இந்தத் தொடரில் சைக்கோபாத்(psychopath)(மனநிலை திரிந்தவர்) என்ற ஒரு முக்கியமான விடயத்தை பற்றி ஆராய்வோம்.
இவர்கள் பிரகாசமானவர்களாகவும், சராசரி மனிதரை விட புத்திக் கூர்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாக இருப்பார்கள்,அதிபர்களாக இருப்பார்கள், பெரும் நிறுவனங்களில் முக்கிய பதவி வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பார்வைக்கு கண்ணியமானவர்களாக இருப்பார்கள். நெருங்கிப்ப் பழகாதவர்கழுக்கு இவர்கள் கண்ணியமானவர்கள் தான்.ஆனால் நெருங்கி வாழ்பவர்கள் பாடு அதோ கதி தான். அவர்களை மிகவும் சித்திரவதைக்கு உட்படுத்துவார்கள்.இவர்கள் புத்திசாலிகள் என்ற படியால் சட்டத்துடனே கொடுமைப் படுத்துவார்கள்.இவர்களது வழ்க்கைத் துணை,பிள்ளைகளே பெரிதும் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப் படுகிறார்கள்.
நீங்கள் எவ்வளவு ஒரு சிறந்த வைதியசாலையை அமைத்து விட்டு சைக்கோபாத்தின்(Psychopath) வருகைக்காக காத்திருந்தால், எவரும் சிகிச்சைக்கு வர மாட்டார்கள்.இவர்களது நிலமை எல்லை மீறிப் போகும் பொழுது எங்கோ முறையாக மாட்டுவார்கள்.அப்படியாகச் சிறையில் சந்தித்தவர்களையும்,அவர்களால் பாதிக்கப் பட்டவர்களையும் வைத்தே ஆராட்சியாளர்கள் இவர்களின் குணாதிசயங்களை அறிகிறார்கள்.
நோர்வேயியர்களில் 3% ஆனோர் சைக்கோபாத் , இது இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் 25% ஐயும் தாண்டலாம். (ஒரு புள்ளிவிபரமும் இல்லை).
சைக்கோபாத் எனப்படுபவர் மூளைக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பைத் துலைத்தவர்கள்.இவர்கள் மிகவும் சுயநலவாதிகள், பதவிவெறி கொண்டவர்கள்,குற்ற உணர்வு அற்றவர்கள்,உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்கள்,மற்றவர்களை புரிந்து கொள்ளாதவர்கள்,தங்களைச் சுற்றியே எல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.தங்களையே முதன்மைப் படுத்துவார்கள். செத்த்வீட்டில் கூட பிரேதமாக இவர்கள் இருந்தால் இவர்களுக்கு சந்தோசம் தான். இவர்களுக்கு உளச்சோர்வு(depression) போன்ற நோய் அறிகுறிகள் தெரியாது.மன அழுத்தம்(stress) உள்ளவர் போல் ஓடித்திரிந்து அவர்களுக்கு நெருங்கியவர்களை , மனச்சோர்வுக்கும் மன அழுத்ததிற்கும் உள்ளாக்குவார்கள்.
ஒரு பெண் நிகம் கடித்தல் நிற்பாட்டுவதற்காக வந்தார் . ஆரம்பித்த காரணத்தை அறிந்த பொழுது அவரின் தந்தை ஒரு சைக்கோபாத்.மகளை பாலியல் ரீதியில் அணுகிய பொழுது அப் பெண் ஓடிச்சென்று கழிவறையைப் பூட்டிவிட்டு நிகத்தைக் கடிக்கத் துவங்கினவர் தான்,தாய் வந்தது கதவைத் திறந்தாலும் நிகக் கடியை விடவில்லை . அவர் சிகிச்சையின் பின் குணமடைந்தார்.
இவர்களால் பாதிக்கப் பட்டவர்கள் பலர் என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்தாலும் , இரு தமிழ் குடும்பங்களின் கதையைச் சொல்கிறேன்.
ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். அவர்கள் பாடசாலையில் அமைதியாக இருந்தாலும் யாரும் எதிர்பாராத விதமாக சிறந்த புள்ளிகள் பெற்று வந்தார்கள்.அவர்களுக்கு மனக் கவலை,மன அழுத்தம் , சோர்வு போன்றன இருந்தது.அவர்களது தாயின் கட்டுப்பாட்டிலே வீடு இருந்தது.தாய் எப்பொழுதும் சுறு சுறுப்பாகவே தன்னைக் காட்டிக்கொள்வார்.தொடர்ச்சியாகக் கணவனையும் பிள்ளைகளையும் பேசியவண்னமும், திட்டியவண்ணமுமே இருப்பார்.பிள்ளைகளினதும், கணவனதும் தன்நம்பிக்கை குறையும்படியான கதைகளையே அடிக்கடி கூறுவார்.அவர் - கணவன் பிள்ளைகளை நோக்கிக் கூறும் வசனங்கள் சில.
உனக்கு ஒண்டும் உருப்படியாகச் செய்யதெரியாது.
உனக்கு 5 ம் வகுப்புப் படித்தவனின் அறிவு இல்லை..
உன்ன்னுடைய குணத்திற்கு உனக்கு ஒரு நண்பனும் இருக்க மாட்டார்கள்...
உன்னுடைய கூடாத குணத்திற்கு நீ அன்பு வைக்கிறவர்களும் உடனே செத்துப் போவார்கள்..
உண்மை அதுவல்ல , பிள்ளைகள் தமது பாடசாலையில், நல்ல புள்ளிகள் வேண்டுகிறார்கள்,அவர்களது அமைதியான குணத்தால் பல நண்பர்கள் அவர்களை வீடு தேடி வருவார்கள்.இவர்கள் அன்பு வைத்திருந்த தூரத்து உறவினர் விபத்தொண்றில் இறந்து விட்டார்.கணவன் உயர்வகுப்புப் படித்த ஒரு அமைதியானவர்.பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் பொழுது முழு பேச்சும் கணவருக்கே சென்றது.இப்பொழுது பிள்ளைகள் 14 வயதைத் தாண்டியதும் ,அவர்களுக்கும் பேச்சு திட்டு கிடைக்கின்றது.
கணவர் அதிஸ்டவசமாக நோர்வேயிய வானொலியில் சைக்கோபாத் பற்றி கூறியதை கேட்டவுடனே, தனது மனைவி சைக்கோபாத் என்பதை உணர்ந்து பிள்ளைகளைச் சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.
கணவர் வீட்டினிலே சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, மனைவி யாருடனும் உரையாடினாலும் தனே, வீட்டு முழு வேலையும் செய்வதாகக் கூறுவார்.அவரது உரையாடலில் கனவன் என்று ஒருவர் வீட்டில் இருப்பதே வராது என்றார்கள்.கணவன் எப்படிச் சமைத்தாலும் அதில் குறை தொடர்ச்சியாகக் கூறுவார்.கணவனை சமைக்க வேண்டாம்,என்று சண்டை பிடிப்பார். மற்றவர்களது ஆலோசனயில்லாமல் தான் விரும்புவதையே சமைப்பார்.பிள்ளைகள் முறையிட்டால் சும்மா , கேள்விக்காக கேட்பார்.
சைக்கோபாத் மனப்பூர்வமாக ஒருபொழுதும் தவறை ஏற்றுக் கொள்வதில்லை-தவறு செய்யாத மனிதனாகவே காட்டுவார்.பிள்ளைகளினதோ , கணவனதோ விருப்பத்தைக் கேளாது தானே பிள்ளைகள் என்ன கலை படிக்க வேண்டும்,யாரிடம் படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பார்.
சைகோபாத் பரம்பரை இயல்பு என்று வானொலியில் சொல்லியதை கேட்ட சிறுவன் தானும் அம்மாவைப் போல் வருவனா என்று கேட்டான்.பரம்பரை இயல்பு மாத்திரம் அல்ல வளரும் சூள்நிலையும் தான் தீர்மானிக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப் பட்டது.
அச்சிறுவன் இப்பொழுதே சிகிச்சைக்கு வந்த படியால் அவருக்கு அப்படியான நோய்கள் வராது என்பதையும் விளங்கப் படுத்தினேன்.சைகோபாத் ஒருநாளும் சிகிச்சைக்குச் செல்லமாட்டார்கள் என்ற விளக்கத்தையும் பெற்றார்கள்.
அவர்கள் தமிழ் சமூகக் கட்டுக் கோப்பில் வாழ்ந்து வருகின்ற படியாலும், பிள்ளைகள் தாயின் சொற்படியே நடப்பதாலும் அவர்களால் அப்பெண்னை விட்டுப் பிரிய முடியவில்லை. அது தான் சைக்கோபாத்தின் திறமை- சேர்ந்து வாழ்வதுவும் கடினம் , பிரிந்து செல்வதுவும் கடினம். புலிவால் பிடித்த நாய் மனிதரின் கதை தான். விட்டால் கடித்து விடும்.ஆனால் பிடித்திருப்பாதோ புலி வால். அடுத்த தொடரில் அடுத்த குடும்பத்தைப் பார்ப்போம்..
அன்புடன்
ந.பத்மநாதன்
7.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 07
6.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 06
5.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 05
4.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 04
3.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03
2.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02
1.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 01