட கம்யூனிசக் கொள்ளை//

//கம்யூனிஷம் என்பது கடந்த நூற்றாண்டு சித்தாந்தம் என்பதை இவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதண்ண... //

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? கம்யூனிசம் இந்த நூற்றாண்டுக்கு ஒத்து வராது, தேவையில்லை என்று கருதுகிறீர்களா? நீங்கள் தமிழர்களை இன அடிப்படையில் ஒன்று சேருமாறு பரப்புரை செய்யும் தேசியவாதம் எந்த நூற்றாண்டு சித்தாந்தம் என்பது உங்களுக்கு தெரியுமா? தேசியவாதம் என்ற 19 ம் நூற்றாண்டு சித்தாந்தம், 21 ம் நூற்றாண்டில் எப்படிப் பொருந்தும்? உங்கள் வாதப்படி பார்த்தால், நீங்கள் தமிழ் மக்களை இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறீர்கள்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்