உலகிலின்று முதல் வெற்றிகரமான புரட்சி மெக்சிக்கோவாக இருக்கலாம்!

இன்று உலகில் எழுச்சி பெற்று வீறுநடை போட்டுவரும் மெக்சிக்கோ புரட்சியாளர்களை கண்டு முதலாளித்துவ அறிவு ஜீவிகள் அலறத் தொடங்கியுள்ளார்கள் எந்த நேரமும் மெக்சிக்கோவில் எதுவும் நடக்கலாம் எனப் பீதுp உறைய ஓலமிடத் தொடங்கியுள்ளனர். இங்கு எழுந்து வரும் எழுச்சி, அன்று காலனியாதிக்க வெள்ளை இன வெறியர்களின் இரத்தப் படுகொலை ஆட்சியை தெளிவாக அம்பலப்படுத்தும் ப+ர்வ குடி இந்தியர்கள் தங்கள் சொந்த மண்ணை மீட்டெடுப்பர்.

மெக்கிச்கோ மக்கள் குறிப்பாக அமெரிக்கா ஆக்கிரமிப்பு, மற்றும் சுரண்டலை எதிர்த்து  வருகின்றனர். இப்போராட்டம் என்பது அமெரிக்காவுக்கு எதிராக சுதந்திரப் பொருளாதார கோரிக்கை ஒரு பலமான கோஷமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா கடந்த வரலாற்றில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலம் மெக்சிக்கோ மீது 14 ஆயுதம் தாங்கிய யுத்தத்தை நடத்தியிருந்தது. இதன் மூலம் 1900 களில் அமெரிக்கா ஆக்கிரமிப்பாளர்கள் மெக்சிக்கோவில் அரைவாசிப் பகுதியை கைப்பற்றித் தம்முடன் இணைத்துக் கொண்டனர். அந்த வகையில் இன்று அமெரிக்காவின் பகுதியாகவுள்ள டெக்ஸாஸ் மற்றும் கலிபோர்னியா உட்பட மெக்சிக்கோவில அரைவாசிப் பகுதியை அமெரிக்க ஆக்கிரமிப்பாளரிடம் மெக்சிக்கோ இழந்து போனது. இதன் பின்னணியில் தான் இன்றைய போராட்டத்தை நாம் பார்க்க வேண்டும்.

1968ல் ஸ்தாபிக்கப்ட்ட இவ்வமைப்பு 83ல் தனது இராணுவப் பிரிவை உருவாக்கியது 94 தை முதலாம் நாள் போராட்டத்தில் திடீர் எழுச்சி கண்டது தை முதலாம்திகி சிறைச்சாலைகளை உடைததும், ஆயுதங்களை கைப்பற்றியும், முன்னாள் கவர்னர் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களையும் கைது செய்தனர். அத்துடன் 5 பெரிய நகரத்தைக் கைப்பற்றியும், முன்னாள் கவர்னர் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களையும் கைது செய்தனர். அத்துட்ன 6 பெரிய நகரத்தைக் கைப்பற்றியும் பல கிராமங்களைக் கட்டுப்hட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து தை 2 தொடக்கம் பத்து நாடகள் 15,000 அரச படைகள் எதிர்த்தாக்குதலை நடத்தியது 2,000 அப்பாவி மக்களை படுகொலை செய்து, பல ஆயிரம் மக்களைக் கைது செய்து சித்தரவதை செய்தது.

இத்தாக்குதல் தொடங்கிய அதேநேரம மெக்சிக்கோ எங்கிலும் புரட்சியாளர்களை ஆதரித்து, படு கொலைகளை நிறுத்தக்கோரி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தலை நகரில் மட்டும் ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களின் பிரதான தளம மலைக்காடுகளை அண்டிய 15,000 சதுர கி.மீ பரப்பாகும். 94 மார்கழி மெக்சிக்கோ ஸ்தம்பிதம் அடைந்து உடைந்தது. இதேவருடம் ஒரு லட்சம் மெக்சிக்கோ அகதிகள் அமெரிக்க எல்லையைக் கடந்தனர். இவர்களை வேட்டையாட விமானங்களையும், கேலிகளையும், விசேடரோந்துப் படைகளையுளும் அமெரிக்கா அமர்த்தியது.

மெக்சிக்கோவிலுள்ள மொத்த நிலத்தில் 40 வீதம் சில பிரபுகளிடம் மட்டும் குவிந்துள்ளது. அதேநேரம் மெக்சிக்கோ மக்கள் 3.5 வீத நிலத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மிகுதி 30 வீத நிலம் Nயுகுவுயு என்ற அமெரிக்க வர்த்தக வலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இலங்கைபோல 2 மடங்காகும்.

புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சியாபாஸின் 80 வீதமானோர் எழுதப்படிக்கத் nரியாதும் உள்ளனர். இதன் தலைவர் யாரெனத் தெரியாத நிலையில் மார்க்கோஸ் என்பவர் இவ் அமைப்புக்காக பகிரங்கமாக குரல் கொடுக்கின்றார். இவர் வழங்கிய பேட்டியில் இன்று உலகில் சோசலிஸ முகாம் எதுவும் கிடையாது என்கிறார். மார்க்சிஸ்ட்டா? லெனினிஸ்டா? மாவோயிஸ்டா? கஸ்ரோயிஸ்டா? என்று பலர் கேட்பதாகக் கூறிய மார்க்கோஸ் எதுவெனத் தெரியாது எனவும் நாம் இவைகளிலிருந்து ஒனறை உருவாக்கி உள்ளோம் எனப் பிரகடனம் செய்துள்ளனர். ஸ்டாலின் காலத்தில் பல வடிவங்களை அங்கிகரித்தது. இக்கட்சியினரை இட்டு உலக ஏகாதிபத்தியங்கள் அலறத் தொடங்கி விட்டன. அதன் தொங்கு அறிவுஜீவிகள் மீண்டும் கம்மினிசமா? ஏன் வேறு புலம்பத் தொடங்கி விட்டனர். ஆம் புரட்சி இந்த ஒட்டுண்னிகளை நசுக்கும்! மக்கள் புரட்சியில் தங்கள் உரிமைகளை மீட்டெடுப்பர்! என்பதை மெக்சிக்கோ எழுச்சி மீளவும் ஒரு முறை பறைசாற்றும்!