Language Selection

இனியொரு மற்றும் தேசம்நெற் மூலமே, மீண்டும் திடீர் மார்க்சிய அரசியலில் பிரவேசிக்கின்றார் நாவலன். தான் எப்படியாவது ஒரு அரசியல் பிரமுகராக வந்துவிட வேண்டும் என்ற அவாவுடன், அரசியலில் காய்நகர்த்தலைச் செய்கின்றார். முதலில் திடீர் மார்க்சிய அரசியலை சந்தைப்படுத்த, அ.மார்க்ஸ்சை நாடுகின்றார். அவரின் முன்னுரையுடன், நாவலனுக்கு ஏற்ற ஒரு "மார்க்சியத்தை" முன்வைத்து, மீண்டும் தன்னை அறிமுகம் செய்கின்றார்.

அதேநேரம் இந்திய அரசியல் பிரமுகர்களை சந்திக்கின்றார். அவர்களுக்கு தனது மார்க்சிய அரசியல் அறிவைக் காட்ட முனைகின்றார். அதேநேரம் மற்றவர்களை பற்றி இல்லாத பொல்லாததை போட்டுக் கொடுக்கின்றார்.

 

தான் அரசியலில் இல்லாத காலத்தைப் பற்றி, தனது திடீர் அரசியல் பிரமுகத்தனத்துக்கு ஏற்ப திரித்துக் காட்டுகின்றார். இக்காலத்தில் எப்படியெல்லாம் மற்றவனை ஏமாற்றி, என்னனென்ன சுத்துமாத்து தொழில்களை செய்தார் என்பதை பற்றி அவர் பேசவில்லை. அதை "மார்க்சிய" அறிவு மூலம் எதுவுமற்றதாக்கி, தன்னை திடீர் "மார்க்சிய" பிரமுகராக முன்னிலைப்படுத்தி நிலைநிறுத்த முனைகின்றார். 

 

அதற்கிசைவாக அரசியலைத் துறந்த தனது கடந்தகாலத்தை மூடிமறைப்பதுடன், அக்காலத்தில் நடந்த போராட்டத்தையும் மறுத்து சேறடிப்பதே இன்று அவரின் மையமான முதன்மை அரசியலாகிவிட்டது. இதற்கு ஏற்ப பல அவதூறு பின்னோட்டங்களை அசோக்கிற்கு நிகராக இணையங்களில் போடுகின்றார். கட்டுரைகளை எழுதி, அதன் கீழ் அவர்களாகவே பின்னோட்டத்தைப் போட்டு, "மார்க்சிய" அவதூறு அரசியல் நடத்துவதில் இன்று முதன்மையானவர் நாவலன்.

 

இந்த நாவலன் அரசியலை துறக்க முன்னம் ஒரு புரட்சிகர அரசியலுடன் நின்றவர். அசோக் போல் அல்லாது, நாவலன் இந்த விடையத்தில் அன்று நேர்மையாக நிற்க முனைந்தவர்.  இந்திய கூலி அமைப்பான ரெலோவுக்குள் போராட்டத்தை நடத்தியே நாவலன்  வெளியேறியவர். சென்னை மரினாபீச்சில் ரெலோ பெண்கள் பெருமளவில் கலந்து கொள்ள,  ரெலோவுக்கு எதிராக நடத்திய உண்ணவிரதத்தை நாவலன், நேரு, மனோ மாஸ்ட்டர் போன்றோரே தலைமை தாங்கினர்.

 

இதன் பின் இவர்கள் ரெலோவை விட்டு வெளியேறிய போது, ஒத்த அரசியல் போக்கை இவர்கள் கொண்டிருக்கவில்லை. உதிரிகளாகவே சிதைந்தனர். நேரு, நாவலன் என்.எல்.எவ்.ரியுடன் பேசினர். நேரு என்.எல்.எவ்.ரியுடன் உடன்பாடு கொண்ட நிலையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவந்தது. இந்த நிலையில் ரெலோவிடமிருந்து பாதுகாப்பை அவர் கோரினார். கிளிநொச்சிக்கு தலைமறைவாக வந்த அவன், என்னுடன் தங்கி விவசாயத்தில் ஈடுபட்டான். இந்தக் காலத்தில் அவனை ரெலோ கடத்திச்சென்று கொன்றது. பார்க்கத் துண்டு பிரசுரத்தை.

புரட்சி முகத்திரைகளும் கொலை வெறி பிடித்த முகங்களும்

 

இக் காலத்தில் மனோ மாஸ்ட்டர் தனித்துவமாக மக்களுடன் நிற்க முனைந்தார். இந்த நிலையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். அதை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. பார்க்க.

 001.jpg

002.jpg

003.jpg

004.jpg

005.jpg

006.jpg

007.jpg

008.jpg

009.jpg

010.jpg

011.jpg

012.jpg

013.jpg

014.jpg

நாவலன் பாசறையுடன் இணைந்தார். அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்துக்கு கல்வி கற்க வந்தார். 1984 க்கு பிந்தைய காலத்தில், இயக்கங்கள் மக்களை ஒடுக்கினர். இதற்கு எதிரான போராட்டத்தில், எம் அனைவருடனும் ஒரு அணியில் நாவலன் நின்றார். இயக்கங்களின்  மாணவர் அமைப்பை ஒருங்கிணைத்து, இயக்க அரசியலுக்கு எதிராக அதை வழிநடத்த, குறிப்பாக நான் - நாவலன் பல முயற்சிகளை எடுத்தோம்.

 

இக்காலத்தில் நடந்த விஜிதரன் போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்ட மையக் குழுவில் நாம் இருவரும் இருக்கவில்லை. இருந்த போதும் அதன் திசைவிலகல்களை தடுத்து, நாம் இருவரும் தலைமை தாங்கினோம். புலிக்கு சார்பாக சிவத்தம்பி நடத்திய சதி  அரசியல், எம் தலைமைiயும் வழிகாட்டலையும் உடைக்க முனைந்தது. இதனால் போராட்டத்தின் மையக் குழுவுக்கு, ஒரு சிறப்பு கூட்டம் மூலம் எம்மை மாணவர்கள் தெரிவு செய்தனர். இதன் மூலம் சிவத்தம்பியின், புலி அரசியல் முறியடிக்கப்பட்டது.

 

இப்படி பல வழிகளில் நாவலன் அன்று மக்களுடன் நின்றவர். ஒரு புரட்சிகர அரசியலை முன்னெடுப்பதில் தனக்கேயுரிய வழிகளில் உறுதியாக நின்றவர். அக்காலத்தில் இப்படிப்பட்ட பலர், தங்கள் அமைப்பைக் கடந்து ஒன்றுபட்டு வேலை செய்தனர். புலி கொலைக்கும்பலிடம் இருந்து விமேலேஸ்வரன் தலைமறைவாக வேண்டி ஏற்பட்ட போது, அவனுக்கு தங்குமிடத்தை நாவலன் இருந்த அமைப்பான பாசறையின் விவசாய சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் நான் புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பி, விமலேஸ்வரன் தலைமறைவாக இருந்த அதே கிராமத்துக்கே சென்றேன். விமலேஸ்சுடன் தான் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன்.

 

இதன் பின் எனக்கு மற்றொரு தலைமறைவு இடத்தை நாலலனே ஏற்பாடு செய்து தந்தான். நான் பல்கலைக்கழகத்திற்கு பகிரங்கமாக வரும்வரை, அதன் பின்னணியில் மறைமுகமாக இயங்கியவன். இப்படி அவனும் சரி, இன்னும் பலரும் ஆற்றிய புரட்சிகரமான அரசியல் பாத்திரம், இன்றைய அவர்களின் நிலையை வைத்து மறுக்கவோ கொச்சைப்படுத்தவோ முடியாது.

 

வௌ;வேறு அமைப்பாக நாம் இருந்தாலும், அனைவரும் ஒரு புரட்சிகர அமைப்பாக வேலை செய்தோம். சரிநிகர் சிவகுமார் எனது கைதுக்கு முன் கைதான நபர். அவரிடம் எமது ஆயுதங்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதற்கு முன் குருபரன் கைதானான். எமது அரசியல் வேலையின் ஒரு அம்சமாகவே, இந்தக் கைதுகளையும் கடத்தல்களையும்  புலிகள் நடத்தினர்.

 

அன்று அரசியல் ரீதியான குறிக்கோள் தெளிவாக இருந்தது. இன்று அதைக் கைவிட்டவர்களின் அரசியலை வைத்து, அன்றைய சூழலையும் அவர்களின் புரட்சிகர அரசியலையும் யாரும் மறுக்க முடியாது. இப்படித்தான் நாவலனும்.

ஆனால் அவனிடம் இரண்டு பிரதான முரண் இருந்தது.

 

1. நெருக்கடிகள் ஏற்படும் போது, ஆளைக் காணமுடியாது. சிலவேளை சில நாட்கள் அது நீடிக்கும்.

 

2. புரட்சிகர போராட்டத்திலும் குறுக்கு வழியையும், வெட்டியோடும் வழியையும், சுழியோடும் வழியையும்  கையாள்வான். கூட்டு வேலை முறையிலும், புரட்சிகர அரசியலுக்குள்ளும், இது எதிர்நிலை பாத்திரத்தை ஏற்படுத்துவதில்லை அல்லது சாதகமாகவும் கூட மாறுகின்றது. (உதாரணமாக அண்மையில் மருதையன் பேட்டியை எடுத்த நாவலன், மருதையனை ஏமாற்ற நூற்றுக்;கணக்கான ஈமெயில்கள் வந்து குவிகின்றது என்று பச்சையாகவே புளுகினான். )

 

இப்படி தனிப்பட்ட புரட்சிகரமல்லாத குணாம்சங்களை கொண்ட நாவலன், எம் எல்லோருடனும் நின்றான்.


 
நாங்கள் நாட்டில் வாழமுடியாத நிலைமை உருவானது. நாங்கள் நாட்டைவிட்டு வெளியேறினோம்.

 

நாவலன் சுழியோடும் தன்மை மூலம் பல்கலைக்கழக படிப்பை தொடர்ந்து முடித்ததுடன், சிறப்புப் பட்டப்படிப்பை படித்து முடித்திருந்தான். அவன் இருந்த பாசறை அமைப்பு, புலிக்கு வேலை செய்யும் அமைப்பாகவும் மாறியது.

 

அவன் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து வந்த போது, பாரிசில் என்னிடம் தான் வந்தான். எமது முதல் சமர் இதழில் இணைந்து இருந்தான். அத்துடன் முரண்பாடுகள் தோன்றிவந்தது. மார்க்சிய தலைவர்கள் பெயரை சமரின் எழுத்தில் பாவிக்கக்கூடாது என்று அடம் பிடித்தான்;. இப்படி தொடங்கிய முரண்பாடுகளும், உள்ளிருந்த பல முரண்பாடுகள் கடந்தும் நாம் தொடர்ந்து இயங்கினோம். குறுக்குவழியில் இலகுவாக பணம் சம்பாதிக்க அகதிக்கு கேஸ் எழுதுவது, மொழி பெயர்ப்பது என்று அலைந்த போது, எம் அரசியலை மீறிச்செல்ல முடியாது இருந்தது. 

 

1994 இல் அவரின் அரசியல் நடத்தை தொடர்பாக எழுந்த விவாதம், "சிவப்பு பெயின்ரா அடித்தனி" என்று நக்கல் அடித்து விவாதத்தை தவிர்த்து ஒடிய நிலையில், எம்மை மிரட்டத் தொடங்கினான். தான் இல்லாமல் சமர் வர முடியாது (பெருமளவிலான எழுத்து அவனுடையது) என்று மிரட்டி, விவாதத்தைக் கைவிடக்கோரினான். இல்லையென்றால் தான் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டினான். இதை அடுத்து அவனை நாம் சமரில் இருந்து வெளியேற்றினோம். அசோக் இதைத் திரித்து "தனிப்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக சமரிலிருந்து வெளியேற்றிய தோழர் நாவலன்" என்று எழுதுகின்றார். நாங்கள் வெளியேற்றியவர்கள்.  


   
இதன்பின் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க, பல சுத்துமாத்து தொழிலில் இறங்கினார். இப்படி கடந்த 13 வருடமாக பல்வேறு வழிகளில் முனைந்தவர். இதனால் பாரிசில் இருந்து ஓடியவர். அவர் அரசியலை கைவிட்டு இருந்தவரை, இவரைப் போல் பலர் குறுக்குவழியில் வாழ்ந்ததால், அது சிறப்பான விமரிசனத்துக்கு அம்பலப்படுத்தலுக்கும் உள்ளாகவில்லை. மீளவும் திடீர் அரசியல், திடீர் மார்க்சியம் பேசி, அதே குறுக்குவழி வியாபாரத்தையே இன்று அரசியலில் நுழைத்துள்ளார். இலங்கை முற்போக்கு மற்றும் இடதுசாரி அரசியல் முதல் (இந்தியா) சர்வதேசியம் வரை, எமக்கு எதிராக சிண்டு முடிந்து அரசியல் செய்யும் குறுக்குவழி அரசியலை புகுத்தி வருகின்றார். இதற்கு மார்க்சிய சொல்லாடல்களை அள்ளி வீசுகின்றார்.

 

அவர் அரசியலைவிட்டு துறந்து வாழ்ந்த கடந்த 13 வருடத்தை ஆராய்ந்தால், அதை தனிநபர் தாக்குதல் என்று சொல்லி தப்பமுனைகின்றனர். தங்கள் மக்கள் விரோத செயல்களை  மூடிமறைக்க, அதை தனிநபர் தாக்குதல் என்கின்றனர். "தனிநபர்" தாக்குதலில் இவர்களே வல்லவர்கள் சூரர்கள். "தேசமநெற்" என்ற இணையத்தை குட்டிச்சுவராக்கி, அதை சிதைத்தவர்கள் தான் இவர்கள். "தேசம்நெற்" பின்னோட்டங்களில் வந்த அரைவாசிக்கு மேற்பட்ட அவதூறுகளை, புனைபெயரில் புனைந்து இட்டவர்கள் அசோக்கும், நாவலனும் தான். இது தமிழ் இணைய உலகம் அறிந்த உண்மை. அதையே இனியொருவிலும் செய்கின்றனர்.

 

"தனிநபர்" தாக்குதல் என்று கூறி தப்பிக்க முனையும் நாவலன் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்.   அவரை நம்பி அவருடன் சேர்ந்து தொழில் செய்தவனை மோசடி செய்து, அவனின்  பணத்தை இல்லாதாக்கி கடனாளியாக்கி விட்டு ஓடி ஓளிந்தவர். அவன் மனநோயாளியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன், "கடன் அறவிட முடியா ஒரு நபராக" பிரஞ்சு அரசு அறிவிக்கும் வண்ணம், அவனை வைத்து சூறையாடி செல்ல அவன் முழுவாழ்வையும் இழந்தான். இன்று திடீரென நீங்கள் சமூகத்தை மார்க்சியம் மூலம் வழி நடத்தப் போகின்றீர்கள். யப்பான்காரனுடன் நீங்கள் நடத்திய ரெலிகாட் தொழிலுக்கு இதுதான் கதி. அதற்கு ஒரு அலுவலகத்தை வைத்திருந்தீர்கள், அதை மறந்திருக்க மாட்டீர்கள். உங்கடை கால் அழுக்குப்பட்ட நிலத்தையும், நீங்கள் பாவித்த மலசல கூடத்தையும் இரண்டு மாதமாக ஒருவன் கூட்டித் துடைத்து கழுவினானே, அவன் வேலை செய்த கூலி கொடுத்துவிட்டா பாரிஸில் இருந்து தலைமறைவானீர்கள்? நீங்கள் திடீரென இன்று தொழிலாளி வர்க்கம் பற்றி பேசுகின்றீர்கள். இப்படி எத்தனை கதைகள். அகதியாக வந்தவர்களிடம் கொழுத்த பணம் வாங்கி கேஸ் எழுதியது முதல் உங்களால் ஏமாற்றப்பட்டவர்கள் எல்லாம் அடிக்கத் தேடினார்கள். இப்படி லண்டனில் இருந்து பல தகவல்கள். குறுக்கு வழியில் திடீர் பணக்காரனாக, பல வழிகளில் முனைந்தீர்கள். மொழியைப் படித்து அகதித் தமிழனுக்கு கேஸ் எழுதி அதை மொழி மாற்றம் செய்து பண முதலையாகலாம் என்ற கனவுடன் (அகதி கேஸ் எழுதுவது என்பது பாரிசில் நியாயமற்ற வகையில், தமிழ்மக்களை ஏமாற்றி பண அறவிடும் மோசடிகளில் ஒன்று)  மொழி படித்து கேஸ் எழுதுவதை தன் குறிக்கோளாக கொண்டு அலைந்தீர்கள்.

 

இதன் பின் கூட்டு வியாபாரம் என்று அப்பாவிகளை மடக்கி கவிழ்த்து பணம் சம்பாதித்தவர் இந்த நாவலன். இப்படிதான் அரசியலை துறந்த பின், நாவலன் வாழ்வு இவ்வாறாக இருந்தது.

 

இன்று திடீர் மார்க்சியம், திடீர் புரட்சி பற்றி பேசுவதற்கு முன் நேர்மையாக சமூகத்தை அணுக வேண்டும். அரசியலை துறந்து இருந்த காலத்தைப் பற்றி சுயவிமர்சனமற்ற போக்கு, மீண்டும் மக்களை அரசியல் மூலம் ஏமாற்றி பிரமுகராகும் அரசியல் வியாபாரமாகும்.

 

தொடரும் 

பி.இரயாகரன்
24.12.2009