உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? இந்த சத்திய வசனங்கள்!

இனப்படு கொலை!
9 ஆடி 95 (நவாலி)
22 புரட்டாதி (நாகர்கோவில்)

இனப்படுகொலை
27 ஜப்பசி 95
(அநுராதபுரம்)

“சமானதானத்துடன் அமைதியாக ஓய்வு எடுங்கள்: இன்னொரு முறை இந்தவாறு நிழாதிருக்கட்டும்.”

இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1945ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதாம் 10ம் நாள் ஜப்பான் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது ஈவிரக்கமின்றி அமெரிக்கா அணுக்குண்டை வீசியெறிந்த போது கொல்லப்பட்ட லட்சக் கணக்கான மக்களின் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்ட வாசகம் தான் இது. அன்று வீசப்பட்ட இந்த அணுக்குண்டுகளோ வெறும் ஊசிக் குண்டுகள். இக் குண்டுகள் 10-15 கிலோ தொன் வெடிப்புச் சக்திகளை மட்டுமே கொண்டிருந்தன. ஒரு ரீ.என்.ரீ வெடித்தாலே. ஒரு மனிதனை 2,000 பீரங்கியால் ஒரே நேரத்தில் சுடுகின்ற அளவு வெடிப்பு சக்தி பிறந்து விடும். ஆனால் இன்றோ இவற்றை விட 300 மடங்கு வெடிப்பு சக்திகளைக் கொண்ட பிரமாண்டமான அணுவாயுதங்கள் தயாரிக்கப்படடு வி;ட்டன.

கணக்கிடப்படட மனிதகுல வரலாற்றில் இன்னுமே மனிதன் 3000 வருடங்களைக் கூட யுத்தமின்றிக் கழிக்க முடியவில்லை. போரிலே தோன்றிய இதிகாசங்கள் கூட இன்று போரை வழிநடத்துகின்றது. உலகைத் தமது கைக்குள் சுருட்டிவிட நினைக்கின்ற ஏகாதிபத்தியங்கள் இன்னொரு உலகப் போருக்கு நட்சத்திர மண்டலங்களையும் தயாராக்கி விட்டன. இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த சக்திய வசனங்களை மறந்துவிடப் போகின்றோமா? அல்லது யுதத்தைத் தலைமுழுகப் போகின்றோமா? அப்படியானால் மக்களின் கைகளுக்கு அதிகாரத்தை எப்பொழுது மாற்றுவது?