குற்றச்சாட்டு 18.4

 

"இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களைப் பாலியல் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என எழுதுகிறார்."

 

இப்படி கொச்சையான உள்ளடகத்தில் நான் குறிப்பிடவில்லை. இங்கு இதையும் கூட அசோக் தான், இப்படி கொச்சைப்படுத்திக் காட்டுகின்றார். இங்கு இதன் மூலம் உண்மையில் யாரைப் பாதுக்காக்கின்றார் என்றால், ஆணாதிக்க நடத்தையில் ஈடுபட்ட ஆண்களைத்தான் பாதுகாக்கின்றார். அங்கு எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதே, இங்கு இவர்களின் ஆணாதிக்க அரசியல் உள்ளடக்கமாகும்.

இது பற்றி 2001 இல் 7 பெண்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில்

 

"எங்களில் பல தோழிகளுக்கு இலக்கிய அரசியல் தோழர்களாகப் பாசாங்கு செய்த ஆண் மேலாதிக்கவாதிகளால் வன்முறையும் அராஜகமும் செய்யப்பட்ட போது மௌனம் சாதித்து விட்டு.."

 

பேசுகின்ற, ஆணாதிக்க கூட்டத்தை சாடியதை இங்கு எடுத்து சுட்டிக் காட்டுவது அவசிமாகும். இது ஒரு சிறிய துளி. அசோக் இந்த ஆணாதிக்கத்தையே, மீளவும் இங்கு மறுக்கின்றார். குறிப்பாக 7 பெண்கள் வெளியிட்ட அறிக்கை, அசோக்குக்கும் அனுப்பப்பட்டதை ஈமெயில் முகவரி ஊடாக இனம் காணமுடியும். பார்க்க இணைப்பை

 

எமது குற்றச்சாட்டு மிகச்சரியானது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூட, இதை எமக்கு நேரடியாக கூறியுள்ளனர். தங்கள் அறியாமையை பெண்ணியம் பேசி, எப்படிப் பயன்படுத்தினர் என்பதை அந்தப் பெண்கள் உணர்ந்து வெளிப்படுத்தினர். இங்கு நாம் தெளிவாக கூறியது என்ன? இலக்கியம், அரசியல் பேசிய சில ஆணாதிக்க ஆண்கள், பெண்களை ஏமாற்றி பயன்படுத்தினர் என்பதைத்தான். ஆனால் இவை எவையும் நடக்கவில்லை என்பது தான், அசோக் வகையான ஆணாதிக்கவாதிகளின் ஆணாதிக்க தர்க்க நியாயவாதமாகும். இவை இலக்கியச் சந்திப்பைச் சேர்ந்த பெண்கள் அனைவரும், ஏற்றுக் கொண்டவை அல்ல.

 

பெண்கள் தாம் ஏமாற்றப்பட்டதையும், தங்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டதையும்  உணரும் போது, இதில் ஆணாதிக்கத்;தின் கூறுகளையும் அந்தப் பெண்கள் இனம் காண்கின்றனர். இதையே இங்கு நாம் குறிப்பிடுகின்றோம். இந்த ஆணாதிக்க மோசடிப் பேர்வழிகளை பாதுகாக்கத் தான், பெண்களை நாம் குற்றம் சாட்டுவதாக எதிர்மறையில் திரித்துக் காட்டுகின்றனர்.

 

வேடிக்கை என்னவென்றால் இலக்கிய சந்திப்பும் சரி, பெண்கள் சந்திப்பும் சரி, இதை அம்பலப்படுத்தி போராடியது கிடையாது. இங்கு அவர்களும் இவர்களும் கூடி நடத்தும் சந்திப்புகள் தான், இன்றுவரையான இவர்களின் ஆணாதிக்க அரசியலாகும்.

 

இந்த ஆணாதிக்க விடையங்கள், இலக்கிய சந்திப்பு மற்றும் பெண்கள் சந்திப்பில் எப்போதும் மூடிமறைக்கப்பட்டே வந்தது. பெண்கள் சந்திப்பு, இதை பெண்களுக்குரிய விடையங்களாக, இவற்றை தமக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் விடையமாக கூறிக்கொண்டனர். இப்படி இந்த ஆணாதிக்கத்தை பாதுகாத்தனர். இதன் மூலம் தொடர்ந்து குறித்த ஆண்களுடன் கூடி, ஆணாதிக்க இலக்கிய அரசியல் செய்தனர். பெண்கள் சந்திப்பில் கூட இவை பேசப்;பட்டிருக்கும் வாய்ப்பில்லை. பெண்கள் சந்திப்பு தங்கள் இருப்பை தக்கவைக்க, இது போன்ற விடையத்தை பேசுவது கிடையாது. கலந்து கொண்ட பெண்கள் பினனால், இந்த இலக்கிய சந்திப்பு ஆணாதிக்க ஆண்களும்; இருந்தனர். கலந்து கொள்ளும் நபர்களை தக்கவைக்க, சந்தர்ப்பவாத நிலை எடுத்து, வெளிப்படையாக அம்பலப்படுத்திப் போராட மறுத்தே நின்றனர். இது அனைத்து அரசியல் விடையங்களிலும், பொதுவான அரசியல் போக்காகவே எங்கும் எதிலும் இருந்தது. இ;ந்தப் பெண்கள் உள்ளடங்கிய இலக்கிய சந்திப்பு, தன்னைச் சுற்றிய சீரழிவையிட்டு எப்போதும் கண்மூடிக்கொண்டு சீரழிந்ததே கடந்தகால வரலாறு.

 

இதற்குள் முரண்பாடு வரும் போது மட்டும், அவை சந்திக்கு வருகின்றது. இப்படி பகிரங்கமாக வெளியாகியவுடன் அதையொட்டி சிலதை பேசினர். அப்படி பேசியவைகளை (பெண்கள் பகிரங்கமாக பேசிக்கொண்ட விடையங்கள்) இங்கு பார்க்கவும்;. இதற்கு முன், இதை அவர்கள் கூட வெளிப்படையாகப் பேசியது கிடையாது. இந்த விடையம் பெண்கள் சந்திப்பில் கூட பேசப்படவில்லை என்பதை, இந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

 

இன்று அசோக் மறுக்கும் ஆணாதிக்கம், எப்படி எங்கு இருந்திருக்கின்றது என்பதை இந்த கடிதத் தொகுப்புகள் வெளிப்படுத்துகின்றது. யார் இதைப் பொத்திப் பாதுகாத்தனர் என்பதையும் இது அம்பலமாக்குகின்றது. எப்படி இன்றும் அந்த ஆணாதிக்கத்தைச் சார்ந்து அசோக் மறுக்கின்றார் என்பதை இது மீளவும் அம்பலமாக்குகின்றது. புளாட்டில் நடந்த படுகொலைகள் முதல் ஆணாதிக்கம் வரை, இன்றுவரை மூடி மறைத்து அதைப் பாதுகாக்கும் அசோக் தான் இங்கும் இதையே செய்கின்றார். இது ஒரு சிறிய துளிதான். இந்தத் தொகுப்பில் தெளிவாக

 

"எங்களில் பல தோழிகளுக்கு இலக்கிய அரசியல் தோழர்களாகப் பாசாங்கு செய்த ஆண் மேலாதிக்கவாதிகளால் வன்முறையும் அராஜகமும் செய்யப்பட்ட போது மௌனம் சாதித்து விட்டு.."

என்று 7 பெண்கள் கூட்டாகவே தெளிவாகவும் எழுதுகின்றனர். இந்த ஆணாதிக்க மௌனத்தின் ஏக பிரதிநிதிகளில், நீங்கள் முதன்மையானவர். பெண்கள் குறிப்பிட்ட "அரசியல் தோழர்களாகப் பாசாங்கு செய்த ஆண் மேலாதிக்கவாதிக"ளில், நீங்கள் முதன்மையானவர். பெண்கள் உணர்ந்த இந்த விடையத்தை, எப்போதாவது, அவர்களைச் சார்ந்து நின்று  நீங்கள் கண்டித்ததுண்டா? தோழர்களாக பாசாங்கு செய்த அந்த ஆண்களையும் பெண்களையும்,  இனம் காட்டியதுதான் உண்டா!? நீங்கள் பாசாங்கு செய்யும், அதே ஆண் தான். இப்படி நீங்கள் கூடிக் கூத்தாடிய ஆணாதிக்கத்தை மூடிமறைக்க, என்னை திரித்து இட்டுக்கட்டிக் காட்டுவது அதே அரசியல் பாசாங்குத்தனம் தான்.

 

மேலும் இலக்கியம், அரசியல் பேசிய நடத்திய சில ஆணாதிக்கத்தைப் புரிந்துகொள்ள இவற்றையும் படியுங்கள்.

 

1.இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும் இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்

 

2.சின்ன ஒரு விடையத்துக்கே சுயவிமர்சம் செய்ய மறுத்து நியாயம் சொல்லி திரிப்பவர்கள் கடந்த காலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்திருப்பார்? 

 
இந்த இலக்கியச் சந்திப்புகளிலும், பொது இடங்களிலும் முரண்பாடுகள் ஏற்படும் போது, இந்த ஆணாதிக்க ஆண்கள் என்ன செய்தனர். பெண்களைக் குறிக்கும் பாலியல் தூசணச் சொற்கள் மூலம், எதிர்த்தரப்பை குதறுவது அங்குமிங்குமாக தொடர்ச்சியாக நடந்தது. அந்த ஆணைச் சார்ந்த பெண், இதைக் குறித்து அலட்டிக் கொண்டது கிடையாது. ஏன் அசோக் இதை கண்டித்தது கூட கிடையாது. இப்படி இருக்க, எனது மொழியில் உள்ள சில சொற்களைக் காட்டி, ஆணாதிக்கம் என்கின்றனர்.

 

அதைப் பாருங்கள். "இலங்கை அரசுக்கு அணுசரனையான அரசியல் கொண்ட பெண்களை மகிந்தாவுக்கு முந்தனை விரித்தார்கள் என எழுதுகிறார். இவர் அறமும் ஒழுக்கமும் நேர்மையும் பேசுகிறார். கொடுமையிலும் கொடுமை." "உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களும். உங்களுடைய ஆணாதிக்க பிற்போக்குவாதத்தை தோலுரித்து காட்டிவிடுகிறது."

என்கின்றார்.

 

பச்சையாக பெண் குறித்த உச்ச ஆணாதிக்க தூசண சொற்களை பாவித்த போது எல்லாம், அதை ஆணாதிக்கமாக காணாதவர்கள் தான் இன்று இதை எழுதுகின்றனர். அதையும் சமூகத்தில் தமக்கு ஏற்புடையதற்ற சொற்களை, மொழியில் பயன்படுத்தக் கூடாது என்கின்றனர்.

 

சமூகத்தில் ஒரு பொருள் இருக்கும் வரை, மொழியும் இருக்கின்றது. பொருளை விட்டுவிட்டு மொழியை நீக்கு என்பது, பொருளை பாதுகாப்பதுதான். உள்ளடக்க ரீதியாக பொருளை பற்றி மொழியில் பேசமறுக்கும், மறைமுகமான எதிர்ப்புரட்சி அரசியலாகும். அது கருத்து முதல்வாதமாகும். சமூகத்தில் அது அப்படியே இருக்கின்றது.

 

இப்படி இதை உயர்த்துகின்றவர்கள், பெண் அல்லாத மற்றைய விடையத்தில் அரசியல் ரீதியாக சரியாக இருக்கின்றனரா எனின், அதுவுமில்லை. அதில் இருந்தால், குறைந்த பட்சம்  இதிலும் சரியாக இருப்பார்கள். மற்றைய விடையங்களில் எவ்வளவு படுபிற்போக்காக இருந்தனர், இருக்கின்றனர் என்பதை கடந்த வரலாறு எமக்கு காட்டுகின்றது.

 

இங்கு நாம் சொற்களை, பெண்களுக்கு மாத்திரம் குறிப்பிட்டு எழுதுவதாக அசோக் இட்டுக் கட்டமுனைகின்றார். நாங்கள் ஆண்களுக்கும் அதே சொற்களை பயன்படுத்துகின்றோம்;. ஏன் அகிறிணை பொருட்களுக்கும் கூடத்தான் அதைப் பயன்படுத்துகின்றோம். எதிர்ப்பால் சொற்களை, இடம்மாறிக் கூட பால் கடந்து பொதுவில் பயன்படுத்துகின்றோம். இங்கு பெண்பால் சொற்களை மட்டுமல்ல, ஆண்பால் சொற்களையும் கூடத்தான், பயன்படுத்துகின்றோம். அகிறிணை, உயர்திணை கூட இடமாற்றிப் பயன்படுத்துகின்றோம். சமூகத்துக்கு எதிரான இழிகேடுகளின், மனிதவிரோதக் கூறுகளை அம்பலப்படுத்தவே இவற்றைப் பயன்படுத்துகின்றோம். இங்கு உவமையையும், உவமானங்கயையும், சமூகத்தின் பொது உள்ளடகத்தில் இருந்து எடுத்துக் கையாளுகின்றோம்.

 

எந்த இடத்திலும் இத்தகைய சொற்களை, அதற்கே உரிய எதிர்நிலையில்தான் பயன்படுத்தியுள்ளோம். அதன் நியாயப்பாட்டுக்கு ஏற்றவிதத்தில், நாம் என்றும் பயன்படுத்தியது கிடையாது. அதன் எதிர் நிலையில் தான், பயன்படுத்தியுள்ளோம்.

 

கடந்த ஐந்து வருடத்தில் அண்ணளவாக  1000 கட்டுரைகள் நான் எழுதியுள்ளேன். (அதைப் பார்க்க இதை அழுத்தவும் ) இதில் 10, 15 கட்டுரைகளில் இது போன்ற சொற்கள் உண்டு.

 

அதைப்பற்றித் தான், இவர்கள் சதா புலம்புகின்றனர். மற்றைய விடையங்கள் மேல் அபிப்பிராயம் சொல்ல வக்கற்றுப் போனவர்கள் தான் இவர்கள். இந்த சொற்களை வைத்து அவதூறு அரசியல் செய்கின்றனர். இந்தச் சொற்களைப் பயன்படுத்துவது பற்றி விவாதியுங்கள் என்றால், அதற்கும் தயாராக யாருமில்லை. ஆனால் இந்த சொற்களை வைத்து அவதூறு பொழிந்து, எமக்கு எதிராக எதிர்ப்பரசியல் செய்கின்றனர். இந்த அரசியல் வங்குரோத்தே, எமக்கு எதிரான அவர்களின் அரசியலாக இன்று உள்ளது. இந்த வகையில் இது போன்ற சொற்களை பயன்படுத்துவதை தவிர்த்து, அவர்களின் எதிர்ப்பு அரசியல் உள்ளடக்கத்தை இன்று இல்லாதாக்கி வருகின்றோம்.

 

மற்றும்படி பொருள் உள்ள வரை, அதன் மொழியிருக்கும். அதை யாரும் சமூகத்தில் இருந்து ஒளித்து வைக்க முடியாது. அப்படி ஒளிப்பதாக பாசாங்கு செய்பவர்கள், பொருளை பாதுகாக்கின்றனர் என்பதுதான் அதன் அரசியல் உள்ளடக்கமாகும்;. ஒரு பொருளுக்கு முரண்பட்ட பல கூறுகள் உண்டு. அதை ஒற்றைப் பரிணாமத்தில் மறுக்கின்ற அரசியல் படு பிற்போக்கானது. இது பொருளை மறுக்கின்ற கருத்துமுதல்வாதமாகும். அதுவே எதிர்ப்புரட்சி அரசியலாக மாறிவிடுகின்றது.

 

அடுத்த தொடருடன் இந்த பகுதி முடிவடையும்;      

பி.இரயாகரன்
15.04.2010

 

 20.புளாட்டின் (தலைமையின்) ஆணாதிக்கத்தை மறுக்கும், அசோக்கின் ஆணாதிக்கம் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 20)

 

19. பெண்களை என்பெயரால் தூற்றும் அசோக். இதுவோ கொலைகார புளாட் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 19)

 

18. வங்கியின் வீட்டை என் சொந்த வீடாக திரித்துக் கூறும் "அசை"யின் அவதூறு அரசியல் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 18)

 

17.எனது வீடு எரிக்கப்பட்டதையே திரித்து, அதைக்கொண்டு அவதூறு செய்த இனியொரு அசோக் (எதிர்புரட்சி அரசியல் பாகம் 17)

 

16.நாங்கள் அவதூறு செய்தோம் என்கின்றார் அசோக், சரி எந்த அரசியலை - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 16)

 

15. அசோக் இனியொருவில் புனைந்த அவதூறுகள்; - (எதிர்புரட்சி அரசியல் பாகம் 15

 

14.பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக அசோக், நாவலன் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் - (எதிர்புரட்சி

 

13.இனியொரு என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் - (எதிர்ப்புரட்சி அரசியல் பாகம் 13)

  

12.புனிதத்தை கட்டமைக்க, இனியொரு தன்னை மூடிமறைக்கின்றது. (எதிர்புரட்சி அரசியல் பாகம் 12)


11.றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் வும், அசோக் முன்னின்று வழிநடத்திய ஈ.என்.டி.எல்.எவ் வும் -அரசியல் பகுதி 11)


10.நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)


9.சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)


8.கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)

  

7.சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


6.பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


5.நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)


4.வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)


3தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் "நேர்மை" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

  

2.அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)


1.எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)