‘ஷாரியத்’ என்னும் சாத்தான்

பாக்கிஸ்தானைச் சேர்ந்த சாலாமத் மாசிக் என்ற 14வயது சிறுவனுக்கு “இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுப்படுத்தி விட்டான்” என்ற குற்றச்சாட்டின் பேரில் “ஷரியத்” சட்டப்படி மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களின் முன்பு இச்சிறுவன் மசூதியொன்றின் சுவற்றில் மதத்தை இழிவுப்படுத்தும் வாசகங்களை எழுதியதாக மதகுருமார் இச் சிறுவன் மீது குற்றஞ் சுமத்தியதை அடுத்து இவ் வழக்குத் தொடரப்பட்டது. “அச் சிறுவன் எழுதப் படிக்கத் தெரியாதவன்” என்ற எதிர்க்கடசி வக்கீலின் வாதத்தை தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்டு கொள்ளவேயில்லை.
நன்றி – புதிய ஜநாயகம்.