லெனினின் பிறந்த நாள்

லெனின் 126ஆவது பிறந்;த நாளை நாம் நினைவு  கூர்கின்றோமெனின், ஏன்? 1917ஆம் உலகில் பட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக உயர்த்திக் காட்டியவர் லெனின் என்பதனாலேயே அவரின் பிறந்த தினத்தை ஒரு புரட்சிகர நாளாக நினைவு கூர்கின்றோம். சோவியத்தில் லெனின் தலைமையைத் தொடர்ந்து ஸ்டாலின் பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தொடர்ந்ததுடன், அதைப் பாதுகாப்பதிலும் உறுதிபட்டு நின்றார். அதைத் தொடர்ந்த குரு சேவ்-பிரசேனேவ் கும்பல் அனைத்து போலி மார்க்சிய அலங்காரங்களிலும் இருந்து தன்னை முற்றாக அவிழ்த்துக் கொண்டு வெளிப்படையாகவே ஏகாதிபத்தியத்தின் ஒரு நவ காலனியாக சோவியத்தை மாற்றுவதில் வீறுநடை போடுகின்றார்கள்.

ஏகாதிபத்தியங்களோ “கம்ய+னிஸம் தோற்றுவிட்டது” என வாய்புலம்பியபடி மக்களைச் சுரண்டுபவர்களை எதிர்த்துப் போராடுபவர்களை பயங்கரவாதிகள் எனக்கூறி அழித்து வருகின்றனர். முதலாளித்துவமே உலகில் நிலையானதும். இறுதியானதுமான ஒரு சமூக அமைப்பென அழுதுவடிக்கின்றனர். முதலாளித்துவமே மனித உரிமைகளை மதிப்பதும், ஜனநாயகத்தை கொண்டதுமென பீற்றி வருகின்றனர். ஆனால் யதார்த்தத்தில் முதலாளித்துவத்தின் அழிவும், களிசறைத் தனமான அதன் சமூக அமைப்பும் நாற்றமெடுத்து வருகின்றது.

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக பெரும் சொத்துடைய வர்கத்தின் வாழ்வை பாதுகாக்கவும், மனித உரிமையெனவும் ஜனநாயகமெனவும் கூறிக்கூறி தமது சுரண்டலை தொடர்கதையாக்கி வருகின்றனர். மூன்றாம் உலக நாடுகளெல்லாம் வறுமைக்குள் உட்பட்டு பட்டினிச் சாவுகளை தமது சமூக வெளிப்பாடகளாக்க உட்படுத்தியுள்ளது. இவ் முதலாளித்துவ சமூக அமைப்பு. சோமாலிய முதல் அனைத்த மூன்றாம் உலக மக்களும் தமது உழைப்பையும் தமது மூலவளங்களையும் இவ் ஏகாதிபத்தியங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில் முதலாளித்துவ சமூக அமைப்பை ஏற்படுத்தி வைத்ததுடன், அதை ஏற்றிப் போற்றியும் வருகின்றன. முதலாளித்துவத்தை மீட்ட சோவியத் முதல் கிழக்கு ஐரோப்பா வரை முலாளித்துவ ஆட்சியை இன்று கொண்டுள்ளனர். முதலாளித்துவமே ஜனநாயகமானது எனின்: ஏன் இன்று இந்நாடுகளில் பசியும்-பட்டினியும், இனக் குரோதங்களும் இனப்படு கொலைகளும் விபச்சாரங்களும் சீரழிவுகளும், பரதேசிகளும் பாமரர்களும், அடக்குமுறை அட்டகாசங்களும் சண்டையும் சச்சரவுகளும் விளைவாகக் கொடுத்துள்ளன. இதுதானா முதலாளித்துவத்தின் உன்னதமான விளைவுகள்?

முதலாளித்துவத்தில் உழைக்காதவன் பெரும் பணக்காரனாகவும் வசதியானவனாகவும வாழும்போது அவனுக்கு உழைத்துக் கொடுப்பவன் பட்டினியிலும் கீழ் நிலையிலும் வாழ்கின்றான். இந்நாற்றம் முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து ஊற்றெடுக்கும் சாக்கடையே.

அதை உணர்ந்த லெனின் முதலாளித்துவத்தின் மீதான தனது விடாப் பிடியான போராட்டத்தின் மூலம் அதைத் தகர்த்தெறிந்ததுடன், பாட்டாளி வர்க்கத்தை ஆளும்  வர்க்கமாக நிறுவினார். இன்று முதலாளித்துவம் மீட்கப்பட்ட போதிலும் மக்கள் தினம் தினம் இதற்கெதிராக வீறுடன் போராடிவருகின்றனர். நாம் லெனின் உறுதிமிக்க பாதையை உயர்த்தியபடி முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் அனைத்துவகை ஒடுக்குமுறைகளையும தகர்த்து, பாட்டாளி வர்க்கத்தை ஆட்சியதிகாரத்தில் நிறுத்த வேண்டும். அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? சுரண்டலை ஒழித்துக்கட்ட நாம் என்ன செய்யப் போகின்றோம்.

மே தினம்


19ம் நூற்றாண்டின் இறுதிகளில் ‘சிக்காக்கோ’ நகரத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்த நாள் மட்டுமின்றி, அன்றே 8 மணி வேலை நேரத்தை சட்டப்படி போராடிப் பெற்றனர்.

இவ் முதலாளித்துவ அமைப்பில் கொள்ளைக்காக தொழிலாளர்களை கசக்கி பிழிந்து பட்டினிச் சாவுக்குள் வைத்தபடி அவர்களின் வேலை நேரத்தை 10-16 மணித்தியாலங்களாக வைத்திருந்தனர். இந்த நிலையில் சிக்காக்கோ மக்கள் போராடி தமது இன்னுயிரைத் தியாகம் செய்து 8 மணி நேரத்தை சட்டப்படி பெற முடிந்தது.

இந்த 8 மணி நேரவேலையை அவர்கள் பெற்றிருந்த போதிலும் உலகில் அவை அமுல்ப்படுத்தப்படவில்லை. ஏன் பிரான்சில் 1960களில் பிரான்ஸ் தொழிலாளர்களின் ஒருநாள் வேலைநேரம் 10 மணித்தியாலயங்களாக இருந்தது. சம்பளம் ஒரு மணித்தியாலத்திற்கு 2.5  கு முதல் 3 குகாக இருந்தது.

இன்று ஒரு கிழமை வேலை நேரம் பிரான்சில் 39 மணி நேரமாக இருக்க, ஜெர்மனியில் 35 மணி நேரமாகவுள்ளது. பிரான்சில் விடுமுறை நாட்கள் 5 கிழமைகளாக இருக்க, கனடாவில் 2 கிழமைகளாகவுள்ளது. பிரான்சில் வைத்தியச் செலவில் (இதற்குப் பெறப்படு; பணம் எமது சம்பளத்தில் வரியாக எடுப்பதே). ஆனால் அமெரிக்காவில் இவ்வாறு மருத்துவ வசதிகள் இல்லை. இதுபோன்று நாட்டுக்கு நாடு வேறுபட்ட வாழ்நிலையும், தொழிலாளர் உரிமைகளையும் கொண்டுள்ளனர்.

இன்று நாம் 8 மணிநேர வேலை செய்கின்றோம் எனின்: பல தொழிலாளர்கள் பல நீண்டவரலாற்றில் போராடி இரத்தம் சிந்திப் பெற்றவைகளே. இதை நாம் மறக்க முனைவதென்பது 8 மணி வேலை நேரத்தை இழந்து எமது சலுகைகளை இழப்பதில் இட்டுச் செல்லும். இன்று போராடிப் பெற்ற சமூக உதவிகள் படிப்படியாக வெட்டப்பட்டு வருகின்றது. ஏன் எமது இன்றைய சம்பளத்தில் புதிய வரிகளின் ஊடாக 150குஐக் கூட நாம் இழந்துள்ளோம்.

இம் மே நாளை களியாட்ட விழாவாகவும், சிரழிந்த கலாசாரமாக்கவும் முனையும் ஏகாதிபத்தியங்களும், பிழைப்புவாத சிரழிவுக் கட்சிகளும், இம்மக்களின் போராட்ட நாளை மழுங்கடிக்க முனைகின்றனர். இது ஒருபுறம் நடைபெற இந்நாளை புரட்சிகரமாக முன்னெடுக்கும் போது துப்பாக்கிப் பிரயோகம் மூலம் படுகொலைகளை நிகழ்த்தி அடக்கு முறைகளை கையாள்கின்றனர்.

மே-1 ஐ களியாட்ட விழாவாக இலங்கையில் நடத்திவரும் ஆளும் வர்க்கங்கள் தொழிhளர்களின் களியாட்டவிழாவாக இனங்காட்ட முனைகின்றனர். 93ல் பிரேமதாசா களியாட்ட விழாவாக மே நாளை மாற்ற முற்பட்ட அன்றையதினத்திலே குண்டுவெடியில் கொல்லப்பட்டார். மே-1 என்பது உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர நாள்! அது நாம் வென்றெடுத்த வெற்றிகளைக் கொண்டாடும் நாள்! புதிதாக வெல்லப்பட வேண்டியவற்றுக்காக போராடும் நாள்! அதுவே மே-1, மே தினம்.

நக்சல்பாரி எழுச்சி


1969ல் ஏப்ரல் -22ஆம் திகதியே நக்சல்பாரி போராட்டத்திற்கு வித்திட்டநாள். இந்தியா புரட்சிக்கான வித்துக்கள் ஊன்றியநாள்.

இந்தியப் புரட்சி குறியாக இலங்கைப் புரட்சிக்கு அடிப்டையானது. எமது போராட்டத்தில் எமது இயக்கங்கள் ஆளும் வர்க்கங்களின் கால்த்தூசைத் தட்டியபடி இந்தியப் புரட்சியாளர்களையும், இந்திய மக்களையும் நிராகரித்து ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டி நின்றனர்.

1969களில் மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரி கிராமத்தில் தமது புரட்சிகர அடித்தளத்திற்கான முதல் எழுச்சியை நடத்தினர். மார்ச்-2 1967ல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வந்தனர்.

இதைத் தொடர்ந்து மக்கள் அக்கட்சிகளிடம் நிலப்பறிப்பைக் கோரினர். ஆனால் பாராளுமன்ற ஆட்சியாளர்கள் தமது வர்க்கக் குணத்தை இனம்காட்டி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து வந்த வலது இடது கட்சித் தலைமைப் பீடம் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதனால் கடசிப் பீடத்துக்குள் உடைவுடன் புதிய கட்சியை அமைத்துக் கொண்டனர். இவர்களின் தலைமையில் மேற்கு வங்காள மக்கள் ஆயுதம் தாங்கிப் பேராட்டத்தை; தொடங்கினர். பல இடங்களைக் கைப்பற்றியதுடன், பொலிஸ் குண்டர்படை நிலையங்களையும் நிலப்பிரபுக்களையும், கொடும் வட்டிக்காரர்களையும் ஒழித்துக் கட்டினார். நிலம் மீளப் பங்கிபடப்பட்டது. இதனூடாக பல லட்சம் மக்கள் ஆயுதம் ஏந்தியதுடன் மக்கள் நீதிமன்றங்களையும் உருவாக்கி புதிய அரசை அமைத்துக் கொண்டனர்.

இப்போராட்டம் பின்னால் இந்திய ஆட்சியாளர்களால் ஏகாதிபத்தியத்தின் துணையுடன் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளானது. இன்றும் கூட பல ஆயிரம் பேர் சிறைகளில் வதைக்கப்படுகின்றனர் அன்று விதைத்த விதை இன்ற பலவாகப் பெருகி பல தளப்பிரதேசங்களை  இந்தியாவின் பல பாகங்களிலும்அமைத்துப் போராடி வருகின்றனர். இந்தியப் புரட்சியின் புரட்சிகர அமைப்புகள் இன்று எழுச்சி பெற்று வருகின்றன.

இந்தியப் புரட்சி ஆசியாவின் விடுதலையாகவும், இலங்கையின் விடிவிற்கும், தமிழீழத்தினத் விடிவிற்கும் மிகமிக அவசியமானது. இந்தியப் புரட்சியின் வெற்றிக்காக நாம் உழைக்கும் அதேநேரம் அதுவே தமிழீழத்தினத் விடிவையும் உறுதிப்படுத்தும் என்பதையும் மறந்துவிட முடியாது. தமிழீழ விடுதலை என்பது இந்தியப் புரட்சியின் ஒன்றுபட்டது.