05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து.. என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா?

tholar balan on March 5, 2010 12:56 am

தன் மீது ஆதாரம் இல்லாத அவதூறை யமுனா தேசம் இனியொரு என்பன எழுதுவதாக குறிப்பிடும் சோபாசக்தி அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா?

தினத்தந்தி போன்ற நம்பகத்தன்மையற்ற பத்திரிகைச் செய்தியை ஆராயாமல் எழுதியதாக குற்றம் சாட்டும் சோபாசக்தி கால்மாக்ஸ் மீதான தனது குற்றச்சாட்டுக்கு நிச்சயம் நம்பகத்தன்மையான ஆதாரத்தை முன்வைப்பார் என நம்புகிறேன்.

 

சோபாசக்தி மீது குற்றம் சாட்டியிருப்பவர்கள் யமுனா தேசம் மற்றும் இனியொரு போன்றவையேயொழிய கால்மாக்ஸ் அல்ல. அப்படியிருக்க சோபாசக்தி எதற்காக மாபெரும் ஆசான் கால் மாக்ஸ் மீது அவதூறு பொழியவேண்டும்?

 

ஷோபாசக்தி on March 5, 2010 11:31 am

/சோபாசக்தி கால்மாக்ஸ் மீதான தனது குற்றச்சாட்டுக்கு நிச்சயம் நம்பகத்தன்மையான ஆதாரத்தை முன்வைப்பார் என நம்புகிறேன்/

 

தோழர் பாலன்! உங்கள் நம்பிக்கையை நான் வீணடிக்கமாட்டேன். ‘சாம்பிளுக்கு’ இந்த ஆதாரத்தைப் பொறுமையுடன் படியுங்கள். இதைப் போன்று ஏராளமான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.!

“The story of ‘Marx’s illegitimate son’”
http://marxmyths.org/terrell-carver/article.htm

 

ஷோபாசக்தி on March 5, 2010 1:24 pm

தோழர் பாலன்! நீங்கள் ஏற்கனவே ஹெலன் டெமூத் குறித்து ஏதும் அறியாதவராயிருந்தால் நான் முதலில் அனுப்பிய சுட்டியிலுள்ள கட்டுரை உங்களிற்கு உதவி செய்யாது என்றுதான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் இவ்வாறான ஒரு ‘பிரச்சினை’ இருக்கிறது என்பதையாவது நீங்கள் அறிந்துகொள்ள ஒருவேளை அந்தக் கட்டுரை உதவலாம். பஞ்சியைப் பாராமல் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பாருங்கள். யமுனா கூட ஷீலா ரோபொத்தத்தை ஆதாரம் காட்டி ஹெலன் டெமூத் குறித்து ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் எழுதியதியிருந்ததாக நினைவு. முடிந்தால் அவரிடம் கேட்டுப்பாருங்கள்

 

tholar balan on March 5, 2010 6:58 pm

மதிப்புக்குரிய சோபாசக்தி அவர்களுக்கு! தங்கள் பதில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.உங்களைப்பற்றி தினத்தந்தியில் வந்த செய்தியை ஆராயாமல் தேசம் இனியொரு என்பன பிரசுரித்துவிட்டன என்று கூறும் நீங்கள் கால்மாக்ஸ் பற்றி எழுதும்போது நிச்சயம் தகுந்த ஆதாரத்துடன் எழுதியிருப்பீர்கள் என நம்பினேன்.எனவேதான் ஆதாரத்தை முன்வையுங்கள் என்று கேட்டேன்.ஆனால் நீங்களோ “பஞ்சியைப்பாராமல் நெட்டில் தேடிப்பாருங்கள் அல்லது யமுனாவிடம் கேட்டுப்பாருங்கள்” என்று பதில் தந்துள்ளீர்கள்.ஆக இதன் மூலம் தங்களிடம் ஆதாரம் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.சரி ;நீங்கள் கூறுவது போன்று யமுனாவிடம் கேட்டு அவரின் கருத்தை ஏற்றுக்கொள்வதாயின் அவர் உங்களைப்பற்றி தெரிவிக்கும் கருத்துக்களையும் நான் சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டிவருமல்லவா? அல்லது நீங்கள் குறிப்பிட்டபடி பஞ்சியைப்பாராமல் நெட்டில் தேடினாலும் அதில் உள்ள கருத்துக்களை அப்படியே எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?ஏனெனில் ஒரு சாதாரண சோபாசக்தியின் செய்தியையே முதலாளித்துவ பத்திரிகையான தினத்தந்தி திரித்து வெளியிடுகின்றதாயின் இந்த முதலாளித்துவத்தையே அழிக்கின்ற தத்துவத்தை எழுதிய தத்துவவியலாளர் குறித்து முதலாளித்துவம் எப்படி நேர்மையாக உண்மையான செய்திகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கமுடியும்?எனவேதான் உங்களிடம் நம்பகமான ஆதாரத்தை முன்வைக்கும்படி கேட்டேன்.

 

சோபாசக்தி ;தயவுசெய்து நான் உங்களை சங்கடப்படுத்துவதற்காக இவ்வாறு கேட்பதாக எண்ணவேண்டாம்.உண்மையிலே இந்த விடயம் குறித்து நீண்ட நாட்களாக நம்பகமான ஆதாரத்திற்காக நான் முயன்று கொண்டிருக்கிறேன்.அதனால்தான் நீங்கள் இந்த விடயம் குறித்து எழுதியவுடன் உங்களிடம் இதுபற்றி நம்பகமான ஆதாரம் இருக்கக்கூடும் என எண்ணினேன்.

 

லண்டனில் கால்மாக்ஸ் கல்லறை உள்ள மயானத்தில் அவரின் கல்லறையைப் பராமரிக்கும் அறக்கட்டளை சார்பாக ஒரு பிரசுரம் விற்கப்படுகிறது.அதில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனைப்படித்த நான் அந்த அறக்கட்டளையுடன் தொடர்புகொண்டு இது பற்றி மேலும் விபரங்கள் அறிய முயன்றேன்.ஆனால் எனது முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.எனினும் இது பற்றி 90 களில் எஸ்.வி.ராஜதுரை தமிழ்பரப்பில் எழுதியதும் அதற்கு இந்திய புரட்சியாளர்கள் பதில் அளித்ததும் அறிந்துள்ளேன்.ஆனால் எஸ.வி.ராஜதுரை அவர்களும் இதற்குரிய நம்பகமான ஆதாரத்தை முன்வைக்கவில்லை என்றே அறிய வருகிறது.

 

ஷோபாசக்தி on March 6, 2010 1:01 am

தோழர் பாலன்! எந்த ஆதாரத்தை நீங்கள் நம்புவீர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதுதான் பிரச்சினை. எடுத்துக்காட்டாக நீங்கள் இணையத்தில் சொடுக்கினால் ஹெலன் டெமூத் கார்ல் மார்க்ஸின் காதலி என ஒருதொகைக் கட்டுரைகளும் அதுகுறித்த புத்தகங்கள் நாடகம் சினிமா குறித்த விபரங்களும் கிடைக்கும். ( அதே போல அவர் காதலி என்பதை மறுத்த ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன).

 

ஹெலன் டெமூத்தின் குழந்தைக்கு தந்தை இல்லாதது மார்க்ஸ் இறந்தவுடன் ஹெலன் டெமூத் ஏங்கெல்ஸிடம் அடைக்கலம் புகுந்தது ஹெலன் இறந்தபோது ஜென்னி ஏற்கனவே கோரியிருந்தவாறு மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் அவர் புதைக்கப்பட்டது 1898ல் தற்கொலை செய்துகொண்ட மார்க்ஸின் மகள் எலியனோருக்கும் ஹெலனின் மகன் ஃபிரடரிக் டெமூத்துக்கும் நடந்த நீண்ட கடித உரையாடல்கள் என எல்லாவற்றையும் ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.ஒரு சொடுக்கில் ஆதாரம் எனச் சுட்டிகளை வரிசையாகக் கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் நம்ப வேண்டுமே! முதலாளித்துவ எழுத்தாளர்களின் சதி என நீங்கள் புறக்கணித்துவிட்டுப் போகவும் வாய்ப்புள்ளதல்வா!

 

அதனால்தான் உங்களையே தேடிப் பார்த்துப் படிக்கச் சொன்னேன். தவிரவும் யமுனாவும் அதுகுறித்து எழுதியிருந்ததால் அவரிடம் மேலதிக தகவல்கள் கிடைக்கலாம் எனச் சொல்லியிருந்தேன்.

 

நீங்கள் “சங்கடப்படுத்துவதாக நினைக்க வேண்டாம்” என எழுதியிருந்தார்கள். இந்த ஆதாரம்/ ஆதாரமின்மை குறித்து உங்களோடு உரையாடுவதில் சங்கடம் ஏதுமில்லை. ஆனால் நமது பேராசான் கார்ல் மார்க்ஸ் மீது நான் வீம்புக்கு பழி சுமத்துகிறேன் என்ற தொனியில் நீங்கள் என்னை அணுகுவது உண்மையிலேயே மிகுந்த சங்கடமாயுள்ளது.

மிக்க அன்புடன்
ஷோபா

 

tholar balan on March 6, 2010 9:50 am

Shobashakthi, I have read the link you attached. Nowhere in the article does it mention that there is concrete proof that there was a liason between Marx and the house servant. Even the conclusion reiterates this point.

 

I’m not sure if you have read this article yourself or if you mentioned it to me, believing it to be about one thing. Yet, the points covered in the article seems to reaffirm my statements. So, I’m hoping that you will be reading this article once again and be changing your opinion accordingly.

Alternatively, if you wish to continue to stand firm by your intial comments/opinions then I ask that you bring forth the relevant proof. But please read the resources before putting them forward.

 

tholar balan on March 7, 2010 11:09 am

கால்மாக்ஸ் பற்றி சோபாசக்தி குறிப்பிட்டிருக்கும் வரிகள் /”ஹெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ தன்மூலம் ஹெலன் டெமூத்துக்குப் பிறந்த குழந்தையையோ கார்ல் மார்க்ஸ் அவர் மரணிக்கும்வரை வரை ஒப்புக்கொள்ளவேயில்லை. நீண்ட காலத்திற்கு அது ஏங்கெல்ஸ் உட்பட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிருந்தது. ஹெலன் டெமூத் மரணித்த பின்புதான் அவருக்கு கார்ல் மார்க்ஸின் காதலியென்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கப்பெற்று அவர் மார்க்ஸின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டடார்.”/ அதுமட்டுமல்ல சோபாசக்தி இறுதியாக தன் கருத்தாக பின்வருமாறு கூறுகிறார் /”என்னைப் பொறுத்தவரை கேடுகெட்ட சமூக ஒழுங்குகளிற்கும் மரபுகளிற்கும் - ஒருவேளை கட்சியின் விதிகளிற்கும் - கட்டுப்பட்டுத் தன் காதலை மறைத்து வைத்து மருகிக்கொண்டிருந்த பரிதாபத்திற்குரியவராகத்தான் இந்த விடயத்தில் கார்ல் மார்க்ஸை மதிப்பிட முடியும். மார்க்ஸை விட ஆயிரம்மடங்கு பரிதாபத்திற்குரியவர் சமூக ஒழுக்கங்களின் பெயரால் மார்க்ஸால் வஞ்சிக்கப்பட்ட ஹெலன் டெமூத்.”/

 

தினத்தந்தி தன்னைப்பற்றி திரித்து எழுதிய செய்தியை ஆராயாமல் ஆதாரம் இன்றி யமுனா தேசம் இனியொரு என்பன எழுதிவிட்டதாக கூறும் சோபாசக்தி கால்மாக்ஸ் பற்றி எழுதும்பொது நிச்சயம் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலே எழுதியிருப்பார் என்று நம்பி அந்த ஆதாரத்தை முன்வைக்கும்படி கோரினேன்.அதற்கு சோபாசக்தி அவர்கள் /”தோழர் பாலன்! உங்கள் நம்பிக்கையை நான் வீணடிக்கமாட்டேன். ‘சாம்பிளுக்கு’ இந்த ஆதாரத்தைப் பொறுமையுடன் படியுங்கள். இதைப் போன்று ஏராளமான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.!
“The story of ‘Marx’s illegitimate son’”
http://marxmyths.org/terrell-carver/article.htm

 

tholar balan on March 7, 2010 11:40 am

சோபாசக்தி இணைத்த ஆதாரத்தை இங்கு எத்தனை பேர் படித்தார்களோ தெரியவில்லை. ஆனால் நான் அவர் கேட்டுக்கொண்டபடி படித்தேன். அதில் பெடரிக் டெமுத் க்கு தந்தை கால்மாக்ஸ் என்பதற்கு எந்தவித தகுந்த ஆதாரமும் இல்லை என்றே தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி தனது ஆதாரமாக சோபாசக்தி முன்வைத்தார் என்பது எனக்கு புரியவில்லை. கட்டுரையில் என்ன உள்ளது என்பதை படிக்காமலே சோபாசக்தி இதை இணைத்திருக்க வேண்டும் அல்லது யாரையாவது நம்பி ஏமாந்துவிட்டாரா தெரியவில்லை. ஆனால் இதை இணைத்த அவரே அடுத்து எழுதிய பின்னோட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் /”தோழர் பாலன்! நீங்கள் ஏற்கனவே ஹெலன் டெமூத் குறித்து ஏதும் அறியாதவராயிருந்தால் நான் முதலில் அனுப்பிய சுட்டியிலுள்ள கட்டுரை உங்களிற்கு உதவி செய்யாது என்றுதான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் இவ்வாறான ஒரு ‘பிரச்சினை’ இருக்கிறது என்பதையாவது நீங்கள் அறிந்துகொள்ள ஒருவேளை அந்தக் கட்டுரை உதவலாம். பஞ்சியைப் பாராமல் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பாருங்கள். யமுனா கூட ஷீலா ரோபொத்தத்தை ஆதாரம் காட்டி ஹெலன் டெமூத் குறித்து ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் எழுதியதியிருந்ததாக நினைவு. முடிந்தால் அவரிடம் கேட்டுப்பாருங்கள்”/

 

நான் ஆதாரம் கேட்டதும் அவர் முன்வைத்த ஆதாரத்தையே பின் அது உதவிசெய்யாது என்று கூறுகிறார். அத்தோடு என்னை நெட்டில் தேடிப்பார்க்க கூறுகிறார். அல்லது யமுனாவிடம் கேட்டுப்பாருங்கள் என்கிறார். ஆக இதில் இருந்து என்ன தெரியவருகிறது? இவரிடம் ஆதாரம் இல்லை என்பதே. எனவே இங்கு நான் கூறவருவது என்னவெனில் தன்னுடைய பிரச்சனையில் ஆதாரத்துடன் தேசம் இனியொரு என்பன எழுதவேண்டும் எனக்கோரும் சோபாசக்தி தான்மட்டும் கால்மாக்ஸ் மீது ஆதாரம் இல்லாமல் அவதூறு பொழியமுடியும் என்பதே. அதாவது தனக்கு ஒரு நியாயம். கால்மாக்ஸ்க்கு ஒரு நியாயம். இதுதான் சோபாசக்தியின் நியாயம்!

 

/தோழர் பாலன்! எந்த ஆதாரத்தை நீங்கள் நம்புவீர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதுதான் பிரச்சினை. /

 

முதலில் நீங்கள் ஆதாரத்தை முன்வையுங்கள். அதன்பின் அதை ஏற்றுக்கொளளலாமா? இல்லையா என்பதை நாம் முடிவு செய்கிறோம். மேலும் இங்கு நான் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் -மாக்சியத்திற்காகவே நான் மாக்ஸ் மீது மதிப்பு வைத்துள்ளேனேயொழிய மாறாக மாக்ஸ்ற்காக மாக்சியத்தை விரும்பவில்லை. எனவே மார்க்ஸ் தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய நான் திறந்த மனத்துடனேயே உள்ளேன்.

 

/ஒரு சொடுக்கில் ஆதாரம் எனச் சுட்டிகளை வரிசையாகக் கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் நம்ப வேண்டுமே! முதலாளித்துவ எழுத்தாளர்களின் சதி என நீங்கள் புறக்கணித்துவிட்டுப் போகவும் வாய்ப்புள்ளதல்வா!/


தனது செய்தியை தினத்தந்தி திரித்து வெளியிட்டுவிட்டதாக கூறும் சோபாசக்தி கால்மாக்ஸ் செய்திகளை மட்டும் அப்படியே உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரண ஒரு சோபாசக்தியின் செய்தியையே ஒரு முதலாளித்துவ பத்திரிகையான தினத்தந்தி திரித்து வெளியிடும்போது இந்த முதலாளித்துவத்திற்கு எதிராக தன்வாழ் முழுவதும் அயராது உழைத்து மாபெரும் தத்துவத்தை தந்த மாக்ஸ்ற்கு பற்றி நேர்மையாக செய்திகள் வெளியிடப்படும் என எப்படி எதிர்பார்க்கமுடியும் ?


சரி நான்தான் நீங்கள் என்ன ஆதாரத்தை முன்வைத்தாலும் அதனை கண்ணைமூடிக்கொண்டு ” இது முதலாளித்துவத்தின் சதி” என்று கூறி ஒதுக்குவதாக வைத்துக்கொண்டாலும் தேசம் வாசகர்களுக்காவது நீங்கள் தகுந்த ஆதாரத்தை முன்வைக்கலாம் தானே?


tholar balan on March 7, 2010 1:01 pm

கால்மாக்ஸ்ற்கு வேலைக்காரியுடன் தொடர்பு இருந்ததாகவும் அதன் மூலம் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும் செய்திகள் முதன்முதலாக 1960களில் தான் வெளிவந்தன.கால்மாக்ஸ் உயிருடன் இருந்தபோது இவ்வாறான செய்திகள் வெளிவரவில்லை.அவர் இறந்தபின்பும் இவ்வாறான செய்திகள் பல வருடங்களாக வரவில்லை.அதன்பின்னு கிட்டத்தட்ட நுhறுவருடங்கள் கழித்தே இந்த செய்திகள் வெளிவந்துள்ளன.இந்த செய்திகள் வெளிவந்த 1960களை உற்று நோக்கினால் அப்போது சர்வதேசத்தில் கம்யுனிச ஆட்சிகளும் கம்யுனிச போராட்டங்களும் உச்ச நிலையில் இருந்த காலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.இந்தக்கால கட்டங்களில் மாக்சியத்திற்கும் மாக்சிய தலைவர்களுக்கு எதிராக முதலாளித்துவம் பல புனைகதைகளையும் இட்டுக்கதைகளையும் பரப்பி வந்ததை நாம் அறிந்து கொள்ள முடியும்.உதாரணத்திற்கு தோழர் ஸ்டாலின் குறித்து 60களில் எழுதிய இருவர் இங்கிலாந்து உளவு அமைப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு எழுதிய விபரம் தற்போது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.

 

முதலாளித்துவம் வேண்டுமென்றே ஆதாரம் இன்றி அவதூறுகள் பரப்புவது உண்மை என்றாலும் இந்த செய்திகள் குறித்து ஆராய்வதில் எமக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.நாம் இது குறித்து திறந்த மனதுடன் இருக்கிறோம் என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த செய்திகளை உருவாக்குபவர்களையும் அதனை ஏற்று பரப்பிக் கொண்டிருப்பவர்களையும் அவர்களுடைய நோக்கங்களையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பணியை ஓய்வின்றி சோர்வின்றி நாம் எப்போதும் செய்வோம் என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்.

 

கால்மாக்ஸ்க்கு வேலைக்காரியுடன் தொடர்பு மூலம் கென்றி பெடரிக் என்னும் பிள்ளை உள்ளதாக சோபாசக்தி கூறுகிறார்(இது சோபா சக்தி கண்டு பிடித்த செய்தி அல்ல.60 களில் வெளிவந்த செய்தியை சோபாசக்தி தனக்கு துணைக்கு அழைத்துள்ளார்)இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரம்?
டி.என.ஏ சோதனை மூலம் உறுதிப்படுத்தினார்களா?


இல்லை.
பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் தந்தை பெயர் மாக்ஸ் என்று உளளதா? இல்லை.
கால்மாக்ஸ் எங்கேயாவது கென்றி பெடரிக் தனது மகன் என்று குறிப்பிட்டுள்ளாரா?இல்லை.


அல்லது கென்றி பெடரிக் தனது தந்தை கால்மாக்ஸ்
என்று எங்கேயாவது குறிப்பிட்டுள்ளாரா? இல்லை.


கால்மாக்ஸ் மனைவி ஜென்னி இது பற்றி எங்கேயாவது குறிப்பிட்டுள்ளாரா? இல்லை.


எங்கெல்ஸ் எங்கேயாவது இது பற்றி குறிப்பிட்டுள்ளாரா? இல்லை.


கால்மாக்ஸ் எங்கெல்ஸ் மற்றும் மாக்ஸ் மனைவி ஜென்னி போன்றோர் டைரிக்குறிப்புகள் கடிதங்கள் கட்டுரைகள் என்று நிறைய ஆதாரங்களை விட்டுச் சென்றுள்ளார்கள்.அதில் எதிலுமே இந்த விடயங்கள் குறித்து எந்த ஒரு ஆதாரமும் இல்லை.இதனை இந்த அவதூறு பரப்புவோரும் ஒத்துக்கொள்கின்றனர்.

 

அப்படியாயின் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த செய்தியை பரப்பிக்கொண்டிருக்கின்றனர்?


நேரடி சம்பந்தப்பட்டவர்களின் எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாத இவர்கள் இந்த இவர்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத மூன்றாம் நபராகிய லூயிஸ் என்பவரின் கடிதத்தை ஆதாரமாக கூறுகின்றனர்.இவரும் இதுபற்றி தன்வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூறியிருக்கிறார்.மேலும் இந்த லுயிசின் கடிதம் நம்பிக்கையான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ரெரல் காவர் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.(இந்த காவரின் கட்டுரையையே சோபாசக்தி தனது ஆதாரமாக இணைத்துள்ளார்)

 

சோபாசக்தி தனது ஆதாரமாக இணைத்துள்ள கட்டுரையில் கட்டுரையாளர் காவர் முடிவுரையாக சொல்வது என்னவெனில் “கென்றி பெடரிக்கின் தந்தை கால்மாக்ஸ் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.அதுபோல் எங்கெல்ஸ் தந்தையாக இருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.மாறாக இங்கு வந்துபோன ஒரு மூன்றாம் நபரே காரணமான இருக்கமுடியும்” என்கிறார்.இவ்வாறு தான் இணைத்த ஆதார கட்டுரையாளரே கூறியுள்ள நிலையில் சோபாசக்தி “கால்மாக்ஸ்தான் கென்றி பெடரிக்கின் தந்தை” என்று கூறுவதுடன் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.அதெப்படி ஆதாரம் இல்லாமல் அவதூறு பொழிவதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டால் நாம் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாகவும் இண்டநெட்டில் உண்மையை தேட பஞ்சிப்படுவதாகவும் கூறுகிறார்.இனி தேசம் வாசகர்களே நீங்களே இது பற்றி முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.


tholar balan on March 7, 2010 11:21 pm

 

ஈழமாறன் தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

/கார்ள்ஸ் மாக்ஸ் ஒன்றும் கடவுள் கிடையாது/
கால்மாக்ஸ் கடவுள் என்று நான் எங்கும் கூறவில்லை.ஆனால் அவர் கடவுள் அல்ல என்பதற்காக அவர் மீது அவதூறு பொழியலாம் என்று அர்த்தம் அல்ல.

/கந்தனில் இருந்து பிரேமானந்தா வரைக்கும் இது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது/


கந்தனும் பிரேமானந்தாவும் மாக்சியம் படைக்கவில்லை. மாக்ஸ்தான் மாக்சியம் தந்தார். எனவே அவர் கந்தனுக்கும் பிரேமானந்தாவுக்கும் மேலானவர் என்னைப் பொறுத்தவரையில்.

 

/பாலன் சொல்வதைப் பார்த்தால் நாம் படிக்கிற கார்ஸ்மாக்சின் பெரும்பாலான புத்தகங்களை எந்த மொழியில் படிக்கிறோம்./
எந்த மொழியில் படிக்கிறோம் என்பதல்ல முக்கியம். புரியும்படி படிக்கிறோமா என்பதே முக்கியம்.

/அவருக்கு தகாத தொடர்பு இருந்ததா இல்லையா என்பதை அவர் வீட்டு இறையில் மெழுகு வர்த்தி பிடித்தவன் மாதிரி பாலன் எதிர்ப்பது எந்த ஆதாரத்தைக் கொண்டு./
கால்மாக்ஸ் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று சோபாசக்திதான் எழுதியிருந்தார். எனவே உண்மையில் நான்தான் “நீர் விளக்கு பிடித்து பார்த்தனீரோ என்று கேட்டிருக்கவேண்டும். ஆனால் நான் நாகரீகம் கருதி அவ்வாறு கெட்பதை தவிர்த்தேன்.ஆனால் நீங்கள் தற்பொது அதை என்னிடம் கேட்கிறீர்கள்.எனினும் நான் இவ் வரிகளை எழுதுவதையும் இவ்வாறான வரிகளுக்கு பதில் எழுதுவதையும் தவிர்க்கவே விரும்புகிறேன்.

 

/மாக்சியத்தை ஏற்பவன் மாக்சின் எல்லாத் திரரு தத்தங்களையும் ஏற்க வேண்டும் என்பதில் என்ன நியாயம்./


உண்மைதான். ஆனால் மாக்ஸ்ற்கு பெருமை என்னவெனில் அவர் மாபெரும் மாக்சிய தத்துவத்தை தந்தது மட்டுமல்ல அந்த தத்துவத்திற்காக உண்மையாக இறுதிவரை வாழ்ந்தார் என்பதே. எனவே அவர் தனது தத்துவத்திற்கு மாறான திருகுதத்தங்களை செய்ததாக நீங்கள் அறிந்திருந்தால் அதனை தாராளமாக இங்கு முன்வையுங்கள்.

 

/தென்னாலிராமன் குதிரை வித்த கதையாக அல்லவா இருக்கிறது./ இநதக் கதை மட்டுமல்ல இன்னும் நிறைய கதை எனக்கும் தெரியும். ஆனால் அவை இங்கு நாம் விவாதிக்கும் விடயத்திற்கு தேவையில்லை என்று கருதுகிறேன்.

 

/குழந்தை யாருக்குப் பிறந்நதது எனபதை சோபாசக்தி தான் படித்தவற்றிலிருந்து கூறுகிறார்./
அதைத்தான் நானும் அவரிடம் கேட்கிறேன். அவர் தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை முன்வைக்கட்டும்.

 

/நாம் கூறும் அத்தனைக்கும் வீடியோ எவிடன்ஸ் கேட்கும் பாலன் மாக்ஸ்சே வந்து சொன்னாலும் விடமாட்டீங்க போல./
நான் வீடியோ எவிடன்ஸ் கேட்கவில்லை. நீங்கள் என் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் போலும்.

 

/வேலைக்காரிக்கும் மாக்ஸ’சும் தொடர்பு இருந்துதா இல்லை எங்கல்ஸ் விளையாட்டைக் காட்டினாரா என்பது யாருக்கும் தெரியாது/


இதைத்தான் நானும் கூறுகிறேன். என் கருத்துக்கு ஆதரவாக எழுதியமைக்கு நன்றிகள். ஆனால் மாக்ஸ்தான் பிள்ளைக்கு தந்தை என்று சோபா சக்தி உறுதியாக கூறுகிறார். அதனால்தான் நான் அதற்குரிய ஆதாரத்தை கேட்டேன்.

 

/சோபா சக்தி ஏதோ எனக்குப் பிற்நத பிள்ளைக்கு அப்பன் மாக்ஸ்தான் என்று வம்புக்கிழுத்தமாதிரி ஏன் பாலன் அடம்பிடிக்கிறீர்./


சோபாசக்தியே எனக்கு பதில் தருவதில் தனக்கு எந்த சங்கடமும் இல்லை என்று தெரிவித்திருக்கும்போது நீங்கள் எதற்காக நான் அடம் பிடிப்பதாக எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை.

 

ஈழமாறன் அவர்களே உங்கள் பின்னுட்டத்தை படிக்கும்போது மாக்ஸ்தான் வேலைக்காரிக்கு பிறந்த குழந்தையின் தந்தை என்ற விடயம் பற்றி மட்டுமல்லாது மாக்ஸ் திருகுதாளங்கள் பற்றிய விபரங்களும் தங்களிடம் இருப்பதாக தெரிகிறது. அவற்றை நீங்கள் ஏன் இங்கு முன்வைக்கக்கூடாது?

 

tholar balan on March 8, 2010 10:58 am

ஜெயராசா அவர்களுக்கு: தங்களின் பின்னூட்டத்தில் எனது பெயர் குறிப்பிடவில்லையாயினும் தாங்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக நான் சில அபிப்பிராயங்களை கூற விரும்புகிறேன்.


/எங்களுடைய பிரச்சனை மாக்ஸ்க்கு பிள்ளை பிறந்ததா இல்லையா என்பதல்ல. அங்கு இருக்கும் எம் பிள்ளைகளுக்கு பால் இல்லாமல் அழக்கூடாது என்பதுதான்./
/சேற்று நிலத்தில் கால் நிறைய புண்களுடன் 3 மணிநேரம் மீன்கடிக்க நின்ற வேதனை உங்களுக்குத் தெரியாது./

 

உங்களுடைய இந்த உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
கஸ்டப்படும் ஏழை மக்கள் பற்றியும் அவர்களுடைய விடுதலை பற்றியும் விஞ்ஞான பூர்வமாக எமக்கு போதிக்கும் ஒரே தத்துவம் மாக்சியம் மட்டுமே.அதனால்தான் தங்கள் அழிவை போதிக்கும் மாக்சியத்தை இல்லாதொழிக்க முதலாளித்துவம் பல வருடங்களாக இரவு பகலாக முயற்சிசெய்து வருகிறது.மாக்சியம் விஞ்ஞான பூர்வமாக நிறுவப்பட்ட தத்துவமாக இருப்பதால் அதனை நேரிடையாக எதிர்கொள்ள முடியாமல் மறைமுகமாக அழிக்க முனைகிறார்கள்.அதன் ஒரு அங்கமே தாமும் மாக்சியவாதிகள் என்று கூறிக்கொண்டு மாக்சிய ஆசான்களின் மீது ஆதாரமில்லாத அவதூறுகளை அள்ளி வீசும் திரிபுவாதமாகும்.இவர்கள் மாக்சிய ஆசான்களின் மீது அவதூறு பொழிந்து அவர்களை தவறானவர்களாக காட்டி அதன்மூலம் இந்த தவறானவர்களால் முன்வைக்கப்பட்டதே மாக்சியம் என்று நிறுவ முனைகின்றனர்.அதன் மூலம் மாக்சிய தத்துவத்தையும் மாக்சிய பேராட்டத்தையும் ஒழித்துவிட கனவு காண்கின்றனர்.

 

எனவே ஏழை மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக நாம் விரும்புவது உண்மை என்றால் அந்த ஏழை மக்களின் நலனுக்காக முன்வைக்கப்பட்ட மாக்சியம் அவசியமாகிறது.மாக்சியம் அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டால் அந்த மாக்சியத்தை அழிக்கும் வண்ணம் மாக்சிய ஆசாசான்கள் மீது பொழியப்படும் அவதூறுகளை துடைத்தெறிவது கடமையாகிறது.அந்த அடிப்படையிலே அதாவது உங்களின் உணர்வின் அடிப்படையிலே நான் மாக்ஸ் மீது சோபாசக்தியால் முன்வைக்கப்பட்ட அவதூறுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகிறேன்.

 

எனவே இனியும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் அது சோபாசக்தி போன்றவர்களின் நோக்கங்களுக்கே மறைமுகமாக ஆதரவாக அமைந்து வடும் என்பதை உணர்ந்து இனி அதற்கு இடங்கொடுக்காது என்னுடன் சேர்ந்து மாக்சிய ஆசான்கள் மீது ஆதாரம் இல்லாமல் செய்யும் அவதூறுகளை எதிர்த்து ஏழை மக்களின் விடுதலைக்கு தொடர்ந்தும் பாடுபட உதவுமாறு தங்களை அன்புடனும் தயவுடனும் கேட்டுக்கொள்கிறேன்

 

tholar balan on March 8, 2010 11:44 am

ரோமன்! உங்கள் கோபம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் எங்களை இவர்கள் நக்கல் நையாண்டி பண்ணுகிறார்கள் என்பதல்ல. மாறாக இவர்கள் ஆதாரம் இன்றி மாக்சிய ஆசான்கள் மீது அவதூறு பொழிகிறார்கள் என்பதை வாசகர்கள் மத்தியில் நிருபித்துக் காட்டுவதே. நாம் விவாதத்திற்கு சம்பந்தமில்லாத விடயங்களை சுட்டிக்காட்டினால் அவர்கள் அதையே சாக்காக வைத்து விவாதத்தை திசைதிருப்பி விடக்கூடிய அபாயம் உள்ளது. (மேலும் ஈழமாறன் தனது வழக்கமான பாணியில் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.அதனை நான் அவருடைய மற்ற எழுத்துக்கள் போன்று ரசித்துள்ளேனேயொழிய கோபப்படவில்லை).

 

தோழர் சண்முகதாசன் தனது “கால்மாக்சின் வாழ்வும் போதனைகளும்” என்னும் நுhலில் (பக்-5) கெலன் டெமூத் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.


“மாக்சின் வாழ்வில் முக்கியமானதொரு பங்கு வகித்த இன்னொருவர் லென்சென் என பிரியமாக அழைக்கப்பட்ட கெலன் டெமூத் ஆவார். திருமதி ஜென்னி மாக்ஸ்ற்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும் போது அவருக்கு பணியாற்ற வந்த லென்சன் அதன்பின் அவரை எல்லா இடத்தும் தொடர்ந்து சென்றார். திருமதி மாக்ஸ் வீட்டின் எஜமானி என்றால் லென்சென் வீட்டின் சர்வாதிகாரி என்பார்கள். மார்க்ஸ் இன் சாவிற்கு பின்னர் அவர் தனது சாவு வரை எங்கெல்ஸ்சைக் கவனித்துக் கொண்டார். அவரது சடலம் மாக்ஸினதும் அவரது மனைவினதிற்கும் அருகாகப் புதைக்கப்பட்டுள்ளது. அவருடைய மரணச்சடங்கின்போது எங்கெல்ஸ் கூறியதாவது “சிரமமானதும் சிக்கலானதுமான கட்சி விவகாரங்கள் பற்றி அவரது ஆலோசனையை மாக்ஸ் கேட்பார். என்னைப் பொறுத்தவரையில் மாக்ஸின் சாவிற்கு பின்னர் நான் செய்ய இயலுமாயிருந்த வேலைகட்கு எல்லாம் மாக்ஸின் சாவின் பின்பு என் வீட்டில் வசிக்க வந்து என்னைக் கெளரவித்து தனது இருப்பால் என் வீட்டிற்குச் சூரிய ஒளியும் ஆரோக்கியமும் கொண்டுவந்த அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.”

 

தோழர் சண்முகதாசன் இவ்வாறு ஏழுதிய இந்த நுhலை லண்டனில் “தேசம்” சார்பாக முன்னின்று வெளியிட்டவன் நான். இதனை இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சோபாசக்தி தனது பின்னூட்டத்தில் “தோழர் பாலன் ! கெலன் டெமூத் பற்றி இதுவரை நீங்கள் அறியாதவராக இருந்தால்….”என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியாயின் தோழன் சண்முகதாசன் நுhலில் என்ன எழுதியிருக்கிறார் என்பதை வாசிக்காமலே நான் புத்தகத்தை வெளியிட்டிருப்பேனா? எனது வாசிப்பு பற்றிய சோபா சக்தியின் இந்த மதிப்பீடு குறித்து நான் எதுவும் அவருக்கான பதிலில் குறிப்பிடாமைக்கு காரணம் எனது முழு நோக்கமும் அவர் ஆதாரம் இன்றி கால்மாகஸ் மீது அவதூறு பொழிகிறார் என்பதை நிருபிப்பதே. எனவே தயவு செய்து விவாதம் திசை திரும்பிச் செல்ல இடம் அளிக்கா வண்ணம் நாம் எமது கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்போம்.

 

நன்றி : தேசம்நெற் வாசகர் தோழர் பாலன்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்