முனைவர் கோவூர்
தான் செய்து காட்டும் அற்புதத்தைப் புலனாய்வுக்கு உட்படுத்த அனுமதிக்காதவன் ஓர் அயோக்கியன்!
ஓர் அற்புதத்தைப் புலனாய்வு செய்யும் மனத் துணிவற்றவன் ஏமாளி!!
சரி பார்த்தல் இன்றியே ஓர் அற்புதத்தை அப்படியே நம்பத் தயாராய் இருப்பவன் முழு மூடன்!!
-முனைவர்
கோவூர்.
படித்தவர்கள் நம்புகிறார்கள் என்று ஆராயாது எதையும் நம்பாதீர்கள்.
எத்தனை கோவூர்கள் வந்தாலும், எம்மிடையே உள்ள சில படித்தவர்கள்,டாக்டர்கள் வலது கையால் பட்டத்தைப் பெற்றுவிட்டு , மறுகையால் மிகவும் மூட நம்பிக்கைகளையும் பெறுகிறார்கள். நித்தியானந்தா, கல்கி பாபா,டென்மார்க் அம்மன், சாய் பாபா போன்றவ்ர்களிடம் வரிசையில் நிற்கிறார்கள். கல்கி பாபா மாம்பழத்தில் போதையூட்டி தனது பக்தர்களை அடிமையாக வைத்திருப்பது சண் TV யில் பலரும் பார்த்திருப்பீர்கள்.
அமெரிக்காவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பக்தராக இருந்த டக்ளாஸ் மெக்கல்லர் என்பவர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நித்யானந்தாவை 2007ம் ஆண்டு சந்தித்து 4 லட்சம் டாலர் நிதி கொடுத்து ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும், அதன் பிறகு தனது பெயரை நித்யபிரபா என்று மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆசிரமத்தில் இருந்த போது நித்யானந்தா தனக்கு போதை பொருளை கொடுத்து மயக்கியதாக கூறியுள்ள அவர் ஆசிரம நிதியை நித்யானந்தா மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
நித்யானந்தா அழகான இளம்பெண்களை விரும்பி வசியம் செய்ததாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதில் கூடுதலாக சென்று மாட்டிக்கொள்பவர்கள், படித்த பட்டதாரிகள்,டாக்டர்கள் போன்றோரே. கிராமிய மக்கள் இவர்கள் விடயத்தில் மாட்டிக்கொள்ளாது வாழுகிறார்கள். கிராமிய மக்கள் கொள்ளிவால் பிசாசு போன்ற்வற்றிகு பயப்பட்டாலும் இந்தச் சாமியார்களிடம் மாட்டிக்கொள்ளாத அளவிற்கு சமூக அறிவுடனே வாழுகிறார்கள்.
படித்தவ்ர்கள் நம்புகிறார்கள் என்று ஆராயாது எதையும் நம்பாதீர்கள். உங்கள் பகுத்தறிவைப் பாவியுங்கள். இப்பொழுது எத்தனையோ தகவல் தொழில் நுட்ப வசதிகள் வந்து இருக்கிறது. பெருமளவு வாசியுங்கள்.ஆரோக்கியமாக விவாதியுங்கள்.உங்கள் பகுத்தறிவைப் பாவித்தே நம்புங்கள்.உங்கள் பிரச்சனைகளை தீர்ப்போம் என்று கூறி பல சாத்திரி மார்களும்,சாமிமார்களும் செய்வினை சூனியம் என்று சொல்லி உங்களை ஏமாற்ற வரிசையில் நிற்கிறார்கள்.TV யில் விளம்பரம் செய்கிறார்கள். இவர்கள் மீது யாக்கிரதையாக இருங்கள். பேய் பிசாசு போன்ற மூட நம்ம்பிக்கைகள் எமது தமிழர்கள் மத்தியில் மாத்திரம் அல்ல நோர்வே மக்கள் மத்தியிலும் இருக்கின்றது.
பேய்க்குப் பயந்த 7வயதுச்சிறுமி
சாப்பாட்டுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல்,இனிப்புப் பண்டங்களில் தங்கி வாழ்வது, அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்ரைக் கட்டுப்படுத்தி உடற்பயிற்சி செய்வதற்கான ஊக்கத்தை ஏற்படுத்தி உங்கள் உடல் நிறையை ஹிப்னோதெரபி மூலம் குறைக்க முடியும்.வேறு காரணங்களை வரும் தொடர்களில் ஆராய்வோம். இப்படியாக ஒரு பெண் நிறை குறைப்பதற்கு என்று வந்தார். அவரிடம் ஹிப்னாடிசம் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டு அவரது பிரச்சனைகள் அராயப்பட்டது. தங்கள் குடும்பத்தை ஒரு பேய் தொல்லைப் படுத்துவதாகவும்,தான் அவ்வுருவத்தைக்க் கண்டதாகவும் கூறினார். ஆனால் நோர்வே நாட்டில் உள்ள பேயோட்டுனரின் உதவியுடன் தன்னை தொந்தரவு செய்த பேயை ஓட்டி விட்டதாகவும், தனது 7 வயது மகளுக்கு பேய்த்தொந்தரவு தொடர்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இரவு வந்தவுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வார்.இரவில் தனிமையிலே இருக்கமாட்டார்.தனிய நித்திரகொள்ள மாட்டார். நோர்வேயியப் பிள்ளைகள் எல்லாம் சிறு வயதிலே தனிமையில் நித்திரை கொள்வார்கள். இச்சிறுமியும் பழைய வீட்டில் தனிமயிலே நித்திரை கொண்டார்.புது வீட்டிற்கு வந்தபின்பே அவருக்கு பேய்த் தொந்தரவு.
பேயாகிய வயோதிபர்
அந்தச் சிறுமியின் தாய் , எனக்கு மேலதிக விளக்கம் அளித்தார். அவ்வீட்டில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்ததாக்வும் அவரே பேயாக வந்து தம்மை துன்புறுத்துவதாகவும் கூறினார். தன்னையே முதல் துன்புறுத்தியதாகவும் , இப்பொழுது மகளைத் துன்புறுத்துவதாகவும் கூறினார். தாயின் பிரசனைகளை எனது அலுவலக்த்தில் தீர்த்து விட்டேன். அவரிற்கு சிறு வயதில் இருந்த சில மன அதிற்சிகளே சிறு விடயத்திற்கும் பயப்பட வைத்தது. அவற்றை நீக்கிவிட்டேன்.தாய் கூறிய கதைகளாலும் அங்கு பேய் சுத்திகரிக்கவென்று சென்றவர்கள் செய்த சேட்டைகளாலும் சிறுமியின் மனதில் பேய் நம்பிக்கை வந்து விட்டது.
பேய் மறைந்தது வாழ்வு மலர்ந்தது.
அவரைக் ஹிப்னாடிசத் தூக்கத்திற்கு கொண்டு சென்று ஆழ்மந்தில் இருந்த அந்த மூட நம்பிக்கைகளை ஒரு மணித்தியாலத்திலே போக்கக் கூடியதாக் இருந்தது. அடுத்த நாள் காலையில் தாயார் மகளிற்கு இரவு சிறுநீர்ப் பிரச்சனை இருக்கவில்லை என்றும், இரவு ஆரோக்கியமாக தனிமையில் தூங்கினார் என்றும் தொலை பேசித்தகவல் அனுப்பினார்.பேய் மறைந்தது வாழ்வு மலர்ந்தது.
தற்காலிக தோல்வி
இப்படியான கதைகள் நோர்வேயிய மக்களிடம் மாத்திரம் அல்ல தமிழ் மக்களிடமும் பரவியது. என்னை ஒரு தமிழ் பிரமுகர்(இரகசியம் காக்க வேண்டி அவரது தொழில் எழுதவில்லை) அணுகினார். ஒரு பெண் சிறுமிக்கு அம்மன் பிடித்து விட்டதாகவும் கூறினார்.நான் கேட்ட பொழுதும் மேலதிக விபரங்களை அவர் கூறவில்லை .பிள்ளை மருத்துவ சாலையில் அனுமதிக்கப் பட்டு மாத்திரைகள் பாவித்து ஓரளவு ஆரோக்கியமாகவே இருந்தது. எனது அனுமதியில்லாமலே-எனக்கு நோய் அறிகுறி முழுவதையும் காட்டுவதற்காக- மாத்திரைகள் பாவிக்காது என்னை அழைத்துச் சென்றார்.மாத்திரைகள் பாவிக்காது விட்டதால் நோய் அறிகுறிகள் அதிகரித்து விட்டது அப்பிள்ளையை என்னால் இருதரம் முயன்றும் ஹிப்னாடிசம் செய்ய முடியவில்லை.அவரது நிலமை மோசமகவே இருந்தது. நான் பிள்ளையை மாத்திரைகள் பாவித்து ஒரு அளவு சுகமானவுடன் தொடர்பு கொள்ளும்படி கூறிவிட்டு வந்து விட்டேன் . இதுவரை அவர்கள் தொடர்பு கோள்ளவில்லை. ஹிப்னோதெரபி முறையில் மாத்திரைகள் படிப்படியாகவே குறைக்கவேண்டும். அச்சிறுமியை பற்றிய சரியான தகவல் பெற முடியாததால் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. இது அணுகு முறையில் ஏற்பட்ட ஒரு தோல்விதான். ஆனால் ஹிப்னாடிசம் இப்படியான பிரச்சனைகளை முழுமையாகத் தீர்த்திருக்கிறது. அச்சிறுமியின் பிரச்சனையும் முற்று முழுதாகத் தீர்க்க முடியும்.
மிகப்பெரும் பாராட்டு
நோர்வேயில் 19 மாநிலங்கள் இருக்கிறது அதில் மத்திய மாநிலமான தெற்கு துரண்டலாக் (Sør Trondelag)படிப்பவர்களின் மாநிலம் என்று அழைக்கப் படுகிறது. அங்கு அம்மாநிலத்துக்குப் பொறுப்பான மருதுவர் ஏன் என்னைப் பாராட்டினார் ?. "பத்மன் உண்மையாகவே தன்னிடம் வருபவர்களை சிற்ப்பாகக் கையாள்கிறர்" என்று ஒரு பிரபல் பத்திரிகைக்கு பேடியளித்தார். «Pathman tar sin oppgave som behandler seriøst» sier Jan Vaage, Fylke lege i Sør Trøndelag til adressa avisa( Pathman takes his task to treat serously ) says Jan Vaage, county physician in South Trøndelag to 'adressa avisa' newspaper என்பது பற்றியும் அடுத்த தொடரில் சமூக பதட்ட கோளாறு நோயிலிருந்து குணப்படுத்திய பெண் பற்றியும் ,சமூக பதட்ட கோளாறு பற்றியும் ஆராய்வோம்.
4.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 04
3.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03
2.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02