09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 01

இப்பொழுது மனம் பற்றியும், அதனது நோய்கள் பற்றியும் பலரும் எழுத, கதைக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே. மூளை உடலின் ஒரு பகுதியே, அங்கு தான் மனமும் இருக்கின்றது.

உடலின் எப்பகுதியில் நோய் வந்தாலும் உடனே நாங்கள் மருத்துவரை நாடுகிறோம்- ஆனால் மனதில் வரும் நோய்களுக்கு தமிழர்கள் அதற்குரிய மருத்துவரையோ-ஆலோசகரையோ சந்திப்பது அரிது . மன நோய்கள் பற்றியும் அதன் தீர்வுகள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள் . அரைத்த மாவையே திருப்பி அரைக்காமல் உண்மையான காரணங்களை புதிய வடிவில் ஆராய்வதே இத்தொடரின் நோக்கம்.


மனம் இரண்டு வகைப்படும் , ஆள்மனம்(உள்மனம்)( subconscious – underbevisst) , புறமனம்(conscious – bevisste ) ஆகும்.


புறமனம்(conscious – bevisste )

புறமனனமானது குறுகிய கால நினைவை வைத்திருக்கும்,தர்க்கவியலானது ,பகுப்பாய்வு செய்யும் ,பகுத்தறியும்(logical ,analalyze,ratinal) தன்மை கொண்டது . விருப்பங்களையும் வைத்திருக்கும். ஒருவர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க விரும்புவார் ,கோபாப்படாமல் இருக்க விரும்ம்புவார், புகைக்காமல் இருக்க விரும்புவார் ஆனால் எல்லோருக்கும் இவை சாத்தியப்படாது .


ஆள்மனம்(அடிமனம்) ( subconscious – underbevisst)

ஆள்மனமானது நீண்டநாள் நினைவுகளை தன்னகத்தே வைத்திருக்கும்.அத்துடன் பேரதிர்ச்சியயும் தாங்கியிருக்கும்(trauma) , பழக்க்வழக்கங்களிற்கு அடிமையாகியிருக்கும் . புகைத்தல்,மது , இனிப்புப்பண்டம் சாப்பிடுதல் , அடிக்கடி சாப்பிடுதல் ,நிகம்கடித்தல் போன்றவை ஆள்மனதில் பதிந்து இருக்கும். எமது உணர்ச்சிகள் யாவும் ஆள்மனதாலே கட்டுப்ப் படுத்தப் படுகின்றது.தெறிவினை என்பதையும் தன்னகத்தே கொண்டிருக்கும்- தெறிவினை என்பது தர்க்கம் பகுப்பாய்வு , பகுத்தறிவு(logical ,analalyze,ratinal) என்பன இல்லாது தன்னைப் பாதுகாக்கும் . ஒருவர் கண்ணாடி போட்டிருந்தாலும் அவரது கண்ணிற்கு கிட்ட கையைக் கொண்டு சென்றால் கண்ணை உனனே மூடுவார் ,ஒரு பெண் முழுக்காற்சட்டை ஆணிந்து சென்றாலும் காற்று வீசும் போது கையால் கீழ் உடுப்பை அழுத்துவார் , நெருப்புச் சுடும் பொழுது கையை எடுத்தல் ,பனியில் சறுக்கும் பொழுது கையை பின்னே ஊன்றுதல் போன்றன . இவற்றில் இருந்து ஆள்மனதுக்கு தர்க்கம் பகுப்பாய்வு , பகுத்தறிவு என்பன இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். எமது மனப் பிரச்சனைகளுக்கு ஆள்மனதே முக்கிய காரணம் என்பதை ஆதாரங்களுடன் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.


புறமனதில் ஒரு விடயத்தை பலதடவைகள் மீட்கும் பொழுது அவை ஆள்மனதில் பதிந்து விடும் . அதன் கொள்ளளவுக்கு எல்லை இல்லை – பலகோடி Tera byte ஐக் கொண்டது. ஒரு அழகிய எதிர்பாலாரின் தொலைபேசி இலக்கம் ,மின்னஞ்சல் முகவரி அகியவற்றை ஆள்மனதில் நினைவு வைத்துக் கொள்வார்கள். ஆள்மனதில் சாதாரண விடயங்கள் , மகிழ்ச்சியான விடயங்கள் இருந்தால் பாதிப்பு இல்லை . ஆனால் அதிர்ச்சிகள்(trauma) இருந்தால் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் . ஆள்மனமும் புறமனமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டால் , கடைசியில் வெல்வது ஆள்மனமே. ஒருவர் புகைப்ப் பழக்கத்தை நிறுத்த விரும்புவார் , ஓரிரு நாட்களோ – ஒரு கிளமையோ , ஒரு மாதமோ நிறுத்துவார் . ஆனால் மீண்டும் படு மோசமாக்த் தொடங்குவார். அவருடைய ஆள்மனம் புகைத்தல் பழக்கத்தையே கொண்டுள்ளது . அவரது புற மன விருப்பம் ஆள்மனதை வெல்ல முடியவில்லை . இது அவரது தவறு அல்ல. ஆனால்சிலர் ( எனது அனுபவத்தின் படி பல ஆண்களும் – பெண்கள் கற்பம் தரித்திருக்கும் பொழுதும் ) தமது புற மன விருப்பத்தை மீண்டும் மீண்டும் மீட்டு இறுக்கமாக்கி ஆள்மனத்தை மாற்றி உள்ளார்கள். புகைப்பதை நிறுத்தி உள்ளார்கள். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அது அவர்களது குற்றமில்லை.


சிலர் வாழ்க்கையில் ஏற்படும் பேரதிர்ச்சி காரணமாக – நிகம்கடித்தல் , அளவுக்கதிகமாக் சாப்பிடுதல், புகை மதுவுக்கு அடிமையாகுதல் , சில பயங்களைக்க் கொண்டிருத்தல் – இருட்டுக்குப்பயம் , பூச்சிக்குபபயம் , பாம்பு படத்தைப் பார்த்தாலே பயம் , தென்னாலி படத்தில் உலகநாயகன் கூறுவது போல் பயங்கள் – அல்லது அவற்றில் சில – என்பவற்றால் பாதிக்கப்படிகிறார்கள். இப்படியான பல பிரச்சனைகளை எப்படித் தீர்க்கலாம் எப்படி ஆள்மனதுடன் தொடர்பு கொள்ளலம் என்பனவற்றை ஆதாரத்துடன் அடுத்த தொடரில் பார்ப்போம் .

 

தொடரும்

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்