1) அரசின் நிர்வாக திறமையின்மையால் கோவில்களுக்கு சொந்தான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வருமானம் வசூலிக்கப்படாமல் உள்ளது.

2) மதச்சார்பற்ற அரசுக்கு கோவில் நிர்வாகத்தை நடத்த எந்த உரிமையும் கிடையாது. உதாரணமாக காஷ்மீர் அமர்நாத் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அம்மாநில அரசு எடுத்துக் கொண்டது. இந்து மக்களின் கோபக் கிளர்ச்சியினால், அந்நிலங்கள் கோவிலுக்கு திரும்பவும் ஒப்படைக்கப்பட்டன.

 

இதுதான் அண்டப்பொய் விஷம – பிரச்சாரமோ?

1) 2007 ம் ஆண்டு மூழுவதும் தில்லை நடராசர் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் வந்த காணிக்கை என்று தீட்சிதர்கள் கொடுத்திருக்கும் கணக்கு என்ன தெரியுமா? 2007 ம் ஆண்டின் மொத்த காணிக்கை வரவு ரூ. 37,199. செலவு 37,000. கையிருப்பு 199 ரூபாய்!

“பரமேஸ்வரன் ஆனந்த நடனம் ஆடறார் பாருங்கோ” என்று தமிழிலும், “தி காஸ்மிக் டான்ஸ் ஆப் லார்டு ஷிவா” என்று ஆங்கிலத்திலும், இன்னும் எல்லா உலக மொழிகளிலும் வருசம் பூரா பேசி தீட்சிதர்கள் வசூலித்த தொகை வெறும் 37,199 ரூபாய்தானாம். அதாவது தினமொன்றுக்கு 100 ரூபாய். நடைபாதை பிள்ளையார் கூட உட்கார்ந்த இடத்தில் 400, 500 வசூல் பண்ணுகிறார். நம்ம நடராசப் பெருமானோ நாள் முழுவதும் டான்ஸ் ஆடுகிறார். இருந்தாலும் தினசரி வசூல் நூறு ரூபாய்தான் என்றால் நம்ப முடிகிறதா? (நன்றி: குருத்து)

 

தினமலர், 10/07/2009 :சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில், மேலும் மூன்று இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலை கடந்த பிப்., 2ம் தேதி தமிழக அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. இக்கோவிலில் முதன் முறையாக, கடந்த பிப்., 5ம் தேதி உண்டியல் வைக்கப்பட்டது. உண்டியல் வைத்த 40 நாட்களில் நிரம்பி வழிந்ததால், கடந்த மார்ச் 12ம் தேதி திறக்கப்பட இருந்தது. தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வர மறுத்ததால், உண்டியல் திறக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஆணையர் உத்தரவுபடி 20ம் தேதி, இணை ஆணையர் திருமகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகள் முதல் சில்லரை காசுகள் வரை மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 929 ரூபாய் (வெறும் 45 நாட்களில்)இருந்தது.

 

தீட்சிதர்கள் கொள்ளையடித்தால் அதில் தவறு எதுவும் இல்லை? இது தானே பாசிச பார்ப்பினியம்.

 

2) //இந்து மக்களின் கோபக் கிளர்ச்சியினால்//


உண்மையில் நடந்தது என்ன?


கடந்த அக்டோபரில் நடைபெற்ற காசுமீர் சட்டசபைத் தேர்தலில், ஜம்முவைச் சேர்ந்த இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளிக் கொள்ளத் திட்டம் போட்ட காங்கிரசு மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை, அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது. இதற்கு எதிராக காசுமீர் பள்ளத்தாக்கில் போராட்டம் வெடிக்கவே, அந்தச் சட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, மாநில ஆட்சியை இழந்தது, காங்கிரசு. நிலம் ரத்து செய்யப்பட்டதை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், துரோகமாகவும் பா.ஜ.க. உருவேற்றியது.

 

தொடர்புடைய பதிவு: காஷ்மீர் : இந்து தேசியத்தின் பரிதாபத் தோல்வி

 

http://rsyf.wordpress.com/2009/09/30/பொன்னான-ஆகஸ்டு-பதினைந்து/