யாழ் குடாநாடு 83களில் 9 லட்சம் குடிமக்களைக் கொண்டிருந்தது. இது இன்று 4 லட்சங்களாகக் குறைந்த நிலையில் மிகுதிப் பேர் கொழும்பு, இந்தியா, மேற்கு நாடுகளென இடம்பெயர்ந்தும் உள்ளனர்.


இன்ற இனவெறி அரசின் தமிழ்ப் பிரதேசத்தை சாம்பல் மேடாக்கும் ‘சூரிய பிரகாச’ நடவடிக்கை வட தென்மராடசி தவிர்ந்த அனைத்து மக்களையும் இன்று யாழ் குடாநாட்டில் எஞ்சியுள்ள 4 இலட்சம் மக்களின் 50 விதத்திற்கு மேல் தாழ்த்தப்பட்ட மக்களும், மிகவும் அடிநிலையில் இருந்த நடுத்தர கீழ்ப் பிரிவுகளுமேயாகும்.


இராணுவத்தின் சாம்பல் மேடாக்கும் முன்னெடுப்பு யாழ் மக்களின் இயல்பான கலாசாரமாக இருந்த  வீடு என்ற தமது வாழ்வையே அர்ப்பணித்து உருவாகும் வீடு இன்று சாம்பல் மேடாகியுள்ளது. 60 வருட மனித வாழ்வை வீடு என்ற ஒரு குறிக்கோளுடன் தின்னாமற் குடிக்காமல் மீதப்படுத்திக் கட்டியவீடு இன்று சுடுகாடாக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டிலுள்ள 2 அறைகளுக்கு மேலுள்ள ஒரு லட்சம் கல்வீடுகளை இராணுவம் இடித்துத் தள்ளி தரைமட்டம் ஆக்கியபடியே முன்னேறுகின்றது. ஒரு தொங்கலில் இருந்து மறுதொங்கல் தெரியும் வகையில் சுத்தம் செய்யும் இராணுவமானது பனை, தென்னை, பலா, வாழை, மா… என அனைத்துத் தாவர வளங்களையும் கூட விட்டுவிடவிலலை. அழித்துத் துலைத்து வருகிறது. இதன் மூலம் எதிர் காலத்தில் யாழ் குடாநாட்டை ஒரு பாலைவனமாக, செல்வம் கொழித்த ப+மியை ஒரு வனாந்தரக் காடாக்க வெறியோடு முன்னேறி வருகிறது.


தாழ்த்தப்பட்ட மக்களின் ஓலைக் குடிசைகள் தீயிடப்பட்டு அது சாம்பலாக எஞ்சும் அளவுக்கு ஒரு தமிழ் இன அழிப்பு உயிர், பொருள், நிலம்… அனைத்தின் மீதும் துவம்சம் செய்யும் இனவெறியர்களின் கொட்டம் தொடர்கிறது.  இன்று யாழ் குடாநாட்டின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய பகுதியில் வெளியேறும் லட்சக்கணக்கான மத்தியதர மற்றும் கீழத்தரப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு பரந்த வெளிக்கு நகர்கின்றனர்.

கிளிநொச்சி நோக்கி நகரும் மக்கள், அங்கு எந்த விதத்திலும் ஒரு ஒதுக்கு இடத்தைக் கூடப் பெறமுடியாமல் பரந்த காடுகளைச் சென்றடைகின்றனர். இது மத்தியதர வர்க்கத்தின் இயல்பான குணாம்சம் மீது பாரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தமது காலம் ப+ராவுமான உழைப்பை இழந்து அகதியாக வானையே முகடாகக் கொண்ட பொட்டல் காட்டு வெளியில் இவர்களின் தார்மீக பலம் நகர்ந்து விடவது தவிர்க்கமுடியாது. இவர்கள் இனவெறிக்கு எதிராகப் போராடுவதற்குப் பதில், புலிகளுக்கு எதிராக உணர்வைப் பெறுவதில் வேகம் பெறுவர். ஏனெனில் அவர்கள் எந்த சொந்த உயர்வைக்காணும் சுயமாகக் கொண்டிருக்க முடியாதபடியான புலிகளின் ஆட்சி என்பது இன்றைய நிலைக்கான காரணத்தை புலிகளின் மீதே தேடிக் காணமுயலவ்ர்.


இங்கு மிக வறுமையில் எல்லாவித உழைப்பையும் இழந்து அகதியாகிப் போன தாழ்த்தப்படட மக்ளகின், இந்த இடம்; பெயர்வு அவர்களின் சமூகப் பொருளாதார வாழ்வில் பாரிய மாற்றத்தை எதிர்காலத்தில் இது ஏற்படுத்தியே தீரும். ஆவர்களின் இயல்பான உழைப்பும், பரந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களிலுள்ள பொட்டல் காட்டுப் பகுதியில் அவர்கள நிரந்தரமாகவே நிலைகொள்ள வாய்ப்பை வழங்கும்.


யாழ் குடாநாட்டில் ஒவ்வோர் உயர்சாதி கிராமப்புற குடியிருப்புக்களின் பின்புறத்தைச் சூழவும் ஒதுக்கி விடப்பட்ட வளமற்ற நிலங்களில் வாழ்ந்த இந்த மக்கள் அந்த நிலங்களைக் கூட சொந்தமாகக் கொண்டவர்கள் அல்லர். இன்று ஒரு பரந்த வெளியை, மக்களின்றி உள்ளதைக் காணும் இவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள தமதாக்கிக் கொள்ள இயல்பிலேயே முன்வருவர். இதில் இன்று புலிகளின் பங்களிப்பு ஒத்தழைப்பு இருப்பின் அவர்கள் தமிழ் தேசியத்தின் ஒரு மாபெரும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இப்புலம் பெயர்வின் ஊடாக இம் மக்கள் பங்காளியாக மாறுவர். முற்றும் இது சாத்தியமான (புலிகள் தடை செய்யாவிடின்) கலாசார, பண்பாடடுத் துறையில பொருளாதாரப் பலம் பெற்று இம்மக்கள் தம்மீதான சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்ட உணர்வில் உரம் பெறுவர்.


இனச் சுத்திகரிப்பில் இன்னொரு புறத்தில் பாரிய பொருளாதார தடையை விரித்து, பட்டினி போட்டு சாகடிக்கப்படுகிறது. இந்த வகையில் முன்பே இருந்த பொருளாதாரத் தடையுடன் புதிதாக அகதிகள் கிளிநொச்சி நோக்கி நகர, அங்கு முன்பு பொருளாதார தடைக்கூடாக லொறியில் வந்த பொருட்களைத் தடுக்க புதிய பொருளாதாரத் தடைகளை ஜனநாயக சந்திரிகா அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பட்டினியிட்டு தமிழ்இனத்தை சரணடைய வைக்க சிங்கள இன வெறியர்கள் எலலாவற்றையும் இழந்து வரும் அகதிகளைக் கூட கொடுமையாக ஒடுக்குகிறது.


இன்ற வெட்டவெளிகளுள் நகர்ந்து வரும் இம் மக்களை எதிர்காலத்தில் முழுமையாக காட்டுக்குள் நகரும் வகையில், இனவெறி இராணுவத் தாக்குதலை இப்பிரதேசத்திலும் தொடுக்கலாம். இதன் மூலம் காடுகளில் வைத்து பட்டினி இட்டும் காடுகளை நெருப்பிட்டு அழிக்கும் ஓர் இனச் சுத்திகரிப்பை இந்த இனவெறி அரசு செய்ய முயலலாம் என்பதை தமிழ் தமிழ் பேசும் மக்கள் முன்னெச்சரிக்கையாகவே இருந்து கூட்டாக எதிர்காலத்தில் போராட வேண்டும்.