Language Selection

புலிகள் கொண்டிருந்த "தன்னியல்புவாதம்" தான், படுகொலை அரசியலே ஒழிய. அவர்களின் சுரண்டும் வர்க்க அரசியல்ல என்கின்றனர். தேசியத்தை வர்க்கம் மூலம் அணுகுவதே தவறானது, அதன் தோல்வியை "தன்னியல்புவாதம்" மூலமே அணுக வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இன்று "மே18" காரர் திட்டமிட்டு "வியூகம்" போட்டுச் சொல்லுகின்றனர். புலி மண்ணைக் கவ்விய நாளை, தங்கள் இயக்கத்தின் பெயராக கொண்டு, தாங்கள் "தன்னியல்புவாதம்" அல்லாத வர்க்கமற்ற வகையில் தொடர்ந்து தேசியத்தை முன்னெடுப்பதன் மூலம், வெற்றிகரமாக தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும் என்கின்றனர்.

 

நாம் சென்ற தொடரில் "தன்னியல்புவாதம்" என்ற கோட்பாடு மூலம், பிற்போக்கான சுரண்டும் வர்க்க தமிழ் தேசியத்தை எப்படி "மே18"காரர்கள் நியாயப்படுத்துகின்றனர் என்ற அரசியல் சூக்குமத்தைப் பார்த்தோம். சுரண்டும் வர்க்கம் தன்னியல்பு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டதாகவே இயங்குகின்றது என்ற அரசியல் உண்மையை "மே18"காரர்கள் மறுத்து, "தன்னியல்புவாதத்தை" திரித்து மறுப்பதன் மூலம் அது முன்வைக்கும் அரசியல் முடிவுகள் என்ன?

 

1.புலி உள்ளிட்ட இயக்கங்கள் சுரண்டும் வர்க்க அரசியல் அடிப்படையைக் கொண்டு இருக்கவில்லை அல்லது அது அரசியல் ரீதியாக பிரச்சனையாக இருக்கவில்லை என்பதையே  "தன்னியல்புவாதம்" மூலம் கூறுகின்றனர்.

 

2."தன்னியல்புவாதம்" தான் கடந்தகால தோல்விகளுக்கும், சமூக அவலங்களுக்கும் காரணமே ஒழிய, சுரண்டும் வர்க்கம் கொண்டிருந்த வர்க்க அரசியல் அடிப்படைகள் காரணமல்ல என்கின்றனர்.

 

3.ஒடுக்கப்பட்ட இனங்களை, ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் தலைமை தாங்கினவே ஒழிய, ஒடுக்கும் வர்க்கம் தலைமை தாங்கவில்லை என்ற திரிபை நுட்பமாக "தன்னியல்புவாதம்" மூலம் புகுத்த முடிகின்றது. இதை இப்படி புகுத்தி மே 18 முதல் புலிக்கு "மே18" மூலம் தலைமை தாங்க முனைகின்றனர்.

 

4.ஒடுக்கும் வர்க்கம் தன் பிற்போக்கான வர்க்க தேசியம் மூலம், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தேசியத்தை ஒடுக்கியதை "தன்னியல்புவாதம்" மூலம் "வியூகம்" போட்டு மறுக்கின்றனர்.

 

இப்படிக் கடந்தகாலத்தில் சுரண்டும் வர்க்கம் முன்வைத்த பிற்போக்கான தேசியத்தை, அதன் வர்க்க அரசியல் அடிதளத்தையும் பாதுகாக்க, அந்த வர்க்கம் இயல்பாக கொண்டிருந்த "தன்னியல்புவாதத்தை" மட்டும் பிரித்தெடுத்து அதையே தோல்விக்கான காரணம் என்கின்றனர்.

 

இப்படி வர்க்கத்தை "தன்னியல்புவாதத்தில்" இருந்து நீக்கி, திரித்துக் கூறுவதன் மூலம்,

 

1.புலித்தேசியத்தை அதன் வர்க்க அடித்தளத்துடன் பாதுகாத்து, அதை தங்கள் தலைமையில் முன்னெடுக்க முனைகின்றனர். இது தான் "மே18" இயக்கமாகின்றது. அதற்கு எற்ப சூழ்ச்சியான சூக்குமான அரசியலை "வியூகம்" போடுகின்றனர்.

 

2.கடந்தகாலத்தில் புலிகள் வலதுசாரியம் அல்லாத அனைத்தையும் அழித்தது சரி என்கின்றனர். அதை இவாகள் தங்கள் வார்த்தையில் "…அந்த கற்கால கோடரிகள் ஒரு நவீன யுத்தத்தில் எதற்கும் பயன்படாதவையாக இருந்தமை தெரிகிறது." என்கின்றனர். இங்கு "கற்கால கோடரிகள்" என்பது இவர்கள்" எதற்கும் பயன்படாத" மார்க்சியத்தைத்தான். இது பலிகள் நடத்தி "நவீன யுத்தத்தில்" எதற்கு பயன்படதாக கூறுகினர். மாhக்சியம் மூலம் எதிர்த்தவர்களை கொன்றது சரி, எனென்றால்  ".. நவீன யுத்தத்தில் எதற்கும் பயன்படாதவையாக இருந்தமை தெரிகிறது." என்கின்றனர்.

 

3.கடந்தகாலத்தில் இந்த வலதுசாரிய வர்க்க அரசியலை எதிர்த்து நடத்தி போராட்டத்தையும், அந்தத் தியாகத்தையும், அது கொண்டிருந்த அரசியலையும், எதுவுமற்றதாக "எதற்கும் பயன்படாதவையாக" காட்டி "மே18" தன் "வியூகம்" மூலம் அதைத் தூற்றி நிற்கின்றனர்.

 

4. "தன்னியல்புவாதம்" மூலம் மட்டும்தான், கடந்த எம் வரலாற்றை பகுத்தாய முடியும், வர்க்க அடிப்படையில் அல்ல என்கின்றனர். வர்க்க அடிப்படைகள் "..நவீன யுத்தத்தில் எதற்கும் பயன்படாத" "கற்கால கோடரிகள்" என்கின்றனர்.

 

5. பிற்போக்கான வர்க்க  தேசிய அடிப்படையை முன்னிறுத்த, முற்போக்கு வர்க்க தேசிய அடிப்படையை மறுக்கின்றனர். சொந்த மூலதனத்தை, சொந்த மொழியை, சொந்த பண்பாட்டையும், சொந்த மண்ணில் பாதுகாக்கும் போராட்டம்தான், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட இனத்தில் தேசியம் என்பதை மறுக்கின்றனர். இதை ஸ்ராலின் கோட்பாடு என்றும், ஸ்ராலின் மீதான அவதூறு மூலம் செய்கின்றனர். அதை "வியூகம்" போட்டு எப்படிச் சொல்லுகின்றனர் என்று பாருங்கள் "மார்க்சியத்தின் வரலாற்றில் ஸ்டாலின் மிகவும் ஒரு சர்ச்சைக்குரிய தலைவராவார். அவரது கோட்பாட்டு நிலைப்பாடுகள் அத்தனை ஆரோக்கியமானவையாக இருந்ததில்லை…. ஸ்டாலினது வரையறையானது மிகவும் பற்றாக்குறையானது என்று பல மார்க்சியவாதிகள் தொடர்ந்தும் விமர்சித்து வந்துள்ளார்கள்." இப்படி கூறித்தான், சுரண்டும் வர்க்கத்தின் பிற்போக்கான தேசியத்தை முன்னிறுத்தி பாதுகாக்கின்றனர். அதாவது ஒடுக்கப்பட்ட இனத்தை, ஒடுக்கும் சுரண்டும் வர்க்கம் பலாத்காரமாக தலைமை தாங்கியதை ஆதரித்து நியாயப்படுத்துகின்றனர். இதில் இருந்த "தன்னியல்புவாதம்" தோல்விக்கு காரணம் என்று கூறி, அதைப் பாதுகாக்க "வியூகம்" போடுகின்றனர். பிற்போக்கு தேசியம் மே18 அன்று மண்ணை முத்தமிட்டு மடிய, அதன் பெயரில் மீண்டும் இயக்கம் கட்டுகின்றனர். 

 

இங்கு "ஸ்டாலினது வரையறையானது மிகவும் பற்றாக்குறையானது என்று பல மார்க்சியவாதிகள்" கூறுவதாக கூறி, சுரண்டும் வர்க்க புலித் தேசியத்தை ஓட்ட லாடமடிக்கின்றனர். சரி யார் அந்த "பல மார்க்சியவாதிகள்"? அதை ஒரு நாளும் சொல்லப் போவதில்லை.

 

இப்படி ஸ்டாலினை மட்டுமா சொல்லுகின்றனர்! இல்லை, இந்தப் பிற்போக்கு சுரண்டும் வர்க்க தமிழ் தேசியத்தை எதிர்த்துப் போராடியதையும் கூடத்தான் மறுதலிக்கின்றனர். "இப்போது திரும்பிப்பார்த்தால் அந்தக் கற்கால கோடரிகள் ஒரு நவீன யுத்தத்தில் எதற்கும் பயன்படாதவையாக இருந்தமை தெரிகிறது." என்று கூறி, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக சுரண்டப்பட்ட வர்க்கங்கள் நடத்திய கடந்தகால போராட்டத்தை மறுதலிக்கின்றனர். இதைத்தான் புலிகள் முதல் ஈரோஸ்; வரை தங்கள் துப்பாக்கிகள் மூலம் படுகொலைகள்    மூலம் செய்தனர். இதன் பின் இருந்த வர்க்க அரசியலை மூடிமறைக்க "மே18" காரர் அதை "தன்னியல்புவாதம்" என்கின்றனர்.  

 

தொடரும்

 

"வியூகம்" முன்னுரை : "மே18" இயக்கம் "தன்னியல்புவாதம்" மூலம் முன்மொழியும் வர்க்கமற்ற அரசியல் (பகுதி 01)

 

சுரண்டும் வர்க்கம் எப்போதும் "தன்னியல்புவாதம்" கொண்டது. இதை மறுப்பது திரிபுவாதமாகும். (வியூகம் முன்னுரை மீது : பகுதி 02 

 

 

பி.இரயாகரன்
14.01.2010