09242023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

ஜனநாய அமெரிக்கா ஒரு குற்றவாளி நாடு!

இன்று அமெரிக்காவில் 50 லட்சம் சிறைக் கைதிகளை சிறைகளில் அடைத்து வைத்துள்ளது. ஜனநாயக அமெரிக்க அரசு, ஆயுதக் கலாசாரமும், வெள்ளை கறுப்பு நிற வெறியும், ஏழை – பணக்கார இடைவெளியின் கோர முகமும் அமெரிக்காவை ஒரு குற்றவாளிகள் கொண்ட தேசமாக மாற்றியுள்ளது. 50 லட்சத்தை விட இன்று அமெரிக்க ஆதிகத்தில் உள்ள குற்றவாளிகள் ஜனநாயக வேடமிட்டு பல லட்சமாகத் திரிகின்றனர். பல லட்சம் பேர் கொண்ட பல CIA பல லட்சம் கொண்ட இராணுவமென பல்வேறு வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கா பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபடுகின்றது. இவர்கள் உண்மையில் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பாரிய குற்றவாளிகளும் ஆவர். ஆனால் இவர்களே இன்று ஜனநாயகக் காவலரென்று கூச்சலிடுகின்றனர் ஒரு சொட்டு வெட்கம் இல்லாமல்.


பி.இரயாகரன் - சமர்