சுவீஸ்சில் இருந்து ஆர்ப்பாட்டமாக வெளி வந்து கொண்டிருந்த மனிதம் பத்திரிகை தனது 30ஆவது இதழ்களுடன் வெளிவராது என்ற அறிவித்தலுடன் நின்று போனது. இதற்கு முன்னரே மனிதத்தின் முரண்பாடுகள் தொடர்பான சில செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தபோதிலும், மனிதம் தனது 30ஆவது இதழில் இதற்கான சில காரணங்களை முன் வைத்திருந்தது.

சொல்லுக்கும்-செயலுக்கும், எழுத்துக்கும் - நடத்தைக்கும், இடையில் விரிசல்கள்! ஏன மனிதம் நின்றுபோதற்கான காரணங்களை ஒப்புவித்திருந்த போதிலும், மனிதத்தின் மீதான சமரின் தொடர்ச்சியான விமர்சனங்களை மனிதம் கவனத்தில்லெடுக்கத் தவறி அசட்டைசெய்ததன் எதிர் விளைவே இதனொரு காரணமென சமர் சுட்டிக்hகட்ட விரும்புகின்றது. ஆயினும், மனிதம் நின்ற போவதென்பது இன்றுள்ள நிலைமைகளில் ஈழுவிடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமான அம்சம் என்பதையும் மறுபுறத்தே சமர் சுட்டிக்காட்டுகின்றது. தைத் தவிர்த்து, மனிதத்தைத் தொர்ச்சியாகக் கொண்டுவர அதற்கான குறைந்த பட்ச திட்டத்தைக் கொண்டு மீண்டும் முயலவேண்டும் என்பதும் சமரின் எதிர்பார்ப்பாகும்.


முனிதம் நின்று போவதென்பது அவர்கள் குறிப்பிடும் சொல்லுக்கும் - செயலுக்கும ;எழுத்துக்கும்  - நடத்தைக்கும், இடையில் விரிசல் என்ற வியாக்கியானமே பிரதிபலித்து நின்கின்றது. இவைகளைக் கடைப்பிடிக்க மனிதமானது ஒர திட்டத்;தை என்றுமே கொண்டிருந்ததில்லை. அதாவது அரசியல் வழிப்பட்ட ஒரு திடடம் மட்டுமே இதைக் கோட்பாட்டின் அடிப்படையில் தெளிவாக வரையறுக்கும். அது ஒரு புரட்சிகர வழியிலேலா அல்லது வெறும் சித்தாந்த (இரத்தம் சிந்தா அரசியற் போர்) வழியிலோ இவை அமையலாம். ஆனால் திட்டமில்லாத எந்தக் கோரிக்கையும், அதைக் கடைப்பிடிக்கக் கோரி உடைந்து – சிதைந்து நின்றுபோவதற்குக் காரணங்களாகக் கற்பிற்பதும், சந்கேத்திற்கு இடமில்லாத வெறும் தூய்மை வாதங்களேயாகும்.


ஈழப் போராட்டமானது பல சந்தரப்பங்களில் தூய்மை வாதங்களுக்குள் முடங்கி, சிக்கிச் சிதறி, படுகொலைகளால் உடைந்து நொருங்கிப் போனது எமது கடந்த வரலாறாகும். இதை மனிதம் கற்றுக்கொள்ள மறுக்கும் மறுத்துது என்பது கடந்த இயக்க வரலாறுகளின் தொர்ச்சியே ஆகும். சமருகடன் மனிதமானது நிலைமைகளிலும், ‘சம’ரானது மனிதத்தின் தொடர்ச்சியான அங்கீகரித்து நின்றது. எமது விவாதத்தறி;கு நேரடியாக பதிலளிக்கத் தவறி புதிய புதிய பிரச்சினைகளில் தாவிச் சென்று எம்மை மூடர்கள் என அறிவித்த நிலையில் எம்மால் மேல்கொண்டு விவாதிக்க முடியவில்லை. நூம் ஒரு திட்டத்தைக் கோரினோம். உங்கள் அரசியல் வழி என்ன? எனக் கேட்டோம். ஆனால் அவைகளுக்கென்று அவர்கள் பதிலளித்ததில்லை. முறாக மார்க்கிச திரிபுகளை உச்சரித்தபடி சீரழிவுவாதங்களை வளர்க்கவும், வக்காளத்து வாங்கவும், மறுதரப்பக்கு இருட்டிப்புச் செய்தனர். (இவ்வாறே சமரின் கட்டுரை நிகழ்ந்தது) மனிதத்தின அமைப்பு வடிவமானது முனனைய P.L.O.T. யை  ஒத்ததாக உள்ளதென நாம் விவாதித்தபோது தம்மை P.L.O.T. என முத்திரை குத்துவதாகக் கூறி பிரச்சனையை திசை திருப்பினர். நாம், P.L.O.T. இல் இருந்த பல்வேறு கதம்பக் கூட்டம்போல மனிதம் உள்ளது என சுட்டிக்காட்டியது இன்று மனிதத்தின் சிதைவினூடாக நிரூபனமாகியுள்ளது. மனிதத்தின் நிலையானது விரக்தியையும், ஏமாற்றத்தையும் விதைக்குமென எமது முன்னைய விமர்சனங்கள் கூறியபோது, பிரச்சினையை திசைதிருப்பி சமருக்குள் அப்படியுள்ளது எனக் கூறி தமது நிலையைத் தக்கவைக்க முனைந்தனர். இதற்கு மாறாக மனிதத்தில் இருந்தோர், மற்றும அவர்களின் வாசகர்களே விரக்திக்குள்ளாகியதுடன், ஒர நம்பிக்கையீனத்தின் பொதுக் போக்கை வளர்த்தனர். இதைசமர் வாசகருக்கு ஒருவர் எழுதி கடிதத்தின் மூலம் இனம்காட்ட முயல்கின்றோம்.

சுவிஸ்
28.12.94

“நான் கடிதம் எழுதுவதற்கு முற்போக்குக் குழுக்கள் என தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் குழுக்கள் மீது ஏற்பட்ட விரக்தியே காரணம். இங்கு  என் கண்முன்னால் மனிதம் குழுவின் உடைவு. துனிநபர்கள் அல்லது குழுவாய். இதனால் இன்று ம னிதம் இதழ் வெளியிடுவதில்லை. வாசகர் வட்டம் கலைக்கப்பட்டு விட்டது. இவைகளைப் பார்க்கும் போது நாம் வெறும் வாய்வீரர்கள் தான் என்பதை கடந்த காலத்திலிருந்து என்னால் புரியக் கூடியதாகவிந்தது. ஆகவே நான்.. உடன் கூட அரசியல் ரீதியாகக் கதைப்பதில்லை…. அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்க முடியாது. ஆனால் இந்தப் புத்திஜீவிகள் மீதுதான் வெறுப்பு அதிருப்தி – வேறு ஒன்றுமில்லை…  -  லோகன் -


இதைவிடவும் மனிதத்தைச் சார்ந்த எமது முன்னைய நண்பர்கள் ஒருசிலர் கூட, மனிதத்துடனான எமது விவாதத்தின் பின்னர் தொடர்பை நிறுத்திக் கொண்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எம்மண்ணில் பல அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக, நாம் கொல்லப்பட்டு விடுவோம் என்ற ஒரு நிலையில ;கூட பரஸ்பர புரிந்துணர்வுடன் தோளோடு தோள் நின்றவர்கள், மனிதம் என்ற அந்தக் கொள்கைத் திட்டம் இல்லாத அமைப்பை மட்டும் ஆதாரமாகக் கொண்டு உறவை நிறுத்திக் கொண்டது அவர்களின் அரசியலின் பரிமாணத்தைப் புரிய வைத்தது.


இதைவிடவும் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அ.மார்க்ஸ் வந்துபோன சில மாதத்துக்குள் மனிதம் நின்று போனது தான்! குடந்தகால லெனினிய கட்சி முறைகள் தவறானது எனப் பறைசாற்றி, மனிதம் போன்ற வடிவங்கள் சரியானது என தனது அங்கீகாரத்தை செய்துவந்த அ.மார்க்ஸ் போன்றவர்களின் அமைப்பு வடிவமானது எவ்வளவு பலவீனமானது என்பதனை மனிதத்தின் சிதைவு கோடிட்டுக் காட்டி நிற்கின்றது. மனிதத்தில் எழுதிய மார்க்சிய திரிபு மற்றும் சீரழிவுவாதிகளால் ஏன் தங்களின் வழிகளில் இவ்வமைப்பை தொடர்ந்தும் பாதுகாக்க முடியவில்லை? ஏன் அ.மார்க்ஸினாலும் முடியாமல் போனது? ஆன் மீகம், அழகிய .. போன்ற காரணங்களே மனிதத்தின் சிதைவின் அடிப்படையில் பிரதிபலிக்கின்றது. (உங்களின் கூற்றுப்படி)


மனிதம் இதழ்-30 மூலம் மனிததம் நிறுத்துவதை அறிவித்தவர்கள் அதில் மிகப் பெரியளவில் அ.மார்க்ஸ் பேட்டியொன்றைப் பிரசுரித்து மீண்டும் மார்க்சிசத் திரிபுகளுக்கு பெரியளவில் வக்காளத்து வாங்கியுள்ளனர்.மனிதம் உடைவின்பின் மறைந்திருக்கும் ;காரணங்களை அரசியல் ரீதியானதே. இதற்கு வர்க்க அரசியல் உண்டு. இதை மறகை;க அல்லது திசை திருப்ப தனது அணிகளுக்கு “சொல்லுக்கும் - செயலுக்கும், எழுத்துக்கும் - நடத்தைக்கும், இடையில் விரிசல்” எனக் கூறி மனிதத்தின் சிதைவை திசைதிருப்பியும் உள்ளனர்.


மனிதம் மீண்டும் வரவேண்டும். எல்லாவற்றையும் உண்மையான பக்கத்தில் ஆராயும் போது உண்மைகள் பளிச்சென வெட்டவெளிச்சமாகத் தெரியவரும். அதுமட்டுமே தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக அமையும். உண்மைகளை ஆராய திசைதிருப்பமாது மனிதம் வாசகர் வட்டம் முயல வேண்டும் என்பதே சமரின் விருப்பமாகும்.