முகாராஷ்டிரா மாநிலத்தில் லட்டுர் பகுதியில் ப+கம்பம் தாக்கி இரண்டு வருடங்கள் ஒடி மறைந்து விட்டன. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு 1084 கோடிரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது. அரசின் நிதி உதவியோடு பல்வேறு சமூக நலன் அமைப்புக்களும். தனி மனிதர்களும் கூட நிவாரணப் பணிகளுக்காக அரசுக்குப் பண உதவி அளித்தனர். சமீபத்தில் மகாராஷ்ரா மாநில உயர் நிதி மன்றம் நிவாரணப் பணிகள் பற்றி ஆய்வு செய்ய கமிஷன் ஒன்றை நியமித்தது. இக் கமிஷன் தனது அறிக்கையில் “கடந்த ஒன்றரை வருடங்களில் பாதிப்புக்குள்ளான எந்தவொரு பகுதியிலும் அரசு ஒரு ஓலைக் குடிசையைக் கூட கட்டிக் கொடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது பல அமைப்புக்கள் நிவாரண உதவி குறித்து கொடுத்த மனுக்களை விசாரித்த பொழுது தான் இந்த அட்சியப் போக்கு அம்பலமாகியது.


நன்றி : புதிய ஜனநாயகம்