சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியாவில் உயர்கல்வியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் வேத பிரகாஷ் பேசியதாவது:
11வது ஐந்து ஆண்டு திட்டத்தில் உயர்கல்விக்காக ரூ.46,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு ரூ.6,600 கோடியளவுக்கே மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உயர்கல்விக்காக ரூ.85 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 10வது ஐந்து ஆண்டு திட்டத்துடன் ஒப்பிடும்போது இது ஒன்பது மடங்கு அதிகம். மத்திய அரசின் ஒதுக்கீட்டில் கலை மற்றும் அறிவியல் கல்விக்காக 11வது திட்ட காலத்தில் (2007-2012) ரூ.46,600 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை மத்திய அரசு ரூ.6,600 கோடி நிதியே வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகை காகிதத்தில் புதைந்து கிடக்கிறது (தினமலர், 3/11/2009).
————————————————————————————–
இந்த மறுகாலனியாதிக்க காலகட்டத்தில், அரசு மக்களை சீர்திருத்தங்களை காட்டி ஏமாற்றி வருகிறது. ஆனால் அந்த சீர்திருத்தங்களும் மக்களை சென்றடைவதில்லை. பொய்யான கணக்குகள், சீர்திருத்தங்கள், திட்டங்கள் மூலம் அரசு மக்களின் கோபங்களை திட்டமிட்டு திசைதிருப்பி வருகிறது. உதாரணமாக, விவசாயத்திக்கு ஒதுக்கப்பட்ட கடன் தள்ளுபடி (ரூ. 60,000 கோடி) எந்த விவசாயிக்கு சென்றடைந்தது என்று அவர்களுக்கே வெளிச்சம்.
அதேபோல் கல்விக்காக மக்களிடம் காட்டும் கணக்கோ ரூ.46,600 கோடி (5 வருடத்திக்கு). ஆனால், இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி நிதியே வழங்கியுள்ளது (2.5 வருடத்திக்கு). இந்த கணக்குப்படி பார்த்தால் அதிகபட்சமாக 5 வருடத்திக்கு ரூ.13,200 கோடி மட்டுமே கிடைக்கும். இப்போது புரியும், அரசு மக்களிடம் காட்டும் கணக்கு பொய் என்று.
மாணவர்களே!
சீர்திருத்தங்கள், திட்டங்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற மட்டுமே.
http://rsyf.wordpress.com/2009/11/11/கல்விக்கு-அரசு-பொய்-கணக்/