இந்தப் பெண்ணியம் எந்த வர்க்கம் சார்ந்தது? எந்த அரசியல் உள்ளடக்கத்தில்  ஆணாதிக்கத்தை மறுத்துப் போராட, மக்களை அது வழிகாட்டுகின்றது. இதற்கு பதில் அளிக்க, யாரும் முன்வருவதில்லை. ஏன் இப்படி பார்ப்பதும் கூட இன்று மறுக்கப்படுகின்றது. லும்பன்தனமான அடையாள அரசியல் மூலம் தான், அனைத்தையும் அளக்க முனைகின்றனர்.

பெண்ணியத்தின் பெயரில் பெண் லும்பன்கள், சொற்களைக் கொண்டு கட்டமைக்கும் சொற்களுக்குள் மயங்கி மார்க்சியத்தை கைவிடுவது நிகழ்கின்றது. பெண் அடையாளத்தை முன்னிறுத்தியும், சொற்களைக் கொண்டும் முன்னிறுத்துவதே, பெண்ணியத்தின் பெயரில் உள்ள மற்றொரு எதிர்ப்புரட்சி அரசியல் போக்காகும்.

 

இங்கு இதன் அடிப்படையான அரசியல் உள்ளடக்கம், சுரண்டும் வர்க்கம் தன்னைத் தான் முன்னிலைப்படுத்தி கட்டமைக்கும் உலக கண்ணோட்டமேயாகும். இந்த வகையில் அதே வர்க்கப் பெண்கள், தன்னையும், சில சொற்களைக் கொண்டு தம்மை முன்னிலைப்படுத்தி, அதைப் பெண்ணியமாக காட்டுகின்றனர். இதன் மூலம் தம்மை பெண்ணியல்வாதிகளாக  கட்டமைக்கின்றனர். இந்த வகைப் பெண்ணின் பாலியல் கண்ணோட்டம், வரைமுறையற்ற பாலியல் நுகர்வாக வாழ்தலை தன் பெண்ணியமாக காணும் போது என்ன நடக்கின்றது? அது தன் வர்க்க ஆணாதிக்க சமூக வாழ்வியல் ஒழுங்கை மறுக்கின்றது. தனது ஆணாதிக்க நுகர்வு நிலையை, அராஜக (அனார்க்கிஸ்ட்;) கோட்பாட்டுடன் இனம் காண்கின்றது. தனது சுரண்டும் வர்க்க கோட்பாட்டை, அராஜகத்துடன் (அனார்க்கிஸ்ட்;) இணைத்துக் கொண்டு நுகர்கின்றது. இந்த கூட்டுக்கலவை தான், இந்த வர்க்கப் பெண்ணின் பெண்ணியமாக வெளிப்படுகின்றது. இங்கு பாலியல் நுகர்வுக் கலாச்சாரமும், சுரண்டும் வர்க்கக் கலாச்சாரமும் இணைந்து நடத்தும் கூத்தையே, தன் உரிமை சார்ந்து அதை பெண்ணியம் என்கின்றது. இது தன் நலன் சார்ந்து சமூக மாற்றத்தை மறுத்து, தன் பெண் அடையாளம் மூலமும் சொற்கள் மூலமும் பெண்ணியம் பேசுகின்றது. இதுதான் இன்று பலரின் பெண்ணிய கோட்பாடாகும்.

 

இப்படிப் பேசும் பெண்ணியத்தின் அராஜக (அனார்க்கிஸ்ட்;) உள்ளடக்கத்தையே, பலர் புரட்சியின் கூறாக பார்க்கின்றனர். அராஜகத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இடையில் உள்ள நுட்பமான வேறுபாட்டை, மார்க்சிய அடிப்படையில் புரிந்து கொள்ள முடியாத எல்லா நிலையிலும் இது ஏற்படுகின்றது. இதனால் தத்துவார்த்த ரீதியான மயக்கமும் சீரழிவும், இதனால் ஏற்படுகின்றது. இதை நியாயப்படுத்த பன்முக வாசிப்பும், அடையாள அரசியலும் உதவுகின்றது. இதை முன்னிறுத்தி, படிப்படியாக வர்க்க அரசியலை அது கைவிடுகின்றது. இங்கும் லீனா விடையத்தில், இதுதான் நடக்கின்றது. சோபாசக்தி தன்னை கம்யூனிஸ்ட் என்கின்றான். லீனாவையும் அப்படிச் சொல்லும் நிலையில் பலர்.

 

மார்க்சியம் எதையும் வர்க்க உள்ளடக்கத்தின் ஊடாகவே அணுகுகின்றது. அது ஒடுக்கப்பட்ட மக்களின் (தொழிலாளர் தலைமையில்) தத்துவம் என்ற வகையில், அது தன் வர்க்க அணுகுமுறை ஊடாகவே மக்களைச் சார்ந்து நிற்கின்றது. இதற்கு வெளியில், மக்களை யாரும் சார்ந்து நிற்க முடியாது.

 

வர்க்கத்தைக் கடந்து, இதற்கு இன்னுமொரு முகத்தை எப்படி நாம் காணமுடியும்!? காண முடியுமென்றால், இதற்கான தத்துவ அடிப்படைதான் என்ன? இதுதான் பன்முகவாசிப்பு என்ற பின்நவீனத்துவம். தான் பெண் என்ற சுரண்டும் வர்க்க அடையாள அரசியல் மூலம் தன்னை முன்னிலைப்படுத்துகின்றது. இந்த வகையில் வர்க்கம் கடந்து படைப்பை எடுத்துக் காட்டுகின்ற நிகழ்வுகள், செயல்கள் இன்று எதிர்ப்புரட்சி அரசியலையே மைய்யக் கூறாக்க முனைகின்றனர். இந்தக் கோட்பாடு, மக்களை அணிதிரட்டி போராடுவதையும், அதற்காகப் போராடும் எதார்த்தத்தையும் கூட மறுக்கின்றது.

 

ஒரு புரட்சிகர அமைப்பற்ற, மக்களைத் திரட்டாத இலங்கைச் சூழலில், இது இன்னமும் ஆபத்தான குறிப்பான அரசியலாகி விடுகின்றது. தமிழகத்தில் அரசியல் ரீதியாக மக்களை அணி திரட்டாத, மார்க்சியத்தை மறுத்து இயங்கும் மாhக்சிய விரோத கூட்டத்துடன் இது சேர்ந்து விடுகின்றது. செயலுக்குரிய மார்க்சியத்தை, அதன் கருவையே அது அழித்து விடுகின்றது. பன்முக வாசிப்பு, அடையாள அரசியல் என்று, ஒரு பொருளின் முழுமையை மறுத்தும் அதில் உள்ள வர்க்கக் கூறுகளை மறுத்தும் அது தன்னை வெளிப்படுத்துகின்றது.

 

இலங்கை எதார்த்தம் சார்ந்து நீண்டகாலமாக எம்மைச் சுற்றிய விவாதமாகவும், குறித்த ஒரு கருத்தை வைத்து அடையாளப்படுத்தல் என்ற அடையாள அரசியலும், அனைத்து புரட்சிகர அரசியல் கூறுகளையும் இல்லாததாக்கி வந்தது. அனைவரும் வர்க்கம் கடந்த நிலையில், அரசியலை இனம் கண்டனர், இனம் காட்டினர். இதற்கு அமைவாகவே, அ.மார்க்ஸ் கும்பல,; மார்க்சியத்தை மறுக்கும் கோட்பாட்டை வழங்கியது. 

 

இந்த அடையாள அரசியல் தான், ஜனநாயகத்தின் பெயரில் டக்கிளஸ் வரை கூடி கும்மியடித்து விவாதிக்க வைத்தது. தேசியத்தின் பெயரில் புலியுடன் கூடினர். இப்படி இதற்குள், வர்க்க அரசியல் பார்வையை நீக்கம் செய்தனர். ஜனநாயகத்தின் பெயரில் மகிந்தாவுக்கு நேரடியாக தொண்டூழியத்தை இந்த ஜனநாயகம் செய்யும் வரை, ஜனநாயகம் என்ற அடையாளம் மூலம் பலர் இதன் பின் கூடிநின்றனர். ஜனநாயகம் வர்க்கத்தைக் கடந்து, மார்க்சியத்தை மறுத்தும் ஆட்டம் போட்டது. மார்க்சியத்தையே தனது எதிரியாக காட்டியது.

 

விமானப்படை விமானத்திலேயே "ஜனநாயகவாதி"யான சுகனை, பேரினவாத அரசு கூட்டிச்சென்று தமிழரைக் காட்டும் வரை இந்த ஜனநாயக அடையாள அரசியல் உதவியது. தமிழரைக் கொன்று வென்ற களிப்பில் சிங்கள இனவாதிகள் தங்கள் தேசியகீதத்தை இலங்கையில் கொக்கரித்து பாடிய அதே காலத்தில், தமிழ்நாட்டில் சுகன் அதே தேசிய கீதத்தை அதே பேரினவாத திமிருடன் இந்தியாவில் பாடினர். இப்படி அவன் பாட, அவர்கள் முன்னிறுத்தி வந்த அடையாள ஜனநாயகம் தலித்தியம் பின்நவீனத்துவம் தான் உதவியது. இதை ஏன் என்று நியாயப்படுத்தி விளக்க, பல  பன்முக வாசிப்புகளுக்கு மட்டும் என்றும் பஞ்சமில்லை. சுகன,; லீனாவைப் போல், தலித்திய சொற்கள் மூலம் கவிதை எழுதினால், தங்கள் பன்முக வாசிப்பு ஊடாக போற்ற பலர் உள்ளனர்.

 

எங்கும் வர்க்க அரசியலைக் கைவிட்டு, வாசிப்புகளைச் செய்கின்றனர். இதனால் இலகுவாக எங்கும் எதிலும், எதிர்ப்புரட்சி அரசியல் பூச்சூட முடிகின்றது. சோபாசக்தி தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லும் ரேஞ்சில், கம்யூனிஸ்ட்டுகள் அதை மறுத்து தங்கள் வர்க்க அடிப்படையைக் கொண்டு அரசியல் செய்வது கிடையாது. அவர்கள் ரேஞ்சுக்குள் இருப்பது தான், இதற்கு காரணமாகும். தான் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதாக சொல்ல, நான் அதை ஆதரிக்கின்றேன் இதை எதிர்க்கின்றேன் என்று கூறும் அளவுகோல் போதுமானதாக அவர்களுக்கு உள்ளது. இப்படி இந்த ரேஞ்சில் தம்மை அடையாளப்படுத்திக் கூறுவதன் மூலம், பலர் தம்மை அதுவாகவும் இதுவாகவும் காட்டுகின்றனர்.

 

இதுதான் இன்றைய நிலை. பன்முக வாசிப்பு, அடையாள அரசியல் மூலம், தங்களை தங்கள் சமூகத்தில் முன்னோடிகளாக, புரட்சியாளராக காட்டி நடிக்க முடிகின்றது. உதாரணமாக சோபாசக்கியை எடுப்போம். தன் தனிப்பட்ட தங்கள் வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது என்று கூறும் இவர், போதையிலும் விதவிதமாக பெண்ணை நுகரவும், அவர்களை தனக்கு இணங்க வைக்க, அதற்கிசைவாக தத்துவம் பெண்ணியம் இலக்கியம் என அனைத்தும் பேசுகின்றவர்.   இதற்கு வெளியில் மக்களை அணிதிரட்ட, மக்களை வழிகாட்ட அவர் எதையும் முன்வைப்பது கிடையாது. இது தான் அவரின் அரசியல் உள்ளடக்கமும், நடைமுறையும் ஆகும். இப்படியிருக்க படைப்பைப் பார் என்று கூறி, பன்முகவாசிப்பு ஊடாகவும், அவரின்  அடையாள அரசியலையும் எடுத்துக்காட்டி சிலாகிக்கின்றனர். இந்த மோசடிகளை மார்க்சிய வாதிகள் கோட்பாட்டு ரீதியாக, இனம்காட்டியும், அவர்களை அம்பலப்படுத்தியும், தங்கள் தனித்துவமான புரட்சிகரமான வர்க்க அரசியலை கையில் எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?; அவர்களுக்கு விளக்கும் கொடுக்கும் நிலைக்கு நாம் சீரழிவோம்.

 

அண்மையில் இதற்கு மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். முன்பு புலியின் உளவு அமைப்பாக, புலிக்கு ஆள்காட்டியாக மார்க்சியத்தை பேசியபடி இருந்த தமிழீழக்கட்சி, இன்று திடீரென மே 18 இயக்கமாக தன்னை பிரகடனம் செய்துள்ளது. இந்த மே 18 என்ற புலி இயக்கம், புலியின் அழிவை வர்க்க அடிப்படையில் பார்க்கவும் விமர்சிக்கவும் மறுக்கின்றது. அதற்குப் பதில் புலியின் தன்னியல்புதான், அதன் அழிவுக்குக் காரணம் என்கின்றது. இதன் மூலம் தங்கள் தலைமையில் தன்னியல்பற்ற புலியை, புலியுடன் சேர்ந்து மீள கட்ட முனைகின்றது. இந்த வகையில் புலிப் பாணியில் புளட் சித்தார்த்தன் வரை பயன்படுத்தி, மீள ஒரு புலியைக் கட்ட முனைகின்றனர். அனைத்துக்கும் புலியின் தன்னியல்புதான் காரணம் என்று கூறி, தன் தலைமையில் மே 18 பெயரில் புலியை மீளக் கட்ட முனைகின்றனர். இங்கு இவர்கள் புலியின் வர்க்க அரசியலில் இருந்து புலியை நிராகரிப்பதற்கு பதில், புலியின் தோல்வியை பன்முக வாசிப்புக்கு ஊடாக பலவாறாக பார்க்கலாம் என்று கூறி, அதை தன்னியல்புவாதம் என்கின்றனர். புலியின் வர்க்க அரசியலில் அதன் தலைமையில் நீடித்திருந்த தன்னியல்புவாத குணாம்சத்தை முன்னிறுத்தி, எதிர்ப்புரட்சி அரசியலை மீள முன்தள்ளுகின்றனர். இதன் இன்றைய தலைவரே ஒரு தன்னியல்புவாதி என்பது ஒருபுறமிருக்க, இப்படிப் பார்ப்பது தான் மார்க்சியப் பார்வை என்கின்றனர். வர்க்கப் பார்வையால் புலியைக் பார்ப்பதல்ல என்பதே, இவரின் மார்க்சியம். இதே தன்னியல்புவாதத்தை அன்று முன்வைத்தபடிதான், புலியின் உளவு அமைப்பாக தமிழீழக்கட்சியை 10 வருடத்துக்கு முன் இவர் கட்டியவர். 

 

இன்று தன்னியல்புவாதத்தைச் சொல்லி ஒரு புலியைக் கட்டுகின்றனர். இந்த ரேஞ்சில் உள்ள அவர்களை அம்பலப்படுத்த முடியாத அளவுக்கு, மார்க்சியம் பற்றி தெளிவற்ற நிலையில் பலர் உள்ளனர். அவர்களே இதை பன்முகத் தன்மை ஊடாக, வாசித்துக் காட்டுகின்றனர். இப்படி புலி இயக்கம், மற்றொரு பெயரில் உருவாகின்றது.

 

இந்த வகையில்தான் லீனாவையும் பன்முகத் தன்மை ஊடாக காட்டப்படுவது தொடங்குகின்றது. லீனா இந்த நிகழ்ச்சியின் பின் தன் அனைத்து வக்கிரங்களையும் நியாயப்படுத்திபடி "நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, நடுவிலும் இல்லை, விளிம்பில், ஒரு இடமற்ற அடையாளமாகவே இருப்பதாக சமீப காலங்களில் உணர்கிறேன்." என்கின்றார். அப்படி எங்குதான் இருக்கின்றார். "இடமற்ற அடையாள"த்தை, மதக் கோட்பாட்டினுள் தான் தேடவேண்டும். அவர் தன் அடையாளத்தை பெண்ணியம் என்று கூட சொல்ல முடியவில்லை. அவர் தனக்கு தெரியாது என்று, தன் இழிநடத்தைக்கு விளக்கம் கூறுகின்றார். மார்க்சியத்துக்கு அது தெரியாமல் போய்விடுமா!? சரி அவரின் அந்த விளிம்பு தான் ஏது? மேட்டுக்குடி சீமாட்டிகளின் வர்க்கச் சுரண்டலும், அந்த வர்க்கத்தின் பாலியல் நுகர்வும், வரைமுறையற்ற நுகர்வும், ஏற்படுத்தும் உணர்வு வரைமுறையற்ற வாழ்க்கை முறையாகின்றது. இதை நியாயப்படுத்த அராஜகத்துடன் கூடி கோட்பாட்டை பெறுகின்றது. இந்த இரு சமூகக் கூறுகள் உள்ளடங்கியது தான், அதன் விளிம்பு. இப்படி இரண்டும் இணைந்து நிற்கும் தங்கள் இடத்தையே, அவர் வலது இடதுமற்ற அதாவது வர்க்கமற்றவராக கூறி, தன்னைத்தான் பிரகடனம் செய்கின்றார்.

 

சிறிரங்கன் இதற்கு முரணாகவே அவருக்கு ஒடுக்கப்பட்ட ஒரு வர்க்க அடையாளத்தை கொடுக்க முனைகின்றார். இதைத் தன் பன்முகப் பார்வையின் ஊடாக, வெளிப்படையாக பேசுகின்றார். ஆனால் பலர் இதைத்தான் அச்சாணியாக கொண்டு இயங்குகின்றனர். இது சிறிரங்கன் மேலான விமர்சனமல்ல. இந்த அரசியல் மீதான பொது விமர்சனம்;. சிறிரங்கன் தன் கட்டுரையில்

 

"மார்க்சையும், லெனியையும் சொல்லித்தாம் பலர் பெண்களைப் பாலியற் சுரண்டலுக்குள் தள்ளினார்கள். இந்த முதலாளியச் சமூகமோ பாலியலைப் பண்டமாக்கிப் பெண்களைச் சந்தையில் விற்கும்போது அதை நுகர வக்கற்ற போலித் தோழர்கள்-புரட்சிக்காரர்கள் அப்பாவித் தோழிகளைத் துளைத்தெடுத்தனர். அவர்களது குரலாக லீனாவின் குரலுக்கு முகம் உண்டு.

 

எனவே, லீனாவின் குரலுக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காணத்தவறுவது மார்க்சிய-புரட்சிகர அணுகுமுறையாகாது.

 

லீனா எழுதுகிறார் எப்படியென்று பாருங்கள்:

 

"நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்"

 

இதில் உண்மைகள் இல்லையா? அல்லது, இந்தவுண்மைகளை லீனா பேசப்படாதா?"

 

 என்கின்றார் சிறிரங்கன்.

 

இது உண்மையா? அவர் தான் பேசினாரா? என்பது ஒருபுறம் இருக்க, இதை எந்த வர்க்க அடிப்படையில்? ஏன் சொன்னார்? எங்கு சொன்னார்? எப்ப சொன்னார். பன்முக வாசிப்புக்கு காலம் இடம் சூழல், அதன் வர்க்க அடிப்படை, அதன் நோக்கம் என அனைத்தும் அவசியமற்றுப் போகின்றதோ!?

 

இந்த "உண்மையை" தோலுரிக்கின்றது வினவு. காலம் இடம் சூழல், அதன் வர்க்க அடிப்படை, அதன் நோக்கம் பற்றிய உள்ளக்கத்துடன், தன் பின்னோட்டம் ஒன்றில் வினவு எழுதுகின்றது

 

"முதலில் அது ஆபாசக்கவிதை என்பதற்காகவோ, இல்லை கம்யூனிசத்தை திட்டி எழுதியது என்பதெல்லாம் உண்மை இல்லை. எங்கள் கோபமும் அது இல்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து குண்டுமாரி பொழிந்து இலட்சக்கணக்கான மக்களை அழித்து வந்த காலமது. எங்கள் தோழர்கள் ஈராக் மக்களுக்காக பெரும் பணியாற்றி வந்த நேரம்.

 

அப்போதுதான் அந்த கவிதையை காண நேரிட்டது. அது பாக்தாத் எரிகிறது, கல்யாணி காத்திருந்தாள், ஆண்குறிகள் தேடி வருகின்றன என்று ஈராக் மக்களின் அளப்பரிய போராட்டத்தை, தியாகத்தை வெறும் விபச்சாரியின் பிரச்சினை என்று சிறுமைப்படுத்தியிருந்தது. இதை தண்ணியைப்போட்டு விட்டு விக்கிரமாதித்தயன் எழுதினார் என்று இப்போது சங்கர்ராமசுப்பு சொல்லியிருக்கிறார். அன்று சொல்லவில்லை.

 

ஆக ஈராக் மக்களின் விடுதலைக்காக எங்கள் தோழர்கள் அமெரிக்க தூதரகத்தின் முன்னோ, இல்லை அதிகாரபீடங்களுக்கு முன்னோ சென்று கைது, சிறை, தடியடி இத்தனையும் வாங்கிக் கொண்டு போராடும் போது சரக்கடித்து விட்டு மூன்று சொறி நாய்கள் ஈராக் பிரச்சினையை கல்யாணியின் பிரச்சினையாக எழுதுகின்றன என்றால் எங்களுக்கு கோபம் வருமா, வராதா? இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம்.

 

இதற்கு நியாயம் கேட்டுத்தான் வீட்டிற்குள் ஜனநாயக முறைப்படி சென்றோம். எங்களது தோழர்களது சுண்டு விரல் கூட கவிஞர் மீது படவில்லை. கதவை உடைத்து செல்லவில்லை. எஸ்யூஸ்மி என்று கேட்டுவிட்டுத்தான் சென்றோம். அந்த வட்டாரத்து மக்களிடம் இந்தக் கவிஞர் ஈராக் மக்களை கேவலப்படுத்தியிருக்கிறார் என்று நாங்கள் கருதுவது சரிதானா என்று கேட்டோம். படித்தவர்கள் சரிதான் என்றார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இது கூட இல்லையென்றால் வேறு என்ன செய்யவேண்டும்? கவிஞரின் முகத்தில் ஆசிட் ஊற்றவேண்டும் என்று சொல்கிறாரா அய்யனார்? அத்தகைய இழிமுறைகளை செய்வதற்கு நாங்கள் ஒன்றும் பாசிச ஜெயாவின் தொண்டர்கள் அல்ல."

 

எந்த வர்க்கம்? ஏன்? எந்த நிலையில் இதை உளறியது என்பது தெளிவாகின்றது. இந்த கவிதை எழுதிய சூழலை முழுமையாக தெரிந்து கொண்டு, பார்ப்பதல்ல மார்க்சியம். அந்த கவிதையின் அரசியலை புரிந்து கொண்டு, அதை அம்பலப்படுத்துவது தான் மார்க்சியம்.  இந்தக் கவிதையில் இலங்கை முதல் ஈராக்வரை மனிதனுக்கு இழைத்த குற்றத்தை, தங்கள் அரசியல் வக்கிரங்களுக்கு அமைவாக கும்மியடித்து இருக்கின்றது. இப்படியா மார்க்சியம் இதைப் பார்க்கின்றது. ஈராக், இலங்கை என்ற சொற்களைக் கொண்டு, தங்கள் போதையின் உளறல்களாக கொட்டியதை, தங்கள் பாலியல் புணர்ச்சியின் வக்கிரத்துக்குள் வைத்து புதைக்கின்றனர். நடந்து வரும் போராட்டத்தை, அதன் எதிர்ப்;பை இழிவாடுவதுதான், இந்த கவிதையின் உள்ளடக்கமும் நோக்கமுமாகும். இதை ஏற்படுத்தியவர்களையும், இதை எதிர்த்து போராடுபவர்களையும், ஒரே அச்சில் வைத்து தன் புணர்ச்சி வடிவத்தில் வைத்து புணருகின்றனர்.

 

இப்படியிருக்க, இங்கு பன்முக வாசிப்பு கவிதையின் சொல்லை வைத்து வாசிக்கின்றது, எழுதப்பபட்ட சூழலை, அதன் நோக்கத்தை, இதன் வர்க்க அரசியலை வைத்து வாசிக்கவில்லை. இப்படி வாசிக்காமல் இருத்தல் கூட, பன்முக வாசிப்பு என்பார்கள். படைப்பைப் பார், மொழியைப் பார், சொல்லைப் பார், படைத்தவனைப் பாராதே, வர்க்கத்தைப் பாராதே, இப்படி பன்முகத்தன்மை அடையாள அரசியலை முன்தள்ளுகின்றது. படுகேவலங்கள் இன்று  நியாயப்படுத்தப்படுகின்றது.

 

சீமாட்டி கூறுகின்றார் "..எந்த மொழியும் பெண்ணுடையது அல்ல, ஆண் உருவாக்கி வைத்திருக்கும் மொழி.." என்கின்றார். அடையாள பெண்ணியம் பேசுகின்ற, பலரின் அடையாள பெண்ணியம்; இதுதான். பொது உலகத்தை மறுத்து, தன் இழிவான ஆணாதிக்க பெண் நடத்தையை பூசிமெழுக பெண் அடையாளம் சார்ந்து அனைத்தையும் திரிக்கின்றனர். சமூகத்தில் இருந்து கொண்டு மொழியை "தன்னுடையதை தனியாக அல்லது வேறாக உருவாக்கவே முயல்கிறாள்" என்று கூறுவது, அடையாள அரசியல் தான். சமூகத்தில் இருந்து கொண்டு, எவரும் எதையும் சமூகத்துக்கு வெளியில் உருவாக்க முடியாது. இது பெண்ணுக்கும் பொருந்தும்;. சமூகத்தை நிராகரித்த, தனிமனித முனைப்பு கொண்ட வர்க்கம் தான், இப்படி உருவாக்க முடியும் எனக் கூறுகின்றது. அது சமூகத்துக்கல்ல, தனது சுயநலனுக்கு ஏற்றதைத்தான். அதைத்தான் இங்கு லீனா மொழி சார்ந்து கூறுகின்றார்.

 

இங்கு சீமாட்டியின் வர்க்கம் என்ன? முன்பு கூறியது போல் சுரண்டும் வர்க்கம் தான். சரி அதில் எந்தப் பிரிவு. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரானதும், வலது பாசிசத்துக்கும் எதிரான பிரிவு. ஏகாதிபத்தியத்தின் முரணுக்குள் ஒன்றாகும்;. ஏகாதிபத்திய இடது பிரிவைச் சார்ந்த, கம்யூனிச எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதுமாகும்;. சுரண்டல் நடக்கவேண்டும், ஆனால் அதை வன்முறையின்றி செய்யவேண்டும். ஈராக்கை அமைதியாக சூறையாட வேண்டும்;, அதற்காக சண்டைபிடிக்க கூடாது. இதை எதிர்த்து யாரும் போராடக் கூடாது. தங்கள் வசதியை, வெறிபிடித்த நுகர்வை, அமைதியான வாழ்வை, யாரும் கெடுக்கக் கூடாது.

இதனால் தான் அங்குமிங்கும் கடித்து துப்புகின்றது. வர்க்கப் போராட்டத்தை மறுத்து, அங்குமிங்கும் மூத்திரம் பெய்கின்றது.   

 

இதைப் பன்முக வாசிப்பின் ஊடாக கம்யூனிஸ்டாக தன்னைக் கூறிக்கொள்ளும் சோபாசக்தி வாசித்தால் என்ன நடக்கும்?  இதில் பெண்ணியம் இருக்கின்றது, ஏகாதிபத்திய எதிர்ப்பு இருக்கின்றது என்பார். இதனால் இதுவே ஆகச் சிறந்த பெண் கம்ய+னிஸ்ட்;டின் படைப்பு என்று, நாளை தமிழ்ச்செல்வன் பாணியில் சோபாசக்தி சொன்னாலும் ஆச்சரியமில்லை. இதை அ.மார்க்ஸ் வழி மொழிந்;து தத்துவ விளக்கம் வழங்காமலா விட்டுவிடுவார்!?

 

4.நான் பெண், ஆகவே நான் பெண்ணியவாதி. நீ ஒரு ஆண், ஆகவே நீ ஆணாதிக்கவாதி

 

3.ஒரு காவாலி "உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!" என்கின்றது

 

2.லீனாவும், அ.மார்க்ஸ்-சோபாசக்தி நடத்திய தொழிலாளர் விரோதக் கூட்டம்  

 

1.தொழிலாளர் விரோத உணர்வுடன் கூடும் சோபாசக்தியும் லீனாவும்

 

தொடரும்

 

பி.இரயாகரன்
25.04.2010