Language Selection

அசுரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிபிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.

இந்த பயங்கரவாத கும்பலை இயக்கியவர்களில் ஒருவன் இந்திரேஸ் குமார். இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர். இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவரே இவர்தான். என்னவொரு முரன்நகை? ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது. குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது. ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை (இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).

 

 

 

 

(இந்து பயங்கரவாத அமைப்பின் கொடி)






(அயோத்தியில் பஜ்ரங்தள் சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி)

 

 

(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)

 

(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)



ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர். ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும். இஸ்லாம் பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமான அளவு அதிகமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவில்லை என்பதே இவர்களின் வருத்தம். வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

(இந்து பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ள இடங்கள்)


ஆதாரம்: outlook india

மாட்டிக் கொண்டவர்களின் இன்னொரு பயங்கரவாத தலைவன், பாஜகவின் முன்னாள் இருமுறை எம்பி பி. எல். சர்மா. இவனும் மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளிகள் தாயனந்த் பாண்டே மற்றும் லெப்டினண்டு ஸ்ரீரிகாந்த் புரோகித் ஆகியோர் இந்தியா முழுவதும் குண்டு வைத்து லட்சக்கணக்கில் மக்களைக் கொல்வது குறித்து பேசுகின்ற விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ்ன் முகமுடி அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத குழுவே முக்கிய குண்டு வெடிப்பு குற்றவாளி ஆகும். இந்த அமைப்புடன் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளான் பாஜக முன்னாள் எம்பி சர்மா.

ஜனவரி 2008ல் பரிதாபாத்தில் நடந்த இவர்களின் கூட்டத்தில் (சர்மா மற்றும் பிற பயங்கரவாதிகள்) இந்திய குடியரசுத் துணைத்தலவரை கொல்லும் திட்டம் தோல்வியடைந்தது குறித்து விவாதித்துள்ள விடியோவும் அம்பலமாகியுள்ளது.

(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)

ஆர் எஸ் எஸ் தலைவன் பயங்கரவாத கும்பலின் வழிகாட்டி இந்திரேஸ் குமார் பேட்டி எடுத்தது ஹெட்லைன்ஸ் டுடே. ஆர் எஸ் எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மைகளை சொல்லி அவனிடம் பேசிய பொழுது மறுக்க வழியின்றி ஒடிவிட்டான் பயந்தாக்கொள்ளிப் பயல்.

உண்மைகளை வெளிப்படுத்திய குற்றத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே நிறுவனத்தை வெள்ளிக்கிழமை 2000 ஆர் எஸ் எஸ் ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்தும் ஆர் எஸ் எஸ் அம்பலமானது குறித்தும் பிற இந்திய ஊடகங்கள் அதிகபட்ச மௌனம் காத்தன (தெஹல்காவிற்கு காட்டியது போலவே).

இவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதாம் எனவே இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகிறார்களாம். இதே போல கூறிய 'குற்றத்திற்'காகத்தான் தியாகத் தோழர் ஆசாத்தின் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது. இந்திய அரசு ஆர் எஸ் எஸ் தலைவர்களை நாயைச் சுடுவது போல சுட்டுக் கொல்லுமா? நாய்க்கும் தன் குட்டி பொன் குட்டி, எனவே அவர்கள் செய்ய மாட்டார்கள்......

அசுரன்

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!


சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!


Hindu Rashtra: Saffron terror's hall of shame


The Headlines Today sting


Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office

Hindu terror is a reality, yet India refuses to utter its name