அசோக் ரயாகரனுக்கான கட்டுரையை சமுக அக்கறையோடு நேர்மையாக எழுதியுள்ளார் என்கின்றார் சபா நாவலன்.

 

அவர் நற்சான்றிதழ் கொடுத்துள்ள கட்டுரையில் “நாம் என்னதான் முற்போக்கு என்றும் மார்க்சியம் என்றும், உச்சாடனம் செய்தாலும் எம்முள் உறங்க்க் கிடக்கும் ஆணாதிக்க மேலாண்மை மொழிப்பிரயோகம், எம் அரசியலை அம்பலப்படுத்திவிடும். வார்த்தைகளும் சொல்லாடல்களும் வெறும் பரிவர்த்தனைக்கான கருவியல்ல. ஒவ்வொரு சொற்களும் அந்த மனிதனின் அரசியல் சார்ந்த பின்புலமாக காட்டிவிடும்” என்கின்றார் அசோக்.

 

அரசியல் அனாதையாக்கப்பட்ட பொறாமையும் வஞ்சகமும் வாக்கப்பெற்ற யாழ்ப்பாண மேட்டுக்குடி வேளாள ஆதிக்க உணர்வுபெற்ற" ஓர் மனிதன் என்கின்றார் இந்த சமுக அக்கறையாளன்.

 

இது எதைத்தான் காட்டுகின்றது. ரயாகரன் தவறுகளுக்கு - விமர்சனங்களுக்கு அப்பாற்பட் ”ஓர் புனித மனிதனல்ல”. ஆனால் அசோக்கின் முற்போக்கிற்குள் -மார்க்கசிசத்திற்குள் உச்சாடனத்திற்குள், மொழிப் பிரயோகத்திற்குள் எது தான் அரசியலாக உள்ளது.

 

தனிநபர் தாக்குதல் - குறுந்தேசிய இனவாதம் - சாதிய பிரதேச வார்த்தைகள், அதையொட்டிய சொல்லாடல்கள் கொண்ட குவியல் இல்லையோ? இதுதான் நாவலன் அசோக்கிடம் கணடுபிடித்த “சமூக அக்கறையோ”

 

கடந்த காலங்களில் ரயாகரன் ஏதாவது தத்துவார்த்தப் பிரச்சினைகள் குறித்து விவாதங்களை முன்வைத்துள்ளாரா? இல்லையே என்கின்றார், தத்துவப் புலவரான நாவலன். தத்துவார்த்தப் பிரச்சினைகளில் நான் கடைச் சங்கப் பெரும்புலவன் நீ கூழுக்காகப் பாடும் தெருப்புலவன் என்ற நிலையில்லாமல், மக்களுக்கு செய்யவேண்டிய – கற்கவேண்டிய பல விடயங்கள் உண்டு என்ற நிலையில் இருந்து மற்றவர்களுக்கு போதனைகளை செய்யுங்கள்!

 

இவைகளை முன்நிறுத்தி  பின்னோட்டங்கள் எழுதினால், அதை இல்லாமலே செய்கின்றீர்கள். தரமற்ற - கீழ்த்தரமான பின்னோட்டங்களை இல்லாதாக்குவதில் தவறில்லை. ஆனால் நடுநிலையான ஆரோக்கிமான பின்னோட்டங்களைக் கூட இல்லாதாக்குகின்றீர்கள்.

 

ஆனால் உங்களுக்கு ஏற்புடைய ரயாகரன் தனிமனித தாக்குதல்களை பிரசுரிக்கின்றீர்கள். அசோக்கின் கட்டுரைக்கு 35 பின்னூட்டங்கள் வந்துள்ளளன. இதற்கு மாற்றக் கருத்துள்ள ஓர் பின்னூட்டம்தானும்  வர அனுமதிக்கவில்லை. இனியொருவை இந்த லட்சனத்தில் இருந்துதான் சமூகம் குறித்த தத்துவார்த்த  விசாரணைக்குரிய தளமாக வனர்த்தெடுக்கப் போகின்றீர்கள்?

 

பாரிசில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு செல்வது என்பது கண்டிப்பான கட்டாயமல்ல. செல்லாமல் விடுவது, அவரவர் அரசியல் சார்ந்த சொந்த முடிவு. செந்திலின் பாரிஸ் கூட்டத்திற்கு ரயாகரன் செல்லவில்லைத்தான். ஆனால் கூட்டத்தின் பின் செந்தில் ரயாகரனை சந்தித்தது கலந்துரையடியது, அசோக்கிற்கு தெரியாமல் இருக்கலாம். அசோக்கும் நாவலனும் புதியஐனநாயகக்கட்சி - செந்தில் சிவசேகரம் ஆகியோருக்கும் ரயாகரனுக்கும் இடையில் ஏதோ பாரிய முரண்பாட்டை கட்டமைத்து காட்ட முனைகின்றார்.

 

தமிழரங்கத்தில் புதியபூமி பத்திரிகை, சிவசேகரத்தின் கட்டுரைகள் நேர்காணல்கள் வந்த வண்ணமே உள்ளன. அவர்களுக்குள்ள புரிதல் புரிந்துணர்வும் - அதேவேளை விமர்சனங்களும் உண்டு. இது தவிர்க்கவும் முடியாதது. இதற்காக யாரும் யாருக்கும் நற்சான்றிதழ்கள வழங்கமுடியாது.

 

இனியொருவிற்கு வரும் நடுநிலையற்ற பக்கசார்பான பின்னோட்டங்களை சான்றிதழ்களை பிரசுரிப்பது, தற்காலிக தற் திருப்தியை உங்களுக்கு தரும். ஆனால் இவைகள இனியொருவை தத்துவார்த்த விசாரனைக்குரிய தளமாக என்றும் மாற்றாது.

 

அகிலன்
06.12.2009