வாழ் நிலை தான் உணர்வுகளைத் தீர்மானிக்கிறதே ஒழிய, உணர்வுகள் வாழ்நிலையைத் தீர்மானிப்பவை அல்ல!

மீண்டும் மார்க்சிய விரோதக் கருததுக்களைத் தாங்கியபடி உயிர்ப்பு – 5 வெளிவந்துள்ளது. அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக சரியான மார்க்சிஸத்தை உயர்த்திப் பிடிக்கும் நாம்,உயிர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கே ஒரு பெரும் முயற்சி தேவைப்படுகிறது. ஏனெனில் எதிர் விமர்சனத்தை முன் வைத்து வரும் எம் கைகளில் உயிர்ப்புக் கிடைதது விட்டால், அது த்கள் திணிப்பை எங்கே கேள்விக்கு உள்ளாக்கி வீடம் என்பதால், எதிர் விமர்சனத்தைத் தடுக்கும் நோக்கில் பத்திரிகையைக் கிடைக்காமல் செய்து விடுவதில் இவர்கள் மிகவும் கவனமாகவே இருந்து வருகின்றார்கள்.

நாம் உயிர்ப்பை விமர்சிக்க முன்பு, தம்மை பகிரங்கமாகவே வெளிக்காட்டிய, லண்டனில் இருந்து வெளியிட்ட புத்தகமாகிய ‘மார்க்சியமும் தேசியமும்’ என்ற புத்தகத்தைப் பற்றிச் சிறிது பார்ப்போம்:


இப் புத்தகத்திற்கு யமுனா ராஜந்திரன் முன்னுரை எழுத, அதில் மூன்று பேருடைய கட்டுரைகள் வெளியாகி உள்ளது. சிவசேகரம், செ.சிவசோதி, கேசவன் ஆகிய மூவரின் கருத்துக்கைளத் தாங்கி அந்தப் புத்தகம் வெளியாகி இருந்தது. இப்புத்தகத்தில் மார்க்சுக்கு அமெரிக்கத் தொப்பி போடட ஒரு கேலிச் சித்திரத்துடன் மார்க்சிசத்தின் மீதான கிண்டல் அட்டையிலிருந்தே தொடர்ப்படுகிறது. இவ் அட்டையின் மூலம், உள் கட்டுரையின் மூலம் அமெரிக்காவுக்குச் சேவை செய்ய அழைக்கின்றார்கள் இவர்கள். இப் புத்தகத்தில் வெளிவந்த சிவசோதி, கேசவன் ஆகியோரின் கருத்துக்கள் முன்னர் மனிதம், உயிரப்பில் வெளியானவையே. அதே வாக்கிய ஒழுங்குகளுடன் இக்கட்டுரைகள் உள்ளதுடன், இதற்கு சமர் முன்பு விமர்சனம் செய்தும் இருந்தது. அவ் விமர்சனத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அறிவு, நேர்மை, இவர்களிடம் இப் புத்தகத்தை வெளியிட்ட போதும் இருக்கவில்லை.


அட்டைப்படம் உள்ளிட்ட இப்பெயர் ஒழுங்கில (முன்னுரை உள்ளிட்டு) மார்க்சிசத்தைக் கொச்சைப்படுத்தவும், திரிபுபடுத்தவும் இயன்றவரை முயன்றுள்ளது. இதைக் கட்டுரை ஒழுங்குப் படிமுறையில் தொகுத்து ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் சிவசேகரம் தனது கருத்துக்களை இவ் வெளியீட்டாளர்கள் திரித்து, தமக்குச்சாதகமாக மாற்றியுள்ளனர் எனச் ‘சுவடுகள்’ 66ல் ஒரு சிறு குறிப்பை எழுதியுள்ளார்.
சிவசேகரம் தனது சில கட்டுரைகளிலும், விம

ர்சனங்களிலும் மார்க்சிசத்தின் சில பொது உண்மைகளைக் கடைப்பிடித்து வருபவர். ஆனால் அது அவரின் இன்றைய வாழ்நிலையில் மற்றும் அரசியலுக்கு ஏற்ப குறுகிவீடுவதால்தான் நாம் எதிர்த்து வந்தோம். சாதாரணமாக கூட்டங்களில் மாற்றுக் கருத்து மீது (உயிர்ப்பு போன்றவர்கள் உள்ளிட்ட மாற்றக் கருத்து) பல்லிளித்துப் போகும் அவரின் குணம், மார்க்சிசத்தினத் பொது உண்மைக்கு முரணாகவே கூட்டம் போனாலும் அவர் எதிர்க்க மறுப்பர். இதை பயன்படுத்யே ‘மார்க்சிசமும் தேசியமும்’ என்ற புத்தகத்தில்சிவசேகரத்துக்கு உயிர் உள்ள போதே திருத்தம் கொடுக்க முயன்றனர். இவ் வெளியீட்டாளர்கள்.


‘மார்க்கிசமும் தேசியமும்’ என்ற புத்தகம் நூற்றுக் கணக்கில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதை விநியோகிக்கும் பலரிடம் இதை ஏன் விநியோகிக்கிறீர்கள்? எனக் கேட்டோம். “மாற்றுக் கருத்துக்கள் மீது விவாதத்தைத் தூண்ட” எனப் பதிலளித்தனர்.இக் கருத்துக்கு சமர் மட்டுமே பதில் அளித்த நிலையில், அதற்குப் பதில் அளிக்க முடியாதவர்கள் - மாற்றுக் கருத்து மீதான விவாதம் எனக் கூறியபடி தம்மைத் தாமே கேலிசெய்தபடி ஒரு திணிப்பை நிகழ்த்துகின்றனர்.


இதில் வரும் மூன்ற கருத்தில் எது உங்களுடையது? எனக் கேட்க அவர்கள். “எல்லாம் மாக்சியமே!” எனக் கூறி தமது மாக்சிச விரோதமுக மூடியை இன்னும் இறுகப்போட முனைந்தனர்.


இவ் விநியோகத்தில் ஈடுபட்ட உயிரப்பு உறுப்பினரும், ஐரோப்பியப் பொறுப்பாளருமான இவரின் கடந்த காலங்கள் இதே அமைப்புக்கு வேட்டு வைப்பதாகவே இருந்தது வந்தது. எப்பொழுதும் உறுதியான சொந்தக் கருத்து இல்லாத இந்த உயிர்ப்பு உறுப்பினர், முன்பு ‘தீப்பொறி’ PLOT இல் இருந்து உடைந்து உயிருக்காகப் போராடிய போது - இவர் அவர்களை எச்சரித்தவர்.


யாழ் - மண்ணிலிருந்த தீப்பொறி உறுப்பினர் உயிருக்குப் பயந்து PLOT யிடம் தப்பி, பிரான்சுக்கு வந்து. இங்கு PLOT யைச் சந்தித்து.. அதன் அராஜகம் பற்றி 1986களில் விமர்சித்தார். அப்பொழுது, இன்றைய உயிர்ப்பு உறுப்பினர் அவரிடம் “வாயை மூடிக் கொண்டிரு! இல்லையெண்டா மண்டையிலதான் போடுவோம்.” ஏன எச்சரித்து அனுப்பினார். இன்று அவர் அதே அமைப்பில்! எவ்வளவு வேடிக்கையென்று பாருங்கள்.


அத்துடன் இந்த உயிர்ப்பில் உளள்வர்கள் உள்ளிட்ட ஒரு பெண்கள் கூட்டத்தை பிரான்சில் நடத்தினர். இவ் பெண்கள் கூட்டம் பெண்களையே கேலி செய்தது என்பது ஒரு புறமிருக்க. அக் கூட்டத்தில் உயிர்ப்பின் ஐரோப்பிய மற்றுமொரு பொறுப்பாளர். மாக்கிசம் தொடர்பான பெண்கள் பிரச்சினையை கூட்டத்தில் பார்வையாளர் எழுப்ப, அவர் அதையொட்டி “அந்தச் சிவப்புப் புத்தகமா!?” எனக் கேலி செய்து மார்க்சிசத்தை வளர்க்கும் பணியில்(?) அதை அத்துடன் முடித்து வைத்தார். இன்று உயிர்ப்பில் கேசவன் என எழுதுபவரும். ‘மார்க்சிசமும் தேசியத்தி’லும் கேசவனாக உள்ளவரும் மார்க்சிசத்திற்குத் திருத்தம் கொடுக்க முனைவதுடன், தீப்பொறிக் கேசவனுக்கு அவரின் பெயரிலேயே வேட்டு வைக்கும் முயற்சியாகும். தீப்பொறிக் கேசவன் புலிகளால் கைது செய்யப்பட்டபின் அவரின் அரசியல், மற்றும் அவரின் பெயரைப் பயன்படுத்தி மார்க்சிசத் திரிபை அரங்கேற்றுவது, சிவசேகரத்திற்குத் திருத்தம் கொடுத்ததைப் போன்று, ஒரு மாபெரும் மோசடியாகும்@

இது கடந்த கால தீப்பொறியின் அரசியல் முற்போக்குப் பாத்திரத்தை சிதைத்து அழித்து வரும் முயற்சியாகும். மூன்று கட்டுரைகளைக் கொண்ட ‘உயிர்ப்பு’ – 5 வெளியாகி இருந்தது. இதில் நாம் ‘அழகியலும் அரசியலும்’ என்ற கட்டுரையே எமது விமர்சனத்தின் முக்கிய பகுதியாகவுள்ள அதேநேரம் - மற்றைய கட்டுரைகள் பற்றியும் சில கருத்துக்களைக் கூற முனைகின்றோம்.