கடந்த மே மாதம் மொஸ்கோவில் இரண்டாம் உலகப் போரின் 50ம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கைகளில் செங்கொடியை ஏந்திக் கொண்டு. “சோவியத் அதிகாரம்”, “சோவியத் ய+னியன்” என முழக்கமிட்டு பிரமாண்டமான பேரணியினை நடத்தினர். அதே நாளில் அதிபர் யெல்ட்சின் இதனைக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்ன், ஜெர்மனி அதிபர்களுடன் கைகோர்த்துத் திரிந்ததைக் கண்டித்தும் முழங்கினார்கள். இவர்கள் ஊர்வலத்தை வந்த இரண்டாம் உலகப் போர் வீரர்கள் யெல்சின் தங்களுக்கு அறித்த யுத்த நினைவுப் புத்தகங்களை கறற்றி வீசி எறிந்தனர். முன்னாள் சோவியத் ய+னியனில் அங்கம் வகித்த உக்ரேயன். தாஜிக்சிஸ்தான், பால்டிக் குடியரசுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் செங்கொடியுடன் மக்கள் இத்தமைகய ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.


நன்றி : புதிய ஜனநாயகம்