ஒரு நண்பரின் கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனது பழைய நண்பர், பொதுவாக தனிப்பட்ட விசயங்களிலிருந்து அரசியலை நோக்கிப்போய்க்கொண்டிருந்தது. நான் பெட்ரோல் விலை உயர்வு என்பது திட்டமிட்ட சதி என்று சொல்லிக்கொண்டும் அதற்கான எடுத்துக்காட்டாக நான்கு வருடம் முன்பு பீப்பாய் என்னணை 110 டாலர் என்றும் அதனால் 35 ரூபாயாக பெட்ரோலை விலை உயர்த்திய அரசு தற்போது 70 டாலர்ஆன பின்னும் விலையினை ஏன் உயர்உயர்த்துகிறது என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போதே தெருவில் கொஞ்ச தூரம் தள்ளி சாலையில் ஒரு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது.

அவர்கள் கையில் அதிமுக கொடிகளை பிடித்திருந்தார்கள். சரி நாளைக்கு பந்த் என்பதால் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று நினைத்தேன். அவர்கள் நான் அமர்ந்திருந்த கடைஇயினை ஒட்டிய சாலை வழியாகவே பயணிக்கப்போகிறாகள் போல, அவ்வழியே வந்து கொண்டிருந்தார்கள். அக்கும்பலில் ஒரு நபர் மட்டும் கடைகளில் நோட்டீசினை கொடுத்தார். மற்றவர்கள் நடு சாலையிலிருந்தே என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். சாலையிலிருந்து சொல்லும் அளவுக்கு எவ்வளவு அழகாக அரசியல் செய்கிறர்கள்.

கும்பல் நான் அமர்ந்திருந்த கடைக்கு அருகில் வந்தது. வாய் ஏதும் பேசாமல் ஒருவர் நோட்டீசை வீசிவிட்டு சென்றார். அந்தக்கடைக்கு பக்கத்தில் பேக்கரி ஒன்று இருந்தது. அதிமுகவின் நகர நரவல் ஒன்று கத்தியது “டேய் கடைய ஒழுங்கா நாளைக்கு மூடுடா”. இன்னொருவன் சொன்னான் “ஓய் நாளைக்கு ஷட்டரைக் காணோமுனு சொல்லாத கடை காலியாயிடும் மாப்ளோய்”. இன்னொரு கைத்தடி கத்தியது “பர்தா போட்டுடு நாளைக்கு ஒரு கண்ணாடி மிஞ்சாது”.

கடையிலிருந்தவர்களையெல்லாம் மிரட்டிவிட்டு சிரித்தபடியே அக்கும்பல் போய்க்கொண்டே இருந்தது. அடுத்ததாக சிபிஎம் ஐச் சேர்ந்த அய்யோ பாவம் என்றபடி ஒரு நபர் வந்தார். கையில் நோட்டீசை கொடுத்துவிட்டு ஏதாவது கேள்வி கேட்டு விடுவார்கள் என நினைத்தாரோ என்னவோ பறந்து பறந்து நோட்டீஸ் சப்ளை செய்தார். சிபிஎம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோ பிரச்சரத்தில் ஒருவர் தனக்கே கூட கேட்காத அளவுக்கு சத்தம் போட்டு பேசிக்கொண்டு போனார். இப்படியே வரிசையா எல்லா உருப்படிகளும் வந்து போயின.

———————————

பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை தாக்கிக்கொலை செய்து வருவதை, அதை மக்கள் எளிமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.”எவன் வந்தாலும் இதைத்தான் செய்யுறான் ” ஒரு சாதாரண திமுக பாமக தொண்டன் கூட எவனும் யோக்கியமில்லை என்ற படி இந்த அரசாங்கம் நமக்கானதில்லை என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்கள்.

அந்த விலை வாசி உயர்வுக்கு யார் காரணம்? பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகள், பங்குசந்தையில் சூதாட்டத்தின் உணவுப்பொருட்கள் அடமானம் வைக்கப்பட்டது குறித்து மக்களிடம் விளக்கி அதற்கு மூலக்காரணம் யார் என்றும் அதை ஒழிக்க இந்த அடிமை முறையையே புரட்ட வேண்டிய நிர்பந்தம் இருப்பதையும் சொல்லி, அதை இந்த அரசால் மாற்ற முடியாது. ஏனெனில் இந்த அரசாங்க மக்களுக்கானதல்ல, அது பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கானதென்று விளக்கமுடியாதா என்ன?

இத்தனையும் விட “டேய் கடைய மூட்றா என்பது தான்”தெளிவான அரசியல். ஆம் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்களின் எதிரிகள் குறிப்பாக இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராக அவர்கள் போராடவில்லை. கருணாவிடம் பணம் சேருவதை எதிர்த்தே போராடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே அம்மாவான செயா திருடும் போது ஏதாவது விழும் அதை எப்போது நக்கலாம் என்ற ஆவலாய் திரிகிறர்கள்.

 

அதிமுக உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை, மக்களுக்காக போராடுவதாகக் கூறி மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் அவர்களின் வேலை. அவர்களின் எதிரி உழைக்கும் மக்கள் தானே தவிர முதலாளிகள் அல்லவே!!!!

http://kalagam.wordpress.com/2010/07/06/டேய்-கடைய-மூட்றா-ஓட்டுப்/