கடந்த 15 வருட யுத்தத்தில் மிக மோசமான ஓர் இன அழிப்பு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த சிறிலங்கா இனவெறி அரசு, புலிகளை யாழ்.குடாநட்டில் தோல்வியுற வைத்துள்ளது. இதைப் புலிகள் ‘பின்வாங்கல்’ என்பதற்குப் பதில் தோல்வியாவே மதிப்பிட வேண்டியுள்ளது.

ஒரு யுத்தத்தில் முன்னேறுதல், பின்வாங்குதல், நிரந்தரப் படையாக இருத்தல், கெரிலாக் குழுக்களாக மாறுதல் என பல வேறு இராணுவச் செயற்பாடுகள் சாத்தியமானதே. ஒரு யுத்தத்தின் நோக்கம். அதன் மீதான தெளிவான பார்வை, மக்கள் பற்றிய சரியான பார்வையென பல கூறுகள் மீது ஓர் விடுதலை அமைப்பு தன்னை மாமற்றி ஒழுங்கமைததுக் கொள்வதில் தான் ஒரு யுத்தத்தின் இறுதி வெற்றியே தங்கியுள்ளது. ஆனால் புலிகளின் இன்றைய நிலை இவைகளுக்கு உள்ளானது அல்ல.


1983களில் மக்கள் பங்காளிகளாக இல்லா நிலையில் பார்வையாளராக இருந்தபடி “எங்கட பெடியள்” என்ற அடைமொழியின் ஊடாக, இயக்கங்களை புனித வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக வணங்கினர்@ அன்று இயக்கத்தின் மீதான எதிர் விமர்சனத்தை: மக்களை எதிர் விமர்சனம் செய்து இயக்கத்தைப் பாதுகாத்தனர்.

தமிழீழ விடுதலைப் போராடட வரலாற்றில், அதுவும் இன்று புலிகளின் நிலையில் புலிகளின் தோல்வி என்பது, அவர்கள் மீளவும் பழைய நிலையை அடையமுடியாது இட்டுச் சென்றுள்ளது. ஏனெனில்: புலிகள் மிகவும் தனிமைப்பட்ட ஒரு நிலைக்குள் வகையாக மாட்டிப்போயும் நிற்கின்றனர்.


1983களில் மக்கள் பங்காளிகளாக இல்லாத நிலையில் பார்வையாளராக இருந்தபடி “எங்கட பெடியள்” என்ற அடைமொழியின் ஊடாக, இயக்கங்களை புனித வழி பாட்டுக்குரிய தெய்வங்களாக வணங்கினர்! ஆன்று இயக்கத்தின் மீதான எதிர் விமர்சனத்தை: மக்களை எதிர் விமர்சனம் செய்து இயக்கத்தைப் பாதுகாத்தனர். இதேநேரம் இந்தியாவில் தமிழக மக்கள் தங்கள் ஒருமித்த ஆதரவை வழங்கியதும், இந்திய மத்திய அரசு, மாநில அரசு இவ் இயக்கங்களை செல்லப் பிள்ளைகளாகத் தத்தெடுத்த இந்நிழக்வுகளில் இயக்கங்களின் ஒருவித வளர்ச்சிப் போக்கை, அம்பலப்படாத வகையில் கொண்டும் இருந்தனர்.
இதேநேரம் முஸ்லிம் மக்கள் பங்காளிகளாக இயக்கத்தில் இணைந்து நின்றதும், சிங்கள பொதுமக்ளகின் முன் ஒரு விரோதமற்ற நிலை இருந்ததும் சிங்கள இயக்கங்கள் சில தமிழ் இயக்கங்கள் சில தமிழ் இயக்கத்திடம் உதவிகள் சிலதைப் பெற்றதும், என பல்வேறு பரந்த ஆதரவுத தளத்தை தமிழ் தேசிய விடுதலை கொண்டும் இருந்தது. சர்வதேசிய ரீதியாக தமிழ் மக்களின் ப+ரண மனமொத்த பங்களிப்பைப் பெற்றதும், இன வெறித் தாக்குதலை எல்லோரும் எதிர்த்து நின்றனர்.


1987ல் தனித்துப் புலிகள் என்ற் நிலையில் கூட, சிறு இயக்கங்கள இந்தியாவுக்கு எதிராக ஓரளவு போராடியும் இருந்த காலமாகும். முற்றைய பெரிய இயக்கங்கள் மீதான புலிகளின் அடக்கு முறையும், அதனால் ஒரு பகுதி மக்கள் புலிகளின் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்த நிலைகளில், அவ்வியக்கங்கள் துரோகம் இழைத்து இந்தியா, இலங்கை அரசுகளின் கால்களில் தவம் கிடந்தன.


இந்தியா பற்றிய மாயையைக் கொண்ட தமிழ் பேசும் மக்கள் மத்தியில், புலிகளின் சில நடவடிக்கைகள் மூலமான இந்திய எதிர்ப்பு உணர்வை ஓரளவிற்கு ஏற்படுத்தினர். இந்நிலைகளில் எழுந்த யுத்தம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களது கொரூர முகத்தை மக்கள் நேரடியாகவே உணர்ந்து, புலிகளின் போராட்டத்திற்கு தம்மால் இயன்ற வரை உதவினார். இதேநேரம் இந்தியாவில்-தமிழ் நாட்டில் ஒரு பரந்துப்பட்ட ஆதரவைக் கொண்டும் இருந்த புலி இந்தியாவிலேயே அரசுக்கு எதிராக போராடடங்கள வெடித்தன.


இந்தியா 83, 87களில் ஒரு பின்தளமாக இருந்தது. 87ல் சிங்களப் பகுதிகளில் இந்திய எதிர்ப்புணர்வு எழுச்சி பெற்றதும், இலங்கை அரசே இந்தியாவை எதிர்க்க புலிகளிடம் ஆயுதம் வழங்கியதும் எனப் புலிகள் தளங்களை எல்லாப் பக்கத்திலும் கொண்டிருந்தனர்.


துரோகியாக இருந்தவர்கள் யாழ் வந்ததும். அவர்களின் ஆடாவடித்தனஙகள் இந்திய அரசுடன் இணைந்து நின்ற போது மக்கள் கொதித்து வெறுத்து ஒதுக்கினர். புலிகளைப் பொறுத்த வரையில் ஆயுதங்களை; பெறுவதோ, எதிரியை அம்பலப்படுத்துவதோ எப்பொழுதும் ஒரு பெரிய பிரச்சினையாக அவர்களுக்கு இருந்ததில்லை.


ஆனால், இன்று இராணுவம் யாழ் குடாநாட்டைப் பிடித்து விடும் என்ற நிலையில், புலிகள் மீளுவும் யாழைக் கைப்பற்றுவது, அல்லது தம்மை ஒரு சக்தியாக மீளவும் மீளமைப்பது என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றே! ஏனெனில்:


1990களுக்குப் பின் புலிகள் தமது தேசத்திற்கு உள் முழமையான பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததும், சில ஆயிரம் பேரை சிறையிலடைத்தும், அல்லது கொன்று போட்டதும் என்ற நிலையென்பது சுயமான செயற்பாடுகள் முற்றாகவே தடைப்பட்டது குறைந்தது சரி. புpழைகளைக் கூட nளியிலோ. புலி அமைப்பினுள்ளோ கதைக்க - வெளியிட – முடியாத வகையில் ஒரு சூனிய நிலையை அடைந்தது. இந்நிலையென்பது எப்பொழுதும் செயல்கள், அதன் மீதான தியாகங்கள் என்பனவற்றின் மேலிருந்து திணிக்கப்பட்டது. இதையொட்டி புலி உறுப்பினர் ஒருவரின் கருத்தை இங்கு முன் வைப்பது இவற்றை எளிதாகப் புரிய உதவும்.


நாட்டில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக ஒர புலி உறுப்பினரிடம் கருத்துக் கேட்டோம். அப்பொழுது அவர் கூறினார்.
“எனக்கு அதுபற்றி உடனடியாகக் கருத்து இல்லை” என்றார். ஏன்? ஏன்றோம் “நாம் ஒவ்வொருவரும் கருத்துக் கூறின் அது தவறு!


தலைவன் என்ன நினைக்கின்றார் என்பது தெரிந்த பின்னே, அதுவே எனது கருத்து” என்றார் இதிலிருந்து புரிவது என்னவென்றால்: ஒரு பிரச்சினை மீதான கருத்துக்கள் ஒரு அரசியல் அடிப்டையில் கூட சொல்ல முடியாத நிலையும். மேலிருந்து திணிக்கப்படும் நிலையும். இது இயல்பில் செயலை ஒரு ஒரு சூனிய நிலைக்குள் தள்ளி மட்டுப்படுத்துவதுடன் மௌமான சூனியப் பார்வையையும் ஏற்படுத்துகின்றது.


ஓர் இடத்தில் ஒரு நிகழ்வை எதிர்கொள்ளக் கூட ஒரு புலி உறுப்பனரால் முடியாத நிலையை அதாவது தலைiமை என்ன நினைக்கும்? என்ற நிலையில் தயங்கும் போக்கு இயல்பில் முன்னேறுவதற்குப் பதில் பின்னடைவே ஆகும்.


அதாவது ஒரு தாக்குதலில் தலைமையின் உத்தரவின்றி, தனித்து விடப்பட்டால், தலைமையைக் கண்டு மிரளும் போக்கு முன்னேற முடியாத தோல்விக்கு இட்டுச் செல்லும். இந்த நிலைமை என்பது புலிகள்.மற்றும் மக்களை ஒட்டு மொத்தமாகவே சுயமான செயற்பாட்டைத் தவிர்த்து நிற்கின்றது. இந்த நிலையில் தான் இன்று சிங்கள இராணுவம் முன்னேறிச் சென்றது.


மற்றும் இதிலிருந்து மீளுவது என்பது தலைமை தனது அணிகளுக்கும், மக்களுக்கும் ஒரு பரந்த ஜனநாயகத்தை வழங்குவதுடன், தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். இதை இன்று கூட புலிகள் உணரவில்லை என்பதை நாம் காணமுடிகிறது.


1995களில் இந்தியா என்பது ஒரு மொளனமான, சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பை அங்கீகரித்து நிற்கின்ற வகையில் செயற்படுவது உலகில் தமிழ்த்தேசியம் அழிக்கப்படும் போது அங்கீகரிக்கப்படுவதாகவே அமைகிறது. ராஜீவ் கொலை (இவர் ஒரு குற்றவாளியே) என்பது ராஜதந்திரம் அற்ற. எதிர்கால போராட்டத்தின் ஒரு பின் தளம் பற்றிய எந்த முன்னோக்கின்றியும் செய்யப்பட்டதே. இந்தியாவில் ஒரு பரந்த எதிர்ப்புத் தளத்தைக் கொண்டுள்ள அதே நேரம், பின்தளத்தை முழுமையாகவே புலிகள் இழந்தனர். சிங்கள இனவெளி ஆக்கிரமிப்பில் இருந்து மீள, தன்னைப் புனரமைத்துக் கொள்ள, இன்று முன்பிருந்த பின் தளங்களை இல்லாமற் போயுள்ளது.


அதேநேரம் புலிகள் அதிகளவு உறவையும், நம்பிக்கையையும் கொண்ட தி.க போன்ற அமைப்புக்கள், பல்வேறு பிழையான அரசியற் கட்சிகளப் போல இதுவம் ஒன்றாகும். பார்ப்பான எதிர்ப்பு எனக் கூறியபடி ஜெயலலிதாவின் முந்தாணையைப் பிடித்துத் திரியும் வீரமணி போன்ற சந்தர்ப்ப வாதிகளை புலிகள் அதிகளவில் இந்தியாவில் நம்புவது என்பது புலிகள் எதிர்காலத்தில் தம்மை மீள நிலைநிறுத்துவது என்பது முடியாத தோல்விக்கு இட்டுச் செல்லும். முற்றும் முஸ்லிம் மக்களை குடா நாட்டிலிருந்து வெளியேற்றியது. முன்னர் முஸ்லிம்களை வெளியேற்றியது. என முஸ்லிம் மக்கள் மீதான தொடர்ச்சியான எதிர் நடவடிக்கை புலிகளை விடுதலை வீரர்களாகப் பார்ப்பதற்கு பதில் வௌ;வேறு கொணத்தில் சர்வதேசய ரீதியில் பார்க்கப்படுகிறது. இது உள் நாடடில் முஸ்லிம் மக்களின் பக்கம் எந்த அனுதாபத்தையும் 83, 87 களில் பெற்றதைப் போல பெறமுடியாத நிலையை இன்றடைந்துள்ளது.

மற்ற சிங்கள மக்கள் மத்தியில் புலிகள் 83,87 களில் பெற்றுவந்த ஓரளவு ஆதரவு, தார்மீக ஒத்துழைப்பை இன்று இழந்து ஆதரவு, தார்மீக ஒத்துழைப்பை இன்று இழந்து விட்டனர். பல்வேறு சிங்களக் கிராமங்களில் குழந்தைகள், பெண்கள் என கொல்லப்டப்டதும், பேச்சு வார்த்தையில் ராஜதந்தரம் அற்ற் முந்திக் கொண்டு முன்னேறித் தாக்குதல் எனப் பல்வேறு சாதாரண சிங்கள மக்கள் மீதான் தாக்குதல் புலிகளின் செயல்கள் மீது தார்மீக ஆதரவைக் கூட புலிகள் சிங்கள மக்கள் மத்தியில் இழந்துள்ளனர்.


பரந்துபட்ட மக்கள் இன்று ஒரு விடுதலைப் பிரதெசத்தில் விடுதலைக்குரிய எந்த விடுதலையையும் (சிங்கள இனவெறி அடக்குமுறையைகத் தவிர) பெறாத நிலை என்பது ஒரு சூனியமான மயான ப+மியில் வாழ்ந்த வாழ்வும். இன்ற ஒரு பரந்த வெளியில் கஸ்ரப் பிரசேத்திற்கு நகர்ந்ததென்பதும் அவர்கள் ப+ர்வீக வாழ்வியல் இயல்பில போராட்டத்திற்கு எதிர் நிலையைப் பெற்று வேகம் பெறும்.


1983க்கு முன் தமிழ் பேசும் மக்கள் சிங்கள இனவெறி அடக்கு முறையைத் திவர மற்றப்படி பெற்றவந்த ஓரளவுக்கான கருத்து, பேச்சு, எழுத்து சுதந்திரம், மற்றும் ஒரு பொருளாதார வாழ்வியலை இழந்துள்ள இன்றை யநிலை என்பது. இனவெறி அரச ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதற்குப் பதில். ஒரு மௌனத்தை, சூனியத்தை இன்று ஏற்படுத்தியள்ளது. இது எதிர்காலத்தில் புலிகளை தற்கொலைக்கே இட்டுச் செல்லும்.


இதுபோன்ற பல்வேறு காரணங்கள் 1995ல் மீளவும் தமிழ் மண்ணை மீட்க புலிகளால் முடியாத நிலை தோன்றியுள்ளது. இன்றைய நிலையை  ஒட்டி பல் வேறு புலி உறுப்பினர்கள் 83, 87களை இன்று நினைவு படுத்தும் இன்றைய நிலையில், அவர்கள 83,87, 95க்கு இடையில் மாறி வந்த பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகளையோ, தாம் தம்மில் மட்டுமென சுருங்கி தனிமைப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டிருப்தையும் இன்னமும் காணமுடியாது பால் குடிக்கும் ப+னையாக கண்களை இறுக மூடி நிற்கின்றனர். இதன் மீதான இயலாமை நகரும் போது ஒரு வெற்றிடத்துக்கு தொப்பென விழுவதற்குள் புலிகளை இட்டுச் செல்லும்.


மற்றும் சர்வதேசிய ரீதியில் பார்க்கும் போது 83,87களை விட இன்ற மேற்கு நாடுகளில் பாரிய சமுக நெருக்கடிகளை இவ்வரசுகள் எதிர் கொள்கின்றன. 2-3 லட்சம் இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பவும், ஓர் அவசர முடிவை அடையவும் விரும்புகின்றனர். எனவே அரசைப் பலப்படுத்தவும், அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி அவர்களின் பாணியில் அழுவதுடன், புலிகளை அழிக்கவும் கங்கணம் கட்டியும் நிற்கின்றனர். சாதாரண மனிதாபிமான மக்களின் மன நிலையை வென்றெடுப்பதற்கு இவ்வரசுகள் புலிகளின் மக்கள் விரோத சிங்களக் கிராமப் படுகொலைகளை பிரசாரத்துக்கு முன்தள்ளிச் செல்கின்றனர். எதிர் காலத்தில் புலிகளின் செயற்பாடுகளை மேற்கு நாடுகளில் கடினமாக மாறவுள்ளதை அண்மையில் புலி உறுப்பினரை நாடு கடத்த கனடா அரசு எடுத்த முடிவு பறைசாற்றுகின்றது. இந்த வகையில் எதிர்காலத்தில் புலிகளுக்கு எதிராக சர்வதேசிய ரீதியில் ஒரு பாரிய தடைகள் ஏற்படவுள்ளது. புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் மத்தியில் புலிகளின் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சார வடிவம் ஊதிப் பெருத்த நிலையில் அண்மைய யாழ் குடாநாட்டு இழப்பு பாரிய வீழ்ச்சியை தமிழ் பேசும் மக்கள் மத்தில் ஏற்படுத்த உள்ளது.


இது போன்ற பல்வேறு நலைகள் புலிகளுக்கு பாதகமான, எதிர்காலங்களில் மீள முடியாத சிக்கலுக்குள் சிக்கிப் போய் உள்ளனர். ஆயுதம், பணம்,ந பர் எண்ணிக்கை என்ற எல்கை;குள் மட்டும் தம்மை மீள அமைக்கின்ற என்ற புலிகளின் நிலைப்பாடு கற்பனையாக இன்றுள்ள புலிகளின் நிலையே இட்டுச் செல்லும்.