09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

புகைப்படங்களை ஒருநொடியில் காப்பி செய்ய

இணையத்தில் நாம் புகைப்படங்களை டவுண்லோடு செய்ய அந்த புகைப்படத்தை தேர்வு செய்து பின்னர் தனியே ஒரு போல்டரில் சேமித்து வைப்போம். ஒன்று இரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை.அதுவே 20 முப்பது படங்கள் என்றால் ஒவ்வோரு படத்தையும் தேர்வு செய்து டவுண்லோடு செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒரு இணைய பக்கத்தில் உள்ள அனைத்துப் படங்களையும் நொடியில் வேண்டிய அளவில் - வேண்டிய பார்மெட்டில் -வேண்டிய டிரைவில் சேமித்துவிடும்.காசு கொடுத்து வெளியில் சென்று ப்ரவ்சிங் செய்பவர்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி விரைந்து அதிக அளவு படங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.700 கே.பி. அளவுள்ள சின்ன சாப்ட்வேர் இது.இதனை பதிவிறக் கஇங்கு கிளிக் செய்யவும்.
இதை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட சின்ன விண்டோ ஓப்பன் ஆகும்.

அதன் மீது கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில முதலில் உள்ள Set கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் புகைப்படங்கள் உங்களுக்கு JPG.BMP,GIF,TIF ஆகிய பார்மெட்டுகளில் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அதைப்போல் வேண்டிய அளவினையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் புகைப்படங்கள் எந்த போல்டரில் சேமிக்க வேண்டுமோ அந்த போல்டரையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.இறுதியில ஒ.கே. கொடுங்கள். அவ்வளவுதான் . செட்டிங்ஸ் முடிந்தது. இப்போது வேண்டிய இணையதளத்தை திறங்கள்.உங்களுக்கு இந்த சாப்ட்வேரின் சின்ன ஐ-கானும் உடன் வரும். இதில் நீங்கள் இணைய பக்கத்தில் இருந்து மொத்த புகைப்படங்களை யும் பதிவிறக்க விரும்பினால் அந்த இணைய தள முகவரியை அப்படியே இழுத்துவந்து இந்த ஐ-கானில் விட்டுவிடுஙகள்.ஒன்றிடண்டு படங்கள் மட்டும் வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட படத்தை மட்டும் தேர்வு செய்து இந்த ஐ-கானில் விட்டுவிடுங்கள். இப்போது ஐ-கானை கவனியுங்கள். கீழ்கண்டதை போல் ஐ-கான் மாறியிருக்கும்.

மீண்டும் ஐ-கான் நிறம் மாறியதும் மீண்டும சேமிக்க துவங்குங்கள். அவ்வளவுதாங்க...இப்போது நீங்கள் சேமிக்க சொல்லிய போல்டரில் பார்த்தால் அனைத்து புகைப்டங்களும் இருக்கும்..எப்படி சுலபமாக இருக்கின்றதா..? பதிவின்நீளம்கருதிஇத்துடன்முடித்துக்கொள்கின்றேன்.பயன்படுத்திப்

பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்.

 

 http://velang.blogspot.com/2010/04/blog-post_04.html