நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும்.

1.முதல் கவிதை:
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்

என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்

எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்

அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
——————————
2. இரண்டாவது கவிதை:

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

-லீனா மணிமேகலை


கவிதை எழுதியோ, கோட்ம்பாக்கத்தில் புகுந்தோ, என்ன செய்தாவது எப்படியாவது பிரபலமாக விரும்பும் லீனா மணிமேகலை என்னும் பெண் இப்படியான இரண்டு கவிதைகளை தனது பிளாக்கில் எழுதியிருந்தார். அந்தக் கவிதை சொல்ல வருகிற கருத்து அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி இதுதான். மத்திய கிழக்கில் அமெரிக்கா வீசிக் கொண்டிருக்கும் குண்டுகளுக்கும்., வன்னியில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய கொலைகளுக்கும், ஆபகானில், பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இன்னும் இன்னும் உலகில் ஏகாதிபத்தியங்கள் மக்கள் மீது தொடுத்துள்ள போர்களுக்கும் இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண் குறியின் வெறி….. தவிரவும் மதவாதிகள், பாசிஸ்டுகள், உழைக்கும் ஏழை மக்கள், புரட்சிகர சக்திகள், என எல்லோரையும் ஒரே கூண்டில் அடைத்து அத்தனை பேரையும் ஆண்குறியின் வடிவமாகக் காணும் மணிமேகலை, மயங்கி மல்லாந்து கிடந்தபடியே காறித்துப்புகிறார். கவிதை தெறிக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு தமிழில் பாலியல் கவிதைகளை பெண்கள் எழுதுவதில்லை என்ற மனக்குறையை சிலஅறிவுஜீவிகள் வெளியிட்டிருந்தனர். 60, 70 களில் சரோஜாதேவி என்ற பெயரில் பலான இலக்கியங்களைப் படைத்து வந்த படைப்பாளி ஒரு ஆணாகத்தான் இருக்கமுடியும் என்று உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவை அப்போது அறிமுகமாகவில்லை என்பது மட்டுமல்ல, இந்த அறிவுஜீவிகளும் அப்போது ( நடுத்தர) வயதுக்கு வரவில்லை. பிறகு ஐரோப்பிய கலகத் தத்துவங்களால் கிளர்ச்சியூட்டப்பட்ட நடுத்தரவர்க்க கலகக் காரர்களின் குழு “பலான கதைகளையும் கவிதைகளையும் பெண்களே எழுதினால் எப்படி இருக்கும் என்று தங்களது நடுத்தர வயதில் ஆசைப்பட்டது. இந்த எழுத்தியக்கத்தையும் தொடங்கி வைத்தது. தம்மை பிரபலப்படுத்திக் கொள்ள வேறெந்த தனித்திறமையும் வாய்க்கப்பெறாத, மாதர்குல மாணிக்கங்களில் சிலர், புணர்ச்சி இலக்கியம் என்ற இந்தப் புதிய ஜெனரை (Genre) படைக்கத் தொடங்கினர்.

தனியார்மயப் புரட்சி, நுகர்வியப் புரட்சி, பாலியல் புரட்சி ஆகிய புரட்சிகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து அட்டைப்படத்தில் செய்துவரும் இந்தியா டுடே எனும் பூணூல் அணியாத என்.ஆர்.ஐ இந்து தேசியப்பத்திரிகை, இத்தகைய கவிதாயினிகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவே, லீனா மணிமேகலை போன்றோர் ஆடத்தொடங்கினர். மேலை நாடுகளில் கால்பந்து ஆட்டத்தின் நடுவே ஆடையை அவிழ்த்துப் போட்டு ஓடி, கலகம் செய்து, பிரபலமாகும் பரிதாபத்துக்குரிய பைத்தியங்கைப் போல, ஆணுறுப்பு, பெண் உறுப்பு போன்றவற்றை ‘பச்சையாக’ எழுதுவதனால் உலகமே தங்களையும் தங்கள் எழுத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவதைப் போல இவர்கள்  கற்பித்துக் கொண்டனர். இதற்கு ஆமாம் போடுவதற்கு சில பன்னாடைகள். இந்த நவீன ரசனைக்கு ஒரு ரசிகர் கூட்டம். இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.

லீனாவின் மேற்படி கவிதையில் உலகப் புரட்சியாளர்கள், பிற்போக்கு வாதிகள், மதவாதிகள், லும்பன்கள் போன்ற அனைவரது குறிகளும் இடம்பெறுகின்றன. சீரியல் இயக்குநர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களது குறிகள் மட்டும் இடம்பெறவில்லை. மேலும்  ஆண்குறி வரிசையில் லீனாவின் கணவரான சி.ஜெரால்டின் பெயரும் இடம்பெறவில்லை. காரணம் புனிதமா, அல்லது வேறு ஏதேனும் புதிரா என்று நமக்குத் தெரியாது.

பாலியல் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் கொண்ட, ஆனால் கடையில் அதைக் கேட்டு வாங்கும் தைரியம் இல்லாத, இணையத்தில் பலான சைட்களை மேயும் ஆசை கொண்ட, ஆனால் மனைவியிடமோ, பெற்றோரிடமோ சிக்கிக் கொள்வோம் என்ற அச்சமும் கொண்ட “ஆண்குறிகளுக்கு”  தீனி போடுவதுதான்  லீனாவின் நோக்கம் என்று தெரிகிறது. இத்தகைய கோழைகளின் சந்தையை சார்ந்திருக்காமல், ஷகிலா ரசிகர்கள் போன்ற தைரியசாலிகளை லீனா நம்பலாம். ஷகிலா பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து கொள்ளலாம். லீனாவின் தைரியத்துக்கு அதுதான் பொருத்தமான இடம்.

லீனா எழுதியுள்ள இந்தக் கவிதையை ஓபாமாவோ, கொலைகாரன் ராஜபட்சேவோ பார்த்தால் லீனாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். அப்படியே ஆண்குறி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஒரு மில்லியன் டாலரும் கூட கொடுக்கலாம். காரணம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பயங்கரவாதம் உலகெங்கும் நடத்தும் ரத்த வெறியாட்டத்தை அந்த ரத்தக் குளியலில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைகளை, வன்னியில் கொல்லப்பட்ட ஐமப்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்களின் படுகொலையை மறைத்து அப்படுகொலைகளை ஆப்ட்ரால் ஒரு ஆண் குறி பிரச்சனை என்று எழுதும் லீனாவை ராஜபட்சேவும், ஓபாமாவும் கொண்டாடாமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியோடு கட்டுரையைத் துவங்குகிறோம்.

ஆண்குறி கவிதைகள் போக லீனா தற்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தோம். அவர் செங்கடல் என்றொரு ஆவணப்படமோ, திரைப்படமோ எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்தப் படப்பிலில் கலந்து கொள்ள இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி ராமேஸ்வரம் வந்திருப்பதாகவும், செங்கடல் குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக ராமேஸ்வரத்தில் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

அந்த நேரத்தில்தான் தமிழ் மக்களின் ஆண் குறியான தினத்தந்தி நாளிதழில் அந்தச் செய்தியை படிக்க நேர்ந்தது. செய்தி இதுதான். வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பல நாள் ஊதியத்தை கொடுக்க மறுத்த லீனா தலைமையிலான படப்பிடிப்புக் குழுவினரிடம் தொழிலாளர்கள் ஊதியம் கேட்ட போது அவர்களை அலைக்கழித்தார்களாம். வெறுத்துப் போன தொழிலாளர்கள் படம் பிடித்த ஒளிச்சுருளை அல்லது டேப்பை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பிய போது படப்பிடிப்புக் குழுவினருடன் சேர்ந்து கொண்டு லீனா மணிமேகலை, ஷோபா சக்தி ஆகியோரும் சேர்ந்து அவர்களை தாக்கினார்களாம். கடைசியில் அடிவாங்கியவர்கள் போலீசுக்குப் போக, போலீசும் அடித்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்திருக்கிறது.

உடனே லீனா போலீசிடம் சீறிப்பாய்ந்ததாகவும் அப்படிச் சீறியதை படம் பிடித்த காவல்துறையினரை லீனா தள்ளி விட்டதாகவும் கடைசியில் ஷோபா சக்தி, லீனா ஆகியோர் ஸ்டேசனில் இருந்து பத்திரமாக வெளியேறி வந்து விட்டதாகவும் நாம் அறிய முடிகிறது. காவல் நிலையத்தில் மட்டுமல்ல பல இடங்களில் தனது முற்போக்கு முகத்தை காட்ட அஞ்சாதவர் லீனா மணிமேகலை.

ஒரு முறை லயோலாக் கல்லூரிக்கு ஒரு கூட்டத்திற்காக சென்றிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டோடு சென்ற அவரை மறித்தது ஒரு கிறிஸ்தவ ஆண் குறி. தன்னை மறித்து நின்ற அந்த ஆண் குறிக்கு எதிராக சினந்து வெடித்தார் லீனா. அதையும் உலக மகா பிரச்சினையாக அதாவது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரித்தார் லீனா. அப்போது அவர் காட்டிய ஆவேச எழுச்சிக்கு நிகராக இராமநாராயணன் படங்களில் வரும் அம்மன்களின் வேப்பிலை ஆட்டத்தை மட்டுமே ஒப்பிடமுடியும்.

பல பதிவர்கள், வேலையில்லாத முற்போக்குவாதிகள், விளம்பரங்களுக்காக வேடம்போடும் பெண்ணியவாதிகள் அனைவரும் லீனாவுக்காக திரண்டு வந்தனர். ‘அற்பமான’ உலக அரசியல் பிரச்சினைகளுக்காக சினமடையாதவர்கள் இந்த ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் பிரச்சினைக்காக ஆர்ப்பரித்தது ‘நல்ல’ விசயம்தான். இருக்கட்டும். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கவிதைக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார் லீனா. ( சுகன் வந்து இலங்கை தேசிய கீதம் பாடினார் அல்லவா? அந்த கூட்டம்தான்) அந்தக் கூட்டம் நடத்தப்பட்ட இடம் – முன்னர் லீனாவை  கிறிஸ்தவ ஆண் குறி ஒன்று மறித்து நின்ற அதே இடம்தான்.அந்த கிறித்தவ ஆண்குறிக்கு நேர்ந்த கதி சுகனுக்கு நேரவில்லை. இலங்கை தேசிய கீதத்தில் அத்தகைய ‘குறி’யீடுகள் எதுவும் அவருக்கு தெரியவில்லை போலும்!

சரி லீனாவின் தாக்குதலுக்கு ஆளான சினிமாத் தொழிலாளிகளுடைய  கோடம்பாக்கத்துக்கு வருவோம். சினிமாத் தொழிற்சாலையை (இது தொழிற்சாலையா என்பது வேறு விசயம்) கனவுத் தொழிற்சாலை என்பார்கள். சினிமாக்கனவுகளோடு வரும்  ஆயிரக்கணக்கான இளைஞர்களை மென்று துப்பும் தொழிற்சாலை என்பதனால் இப்படி சொல்ல்லாம். அல்லது கற்பனைக் குதிரையில் இரசிகர்களை ஏற்றி விட்டு, தான் மட்டும் காசில் குறியாக இருக்கும் கயமை காரணமாகவும் இந்தப் பெயர் வாய்த்திருக்கலாம். இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு ஆண் குறி உண்டா, அல்லது தொழிற்சாலையே ஒரு ஆண்குறிதானா என்பது  லீனாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த கனவுத் தொழிற்சாலையை இயக்குவது 24 சங்கங்கள் என்று சொல்வதை விட 24 துறைகள் என்று சொல்லலாம். இந்த 24 துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாக முடியும்.இயக்குநர், கேமிராமேன், டச்சப் பாய், மேக்கப்மேன், டான்ஸ் மாஸ்டர், சாப்பாடு பரிமாறுகிறவர்கள், லைட்ஸ் மேன், புகை போடுகிறவர்கள், மழை பெய்ய வைப்பவர்கள், வெடி குண்டுகள் வைப்பவர்கள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை. இந்த வெவ்வேறு துறைகளுக்கும் தனித்தனி சங்கங்களும் உண்டு.  ஏ.வி. எம். களும், ஷங்கர்களும், ரஜினிகாந்துகளும், கமலஹாசன்களும் தமிழ் மக்களின்  ரத்தத்தை உறிஞ்சிக்  கோலோச்சும் இந்தத் துறையில்  ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று ஒரு பிரிவினரும் உண்டு. சினிமாவில் கதாநாயகியாகும் கனவுகளோடு வந்து அந்த ஆசைகளாலேயே தூண்டிலில் சிக்கிய புழுக்களாக மாறி, ஆண் குறிகளால் எளிதில் சூறையாடப்பட்டு கடைசியில் இரவு நேர பாலியல் தொழிலாளிகளாக காலத்தை கழிக்கிறவர்கள்தான் இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களில் 95% பேர் பெண்கள்.

இவர்கள்  லீனாவைப் போன்று கவிதைகளில் கற்பனையான ஆண்குறிகளை கட்டமைக்கும் வாய்ப்பு பெற்றவர்களல்லர். மாறாக ஆண் குறியின் கோரத்தை ஒவ்வொரு இரவிலும் அனுபவித்து அன்றாடம் கோடம்பாக்கத்தில் தங்களின் உதிரத்தை இழந்து நாற்பது வயதுக்குள்ளாகவே வனப்புகளை இழந்து வாழ்விழ்ந்து கடைசியில் பிச்சைக்காரிகளாகவும், மன நோயாளிகளாகவும், லீனாவின் மொழியில் சொன்னால் செக்ஸ் தொழிலாளிகளாகவும் மாறிப் போகிற பரிதாபப் பெண்கள் இவர்கள்.

இவர்களைப் போன்றே இன்னொரு வகையினரும் உண்டு. இவர்கள் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள். 95% பேர் ஆண்கள். ஆமாம் லீனாவின் மொழியில் சொன்னால் ஆண் குறிகள். இவர்களின் ஊதியங்களை ஒழுங்கு செய்யும் விதமாக எந்த விதமான யூனியன்கள் எதுவும் கிடையாது. இவர்களுக்காக இருக்கிற யூனியன்கள் பெரிய தலைகளின் அல்லக்கை யூனியன்களாக மட்டுமே செய்லபடும். பெரும்பலான இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் தமது உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. உதவி இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒரே வருமானம் பேட்டா. ஆமாம், அதுவும் ஷூட்டிங் நடக்கிற நாட்களில் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோருக்கும் செட்டில் செய்த பிறகு கடைசியாய் வழங்குவார்கள். அந்த பேட்டாவுக்காக அந்த ஆண் குறிகள் காத்திருப்பார்கள். வறுமை, மரியாதையின்மை, வாய்ப்புகள் மறுக்கப்படுதல், அவமானம் என பல அவமானங்களைச் சுமந்தே ஒவ்வொரு உதவி இயக்குநரும் உருவாகி கடைசியில் ஒரு ‘ தமிழ் ஆண் குறி’ சினிமாவைப் படைக்க முடியும்.

லீனா சென்னை வந்த உடன்  இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம்  போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….

யோனிகளை சென்டிமெண்டில் ஆழ்த்தி அடிமைப்படுத்தும் பாரதி ராஜா, சேரன் முதலானவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்வதில் லீனாவுக்கு வருத்தம் இல்லை. அத்துடன் தமிழக யோனிகள் அத்தனையையும் கண்ணீர் சிந்தவைக்கும் சீரியல் இயக்குநரை கை பிடித்ததிலும் அவருக்குப் பிரச்சினையில்லை. உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் ஆண் குறி ஒன்றே காரணம் என்று எழுதும் லீனாவுக்கு தனது ‘செங்கடல்’ படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் பேட்டா கேட்டவுடன் ஆண் குறிகளே தன்னிடம் வந்து பேட்டா கேட்டது போல் தோன்றியிருக்கும்.

இனி, செங்கடல் பற்றி நாம் கேட்டறிந்த செய்திகள் வருமாறு:

பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம்.  ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம்.  சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை,  தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது.  மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம்.  நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

சரி இதை இத்தோடு விட்டு விட்டு லீனாவிடமே வருவோம்.

இதற்கு முன்னரும் லீனா  மாத்தம்மா, தேவதை, உள்ளிட்ட சில ஆவணப் படங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எடுத்திருக்கிறார். இந்தப்படங்கள் கிறிஸ்தவப் பாதிரிகள், தன்னார்வக்குழுக்களுக்காக எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தன்னார்வக்குழுக்களிடம் பொறுக்கித் தின்னும் பன்னாடைகளும் லீனாவின் ஆண்குறி லிஸ்டில் வரவில்லை. மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

லீனா எடுத்த படங்கள் உழைக்கும் மக்கள் தொடர்பானது. அதில் எவ்விதமான யோனி அரசியலையும் நாம் காணவில்லை. தேவதைகள் என்றொரு படம் எடுத்திருந்தார். அதில் உழைக்கும் பெண்களை வைத்து fantasy பண்ணியிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் சந்திக்கும் ஆண் குறிகள் பற்றியும்  அக்கறைப்படவில்லை.அரசியல் பற்றியும் அக்கறைப்பட வில்லை. ஒரே அக்கறை பணம் பணம் பணம் மட்டுமே…..

எப்போதும் ஆண் குறியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அலையும் ஒரு ஈழத்து எழுத்தாளருடனும் லீனா சினிமா முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நமது நாட்டின் ஏழைகள், உழைக்கும் மக்களின் வறுமை, தலித்துக்கள் மீதான சாதிக்கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, விளிம்பு நிலை மனிதர்கள் என 90களுக்குப் பிற்பகுதியில் தன்னார்வக்குழுக்கள் எப்படி இவர்களை குறி வைத்து பணம் பண்ணியதோ அதே வேலையை செய்து கொண்டுருப்பவர்தான் லீனா. சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.

இராமேஸ்வரம் பிரச்சினையில் போலீஸ் கையில் இருந்த கேமிரா மொபைலை பிடுங்கிய லீனாவின் ‘தைரியத்தை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். எனினும் அந்த காக்கி ஆண் குறிகளுக்கு எதிராக போராடிய லீனா போலீசிடம் இருந்து தன் போர்க்குணத்தால் விடுபட்டார் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது.  போலீசிடம் மாட்டிக் கொண்ட ஷோபா சக்தியும், லீனாவும் வெளியில் வர நம்பியது ஒரு அதிகார ஆண் குறியை,,,, ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். சிதம்பரம் காவல் நிலையத்தில் கணவனின் கண் எதிரிலேயே பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினியின் கதை, கடைசியில் கணவனைக் கொன்று விட்டு, பத்மினியை வேட்டையாடின காவல் நாய்கள். அந்தியூர் விஜாயாவையும் நீங்கள் மற்ந்திருக்க முடியாது. வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையம் சென்றவரை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தார்கள் காவல்நாய்கள். வாச்சாத்தி, விழுப்புரம், சென்னை என்று ஊர் ஊருக்கும் காக்கி ஆண் குறிகள் குதறிய கதைகள் உண்டு. ஆனால் அந்த காவல்நாய்களையே எதிர்த்து நிற்கிற லீனாவின் துணிச்சல், ஆண் குறிகளின் வக்கிரங்களுக்கு பலியான ஏனைய பெண்களுக்கு ஏன் வரவில்லை? லீனாவிடம் இருப்பது துணிச்சலா,  அல்லது அதிகார பீட ஆண்குறிகளுடனான  தொடர்பு  தரும் திமிரா  என்பதுதான் நமது கேள்வி. சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்ட புவனேசுவரியும் லீனாவைப் போன்றே போலீசை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார் என்பது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. புவனேசுவரிக்கு ஏதாவது பிளாக் இருக்கிறதா, அவர் கவிதை எழுதுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். பதிவர்கள் தெரிவித்தால், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இனி லீனாவின் ஈழப் போராட்ட முகங்கள்…..

போருக்கு எதிராக புதிய அமைப்புத் தொடங்கி டில்லி வரை சென்று போராடியவர் லீனா. சென்னையில் கவிஞர்களை ஒருங்கிணைத்து ஒப்பாரிப் போராட்டம் நடத்தியவர் லீனா.  இதெல்லாம் ஈழத்து ஆர்வலர்களிடம் லீனா பற்றி உருவாகியிருக்கும் பிம்பங்கள். இந்த பிம்பங்களை வைத்து லீனா தனது இமேஜை கூட்டிக்கொள்ள முயன்றார் என்பதே உண்மை. அதனால்தான் டெல்லி போராட்டத்திற்குச் சென்று வந்தவுடன்,  தானே முன்னின்று அப்போராட்டத்தை நடத்தியது போன்ற பேட்டிகளைக் கொடுத்தார். விளைவு – அவரது இலக்கிய நண்பர்களும், பெண்ணியவாதிகளும் அவர் மீது கடும் கோபம் கொண்டனர்.

ஈழத்திற்கான கடற்கரைப் போராட்டம் ஆர்ப்பட்டமாகத் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் லீனாவின்  மகா யோக்கியத்தனம் தெரிந்தது. பேச்சாளர் ஒருவர் போருக்கு துணைபோன யுத்தக் குற்றவாளி சோனியா காந்தி பற்றி பேசத் தொடங்கினார்.  மைக்கைப் பிடித்த லீனா “யாரும் இங்கே மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து பேசக் கூடாது” என்று நிபந்தனை போட்டார்.இது யோனிக்கு யோனி செய்யும் உதவி. இதில் ஆண்குறிக்கு தொடர்பில்லை போலும்!

அடுத்து வந்தவர், சரி மத்திய மாநில அரசுகளைத் தானே திட்டக் கூடாது, குறைந்த பட்சம் நமது கோபத்தை ராஜபட்சே மீதாவது காட்டுவோம் என்று ராஜபட்சே பற்றி பேசத் தொடங்கினார். உடனே தலையிட்ட  லீனா  “இங்கே யார் மனமும் புண்படாமல் பேசுங்கள், யார் மனமும் புண் படாமல் போராடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

லீனாவின் கவிதையில் இராஜபக்சே பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று இப்போதுதான் புரிகிறது.  ஜெரால்டு, பாரதிராஜா, சேரன்.. இன்னும் நமக்குத் தெரியாத லீனாவுக்குத்  தெரிந்த பலருக்கும்…..  கடைசியாக இராஜபக்சேவுக்கும்  ஆண் குறி கிடையாது போலிருக்கிறது. இல்லையென்றால் லீனா சும்மா விட்டு விடுவாரா? இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம்.  இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.

பொதுவாக  போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில்  இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.

எதுவும் கேட்கவில்லை. சும்மா பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்களா? கேட்டால்தான் பிரச்சினை, பார்த்தால் பிரச்சினையே கிடையாது. …. பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!

——————————–

பின் ‘குறி’ப்பு: மைனர் கெட்டால் மாமா என்பார்கள். போலி கம்யூனிஸ்டு குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்ல, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான பழக்கமும் உள்ளவர் லீனா. அதான் இந்த லச்சணம்!

ரெண்டு மூணு சீட்டுகளுக்காகத்தன் அந்த அம்மாவிடம் மானத்தை அடகு வைத்திருக்கிறார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.  லீனாவின் அலப்பரைகளும் கூட இவர்களுடைய தோலில் கொஞ்சம் கூட உரைக்கவில்லையே! மழுங்கத்தனம் என்றால் என்ன என்று ஒரு நண்பர் விளக்கம் கேட்டார். அதுக்கு அகராதியில் எல்லாம் விளக்கம் கிடையாது. தா.பாண்டியனையும், மகேந்திரனையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதான் அது.

http://www.vinavu.com/2010/01/06/leena/