"மாடு வளர்த்தவனுக்கு வயித்துல அடுப்பு! பாலு வாங்குறவனுக்கு வயித்திலே நெருப்பு! சந்தையிலே தனியார் பால் ஏகபோகம் இருக்கு! "ஆவின்' பாலை மலிவா மக்களுக்கு வழங்காம எதுக்குடா அரசாங்கம் கோட்டையிலேகெடக்கு?''

பால் விலையேற்றத்தைக் கண்டித்து கடந்த 07.09.09 அன்று சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, பெண்கள் விடுதலை முன்னணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட இம்முழக்கங்கள், பேருந்தில் செல்வோரையும், அப்பேருந்து நிலையத்தைக் கடந்து செல்வோரையும் ஒருகணம் திரும்பிப் பார்க்க வைத்தது!

 

"தாராளமயத்திற்கு பின் விவசாயத்தைþ குறிப்பாக உணவுப் பொருள் விவசாயத்தை அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதால், உணவுப் பொருள் சாகுபடியாகும் விளைநிலங்கள் மெல்லச் சுருங்கி வருவதும்; உணவுப்பொருள் வர்த்தகத்தில் அரசின் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டு அதனை முற்றிலும் தரகு முதலாளிகளிடமும் பன்னாட்டு உணவுக் கழகங்களிடமும் விட்டு விடுவது என்ற அரசின் கொள்கையும்தான், தாறுமாறான இத்தகைய விலையேற்றங்களுக்கு காரணம்!

 

அதுபோலவேþ மேய்ச்சல நிலங்களின்றி மாட்டுத்தீவனத்தை மட்டுமே நம்பி கால்நடைகளை வளர்க்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளின் மீது இடியாய் இறங்கியிருக்கிறதுþ மாட்டுத் தீவனங்களின் விலையேற்றம்!

 

மேய்ச்சல் நிலங்கள் அழிந்தது குறித்தோþ மாட்டுத் தீவனகம்பெனிகள் அறிவித்த தடாலடி விலையேற்றம் குறித்தோ வாய் திறக்காத தமிழக அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கேட்கும் விவசாயிகளையே நம் எதிரியாய் நிறுத்தி பால் விலையை உயர்த்தியிருக்கிறது!'' — என,  இந்த விலையேற்றங்களுக்குப் பின்னுள்ள சதிகளை அம்பலப்படுத்தி கண்டன உரையாற்றினார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன்.

 

பால் விலையேற்றம் உள்ளிட்டு, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக எந்த ஓட்டுக் கட்சியும் போராட முன்வராத நிலையில்þ பெ.வி.மு. சென்னை மாவட்ட செயலர் தோழர் உஷா தலைமையில் பெருந்திரளாக பெண்கள் தம் கைக்குழந்தைகளோடு கலந்து கொண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.


— பு.ஜ. செய்தியாளர்.