Language Selection

அவர்களை விட்டு விடயத்திற்கு வருவோம்


உங்களுக்கு கூறியபடி எழுதவேண்டியதை எழுதாது வேறு எங்கோ நித்தியானந்தா திசை திருப்பி விட்டார். இந்து மதத்தில் மாத்திரம் அல்ல கிறிஸ்தவ மதத்திலும் பல பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெற்றதை அனைவரும் சமீப காலங்களில் ஊடகங்களினூடாக அறிந்து இருப்பீர்கள்.

இலங்கையில் கூட பல பாதிரிமார்கள் தமக்கு உதவிக்கென்று ஓரிரு அழகிய சிறுவர்களை வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே.அவர்களை பற்றிய சந்தேகம் இளைஞர்கள் மத்தியில் இருந்து வந்தது.ஐரோப்பா போல் இளஞர்கள் வந்து சாட்சி சொன்னால் தான் உண்மை வெளிவரும்.இவர்கள் செய்யும் சேட்டைகள் மதுபோதையில் உள்ளவர்கள் செய்யும் சேட்டைகளை விட பாரதூரமானது.அதனால் தான் கார்ள் மார்க்ஸ் கூறினார் மதம் ஒரு அபின் என்று. அவர்களின் பாலியல் உணர்வை மதிக்கிறேன். அவர்கள் மக்களை ஏமாற்றாது,மக்களைச் சுரண்டாது உழைத்து குடும்ப வாழ்வில் ஈடுபடட்டும்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் வாழ்வார்கள்.அவர்களை விட்டு விடயத்திற்கு வருவோம்.


அந்தப் பெண்ணுக்கு நடந்தது என்ன ?


அவர் என்னிடம் வந்து கூறினார், "நான் ஏதோ இருக்கிறேன் ஆனால் வாழவில்லை".கலியாண வீட்டிற்கும் போனால் என்ன சாவீட்டிற்கு சென்றால் என்ன தன்னால் எல்லாம் ஒரே மாதிரியே உணர முடிகின்றது எனவும் உணர்ச்சிகள் எல்லாம் மருந்துக் குளிசைகளால் கட்டுபடுத்தப் பட்டு விட்டதாகவும் கூறினார்.


அவருக்கு சிறிய வயதில் இருந்து ஏற்பட்ட பல மன அதிர்ச்சிகளால் அவர் இன்நிலைக்கு ஆளானார்.மன அதிர்ச்சிகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணத்தால் அவரின் வாழ்வு பாதிக்கப் பட்டது. அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.பல மருத்துவ விடுமுறைகள் எடுத்தார்.பின்பு வேலைக்கு முற்று முழுதாகவே செல்லாமல் விட்டுவிட்டார் மருத்துவரின் அனுமதியுடன்.மருந்துக் குளிசைகளே அவரின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியது. அவரால் மகிழ்ச்சி,கவலைகளை உணர முடியவில்லை.


கடந்தகாலம்


ஹிப்னாட்ஸத்தின் உதவியுடன் அவரைக் கடந்த காலதிற்கு அழைதுச் சென்றேன்.அவர் உடனடியாகவே மூச்சுத்திணறி வருந்தினார். காரணம் அறிந்த பொழுது,அவரின் கடந்த காலக் காதலன் அவருடன் வாழும் பொழுத் அவரை தண்ணீரில் அழுத்திக் கொலை செய்ய முயன்றான். அதிஸ்டவசமாக் தப்பி விட்டார்.இதுவும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது.பின்பு வேறு வயதிற்கு அழைதுச் சென்ற பொழுது பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதை அறிந்தேன். 16 க்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவு நடைபெற்றதை அறிய முடிந்தது.இதை வெவ்வேறு நபர்களே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்திருந்தார்கள்.அவர் காவல்துறையிடம் முறையிடவில்லை.அவரது மன அழுத்தம் , பயம் அவரைக் காவல் துறையிடம் செல்ல விடவில்லை.


எமது ஊரில் ஒருவர் இருந்தார், தெருவால் போற வாறவர்களை எல்லாம் விட்டு விட்டு அவரை அவ்வூர் நாய்கள் கடிக்கும். பலமுறை நாய்களிடம் கடி வேண்டினார்.அந்நபரின் பய உணர்வுச் சமிக்கைகள் நாய்களைக் கடிக்கத் தூண்டியது. அதுபோலத்தன் இந்தப் பெண்ணின் ஆழ்மனதுப் பய உணர்வு அந்த மனித நாய்களைத் தூண்டியது.ஆதலால் அப்பெண்ணின் வாழ்வு அழிந்தது.மன அழுத்தம் ஏற்பட்டால் எல்லோரும் நிச்சயமாக மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும்.இவரும் மருத்துவரிடம் சென்றார். மருதுவர் சில பலம் கொண்ட குளிசைகளினாலே அவரது மன அழுத்ததைக் கட்டுப படுத்த முடிந்தது. அதே நேரம் அவரது ஏனைய உணர்வுகளையும் கட்டுப்படுத்தி விட்டது.


அதனால் தான் அவர் உண்ர்ச்சிகளுடன் வாழ விரும்ம்பியே ஹிப்னாடிஸ மருத்துவ முறையை அணுகினார்.அவரின் அதிர்ச்சிகள் படிப்படியாக நீக்கப் பட்டது.அவரிடம் கூறப்பட்டது மருத்துவரின் உதவியுடன் மாத்திரையின் அளவைக்க் குறைக்கும் படி . ஆனால் அவர் மருத்துவரிடம் கேட்காமலே மாத்திரையை குறைத்தார். ஆதலால் அவருக்கு உடனடி ஹிப்னாடிச சிகிச்சை அடிக்கடி தேவைப் பட்டது.இப்படியாக 15 தடவைகளுக்கு மேல் அப்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினார். வாழ்க்கையை வாழத்தொடங்கினார்.


மன அழுத்தம் ஓரளவு ஆரம்ப நிலயில் இருந்தால் ஹிப்னாடிஸ முறை மூலம் முற்று முழுதாக தீர்வு காணலாம். அது நிலமையை மீறினால், ஹிப்னோதெரபிஸ்டுடன் கதைக்க முடியாத நிலமை ஏற்பட்டால், மருத்துவரிடமே சென்று மாத்திரைகள் எடுக்க வேண்டும்.பின்பு ஹிப்னாடிஸ முறை மூலம் மாத்திரையில் இருந்து விடுபடலாம். 


கவிதைச் சாலை என்ற வலைப் பதிவில் ஓசைக்களஞ்சியம் இதழில் இருந்து ஒரு ஆக்கம் இருந்தது. அதில் சில காரணங்கள் குறிப்பிட்டிருந்தது.


ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். 

 

இலங்கைத் தமிழர் பிரச்சனை


இலங்கயில் ஏற்பட்ட சுனாமி,அதையடுத்து வந்த போர்கள்,என்பன பலருக்கும் மன அதிர்ச்சிகளைக் கொடுத்து இருக்கும்.நேரடியாக போரைப் பார்க்காவிட்டாலும், தொலைகாட்சிச் செய்திகள், படங்கள்,தொலைபேசிச் செய்திகள் என்பன கூட மன அதிர்ச்சியை ஏற்படுத்தும்.இச்செய்திகளால் பாதிக்கபட்ட பெற்றொரின் பிள்ளைகளுக்குக் கூட மன அதிர்ச்சிகள், மன அழுத்தங்கள் ஏற்படலாம்.


சுனாமியால் தனது கைக்குழந்தையை பறிகொடுத்த தாய் தனது கையை அசையாது குழந்தையை தூக்கும் பாவனையில் வைத்திருந்ததை தீபம் தொலைக் காட்சி செய்தி மூலமாக அறிந்தேன்.அவர் போன்றவர்களிற்கு ஹிப்னோதெரபி ஒரு சிறந்த தீர்வாகும். அவரது கையை சாதாரண நிலைக்கு உடனடியாகக் கொண்டு வர முடியும். சில வலைத்தளங்கள் பொறுப்புணர்வு இல்லாது சர்வதேசத்துக்கு நிலமையை காட்டுகிறோம் என்று கூறி தமிழர்கள் மாத்திரம் வாசிக்கும் தளங்களில் பல அதிர்ச்சியூட்டும் காட்சிகளை வெளியிட்டது பாரிய தவறாகும்.இதனால் பலருடைய மனதும் பாதிக்கப் பட்டிருக்கும். பல தமிழர்கள் மேலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.


பிரச்சனை உடனே தெரியாது 


பல 60 வயதிற்கு மேற்பட்ட நோர்வேயியர்கள்-பெண்கள், ஹிப்னொதெரபி உதவி வேண்டி வந்தார்கள்.முன்பு கூறிய தொடர்களில் உள்ளது போல் மன அதிர்ச்சியால் ஏற்பட்ட நோய் அறிகுறிகளிற்கு தீர்வு வேண்டி வந்தார்கள்.அவர்களை ஹிப்னாடிஸம் செய்து நோய்க்குரிய காரணத்தை அறிய முயன்ற பொழுது அக்காரணங்களின் தொடக்கம் இரண்டாம் உலக் யுத்தமும்,அப்பொழுது நோர்வேயில் வந்திருந்த நாசிப்படைகளுமே காரணமாகும்.ஒரு பெண் தனது தந்தையை 2 வயதாக இருக்கும் பொழுது கைது செய்ததால் அதிர்வுற்றார்.இன்னும் சற்று வயது கூடிய நோர்வேயில் வாழும் யப்பானியப் பெண் சிறு (13)வயதில் தனது சினேகிதி யப்பானிய இராணுவத்தால் கடலில் வீசியது அதிர்ச்சியாகியது.தனது பாட்டனாரை இராணுவம் கொலை செய்ததும் அதிர்ச்சியாகியது.அவற்றால் ஏற்பட்ட பிரச்சனைகள் இப்பொழுது தான் அவருக்கு தாக்கத்தைக் கொடுக்கிறது.நித்திரயின்மை,உடம்பில் நோ இன்னும் பல பிரச்சனைகள்.இது போல எம்மவரின் ஆழ் மனதில் பதிந்த பிரச்சனைகள் எப்பொழுதும் எம்மைத் தாக்கலாம்.இரண்டாம் உலக யுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிள்ளைகளுக்கு முழுமையான அன்பைக் கொடுக்க முடியவில்லை ஆதலால் பிள்ளைகளும் பாதிக்கப் பட்டார்கள்.இதனால் பரம்பரையே பாதிக்கப் படும்.அது போல் எம்மவரும் நோய் அறிகுறிகளுக்கு உடனே சிகிச்சை எடுக்காவிட்டால் எமது சந்ததியும் பாதிக்கும்.அடுத்த தொடரில் சந்திபோம்... 

 

5.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 05

 

4.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 04

 

3.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03

 

2.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02

 

1.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 01