மூன்று தொடர்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . பலரும் சில சந்தேகங்களை நேரடியாகவும் , தொலைபேசியூடாகவும் , மின் அஞ்சல் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.நன்றிகள்.அவர்களுடைய சந்தேகங்களிற்கு விளக்கம் கொடுக்க முன் ஒரு பெண்ணிற்கு (அமலா) எற்பட்ட பிரச்சனையை பார்ப்போம்.அவர் தன்னுடைய பிரச்சனையை வெளிப்படையாக கூறுவதற்கு அனுமதி தந்திருந்தும் வேறு பெயரையே இங்கு பாவிக்கிறேன்.
அவருக்கு இருந்தால் போல் கவலை , மன அழுத்தம் ஏற்படும் (anxity,depress). வீட்டில் தனிமையில் இருக்கும் பொழுது கூடுதலாக எற்படும் . அப்படி ஒரு நிலமை ஏற்பட்டால் , அவர் உடனே வெளியில் சென்று ஒரு சிறிது நேரம் நடை நடந்த பின்பே பிரச்சனை குறையும்.இரவிலும் அதே நிலை தான். விடிய 2 மணியிலும் ஏற்பட்டிருக்கு.அவருடைய குடும்பத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இதய அறுவைச்சிகிச்சையின் பின், அவர்கள் பூரண சுகம் அடைந்த பின்பு தான் கவலை , மன அழுத்தப் பிரச்சனை கூடுதலாக் இருந்தது.
சாதாரண மருத்துவர்களை அணுகி பிரச்சனை தீரவில்லை . பின்பு அக்குபஞ்ஞர் முறையும் செய்து பார்த்தார்கள் முனேற்றம் ஏற்படவில்லை.அவர்களுடைய படித்த ஒரு உறவினர் மூலமாக ஹிப்னாடிஸத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிப்னாடிஸ முறையை அணுகினார்கள்.அப்பொழுது இருந்த நேரப் பிரச்சனை காரணமாக , அவர்களிற்கு ஹிப்னாடிஸம் பற்றிய முதல் விளக்கம் ஒரு 30 நிமிடம் வரை கொடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டது. அவர்களது திறந்த மனம் காரணமாக் உடனடியே ஹிப்னாடிச சிகிச்சை அளிக்கப் பட்டது. 25 நிமிடங்கள் மட்டுமே பாவிக்கக் கூடியதாக இருந்தது. பிரச்சனை தீராவிட்டால் அடுத்த முறை நீண்ட நேரம் செலவளித்து அராய்வதாகவும் முடிவு எடுக்கப் பட்டது. அவருக்கு அந்தப் பிரச்சனை உடனே தீர்ந்து விட்டது.அவருக்குப் பல உறவுகள் , பல வசதிகள் இருந்தும் ஆழ்மனது தேவையில்லாது பயப்பிட்டது . ஆழ்மனதிற்கு அவரது உறவுகளின் பலத்தையும் , நோர்வேயின் மருத்துவ வசதிகளையும் விளங்கப் படுத்தும் பொழுது ஆழ்மனது அதை அதிஸ்டவசமாக் ஏற்றுக் கொண்டது. அவரது பிரச்சனை தீர்ந்தது. எப்படியாயினும் இப்படியான பிரச்சனைகள் 4முறை சிகிச்சைக்குள் தீர்க்க முடியும்.
இப்படியாக ஒரு இரு மணித்தியாலங்கள் , 25 நிமிடங்கள் என்று கூறும் பொழுது சிலருக்கு பலத்த சந்தேகம் வருகிறது. 7 வருடத்திற்கு மேல் படித்த மருத்துவப் பட்டம் தேவையில்லையா என்பது.அந்த மருத்துவர்கள் பல சிறந்த பரிசோTகனைகள் செய்து உடலில் எந்த நோயும் இல்லை என்று கண்டு பிடித்த பின்பே , மனப் பிரச்சனை என்பது உறுதியாகியது.மனோதத்துவ மருதுவர்களின் உரையாடல் முறை பலனளிக்கத போது அது ஆழ்மனப் பிரச்சனை என்பது உறுதியாகியது.இது ஹிப்னாடிச முறையை இலகுவாக்கியது.
ஹிப்னோதெரபி மூலம் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கலாம் என்று குறுக்கு வளி தேடாதீர்கள்.ஹிப்னோதெரபி - முதல் சந்திப்பில் நீங்கள் , மருத்துவர்களிடம் சென்றீர்களா , மருத்துவர்களின் பதில் என்ன ? உடலியல் ரீதியான் பிரச்சனைகள் அவருடைய மனப் பிரச்சனைக்கு காரணம் இல்லை என்பதை அறிந்த பின்பே அவரிற்கு ஹிப்னோதெரபி வழங்கப் படுகிறது. ஹிப்னோதெரபிஸ்டுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் தான் காரணமென சந்தேகம் வரும் பொழுது மீண்டும் அவர்கள் மருத்துவரிடம் , மேலதிக சோதனைகளுக்காகச் செல்வார்கள். சில மருத்துவர்கள் ஹிப்னோதெரபிஸ்டுடன் இணைந்து செயற்படுகிறார்கள். மன அழுத்ததிற்கு ஆளானவர் ஹிப்னோதெரபி மூலம் மாத்திரைகளைக் குறைத்து மாத்திரைகளை முற்றாக நிறுத்த முடியும். மருத்துவரின் அனுமதியுடனேயே மாத்திரைகள் குறைக்கப்படும். மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்க ஹிப்னாடிஸம் வளி காட்டுகிறது. ஹிப்னாடிசத்தால் பாதிப்புகள் ஏற்பட்டது என்பது உடனுக்குடன் புதினம் தரும் நவீன உலகில் ஆதாரம் எதுவும் இல்லை.ஹிப்னாடிஸம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.
கடந்த காலத்தில் திட்டமிடப்பட்ட மேடைக் ஹிப்னாடிசத்தாலும் ,சில மிகைப் படுத்தப்ப் பட்ட படங்களாலும் , சில சிறு பிள்ளைகளின் தொலைக்காட்ட்சித் தொடர்களினாலும் பிளையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுளது. உதாரணமாக போக்கெமோன்(Pokemon) என்று ஒரு ஜப்பனிய அமெரிக்க கூட்டுத்தயாரிப்பில் ஹிப்னோ போக்கெமோன்(hypno pokemon) என்று ஒரு உருவம் வரும் பொழுது எல்லா மற்ற உருவங்களும் மயங்கி விழுவார்கள். இது சில மேடைக் ஹிப்னாடிசங்களிலும் காட்டப் படுகிறது. இது ஏற்கனவே திட்டமிடப் பட்டவர்களுடன் மற்றவர்கள் விரும்ம்பிச் செய்யும் பொழுது போக்கு நிக்ழ்ச்சி. ஹிப்னாடிச நிலையில் ஒருவர் கண்னைத் திறந்து பார்ப்பார் முன்னே உலக அழகி நிற்பதாக அவருக்கு கூறப்படும் . அவர் ஒரு தூணையோ பொம்மையையோ உலக அழகியென்று தனது விருப்பத்துடன் அணைப்பார் . அவர் பின்பு விழித்த நிலையில் அவை கனவு போல் ஞாபகத்தில் இருக்கும்.இவற்றின் சில முறைகளை ஹிப்னோதெரபியில் உபயோகித்தாலும் , ஹிப்னொதெரபி முற்றிலும் விஞ்ஞான பூர்வமானதே. படத்தில் ஒரு கராட்டிக் காரன் பத்துப் பேரை அடிக்கலாம், உண்மை என்பது வேறு. கராட்டி என்பது சிறந்த கலை என்பது எல்லோருக்கும் தெரியும்.
James Braid (1785-1860) என்ற பிரித்தானிய மருத்த்துவரே ஹிப்னாடிசம் என்ற சொல்லை அறிமுகப் படுத்தினார் .இது கிரேக்கத்தில் தூக்கம் என்று அர்த்தப் படுவதாலும் , வேறு காரணங்களுக்காகவும் அந்தப் பெயரை மாற்ற விரும்ம்பினார் முடியவில்லை . அதுவே நிலையாகி விட்டது. மேடைக் ஹிப்னாடிசமும் , ஹிப்னோதெரபியும் வேறு வேறு என்பதைப் புரிந்து கொண்டால் சரி.
ஒருவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை ஹிப்னாடிஸம் செய்ய முடியாது என்பதும் உண்மையே. சதாரண விவேகம் உடையவர்கள் அல்லது அதி வீவேகம் உடைய அனைவரும் அவர்களுடைய விருப்புடன் ஹிப்னாடிச தூக்கத்திற்குச் செல்வார்கள். சொல்வதை புரியாத மன நிலையுடையவர்களை ஹிப்னாடிசம் செய்வது கடினம்.
எப்படியான விளக்கங்கள் கொடுத்த பொழுதும் சிலரால் இந்த விஞ்ஞானத்தை புரிய முடியவில்லை . அதற்கு ஒரு கதை கூறலாம். ஒரு கிராமத்தில் பலரும் கொள்ளிவால் பேய்க்கு பயந்து இருந்தார்கள்.ஒரு படித்த அயலூர்க்காரன், கொள்ளி வால் பேய் என்று உலகில் ஒன்றும் இல்லை என்று கூறி மெதேன்(CH4) வாயுவைக் கொண்ண்டுசென்று எரித்துக் காட்டினான்.அவ்வூர் அறிவு குறைந்த மக்கள் எல்லோரும் அவன் கோள்ளிவால் பிசாசை போத்தலுக்குள் வைத்திருப்பதாக்க் கூறி விலகிச் சென்று விட்டாரகள்.
இப்பொழுது நவீன உலகிலும் சிலர் புதிய விடயங்களை வாசிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். மனநோய்களை பற்றி வாசிப்பவன், பயித்தியக்கரன் என்று அடம்பிடிக்கிறார்கள்.இப்படியாக அடம் பிடிக்கும் தமிழர்கள் கூறுவார்கள் விடயத்தை வாசிக்கமலே- தாங்கள் மூளை சாலிகள் என்றும கண்டகிண்டதெல்லாத்தையும் நம்ப மாட்டோம் என்று அடம்பிடிப்பார்கள். அவர்களை விடுங்கள் - அவர்கள் நித்தியானந்த சுவாமிகள் என்ற ஏமாற்றுப் பேர்வளியிடம் காற்வரும் போது (கதவைத்) திறப்பார்கள் , டென்மார்க அம்மனிடம் (தேசிக்காய்) உருட்டுவார்கள்.கல்கி பாபாவிடம்(மாம்பழம்) சூப்புவார்கள் , சத்திய சாய்பாபாவிட மற்றதெல்லம் செய்வார்கள். ஒருபக்கத்தால் பெரிய பட்டப் படிப்புகளையு கையில் வைத்திருபார்கள். நிதியானந்தா என்ற ஏமாற்றுப் பேர்வளிக்கு வக்காலத்து வேண்டியவர்கள் பலர் மிகவும் படித்த பட்டதாரி, பேராசிரிய டாக்டர்கள் சமூக அறிவற்ற முட்டாள்களே.
அவர்களை விடுங்கள் அவர்கள் விரும்பாவிட்டால் எத்தனை முனைவர் கோவூர் வந்தாலும் அவர்களை திருத்த முடியாது. அடுத்த முறை ஒரு மன அழுத்த மாத்திரை பாவிக்கும் பெண் "நாங்கள் ஏதொ இருக்கிறொம் ஆனால் வாழவில்லை"(we exist in the world, but we are not living in the world)என்றார்.ஏன் அவர் அப்படிச் சொன்னார் . அவரின் பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம்.
3.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03
2.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02