பலகோடி பெறுமதியான ஊழல்களும், லஞ்சங்களும் அம்பலப்பட்டுப் போனதால் இந்திய ஜனநாயகம் நாற்றமெடுக்கின்றது. காஸ்மீரில் போராடும் பாக்கிஸ்தான் சார்பு ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொடுத்த இருவரை சிபிஐ கைதுசெய்தது. இதைத் தொடர்ந்து மேலும் இருவரை சிபிஐ கைது செய்து ‘தடாவின்’ கீழ் சிறையில் தள்ளியது.

இந்த வழக்கு விசாரணையில் இன்னுமொரு பணக் கடத்தல்காரன் (சுரெந்திரா ஜெயினின்) பெயர் வெளிவரவே அவன் இருப்பிடத்தை சிபிஐ சோதனை செய்தது. அங்கு பெருந்தொகை பணமும் அன்னியச் செலாவணி சில லட்சங்களும் பங்குப் பத்திரங்களும் 4500 கிலோ தங்கமும் (இதன் பெறுமதி இலங்கை ரூபா 338 கோடி ரூபாய்) கைப்பற்றப்பட்டது.


இதைவிடவும் முக்கியமான ஒரு டயரியையும் கைப்பற்றினர். இந்த டயரி மேலும் பல தகவல்களை வழங்கியுள்ளது. இவன் லஞ்சம் கொடுத்து ஒரு தரகனாக அரசுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் இருந்தது தெரியவந்துள்ளது. இவ் டயரியில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்ற விபரமும், எதிர் கட்சி முதல் ஆளும் கட்சி ஈறாகவும், சி.பி.ஐ முதல்கொண்டு அனைத்து அதிகாரிகளும் கோடிகோடியாக லஞ்சம் பெற்றுள்ளதை இவ் டயரி வெளிப்படு;த்தியுள்ளது.


இவ் விபரங்கள் வெளிவந்துவிட்டால் தமது குட்டுக்கள் வெளிவந்துவிடும் எனக்கண்ட எல்லாக் கட்சிகளும் இதை மூடிமறைக்க முற்பட்டதன் மூலம் இக்குற்றவாளியை விடுதலை செய்ததுடன், இதுபற்றி யாரும்கதைக்காது மௌமாகவுள்ளனர். அவர்களால் கதைக்க முடியாது. அவர்களின் கதைகளையும் இவ் டயரி கொண்டுள்ளது. இதைவிட அரசு பொதுத்துறைகளை தனியாருக்காக, முதல் சுற்று விற்பனையில் 3000 கோடி ரூபாய் மற்றும் தணிக்கைப் பொதுமேலானார் அறிக்கையே அம்பலமாக்கியுள்ளது.


சக்கரை (சீனி) இறக்குமதி 5000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.


ரயில்வே மந்திரி ஜாபர் செரிப் 2000 கோடி ரூபாய் போலெரி கம்பனியிடமிருந்து ரயில் எஞ்சின்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.


தொலை தொடர்புத்துறை மந்திரி சுக்ராம் தனது உறவுக்காரர்களுக்கு மட்டும் 500 கோடி ரூபாய்க்கு “கெண்றாக்ட்” ஒதுக்கி ஊழல் செய்துள்ளார்.


இந்திய ஜனநாயகம் என்பது கொள்ளையடிப்பதற்கே வறுமையில் மக்கள் அடுத்த நேர உணவுக்கே வழியின்றி கந்தலுடன் பவனி வருகின்றனர். கொள்ளையடித்தோர் மாடமாளிகைகளில் 5-6 கார்களில் பவனி வருகின்றனர். இதுதான் ஏகாதிபத்தியம் விரும்பும் இந்திய ஜனநாயகமும் கூட…..