இனசுத்திகரிப்பு சிறிலங்கா இனவெறி : சாம்பல் மேடு நடவடிக்கையும் தமிழினத் துரோகிகளின் காட்டிக் கொடுப்பும்

இன்று தமிழ்த் தேசியம் அழிக்கப்படுகின்றது. தமிழ் கலாசாரம் கற்பழிக்கப்படுகின்றது. தமிழ் பொருளாதாரம் சாம்பலாக்கப்படுகின்றது. தமிழ் உயிர்கள் விளையாட்டுப் பொம்மைகளாக சுட்டு விளையாடப்படுகின்றது. ஆம்! இன்று ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுவது என்ற ஒரு சாதாரண மனித உரிமை கூட பந்தாடப்படுகின்றது. ஒரு இனத்தின் அழிவில் தான், இனவெறி அரசு கொள்ளையடித்து சுகபோகம் அனுபவிக்க முடியும் என்பதை இன்றைய நிகழ்வுகள் மீளவும் பறைசாற்றி நிற்கிறது.

யாழ் குடாநாடு இடிபாடுகள் கூடிய ஒரு பரந்த சமவெளியாக மாறிவரும், இனவெளி ‘சந்திரிகா முற்போக்கு(?) அரசுநடத்தும் காட்டு வெளியாட்டத்தை முற்போக்கென பறைசாற்றும் எட்டப்பர் கூட்டம் இன்று துரோகத்துக்காக பதக்கங்கள் பெற சந்திரக்காவின் முன் அணிவகுக்கின்றனர். ஏகாதிபத்தியங்கள் ஆசி வழங்க, சந்திரிகா பதக்கங்கள் வழங்க இவர்கள் சாம்பல் மேடுகளில் நின்று துப்பாக்கியுடன் துரோகப் பதக்கம் அணிந்து ஒரு கொள்கைக்காரக் கூட்டமாக பவனிவர உள்ளனர். இதில் ஒரு பகுதியினர் மட்டும் பதவிகளுடன் அலைய, மற்றவர்கள் இவர்களின் எடுபிடிகளாக ஒரு குண்டர் படையாக, காடையர்களாக பவனி வருவர். இதுதான் எப்பொழுதும் ஒரு துரோக வரலாற்றின் வரலாறாகும்.


இந்த வகையில் துரோகப் பதவிகளைப் பெறுவதில் உள் முரண்பாடுகளுடன் போட்டியிட உள்ளவர்கள் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள், Pடுகுவு யின் ஒரு பகுதியினர், Pடுழுவுநுஇ வுநுடுழுஇ நுPசுடுகுஇ நுசுழுளுஇ நுPனுPஇ நுNனுடுகுஇ வுருடுகு தமிழ் தமிழ் காங்கிரஸ் என பல்வேறு குழுக்களும், பல்வேறு பட்டம் பெற்ற புத்திஜீவிகளும் இதற்காக குரல் கொடுக்கின்றனர்.


ஆம், துரோகப் பதக்கம் ஒரு தமிழ் தேசிய இனத்தை அழிக்க தமது எல்லாவித துரோகங்களுக்கும் ஆன காரணத்தை இவர்கள் புலிகளின் மீது வீசி எறிகின்றனர். புலிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கினாலும், சாதாரண அப்பாவி மக்களின் மீது கண்மூடித் தனமான படுகொலைகளையும், எதிரி யார்? நண்பன் யார்? என்பதை கூட அடையாளம் காண முடியாத ஒரு பாசிச இயக்கம் தான்.


ஆனால் இவை எல்லாவற்றையும் இந்த துரோகிகள் கூறவோ, இதைச் சொல்லி தங்கள் இன அழிப்பு துரோகத்தை மூடி மறைத்து விடவோ முடியாது. புலிகளின் செயல்களை எதிர்ப்பவன் யாராக இருந்தாலும் அவன் நிச்சயமாக சொந்த மக்களைச் சார்ந்திருக்க வேண்டும். மாறாக இத்துரோகிகள் இனவெறி சிறிலங்கா இனச்சுத்திகரிப்பு அரசுடன் கூடிக் குலாவி, இந்தியா, மற்றும் ஏகாதிபத்தியங்களுடன் கூத்தடித்தும் தமிழ் இனத்தை அழிக்கும் இவர்களின் செயல் மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகமே ஆகும்.


வரலாறு இவர்களை துரோகிகளாக, எட்டப்பராக வரையறுத்துள்ளது. இவர்களை மக்கள் தங்கள் வரலாறுகளில் ஒழித்துக் காட்டுவர். புலி எதிர்ப்பில் தனிநபர் பயங்கரவாதத்தை புலிகளுக்கு எதிராக என்று கூறி அங்கீகரிக்கும் பல்வேறு ஜனநாயக வேடம் கொண்ட ஒரு சேர் கூட்டம் ஐரோப்பா, இலங்கையென்று அலைந்து திரிகின்றது.


நாங்கள் புலிகளின் சித்திரவதைகளை நேரடியாகவே அனுபவித்தவர்கள். சொந்த இயக்கத்தின் அராஜகத்தை எதிர்த்து வெளியேறிய, பல்வேறு ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட்ட நபர்களை அருகிலே வைத்து சுட்டுக் கொன்ற நடைமுறைச் சம்பவத்தைக் கூட சந்தித்தவர்கள் தான் நாமும். ஆனால் ஒருபோதும் நாம் புலிகளை தனிப்பட்ட ரீதியில் அழிக்க வேண்டும் என்றே. அல்லது ஏதோ ஓர் விதத்தில் புலிகள் அழிந்தால் போதும் என்றோ மனதளவால் கூட சந்தோஷப்பட்டவர்களோ அல்ல. மாறாக நாம் இவற்றை புலிகளின் அரசியலோடு மட்டும் இனம் கண்டு, அரசியல் வழியில் மட்டும் எதிர்த்துப் போராட விளைகின்றோம்.


ஆனால் ஐரோப்பாவிலும் இலங்கையிலும் முற்போக்கு வேடமிட்ட பலர் தமது புலி எதிரப்பில் தலைகால் புரியாமல், இன்று இனவெறி அரசு புலிகளை அழிக்கும் போது, தமிழ் மக்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கும் போது சந்தோஷப்படுவது என்பது தனிநபர் பயங்கரவாத புலி எதிர்ப்பே ஆகும்.


இப்படி நாம் எழுதுவதைக்கண்டு சினந்து “ஐயோ இது புலி ஆதரவு” என முத்திரை குத்தும் பேர்வழிகள் புலி அழிப்பில் எதிரியைக் கூட சாந்தமாக மனதளவில் பாராட்டுகின்றனர்.


இவர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலுள்ள ஒரே ஒரு வேறுபாடு நடைமுறை தொடர்பானதே ஒழிய அரசியல் ரீதியானது அல்ல. இந்த வகையில் ஐரோப்பிய இலக்கிய சந்திப்பு பங்காளிகள் அண்மையில் தமக்குள் இரண்டாகிப் போய் உள்ளதைக் காணமுடியும்.


இன்று ஒரு மாற்றுக் கருத்துத் தளம் என்பது புலிகளை மட்டும் எதிர்ப்பது அல்ல. அரசையும் எதிர்ப்பதாகும். புலிகள் அழிக்கப்படும் போது அரசைத் தீவிரமாக எதிர்த்துப் போராடுவதும், புலிகளை நோக்கி ஜனநாயகத்தைக் கோருவதுமே ஆகும். இதுதான் தமிழ் Nதிசயத்தின் சுயநிர்ணயத்துக்குப் போராடும் ஒரு முற்போக்குவாதியின் செயலூக்கமுள்ள சரியான கடமையும் நிலைப்பாடுமாகும்.