10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

நோர்வே புலித் தேர்தல்கள் பற்றிய, சிறு குறிப்பு..

நோர்வேயில் வெளியாகிய, புலிகளின் 3 பிரிவினரது பிரசுரத்தை (பிரகடனத்தை) - தமிழரங்கம் - வெயியிட்டிருந்தது. நாடுகடந்த தழிழீழ அறிவிப்பு, புலிகளின் அழிவின் பின்னர் சுமார், ஒருமாத காலத்தின் பின்னர் வெளிவந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், வன்னியுத்தத்தின் நெருக்கடி காலகட்டத்தில்: புலிகளால் வெளிநாட்டுப் புலிகளிடத்தில் ஏவப்பட்டது. இது யுத்தநேரத்தில் புலிகளின் இருப்புக்காக -சர்வதேச அழுத்தமாக - இதைத் தேர்தலாக்கி (மே 10-2009) நோர்வே ஊடாகப் பிரயோகித்துப் பயனடைய முன்னெடுக்கப்பட்ட முயற்சியாகும்!


புலிகளின் அழிவுக்குப் பின்..... (நோர்வே)
உள்ளுக்குள் நடக்கும், நடத்தப்படும் நாடகம்:


1- 'நாடுகடந்த தமிழீழ' கோரிக்கையானது, இலங்கை தவிர்ந்த - ஏனைய நாடுகளிலுள்ள அனைத்துப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்களையும்: தம்கீழ் கொண்டுவரும் கோரிக்கையாகும். இது தானே தன்னை தழிழீழத்தின் அதி உயர் பீடமாகப் பிரகடனப்படுத்துகிறது. (புலிகளின் அழிவை அடுத்து தலைமையாக தன்னை காட்டுகிறது)

 

2- 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' இது புலிகளின் அழிவுக்கு முன் முன்னெடுக்கப்பட்டதாகும். இருப்பினும், இதை முன்னெடுத்தவர்கள் (மே 10-2009) தேர்தலில், இன்று கோரும் எந்தக் கோரிக்கையையும் அன்று முன்வைத்திருக்கவில்லை. புலிகளின் அழிவின் பின்னர், புலிகளின் வெளிநாட்டு அசையும், அசையாச் சொத்துக்களை: நாடு ரீதியாக தமது தலைமையின் -கீழ் - கொண்டுவர முனைபவர்கள். (இவர்கள் வேண்டுமென்றால் தமது முகவர்களில் இருவரை - நாடுகடந்த தமிழீழ - உயர்மட்ட பீடத்துக்கு கொடுக்கத் தயாராகவே உள்ளனர்.

 

3- 'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு' இது நோர்வேயில் இருக்கும் 'வீக்கா' - ஒஸ்லோவை- தலைமையாகக் கொண்டிங்கிய அமைப்பாகும். இதுவே மக்களிடம் பணத்தைச் சேர்க்கும் ஒர் ஊடகமாக புலிகளுக்குச் செயற்பட்டது. பேர்கன், மற்தும் துரண்யம், மற்றும் ஸ்ரவங்கர் மட்டுமே நோர்வேயில் காசு ரீதியாக ஆளுமை செலுத்திய புலிகளின் பிரதேச மையமாகும். இதிலும் துரண்யமும், ஸ்ரவங்கரும் இறுதிநிலையில் உள்ளவையாகும். ஒஸ்லோ மற்றும் பேர்கன் மட்டுமே புலிகளின் பண மையங்களாக விளங்கின. (இறுதி வருடங்களில்)

 

இதிலே முதலாவது (1) பிரிவினருக்கும், இரண்டாவது பிரிவினருக்கும் (2) ஆன முரண்பாடு: இன்று கடுப்பாகவுள்ளது. ஏனெனில் இது இருக்கும் சொத்துக்களை அபகரிக்கும் மோகத்தைக் கொண்டிருக்கிறது. மூன்றாவது பிரிவினரின் நிலமை சற்று வித்தியாசமானது. ஏனெனில் இவர்களே கடந்த காலத்தில் மக்களிடம் நேரடியாகக் காசைக் கறந்தவர்கள். அதனால் தமது தில்லுமுல்லைச் சரிக்கட்ட இருவரையும் சமாதானமாகப் போகும்படி ஒரு கோரிக்கையை விடுகின்றனர். இது தவறும் பட்சத்தில் (தம்மிடமுள்ள நிதிகளைக் கொடுக்க மறுக்கலாம் என்ற சுயநலமும் கலந்திருக்கலாம்)

 

ஆனால் ஒஸ்லோவில் இருக்கும் ' தமிழர் ஒருங்கிணைப்பு குழு' வினர், மற்றும் புலிகளுக்காக இயங்கி ஒதுங்கிய மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள்:  (2)வது,  பிரிவினருடன் முரண்பட்ட போதும், பேர்கன் ஒருங்கிணைப்புக் குழுவினர் போல தமது கோரிக்கை எதையும் இவர்கள் இதுவரை முன் வைக்கவில்லை?

 

ஏன் பேர்கன் 'ஒருங்கிணைப்புக் குழு' இக் கோரிக்கையை முன் வைக்கிறது?


வன்னி யுத்தத்தின் இறுதிக்கால காலங்களில்: புலிகள் தமிழ் மக்களை யுத்தப்பிரதேசத்தில் இருந்து அகற்ற வேண்டுமென்று  (தமிழரங்கம்) தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. நோர்வேயில் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக்கு வெளியே, ஒஸ்லோவிலும், பேர்கனிலும் பாடசாலைகள் நீண்டகாலமாக மக்கள் தொகை வசதியைக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது. இருப்பினும் ஒஸ்லோவில், புலிகள் மக்களை விட வேண்டும், அரசு யுத்தத்தை நிறுத்தவேண்டுமென்று தனித்துவமான மக்கள் குரலை இவர்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை!

 

ஆனால் பேர்கனில்: 'மக்களை புலிகள் விடவேண்டும்'  என்ற பலத்தகோரிக்கையுடன், அரசே, யுத்தத்தை நிறுத்து! என்ற மக்கள் நலன் சார்ந்த கோசத்துடன், ஒருபகுதி மக்கள் வீதிக்கு வந்திருந்தனர். இவர்கள் பேர்கன் புலிசார் அமைப்புடன் இதுபற்றிக் கதைத்ததாகவும்,  ஆனால் புலிக்கொடியைத் தூக்க இப்போராட்டம் சம்மதம் மறுத்தபோது: புலி அமைப்பினர் தமது ஆதரவை மறுத்ததாகவும் அறிய முடிந்தது. ஆனாலும் இக்குழுவினர் மக்கள் நலன்சார்ந்து இக் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றனர்.  ஐஜரோப்பிய மற்றும் அமெரிக்க  எந்த நாடுகளிலும் நடக்காத 'மக்களின் நலன் சார்ந்த' பதாகையைச் தாங்கிய வெளிப்பாட்டை, பேர்கன் மக்களின் ஒரு சார் பகுதியினர், இதை சாதனையாக்கினர்!

 

வன்னி மக்களின் அவலத்தின் பின்னர்: புலிகளின் அழிவின் முன்னரே வீதிக்கு இறங்கிய இம் பேர்கன் மக்கள், தமது கோசம் மிகச் சரியானது என்பதை இந்த மக்கள் நடைமுறையில் பெரும்பகுதியான மக்களுக்கு உணர்த்தியுள்ளனர்.  இதனால், பேர்கன் ரீ.சி.சி. யின் ஆயுட்காலம் மிகக் கம்மியானதும் சிக்கலானதும் என்பது இவர்களுக்கு உறைத்துள்ளது. அதனால், பேர்கன்(3 ) பிரிவு தனது நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. ( இது நோர்வேயின் வேறு எந்தப் பிரசேதத்துக்கும் பொருந்தாத பிரத்தியேகமான பிரச்சனையாக இன்று உள்ளது.)

 

சுதேகு
131109

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்