முதலாளிகளால் வாழ்வை இழந்த கிரேக்க மக்கள், வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். எங்கள் உழைப்பு எங்கே? அது யாரால்? எப்படி? திருடப்பட்டது என்ற கேள்விகளுடன், கிரேக்க மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். திருட்டுச் சொத்தை பறிமுதல் செய்யக் கோருகின்றனர். தங்கள் சொத்தைத் திருடியவர்களையும், திருட உதவியர்களையும் சட்டத்தின் மூலம் தண்டிக்கக் கோருகின்றனர்.

இதற்கு மாறாக முதலாளிகள் திருடியதை பாதுகாப்பது தான், ஜனநாயகத்;தின் புனித கடமை என்கின்றனர். இதுவன்றி ஜனநாயகமே கிடையாது என்பது, மூலதனத்தின் உள்ளார்ந்த விதியாகும். மக்களோ இந்த ஜனநாயகத்தை எதிர்த்த வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். ஜனநாயகத்தின் பெயரில் தெரிவான மக்கள் பிரதிநிதிகள், உலக கொள்ளைக்காரர்களுடன் கூடி, மக்களுக்கு எதிராக சதி செய்கின்றனர். இப்படி கிரேக்கம் இரண்டாக பிரிந்து கிடக்கின்றது.    

  

இதுதான் இன்றைய கிரேக்க நெருக்கடி. கிரேக்க மக்களின் உழைப்பை ஜனநாயத்தின்  மூலம் திருடியவனை பாதுகாக்க, ஐரோப்பிய முதாளிகளும் உலக வங்கியும் களமிறங்கியுள்ளது. அதைத்தான் அது "உதவி" என்கின்றது. 

 

இது "உதவி" அல்ல, கிரேக்க முதலாளிகளை பாதுகாத்தபடி நடத்தும் பகற் கொள்ளை. இது என்ன சொல்லுகின்றது. விற்பனை வரியை 2 சதவிதத்தால் உயர்த்தக் கோருகின்றது. எரிபொருள், புகையிலை, குடிபானங்கள் விலையை 10 சதவீதத்தால் உயர்த்தக் கோருகின்றது. அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கூலியை 14.2 சதவீதத்தால் உடனடியாக  குறைக்க கோரியுள்ளது. ஓய்வூதிய வயதை 65 யாக்கக் கோரியுள்ளது. இப்படி மக்களை கொள்ளையடிக்கும் பலவிதமான நிபந்தனைகளுடன், இந்த "உதவி" வழங்கப்படுகின்றது. இந்த கொள்ளை பணத்துக்கு வட்டி உண்டு. இது எவ்வளவு என்பது இன்னும் இரகசியமாகவே உள்ளது.

 

இவை அனைத்தையும் உழைக்கும் மக்கள் தான், தங்கள் உழைப்பில் இருந்து மீளக் கொடுக்கவேண்டும். முதலையும் வட்டியை கொடுப்பதுடன், திருடிய கூட்டத்தை தொடர்ந்து காப்பாற்ற இந்த மக்கள் உழைக்க வேண்டும்;. இது உலக நிதிக்கொள்ளைகாரர்கள் நிபந்தனை.  

 

எற்கனவே 30 சதவீதக் கூலி குறைப்பை கிரேக்க உழைக்கும் மக்கள் எதிர்கொண்டு வறுமையில் அல்லலுற்ற நிலையில், தொடர்ச்சியான வேலை இழப்புகளை அன்றாட வாழ்வாக சந்தித்துக்;கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் உலக நிதிக் கொள்கைக்காரர்கள், அந்த மக்களை தம்பங்குக்கு  கொள்ளையடிக்க இதை திணித்துள்ளது. மாடு எறி மிதித்தவனை, தங்கள் பங்குக்கும் எறி மிதிக்க புதிதாக களமிறங்கியுள்ளனர்.

 

"உதவி" என்ற பெயரில், அந்த மக்களை மேலும் சூiறாடி, தனக்கு தரக்கோருகின்றது. எற்கனவே வரி எய்ப்பு மூலம் 10 சதவீதமான தேசிய வளத்தை கிரேக்க முதலாளிகள் சூறையாடி வந்த நிலையில், அங்கு லஞ்சம் கொடிகட்டி பறக்கின்றது. முதலாளிகளும், வங்கிகளும், அரசியல் வாதிகளும் இணைத்து லஞ்சங்கள் வழங்கி, சட்டத்தை இல்லாதாக்கி கொள்ளையடித்தன் மூலம், நாட்டை திவலாக்கினர். நாட்டுச் செல்வத்தை திருடியே, அதை தனிப்பட்ட தங்கள் சொத்தாக்கினர். இந்த லஞ்சம் இன்று சமூகத்தில் அனைத்தையும், உடூருவி நிற்கின்றது. கிரேக்க மக்கள் 18 சதவீதமானவர்கள் லஞ்சம் கொடுத்ததை உறுதி செய்கின்றனர்.

 

நாட்டை திவலாக்க லஞ்சத்தை முதலாக மூலதனமாக்கிய கிரேக்க முதலாளிகள் சூறையாடிய நிலையில், கிரேக்க நாடு 15 வருடத்துக்கு முன்பே திவலாகியது. இருந்த போதும், அதை திட்டமிட்டபடி, மூடிமறைத்தபடி, தொடர்ந்தும் கொள்ளையடித்தனர். பாரிய அளவில் கடனை வாங்கி, அதையும் சேர்த்துக் கொள்ளையடித்தனர். இன்று கடன் அந்த நாட்டின் தேசிய வருமானத்தை மிஞ்சிவிட்டது. அதாவது இது 149.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

இனி மக்கள் உழைப்பை பறித்து, இதற்கு தொடர்ந்து வட்டி கட்டுவதைத் தவிர, வேறு வழியில் முதலாளித்துவம் இந்தக் கடனை அடைக்க முடியாது. அதை ஜனநாயகம் என்பார்கள்.

 

இதற்கு மாறாக உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். கிரேக்க முதலாலிகள் திருடி செல்வத்தை மீள பறிப்பதன் மூலம் தான், அவர்கள் உருவாக்கிய நெருக்கடியை தீர்க்க முடியும் என்கின்றனர். தம்மை மேலும் சுரண்டும் முதலாளித்துவ திட்டத்தை எதிர்த்து, அதை மறுத்து வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். இந்த போராட்டம் ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்தின் முன், அரசியல் விழிப்புணர்வை உருவாக்கி வருகின்றது. உலக தொழிலாளர் வர்க்கத்தின் முன், அரசியல் படிப்பினையை எற்படுத்தி வருகின்றது.

 

பி.இரயாகரன்
03.05.2010