11292021தி
Last updateச, 09 அக் 2021 9am

மலையகக் கட்சிகளின் இனனுமொரு துரோகம்

எம்மவர்கள் வடக்கத்தையான் என்று அழைக்கும் மக்கள் பல நூற்றாண்டுகளாக எழுத்தில்லாத அடிமைகளாக இருக்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை எந்தப் பிரிவு மக்களுக்கு கிடைக்கும் அற்ப சலுகைகள் கூட இந்த மக்களுக்கு கிடைக்கும் அற்ப சலுகைகள் கூட இந்த மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது என்ன ஜனநாயகமோ எனக் கேட்பதுமில்லை. சுரண்டல்களின் பார்வையில் இது தானாம் ஜனநாயகம் !

பலநூற்றாண்டுகளாகத் தொழில் புரியும் இம்மக்கள் வேலைக்கு உத்தரவாமோ, மாத வருமானமோ, ஓய்வூதிய வசதியோ அற்ற ஓர் அடிமைகள். நூறு வருடங்களுக்கு முன் அமைந்த ஒரு சிறிய மாட்டுத் தொழுவங்களில் வாழும் இம்மக்களின் துன்ப துயரங்களோ எண்ணிலடங்காதது. தமிழ்த் தேசிய வீரர்களும், மறுபுறம் இப் போராட்டம் அம் மக்களை மேலும் ஒடுக்குமுறைக்கள் நகர்த்தியுள்ளது. இந்த மக்களில் இருந்து உருவான ஒட்டுண்ணிகள் இம் மக்களின் துயரத்தைப் பயன்படுத்தி தமது அரியனைக் கனவுகளை நிறைவு செய்கின்றனர்.

 

அண்மையில் நீண்ட பல வருடங்களுக்கு முன் வழங்கிய சம்பள உயர்வை இன்னும் வழங்காது  இருந்ததை சுட்டிக்காட்டி மக்கள் போராட முனைந்தனர். இதை தொண்டமான் காங்கிரசும் சந்திரசேகர் மலையக மக்கள் மன்னணியும் , அரசியல் பங்கு வகிக்கும் இந்நிலையில் இதற்குக் குரல் கொடுத்து, தமது சொந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டதன் மூலம் இப்போராட்டத்தை அம்போ எனக் கைவிட்டனர். மக்கள் முகத்தை முகத்தைப் பார்த்து குமுறும் அளவுக்கு இத் துரோகம் பெயர் போனது. அம்மக்கள் ஒரு சரியான தலைமையில் அணிதிரள அதற்கான தலைமை இன்றி உள்ள நிலை ஒரு சோகமானதே. இதை இலங்கையின் போராட்ட வரலாறு அண்மையில் தீர்க்குமா என்பது கேள்விக்குறியானதே. இந் நிலை தொடரும் வரை மலையக மக்கள் இன வாதத்திற்கு உட்படும் அதே வேளை அதி கூடிய சுரண்டலுக்கு சுரண்டும் பேர்வழிகளும், அவர்கள் தலைவர்கள் மூலமும் தொடரும்.