பாரிஸ் லாச்சப்பலில் கடந்த கிழமை சிந்தனை மையத்தின் துண்டுப்பிரசுரம் பரவலாக விநியோக்கப்பட்டது. பல வர்த்தக நிறுவனங்கள் உட்பட பலர் கூடுதல் பிரதிகள் கேட்டு வாங்கினர். மக்கள் கடைச் சந்தியில் பிரசுரம் கொடுக்கப்படட பொழுது, ஒரு சிலர் இது என்ன நோட்டீசு என (பதட்டத்துடன்) கேட்டனர்.
அப்போது விநியோகிதவர்களில் ஓருவர் அவர்களுக்கு துண்டுபபிரசுரம் சம்பந்தமாகவும், சிந்தனைமையம் சமபந்தமாகவும் விபரங்களைச் சொன்னார். தொடர்ந்து யார் இவர்கள் என வினாவினர். ஓரிருவர்களின் பெயர்களைச் சொன்னபோது அதில் ஒருவர் நீங்கள் அவர்களின் கைக்கூலிகளா? என்றார். அதற்கு அவரோ, நானோ, அல்லது சிந்தனை மையத்தில் உள்ளவர்களோ யாருடைய கைக்கூலிகளும் அல்ல என்றார்.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அரசு-புலிகளின் மக்கள்; விரோத அரசியலையும் -பயங்கரவாதத்தை விமர்சித்தவர்கள். டக்கிளசு, கருணா, பிள்ளையான் போன்ற ஐனநாயக நீரோட்டக்காரர்கள் போன்ற போலிகளை அம்பலப்படுத்தியவர்களே தவிர, யாருக்கும் விலை போகவில்லை என்றார், பிரசுரம் விநியோகித்தவர்களில் ஒருவர்.
புலிகள் பலமிழந்து போனதன் பின்பே இப்பிரச்சுரங்கள் என்றார் இனனொருவர். அதற்கு புலிகள் பலமாக இருந்த பொழுதும் இப்படித்தான் பிரசாரம்; செய்யப்பட்டது என்ற பொழுது மௌனம் ஆகினர்.
மௌனம் நிலவ, மழை வேகமாக பெய்ய ஆரம்பித்தது. வீதியில் சென்றவர்கள் கடைகளின் முன்னால் நின்றவர்கள் 2ம் இலக்க மெட்ரோவ் மேம்பாலத்திற்கு கீழ் ஒருங்கிணைந்தனர். அதன்பின் ஆரோக்கியமான கலந்துரையாடலே நடைபெற்றது!
கலந்துரையாடலின் போது புலிகளின தோல்விக்கான காரணங்கள், முட்கம்பி வேலிக்குள் சிறைப்பட்ட மக்களின் அவல வாழ்வு, மகிந்த அரசின் திட்டமிட்ட சர்வாதிகார நடவடிக்கைகள், சரத்பொன்சேகா ஐனாதிபதியாவாரா? போன்ற விடயங்களையிட்டு; கருத்துக்கள் பரிமாறப்பட்டன! முடிவில் சில நண்பர்களின அன்பான் அன்பளிப்பான தேநீர் வடை உபசாரத்துடன் கலைந்து சென்றோம். மழை ஓர் ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு வழி வகுத்தது
புலிகள் மட்டும் உலாவிய பாரிஸ் லாச்சப்பலில் மக்களுடன்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode