(22 09. 09) Greece, Mytilene தீவு சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளும், சட்டவிரோதகுடியேறிகளும் தம்மை விடுதலை செய்யக் கோரி கலகம் செய்தனர். தொலைதூரதீவொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தம்மை விடுவிக்கும் படியும், கிரேக்க தலைநகர் எதேன்சிற்கு செல்லும் விசேஷ அனுமதிப்பத்திரம்வழங்குமாறும் போராடி வருகின்றனர்.

சிறைமுகாமில் வைக்கப்பட்டிருப்போரில் சில பராயமடையாத சிறுவர்களும் அடங்குவர். அகதிகளின் எழுச்சியின் பின்னர் இவர்களை மட்டும் விடுவிப்பதாக அதிகாரிகள் உத்தரவாதமளித்தனர். "ழே டீழசனநசள" என்ற கிரேக்க மனிதஉரிமை ஆர்வலர்களின் அமைப்பு கடந்த மாதம் இந்த அகதிகளை விடுவிக்குமாறுதடுப்பு முகாம் அருகில் போராட்டம் நடத்தியது.

சிறைமுகாம் கலவரம் பற்றிகேள்விப்பட்ட கிரேக்க ஆர்வலர்கள், முகாமுக்கு வெளியே அகதிகளுக்குஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். கிரேக்க ஆர்வலர்களின் போராட்டத்தால் கவரப்பட்ட உள்ளூர் ஊடகங்களும் சம்பவத்தை பதிவு செய்தன. வெளியுலக தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்ட சிறை முகாமில் 650 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதில் 150 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதநேயத்திற்கு முரணான விதத்தில் அகதிகளை தடுத்து வைக்கும் செயலை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மனித உரிமை அமைப்புகள் கண்டித்துவந்துள்ளன.