1984-1985 யில் புளாட் இயக்கம் அரசியல் ரீதியாக சிதைந்து, உட்படுகொலைகள் மூலம் அது உளுத்து வந்தது. அசோக் போன்றவர்கள் உமாமகேஸ்வரன் என்ற கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து முதுகில் குத்த, தீப்பொறி குழு உயிர் தப்பியோடியது. அவர்களைக் கொல்ல அசோக் உள்ளிட்ட மத்திய குழு, நாயாக அலைந்தது.

இந்த விடையங்கள் பற்றி அசோக் வாய் திறந்தது கிடையாது. இப்படிப்பட்ட அரசியல் நடத்தைகளால் தான்,  முன்னாள் அந்த கொலை இயக்கம் முதல் டக்ளஸ் வரைக்கும் இவர் புறோக்கராக இருக்க முடிகின்றது. இதைப்பற்றி பேசாத, நேர்மையற்ற பொறுக்கித்தனமே எதிர்ப்புரட்சி கும்பலுடனான குழையடிப்பு அரசியலாகும்.

 

உதாரணமாக பாருங்கள். செல்வன் அகிலன் ஏன் கொல்லப்பட்டனர்? இவர்கள் தீப்பொறி வெளியேற்றத்துக்கு முன்னம் கொல்லப்பட்டவர்கள். இதில் செல்வன் மத்திய குழு உறுப்பினர். ஏன் கொல்லப்பட்டான்? ஆச்சரியமான, ஆனால் வக்கிரமான பல விடையங்கள் இதில்  உண்டு. சக மத்தியகுழு உறுப்பினர் கொல்லப்பட்டது ஏன் என்று இதுவரை காலமும் அசோக் பேசியது கிடையாது. இதை யாரும் கேட்டால் சிவசேகரம் வம்புப் பாட்டு பாடுவார். புதிய ஜனநாயகக் கட்சி சுயவிமர்சனம் என்றால் என்ன என்று வில்லங்குத்தனம் பண்ணுவர்.

 

செல்வன் ஏன் கொல்லப்பட்டான் என்பதை அசோக் சொல்லப் போவதில்லை. அவர் இது போன்று பல கொலைகள் பற்றி எதையும் சொன்னது கிடையாது, சொல்லப் போவதும் கிடையாது. இது தான் இவர்களின் அரசியல். செல்வன் மத்திய குழுவில் நடத்திய ஒரு விவாதம் தான் படுகொலைக்கு காரணம். அசோக்கின் ஆயுட்கால நண்பராக தோழராக இருந்து மடிந்த சிவராமை மத்திய குழு உறுப்பினராக்க கோரிய விவாதம் ஒன்றில், அதை மறுத்து முறியடித்தவன் தான் செல்வன். சிவராமின் பொறுக்கித்தனமான அரசியல் மற்றும் நடத்தைகளை அம்பலப்படுத்தி, மத்திய குழுவிற்கான தெரிவிற்கு உள்ளாகாத வண்ணம் செல்வன் போராடினான்.

 

சிவராமை மத்திய குழுவிற்கு கொண்டு வருவதில் அசோக்குக்கு இருந்த அக்கறை, தோழமையுடன் கூடிய உறவாக ஆயுள் வரை தொடர்ந்தது. மத்திய குழுவிற்கு செல்வனால் தெரிவு செய்வது தடுக்கப்பட்டதால், சிவராம் அவனையும் அவனின் நன்பனையும் திட்டமிட்டு கொன்றனர். இதன் பின் அசோக் உள்ளிட்ட பலரின் நலன் இருந்தது. செல்வன் சிவராமை மத்திய குழுவில் சேர்ப்பதற்கு எதிராக விவாதித்த கூட்டத்தில் அசோக் கலந்து கொண்டவர். இன்று வரை அதை பேசாத அசோக், அந்த கொலை பற்றி மகிழ்ச்சி கொண்டதுடன், அதை முன்னின்று செய்தவனுடன் அதை கண்டிக்காத வெறுக்காத அரசியலே ஆயுள் வரை தொடர்ந்தது.

 

இப்படி பல நூறு கொலைகள் பற்றிய விபரங்களையும், அதை செய்தவர்களையும் மூடிமறைத்து இன்று "இனியொரு"வில் தொடங்கி "வியூகம்" வரை திட்டமிடுகின்றனர். யாரை எப்படி அரசியல் ரீதியாக போட்டுத்தள்ளுவது என்பதே இதன் அரசியல் அடித்தளம்.

 

எம்மை இவர்களுடன் கூடிக் குழையடிக்கக் கோரும் இவர்கள், செல்வனுக்கு நடந்தது எமக்கு நடக்காது என்பதற்குரிய அரசியல் அடிப்படையை மறுக்கின்றனர். கடந்த காலத்தைப் பற்றி சுயவிமர்சனத்தையோ விமர்சனத்தையோ கேட்பதையும் மறுக்கின்றனர்.  

  

தீப்பொறி வெளியேறியதால், அவர்களை போட்டுத்தள்ள முனைந்தனர். யாழில் பொறுப்பாக இருந்த அசோக் இதற்கு அமைய செயல்பட்டவர். அசோக்கிற்கு எடுபிடியாக விழுந்தடித்து  எழுதும் ஜென்னி என்று அழைக்கப்பட்டவர், கண்ட இடத்தில் தீப்பொறியை போட்டுத்தள்ள கைத்துப்பாக்கியுடன் யாழ் வீதிகளில் திரிந்தவர். இப்படி இவர்கள் உறவு தொடர்ந்த அதே அரசியல் தளத்தில் தான், றோவின் புதிய வேலைத்திட்டத்தையும் ஜென்னி அசோக்கிடம் கையளித்தவர்.

 

இப்படி றோவின் ஈ.என்.டி.எல்.எவ் திட்டத்தை அசோக் தளத்தில் அமுலுக்கு கொண்டு வந்தார். ஏன் றோ புதிய அமைப்பை உருவாக்கியது? தீப்பொறி வெளியேற்றம், அதைத் தொடர்ந்து சந்ததியார் படுகொலை என்பனவற்றைத் தொடர்ந்து அமைப்பு சிதையத் தொடங்கியது. புதிய புரட்சிகரப் பிரிவுகள் பல உருவாகி வந்தது. தளத்தில் பாரிய பிளவாக மாறி, தளமாக நாட்டை புரட்சிகர பிரிவு முன்னெடுத்தது. இந்த புரட்சிகர பிரிவுகளின் வளர்ச்சி புளட்டில் இருந்து உருவாகுவதை தடுக்க, முன்றாவது பிளவை றோ திட்டமிட்டு முள்தள்ளியது. இதன் ஒரு முன்னணியான அரசியல் ரீதியான "மார்க்சிய" பிரதிநிதிதான் அசோக். றோ கொலைகாரர்களுக்குள் பிளவை உருவாக்கி மட்டும் ஈ.என்.டி.எல்.எவ் உருவாக்கவில்லை. மாறாக "மார்க்சிய" அரசியல் பேசுவோரையும் கொண்டு தான் ஈ.என்.டி.எல்.எவ் வை உருவாக்கியது.

 

இதன் பிரதிநிதிகளில் ஒருவர் தான் அசோக். அண்மைக்காலத்தில் சுவிஸ்சில் வைத்து மரணமான ஈஸ்வரன் மற்றொருவர். அவருக்கு அஞ்சலி செலுத்துமளவுக்கு அசோக் அரசியல் நீடித்தது.

 

தள மாநாடு அசோக் போன்றவர்களுக்கு வெளியில், உருவாக்கப்பட்டது. ஐ.பி என்று அழைக்கப்படுபவரினால் இது முன்னின்று நடத்தப்பட்டது. இங்கு என்ன பேசுவது என்பது உட்பட பலவற்றை ஐ.பி என்னுடன் தொடர்ச்சியாக பேசி வந்தவர். சரிநிகர் சிவகுமார் இதை நன்கு அறிவார்;. அநேகமாக இருவரும் ஒன்றாக என்னிடம் வந்து போனவர்கள்.

 

இப்படியிருக்க ஏதோ அசோக் அதை முன்னின்று நடத்தியதாக கூறுவது கடைந்தெடுத்த பொய். அசோக் புளாட்டின் அரசியலை முன்னெடுத்தபடி, றோவின் திட்டத்துக்கு அமைய ஈ.என்.டி.எல்.எவ் என்ற அமைப்குக்குரிய சதி அரசியலை தளமாநாட்டுக்கு எதிராக செய்து வந்தவர்.

 

இப்படி தள மாநாட்டுக்கு எதிராக இரண்;டு குழுக்கள் (உமா மற்றும் ராஜன்) இயங்கின. இது தளமாநாட்டில் தன்னை ஒரு இரகசிய அணியாக சதிக் குழுவாக ஒருங்கிணைத்துக் கொண்டது.

 

இந்தத் தளக்கமிட்டி பின்தளத்தில் பின்தள மாநாட்டை நடத்த முனைந்த போது, இரு குழுவும் வெளிப்படையாக எதிர்ப்புரட்சி அரயலுடன் வெளிவந்தது. அசோக் றோவின் ஈ.என்.டி.எல்.எவ் முன்னணி உறுப்பினராக வெளிவந்தார். புரட்சிகர தளக்கமிட்டி கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தலைமறைவாகியது.

 

அப்படி றோ ஈ.என்.டி.எல்.எவ் ஊடாக புரட்சிகர பிரிவுகளின் இணைவை தகர்த்து எறிந்தது. இதன் பிரதிநிதிதான் அசோக். பின்னால் இந்தியா இலங்கையை ஆக்கிரமித்த போது, ஈ.என்.டி.எல்.எவ் பாரிய படுகொலைகளை மண்ணில் நடத்தியது. இது செய்த அட்டகாசம் பல. அசோக் உடன் ஈ.என்.டி.எல்.எவ் உறவு இன்று வரை நீடித்தது. nஐன்னி, ராம்ராஜ் (ரீ.பீ..சீ) ஈ.என்.டி.எல்.எவ் இன்று கூட ஐரோப்பிய முன்னணி பிரதிநிதிகள். அசோக்கின் அரசியல் கூட்டாளிகள்.

 

றோ தான் உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் மூலம், புரட்சிகர பிரிவு உருவாகுவதை தடுத்து நிறுத்தியது. இதன் முன்னனி பிரதிநிதியான அசோக் இது பற்றி எதைத்தான் கதைத்துள்ளார். சிவசேகரம் பாட்டுப்பாடி இதை பாதுகாக்கின்றார். ஐயர் இதைக் குழுவாதம் என்று கூறி, இதை மூட்டைகட்டி வைக்க முனைகின்றார். புதிய ஜனநாயகக் கட்சி சுயவிமர்சனம் என்றால் என்ன என்று, அசோக்கிற்கு வில்லுப்பாட்டு பாடுகின்றனர். ம.க.இ.க ஆதரவாளர்கள் சிலர் இதை பேசுவது,  கலைப்பு வாதம் என்கின்றனர்.

 

கடந்த காலத்தில் நடந்தது, எதிர்காலத்தில் இவர்களால் நிகழாது என்பதை உறுதி செய்ய, இவர்கள் அதற்கு எதிராக விமர்சனத்தையோ சுயவிமர்சனத்தையோ செய்தது கிடையாது. இப்படி ஈடுபட்டவர்கள், இன்னமும் ஈடுபட்ட கொண்டிருக்கின்றவர்களுடன் அரசியல் உறவு கொண்டு அரசியல் நடத்துகின்றனர்.

 

கடந்த தங்கள் வரலாற்றை இல்லை என்று சொல்ல, ஆவணங்களைக் இல்லாததாக்கினர். அவர்கள் ஆவணங்களைக் கூட நாங்கள் வெளியிட்டு அம்பலப்படுத்தும் நிலைக்குள், அவர்கள் வரலாற்றை புதைக்கின்றனர். தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை மட்டுமல்ல, புரட்சிகர வரலாற்றையும் சேர்த்துப்  புதைக்கின்றனர்.

 

தொடரும்


பி.இரயாகரன்
07.12.2009