தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கியால், தன் அற்புதங்கள் மூலம் தன்னையே பாதுகாக்க முடியவில்லை. நவீன மருத்துவத்தை நாடி நிற்கின்றது. பணக்காரனுக்கே சேவை செய்யும் நவீன மருத்துவம், கடவுளின் அவதாரத்தை இந்த உலகில் மீளவும் படைக்க முனைகின்றது. என்ன அற்புதங்கள்? ஏழை மக்களுக்கு உதவாத நவீன மருத்துவம் முதல், உழைத்து உருவாக்கும் எந்தப் பொருளையும் உருவாக்கும் மனிதத்தகுதி கூட இல்லாத (படைப்பாற்றலற்ற) ஆன்மீகம் பேசும் பொறுக்கி லும்பன்கள் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றனர்.

கடவுளின் அவதாரம் என்று கூறிய மோசடி தான் மூலதனம்;. இது 40000 கோடியாகியுள்ளது. இந்த மோசடி அற்புதங்களானது. இப்படி அற்புதங்கள் பெயரால் ஏமாற்றி வழங்கிய எவையும், இன்றைய மனித உழைப்பு சார்ந்த உற்பத்திக்கு வெளியில் எதையும் கொடுக்கவும், புதிதாக எதையும் படைக்கவும் முடியவில்லை. ஏழைக்கு என்று கூறி வழங்கும் எந்தச் சேவையையும், ஏய்த்துப் பிழைத்த மோசடிப் பணத்தில் இருந்து தான் உருவாகின்றது. கடவுளின் அற்புதங்களில் இருந்தல்ல. கடவுளின் படைப்பாற்றலில் இருந்ததல்ல. எதையும் கடவுளின் அவதாரமான சாயிபாபாவால் உருவாக்க முடியவில்லை. மனித உழைப்பு உருவாக்கிய பணமும், மீளவும் மனித உழைப்பும் தான் அனைத்தையும் படைக்கின்றது. இதுவல்லாதவை எதையும் படைக்க முடிவதில்லை.

 

 

ஆக கடவுளின் பொறுக்கியாக உருவான அவதாரம், இந்தப் பொருள் உலகைக் கடந்தும், மனித உழைப்பைக் கடந்தும், எதையும் மனித குலத்துக்காக படைக்கவில்லை, படைக்க முடியவில்லை. புத்திசாலியாக ஏமாற்றிப் பிழைக்கும் பணக்கார முட்டாள்களின் கூட்டு வியாபாரம் தான், சாய்பாபாவின் பெயரில் ஆன்மீகமானது.

சாயிபாபாவின் மாயாஜால வித்தைகளும், பணக்காரனின் அறம் கெட்ட வக்கிரமான வாழ்க்கையும் ஓரினச்சேர்க்கையாக ஒன்றினைந்து நடத்திய வாழ்க்;கை ஆன்மீக உலகமாக, அது 40 ஆயிரம் கோடி ரூபா சொத்தைப் படைத்தது. இந்த ஆன்மீகம் பணம் சேர்க்கும் பணக்காரத் தன்மையை அடிப்படையாக கொண்டது. இதைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட விளம்பரங்களுக்கும் விம்பங்களுக்கும் அமைவாக, ஏழை மக்களுக்கு தானதருமங்கள். ஏழைமக்களுக்கு உதவுதாக காட்டுவது, நவீன பணக்காரத்தனத்தின் பொறுக்கித்தனத்தை மூடிமறைக்கின்ற இன்றைய நவீன வக்கிரமாகும்.

ஏழைகளை உருவாக்கிய பொருள் (பண) சார்ந்த உலக ஓழுங்கில், கடவுளிள் பெயரில் பொறுக்கிகள் அவதாரமாகின்றனர். ஆன்மீகத்தின் பெயரில் இந்த பொறுக்கிகளுடன் சேர்ந்து பணக்காரர்கள் தங்களைத் தாங்கள் நியாயப்படுத்திகொள்வது தான், இதன் பின்னுள்ள ஆன்மீகக் கழிசடைத்தனமாகும்.

உழைக்கும் மக்களைச் சுரண்டியும், கொள்ளையடித்தும் சேர்த்த பொருளை (பணத்தைக்) கொண்டு கட்டமைக்கப்பட்ட நவீன வக்கிரத்தையும் அதன் வாழ்க்கை முறையையும் நியாயப்படுத்தத்தான், ஏழைமக்களுக்கு உதவும் நவீன வக்கிரமும் ஒருங்கே அரங்கேறுகின்றது.

இதன் பின்னணியில் தான் 40000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடவுளின் பெயரால் சொத்து சேர்த்துள்ளான் பொறுக்கியான சாயிபாபா. இப்படி மூலதனத்தில் இருந்து உருவான நாய் ஒன்று, தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, நவீன மருத்துவமனையில் உயிர் பிழைக்க முனைகின்றது. எந்த அற்புதமும் இங்கு உதவவில்லை. பணமும், அதற்கு சேவை செய்யும் நவீன மருத்துவமும் உயிரைக் காப்பாற்ற போராடுகின்றது. அற்புதங்களின் பெயரில், மாயஜால வித்தைகள் (மெஜிக்) உதவவில்லை. அது அறிவுள்ள படித்த முட்டாள்களை ஏமாற்றத்தான் உதவியது.

இதன் மூலம் ஊர் உலகத்தை ஏமாற்றி வாழ்ந்த இந்தப் பொறுக்கி, தன் பாலியல் தேவைக்கு பலாத்காரமாக ஓர்pனப் பாலியல் வக்கிரங்களை தன் பக்தர்கள் மீது திணித்தவன். இந்த உலகமகா பொறுக்கி கையில் சிறுவர்கள் முதல் பெர்pயவர்கள் வரை பலர் பலியானார்கள். இப்படி தன் ஓரினச்சேர்க்கையை வக்கிரமாகத் திணித்து, அதை அவர்களுக்கு கடவுளுடனான பாலியல் உறவாக காட்டியவன். இப்படிப்;பட்ட குற்றவாளி தன்னைச் சுற்றிய ஒரு மனித விரோத மர்ம உலகத்தை மூடிமறைக்க கொலைகளைச் செய்தது வரை, எத்தனை எத்தனை அற்புதங்கள். இதைக் காப்பாற்ற குண்டர் கூட்டம் புடை சூழ, அதற்கேற்ப இந்திய அரசை தனது பொறுக்கித்தனத்துக்கு ஏற்ப நக்கவைத்தவன். இந்திய இந்துத்துவ சாதிய அரசியல் தலைவர்களுடன் கூடி மனித விரோதத்தையே மூலதனமாக்கியவன். இந்த மாபெரும் பொறுக்கியின் உயிர் தான், இன்று நவீன மருத்துவமனையில் ஊசலாடுகின்றது. உயிரைக் காப்பாற்ற முட்டாள் பணக்கார பக்தர்கள், அவரையே வழிபடுகின்ற விளம்பர ஆன்மீக கூத்துகள் ஒருபுறம் அரங்கேறுகின்றது.

மறுபக்கத்தில் கடவுளின் அவதாரத்தின் உயிரைக் காப்பாற்ற, நவீன மருத்துமனையில் கடவுளைக் காண்கின்றனர். எதிரும் புதிருமான பணக்கார அறிவும், வக்கிரமும் அரங்கேறுகின்றது. 40000 கோடி ரூபாவுக்கு மேல் உழைக்கும் மக்களின் உழைப்பை திருடி தின்று கொழுத்து கடவுள் அவதாரமாக மாறிய மூலதனத்தின், உயிர் மேலான பணக்காரக் கவலைகள். அது சார்ந்த ஆன்மீக உலகை கட்டமைத்த பொறுக்கிகளின் கவலைகள், சாதிய பார்ப்பனிய இந்துத்துவ கவலையாக மாறுகின்றது. பணக்காரனின் வக்கிரத்துக்கு ஏற்ற ஆன்மீகத்தை சந்தைப்படுத்தியவனின் ஆன்மீகம், கவலை கொண்டு புலம்ப வைக்கின்றது.

இந்த பொருள் (பண) உலகில் பிழைத்துக் கொள்ளும் புத்திசாலிகளின் முட்டாள் தனத்தில் தான், சாயிபாபா என்ற பொறுக்கி நவீனமாக வாழ்ந்தான். கோடிகோடியாக சம்பாதித்தான். மேலும் மேலும் உழைக்கும் மக்களை சுரண்டியும் கொள்ளையடித்தும் பணக்காரனாகிக் கொண்டவனின் மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்குள் தான், சாயிபாபா போன்ற நவீன ஆன்மீகப் பொறுக்கிகளும் கூடி வாழ்கின்றனர்.

மோசடிகளையும், ஏமாற்றுகளையும், பித்தலாட்டங்களையும் முதலிட்டு குவித்த சொத்து 40000 கோடி. இந்த கடவுளின் அவதாரம் உன்னைப்போல் உழைத்து ஒரு நேர உணவுக்கு மாரடிக்கவில்லை. உன்னைச் சுரண்டியும், உன்னைச் சுரண்டிய கூட்டத்திடமும் இருந்து பெற்றுச் சேர்த்த சொத்தின் ஒரு பகுதிதான், இந்த கடவுளின் அவதாரத்திடம். ஊழல், லஞ்சம் முதல் ஊர் உலகத்தை கொள்ளையடித்துச் சேர்த்த சொத்துகளின் ஒரு பகுதி இது. இதற்கு வரி கிடையாது. இதை நுகர்ரும் ஆன்மீக நாய்களிடம், எந்த மனித அறமும் எதுவும் கிடையாது. இந்த உலகில் மற்றவனின் உழைப்பை நுகர்கின்ற வக்கிரம்தான், இதன் பின்னுள்ள மொத்த ஆன்மீகம்.

 

பி.இரயாகரன்

09.04.2011