புலிகளின் "தமிழீழத்தாகம்" உண்மையானது என்றால், அந்த இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட்டை குடித்து மரணித்திருக்கவேண்டும். மாறாக அதன் தலைவர்கள் சரணடைந்தார்கள். புலிகளின் மொழியில் இது துரோகம். இப்படிப்பட்ட இவர்கள் வழிநடத்திய போராட்டம் உண்மையானதா!? நேர்மையானதா!? சொல்லுங்கள். இங்கு நாம் புலிகளின் கீழ் இருந்தவர்கள் குறித்துப் பேசவில்லை. புலித் தலைவர்கள் குறித்து தான் இங்கு பேசுகின்றோம். தங்கள் இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட்டை குடித்து மரணிக்காது சரணடைந்த கூட்டம் தான், இந்தப் போராட்டத்தையும் அழித்தது. "பல்லாயிரம் போராளி" களின் "உயிர்களைத் தியாகம்" செய்ய வைத்ததன் மூலம் தங்களைக் காப்பாற்றியது. தங்களைப் பாதுகாக்க, மக்களை பலியிட்டது. இந்தக் கூட்டமா "போராடும் குரலை உன்னதமாகக் காட்டிய"து? இவர்கள் பின் கட்டமைத்த அனைத்தும் பொய்யானது. தன்னை தியாகம் செய்யத் தயாரற்ற கூட்டம், மற்றவன் தியாகத்தை காட்டி நக்கிய கூட்டம், தன் உயிரை பாதுகாக்க சரணடைந்தது. இது நடத்திய போராட்டம், எப்படித்தான் வெற்றிபெறும்.

இந்தக் கூட்டம் தான் மக்களை "ஆயுதமாக, காயாகப் பாவித்து" அவர்களை பலியிட்டு, தங்களை பாதுகாக்க யுத்தத்தை நிறுத்தக் கோரியவர்கள் தான் இந்தக் புலிகள். இதை அவர்கள் தேசிய "போராட்டத்தை" பாதுகாக்க என்ற அரசியல் மூகமுடியைப் போட்டனர். "எப்படியாவது" இதைவிட "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" என்று கூறி, அனைத்தையும் நியாயப்படுத்திய புலித் தலைமை தான் இறுதியில் சரணடைந்தது. மற்றவனை தியாகம் செய்யக் கோரிய இந்தக் கூட்டம், தன்னை தியாகம் செய்யவில்லை. மாறாக சரணடைந்தது. அதன் இன்றைய பிரதிநிதியாக தீபச்செல்வன்கள் விளக்கம் கொடுக்கின்றார்கள். நியாயப்படுத்த உண்மைகளையே திரிக்கின்றார். 

இப்படிப்பட்ட திரிபுதான் "அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் பல்லாயிரம் போராளிகள் கனவுக்காக உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் நெஞ்சார்ந்த கனவைப் பலவேறு விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். போராடும் குரலை உன்னதமாகக் காட்டியதன் அடிப்படையில் ஈழப் போராட்டத்தை உன்னதமான போராட்டம் என நான் கருதுகிறேன். இப்பொழுது உள்ள நிலமையில் எமது மக்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்." ஆக உங்களைப் போன்றவர்கள், இன்று இதைச்சொல்லி பிழைக்க இது உதவுகின்றது. போராடி மடியாது, சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்யாது. புலித் தலைமையின் சரணடைவா உன்னதமானது? இதுவா "போராடும் குரல்"!?

இந்தப் புலிப்பாசிட்டுகள் நடத்திய போராட்டத்தால் எமது சமூகம் பெற்றது என்ன? புலிகள் போராட்டத்தை தவறாக வழிநடத்தி அழித்ததுக்கு அப்பால், அவர்கள் மக்களுக்கு என்னதான் செய்தார்கள். எதை அவர்களின் வாழ்வின் மேல் விட்டுச் சென்றார்கள். இனவழிவைத் தவிர, மக்கள் பெற்றது எதுவுமில்லை. சமூக நேயத்தைக் கூட, சமூகத்திடம் புலிகள் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் அழித்தார்கள். இதை அரசு செய்யவில்லை. அரசு இதன் மேல், தன் பேரினவாத வெற்றியை நிறுவிக்கொண்டது.

புலிகளின் பாதை மிகத் தெளிவாக தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றது. அதை மீள எந்த சமூகமும் பயன்படுத்த முடியாது. இது போராட்டத்தை அழிக்கும். இப்படியிருக்க அதை இன்று முன்னிறுத்துகின்ற தீபச்செல்வன்கள், அதை வைத்து அவர்கள் நக்கிப்பிழைக்க தான் முடியும். அதுதான் எங்கும் நடக்கின்றது.

இங்கு "அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் பல்லாயிரம் போராளிகள் கனவுக்காக உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்." என்ற உண்மை, எந்தவிதத்திலும் புலியின் அரசியலை சரியாக்கிவிடாது. புலிகள் இயக்கங்களை அழித்து, தான் அல்லாத அனைத்தையும் அழித்து, "துரோகி"களை உற்பத்தி செய்து அதைக் கொன்று குவித்த பின்னணியிலும், புலிக்கு எதிராகவும் ஆயிரம் ஆயிரம் தியாகங்கள் உண்டு. புலிகளின் "அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும்" எதிராக மக்கள் முதல் போராடியவர்கள் வரை பலர் பலியானார்கள். அப்பாவி முஸ்லீம் மக்கள் முதல் சிங்கள மக்கள் வரை வேட்டையாடிய புலிகள், மக்களுக்காக என்றும் போராடவில்லை. அதுவோ மக்களிலிருந்து அன்னியமான லும்பன் கும்பல். உங்கள் மொழியில் அது "நாங்கள்"

அது காட்டியதே தேசிய போராட்டம் என்ற நம்பி தியாகம் செய்தவர்கள், எந்த வஞ்சகமும் குறுகிய நோக்கமும் அற்றவர்கள். அவர்கள் அறியாமையை மூலமாக்கி பலியிட்டனர் புலிகள். பேரினவாதம் மக்கள் மேல் நடத்திய கொடூரமான வன்முறை, புலியின் இந்த கபடத்தை மறைத்து நின்றது. புலிகள் மட்டுமே போராடும் சக்திகள் என்ற மாயையை, புலிகள் தங்கள் வன்முறை மற்றும் படுகொலைகள் மூலம் உருவாக்கி நிலைநிறுத்தினர். இதன் மூலம் கடந்த போராட்டத்தை இருட்டடிப்பு செய்ததுடன், மக்கள் போராட்டத்தை புலிகள் தோற்கடித்து விட்ட உண்மையையும் மறைத்தனர். புலிகள் போராட்டம் தான் விடுதலைப் போராட்டம் என்று மரபையும் மாயையும் உருவாக்கி, அதன் பின் எஞ்சிய அனைத்தையும் அழித்தனர். இங்கு புலிகளின் தியாகங்கள் மக்களுக்காக, மக்கள் அரசியலுக்காக நடக்கவில்லை. இதில் அவர்கள் புரியாது செய்த தியாகங்கள் உண்மையானவை, நேர்மையானவை. அவை மதிப்புக்குரியது தான்.

ஆனால் புலித் தலைவர்கள், அதை அண்டி நக்கிய பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகளின் மரணங்கள் என்றும் தியாகங்கள் அல்ல. சரணடைந்த புலித் தலைமை அதை தௌ;ளத்தெளிவாக நிறுவியுள்ளது. அவர்கள் தங்கள் அரசியல் சூழ்ச்சியில், சதிகளில் சிக்கி மரணித்தவர்கள். இது தியாகமல்ல, துரோகம். மக்கள் போராட்டதை தங்கள் சுயநலத்தில் அழித்தவர்கள். அந்த சுயநலம் இறுதியில் சரணடைய வைத்தது. இவர்கள் பீற்றிய தியாகம், வீரம் தங்களுக்கு இ;ல்லை என்பதை பறைசாற்றியவர்கள்.

இவர்கள் தான் ஈவிரக்கமற்ற படுகொலைகள் முதல் மனிதவிரோத செயல்களை, தெரிந்து செய்தவர்கள். உண்மையான தியாகத்துக்கு எதிராக இயங்கிய மாபெரும் துரோகக் கும்பல் இது. மக்களை பலிகொடுத்து தம்மை பாதுகாக்க முனைந்த மனித விரோதக் கூட்டம் இது.         

இந்த மனிதவிரோதிகள் என்றும் மக்களுக்காக போராடவில்லை. இங்கு போராடு என்பது, புலிகளின் இருப்புசார்  அரசியலாகிப்போனது. தியாகம் தங்களை தக்கவைக்கும் அரசியல் புள்ளியாகிப் போனது. நீங்கள் கூறுவது போல் "போராடும் குரலை உன்னதமாகக் காட்டியதன் அடிப்படையில் ஈழப் போராட்டத்தை உன்னதமான போராட்டம் என நான் கருதுகிறேன்." என்ற கூற்று இங்கு பொய்மையானது. "போராடும் குரலை" செய்யாத அடுத்தகனமே, புலிகள் இருப்புக்கு எதுவும் கிடையாது என்ற நிலையில் புலிகளின மக்கள் விரோதம் வங்குரோத்தடைந்து இருந்தது. "போராடும் குரலை உன்னதமாகக் காட்டிய" இந்தக் கும்பல், எப்படி சரணடைந்தது. கும்பல் கும்பலாக சரணடைந்தது. இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட் எங்கே போனது? தாங்கள் தங்களை தியாகம் செய்யவில்லை, சயனைட் குடித்து மரணிக்கவில்லை. ஆனால் இந்தக் கும்பல் தான் மக்களை பலியிட்டது. இதன் மூலம் தன்னைப் பாதுகாக்க முனைந்தது. அது தோற்றவுடன் சரணடைகின்றது. எங்கே போனது "தியாகம்" எங்கே போனது "வீரம்". இங்கு போற்றக்கூடிய "உன்னதமான போராட்டம்" எதுவும் நடக்கவில்லை. மக்கள் விரோதிகளின் சுயநலமாக போராட்டம், உண்மையான தியாகங்கள் மேல் குட்டிச்சுவராகிப்போனது. இங்கு அப்பாவி மக்கள் முதல் இதுதான் விடுதலை என்று நம்பி பலியாகிப் போனவர்களின் தியாகங்கள் மதிப்புக்குரியது தான். ஆனால் அது புலிகளின் பாசிச சர்வாதிகாரத்தின் கீழ், அறியாமையின் எல்லையில் நடந்தது. புலித்தலைமை தன்னைப் பாதுகாக்க தியாகத்தின் பெயரில் நடத்திய வேள்வியின் பலன் இன்றி இறுதியில் சரணடைந்தது. இவர்கள் நடத்திய போராட்டம் எப்படி உண்மையானதாக, நேர்மையானதாக, தியாகம் கொண்டதாக, வீரம் கொண்டதாக, மக்களுக்கானதாக இருந்து இருக்கும்!

தொடரும்
பி.இரயாகரன் 

 

11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

  

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

 

 

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)

 

9. மக்கள் விரோதிகளால் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" மக்களுக்காக படைக்க முடியாது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 09)

 

10.செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)