08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

யூத மக்கள் 1942 இல் கொல்லப்பட்டதற்கு பிரித்தானியா பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலும் துணைபோனார்.

அண்மையில் பிரித்தானியாவில் வெளிவந்த சில தகவல்கள் 2 ம் உலகயுத்தத்தில் பிரித்தானிய பிரதமர் யூத மக்களை கொல்ல துணைபோனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1942 இல் ஒஸ்விச் நகரில் 8354 யூத மக்கள் ஒரே மாதத்தில் கொல்லப்பட்ட தகவல் பிரிட்டிஸ் பிரதமருக்கு தெரிந்திருந்தும் அதை அம்பலப்படுத்தாதது மட்டுமின்றி அதற்கு எதிராக சர்வதேசரீதியாக எதையும் செய்யாது யூதமக்கள் கொல்லப்படுவதற்க்கு பச்சைக் கொடி காட்டினார்.  பிரிட்டனும், அமெரிக்காவும் 2ம் உலகயுத்தக் காலத்தில் ஜேர்மனி சோவியத்தை தாக்கி அழிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.  அந்தவகையில் ஜேர்மனிக்கு எதிராக சோவியத் ஜக்கிய முன்னணியைக் கோரியபோது பிரான்ஸ், அமெரிக்கா என்பன நிராகரித்து ஜேர்மனிக்கு பக்கபலமாக செயற்பட்டனர். யூத இனவாதத்தை கொண்டு இவ்வரசுகள் கூட யூதமக்கள் கொல்லப்பட்டபோது கண்மூடியபடி பால் குடித்தனர். 

சோவியத் அழிக்கப்படுவதன் ஊடாக தமது கொள்கையை சோவியத்தில் நடத்த இன்று போல் அன்றும் நாக்கை தொங்கப் போட்டபடி இருந்தனர்.  ஆனால் சோவியத் ஜேர்மனியுடன் யுத்த தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து இவர்களின் கனவுகளை மண் கவ்வச் செய்தது. ஜேர்மனியோ பிரிட்டன், அமெரிக்கா மீது தாக்குதலைத் தொடுத்தது. இத் தாக்குதலின் பின் சோவியத்துடன் அமெரிக்கா, பிரிட்டன் ஜக்கியத்துக்கு வந்து ஜேர்மனியை தாக்கினர்.  இரண்டாம் உலகயுத்த வெற்றியில் முழுப்பங்கும் சோவியத்தையே சாரும். இரண்டுகோடி மக்களைப் பறிகொடுத்த சோவியத், ஜேர்மனியின் முதல் தோல்வியை ஸ்டாலின் கிராட்டில் ஏற்படுத்தினர். அங்கு இருந்து ஓடிய ஜேர்மன் இராணுவம் நிற்க இடமில்லாது சோவியத் படையிடம் முற்றாக சரணடைந்தது.

 

 பிரிட்டன் அமெரிக்கா என்பன ஜேர்மனி சோவியத்தை தாக்கிய பின் உலகைப் பங்கிட்டுக் கொள்ள காத்திருந்தன. இந்தவகையில் ஜேர்மன் பல லட்சம் யூதரைக் கொன்ற போது பச்சைக்கொடி காட்டி தமது ஜனநாயக முகமூடிக்குள் நின்று கொண்டனர். ஆனால் வரலாறு அவர்களுக்கு முகத்தில் அறைந்தது. வெளி படையெடுப்பில் சோவியத்தை வீழ்த்த முடியாது இருந்தபோது உள்ளிருந்த முதலாளித்துவ மீட்பாளர்கள் சோவியத்தை ஏகாதிபத்தியத்தின் கால்களில் கொண்டு சென்று வைத்துள்ளனர்.


பி.இரயாகரன் - சமர்