03302023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

புலி குறுந்தேசிய பாசிச வடிவில், பௌத்த பேரினவாதம் கட்டமைத்துள்ள பேய் ஆட்சி

அது தனக்கு முரணான அனைத்தையும் ஒடுக்கின்றது. தான் அல்லாத அனைத்தையும் அழிக்கின்றது. தன்னைத் தொழுவதைத் தவிர, மாற்று வழி எதையும் அது விட்டுவைக்கவில்லை. இங்கு ஜனநாயகம் என்பது, மகிந்தா குடும்பம் கட்மைத்துள்ள பாசிசத்ததை தொழுவது தான்.

இதற்கு இசைவாக இசைந்து இயங்குபவர்கள் மட்டும்தான், இன்று பகிரங்கமாக இயங்குகின்றனர். இவர்கள் எதை வைத்தாலும், மகிந்தாவின் பாசிசத்துக்கு கீறல் கூட விழாத வண்ணமே, தங்கள் அரசியல் நடிவடிக்கைகளை உருவாக்கி கொள்கின்றனர். இந்த வகையில் இன்று பத்திரிகைகள் சுய தணிக்கைக்கு தங்களைத்தான் உள்ளாகின்றது. அரசியல் கட்சிகள் உட்பட அனைத்தும், இப்படித்தான் இதற்குள் தான் இயங்குகின்றது. 

 

இந்த வகையில் தான் பௌத்ததில் இருந்து மாதம் மாறுவது, பௌத்தை விமர்சிப்பது உட்பட, அனைத்தும் இன்று தேச விரோதக் குற்றமாக உள்ளது. தமிழ் மக்களை ஒடுக்கிய அதே பயங்கரவாதச் சட்டம், இங்கு இதற்கு எதிராக பாய்கின்றது. பௌத்தில் இருந்து மதம் மாறி பெண், பயங்கரவாத சட்டத்தின் கீழ் தேச துரோகமாக, அரசுக்கு எதிரான சதியாகக் கூறிக் கைது செய்துள்ளது மகிந்த அரசு. தன் பாடலின் பின்னனியில் புத்தரை வைத்துப் படியவருக்கு, நாட்டுக்குள் வர விசா மறுப்பு.

 

இப்படி பௌத்த பேரினவாதம், இன்று தன் சொந்த கோர முகத்தை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது. கடந்த காலத்தில் புலியைச் சொல்லி, தமிழ் மக்களை கொன்று குவித்தன் மூலம் ஒரு இனவழிப்பை இது நடந்தியது. இதன் மூலம் உருவான போர் குற்றக் கும்பல் தான், இன்று நாட்டை ஆள்கின்றது. அதை மூடிமறைத்து ஜனநாயகத்தை தனது வே~மாக்கி கொள்ள, தேர்தலைக் கூட முறைகேடாக பித்தலாட்டங்கள் மூலம் தனக்கு எற்ப நடத்துகின்றது. எதிர்கட்சி வேட்பாளர்களை, திட்டமிட்டு சிறையில் தள்ளியுள்ளது.

 

மகிந்தாவின் பாசிச சிந்தனையிலான தேர்தல் என்பது, தாங்கள் ஆட்சியை பிடிப்பதற்கான ஒரு வரையறைக்குள் நடத்துகின்றது. இந்த வகையில் ஒரு "ஜனநாயகம்". வாக்கு மோசடி முதல், தான் வெற்றி பெறுவதற்கு வாக்கைக் கூட பிரிக்கும் தந்திரத்தைக் கூட "ஜனநாயகமாகின்றது". இந்த வகையில் சாதியைக் கூட, தேர்தல் களத்தில் முன்னிறுத்தியுள்ளது.  இப்படி தேர்தல் திருவிழாவில் பொறுக்கிப் போட்டு எழும்பை கவ்விக்கொண்டு, குழைக்கும் நாய்கள் தான், "ஜனநாயகத்தின்" இன்றைய காவலராகி நிற்கின்றனர்.

 

இலங்கை வாழ் தமிழ் சமூகமாகட்டும், ஓடுக்கப்பட்ட சிங்கள மக்களாட்டும், இலங்கையில் எவரும் சுதந்திர மூச்சை விடமுடியாது. இப்படி விடுபவர்கள் கைது, கடத்தல், காணமல் போதல், படுகொலையும் தான் பரிசாக் கிடைக்கின்றது. கடந்த காலத்தில் தமிழர்களை ஒடுக்க இதை எவியவர்கள், இன்று இலங்கை வாழ் அனைத்து மக்கள் மேலும் எவி வருகின்றது. இது எதிர் காலத்தில் பாரிய அளவில் நடக்கும் என்பதையே, மகிந்தா சிந்தையிலான பாசிசம் வெளிப்படுத்தி நிற்கின்றது.  

 

இந்த உண்மையை மீறி சமூகம் இயங்கவில்லை. எந்த ஜனநாயகமும் செயற்படவில்லை. இருந்தபோதும் தேர்தல் சக்கடையில் பல வண்ண கடைகளை விரித்து, மக்களை எய்கின்ற கூட்டம் குறைந்தபாடில்லை. தேர்தலை "ஜனநாயகத்" தேர்தல் என்கின்றனர். இப்படி மகிந்தா தனக்கு எற்ப நடத்தும் தேர்தலை, "ஜனநாயகமாகக்" காட்டி குலைக்கின்றனர் புலியல்லாத அறிவுத்துறை.

 

கடந்த காலத்தில் புலி சார்ந்த பிழைத்த அறிவுத்துறை, புலியைச் சொல்லித்தான் பிழைத்தது. இன்று மகிந்தாவின் பாசித்தை ஜனநாயகமாகச் சொல்லி, புலியல்லாத கூட்டம் பிழைக்கத் தொடங்கியுள்ளது. புலிகள் இருந்தவரை புலிகளைச் சொல்லி அதன் பினாமியாக வாழ்ந்த பிழைப்புவாதக் கூட்டத்துக்கு பதில், புலியின் பாசிசத்தில் இடம் கிடைக்காதவர்கள் மகிந்தா பாசிசம் நடத்தும் தேர்தல் திருவிழாவில் கூடி, கூத்தாடி, கும்மியடித்து தேர்தல் வாழ்க என்று "நம நம" என்று அரோகர போடுகின்றனர்.           

   

ஒடுக்கப்பட்ட மக்கள், ஓடுக்கப்பட்ட வர்க்கங்கள், ஓடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் உரிமைக்காக எதையும் பேசவும், போராடவும் முடியாது. இது தான் நாட்டின் நிலைமை. இதற்கு வெளியில் "ஜனநாயகம்" பேசி தேர்தல் திருவிழாக் கூத்து நடக்கின்றது. இதை மீறும் அனைத்தும் கண்கணிக்கப்படுகின்றது. மகிந்த சிந்தனையிலான பாசிசத்துக்கு எற்புடையதும், அதை அனுசரித்து இயங்கக் கூடியதும், அனுமதிக்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் கூட, மகிந்தாவின் விரும்பத்தை பூர்த்தி செய்வதுதான் தேர்தலின் உள்ளடக்கம். இதை மீறி எவரும், செயற்படவில்லை, செல்படவும் முடியாது. மகிந்தாவுக்கு எற்ற மந்தைகள் தேர்தலில் நிற்கின்றனர். 

 

இன்று மதம் மாறும் சுதந்திரம் கூட தேச துரோக குற்றமாக அறிவித்து சிறையில் அடைக்கின்ற ஒரு நாட்டில், இது ஒரு வெளிப்படையான அரசியல் உண்மையாகும். இப்படியிருக்க "மார்க்சியம்" பேசுகின்ற புல்லுருவிகள் கூட்டமோ, நடப்பது "ஜனநாயகத்" தேர்தல் என்ற கூறி, அதில் பங்கு கொள்வது அவசியம் என்று கூறி, அதை தங்கள் அரசியலாகப் பீற்றிக்கொள்கின்றனர்.

 

ஆனால் நாட்டில் ஒரு மனிதன் மதம் மாறும் சுதந்திரம் கூட கிடையாது. மதத்தை விமர்சிக்கும் சுதந்திரம் கூட கிடையாது. இப்படிப்பட்ட நாட்டில் இதையே ஜனநாயகமாக காட்டி, செக்கு மாடுகளான தாங்கள் அரசியல் "தன்னியல்புவாத" நிலையையே "ஜனநாயகம்" என்கின்றனர். இதற்குள் புலியல்லாத "முன்னேறிய" பிரிவு, சக்கரங்களாக மாறி மகிந்தாவின் "ஜனநாயகத்ததை" சுற்றிச் சுத்துகின்றனர்.

 

இலங்கை மக்கள் தங்கள் சுதந்திரத்தை, ஜனநாயகத்ததை தேர்தல் திருவிழா மூலம் பெற்றுவிட முடியாது. அது கோயில் திருவிழா போல் வந்து போகும் ஒரு கொண்டாம் தான். கோயில் திருவிழாக்கள் சிலர் பணம் சம்பாதிக்க நடத்தும் சடங்குகள். இந்த வகையில் தான், தேர்தல் திருவிழாவும்.

 

இதற்கு வெளியில் மக்கள் தமக்காக தாம் அணிதிரண்டு போராடுவதைத் தாண்டி, தங்கள் விடுதலையை ஒருநாளும் அடைய முடியாது. தேர்தல் என்பது தங்களை எமாற்றும் ஒரு ஜனநாயக மோசடி என்பதைப் புரிந்து, அதை நிராகரித்த அதற்கு எதிராக போராட வேண்டும். முன்னேறிய பிரிவினரின் கடமை, தேர்தலை நிராகரித்து மக்களை அதன்பால் அறிவுட்டுவதுதான். 

 

மதம் மாறும் சுதந்திரம், மோசடியான தேர்தல் நடைமுறைகள் முதல் எதிர்கட்சி வேட்பாளரை சிறையில் இருந்து விடுவிப்பது வரையான, அனைத்து மக்கள் விரோத பாசிச நடத்தைகள் மீதும் மக்கள் சுதந்திரமாக போராடுவதும், போராடும் உரிமைiயும் தான் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். இந்த வகையில் அணிதிரட்டுவதுதான், இன்றைய புரட்சிகர அரசியல் முன்னேறிய ஒரு அரசியல் நடைமுறையாகும். இதை நிராகரிக்கும் அனைத்தும், மகிந்தா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள பாசிசத்துக்கு கீழ், மக்களை தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்கு உதவுவதுதான்.      

 

பி.இரயாகரன்
27.03.2010  


பி.இரயாகரன் - சமர்