கடந்து சென்ற நவம்பர் மார்கழி மாதம் பிரான்சின் வரலாற்றில் மீண்டும் ஒரு முறை பாட்டாளி வர்க்கம் தனது போர்க்குணாம்சத்தை உலகுக்குப் பறைசாற்றியது. பிரஞ்சு மக்களின் போர்க்குணத்துடன் கூடிய போராடும் தன்மை மட்டுமன்றி, வரலாற்றை மாற்றும் தகைமையை தன்னகத்தே கொண்டுள்ளதை இனம் காட்டினர்.
வரலாறு தோறும் பல நீண்ட போராட்டங்கள் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் படிப்படியாக பறித்து வரும் இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக தொழிலாளர்கள் தன்னிச்சையாக கொதித்து கிளர்ந்து எழுந்தனர். இதில் தலையீட்டை நடத்திய தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க கட்சிகள் பாராமுகமாக இருக்க போராட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது. இருந்த போதும் போராட்டத் தீ இன்னமும் பெருந்தீயாக மாறும் நிலையில் பகைத்த வண்ணமே உள்ளது. பிரஞ்சு மக்களின் இன்றைய சமூக வாழ்வியலில் அவர்கள் நிலையை இன்றைய போராட்டத்தை ஒட்டி மேலும் ஆராய இக்கட்டுரையை போராட்டத்தை ஒட்டி மேலும் ஆராய இக்கட்டுரை முயல்கிறது. 5 கோடி 70 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பிரஞ்சு சமூகத்தில் 15 வயதுக்குக் குறைந்தோர் 1 கோடி 20 இலட்சம் பேராவர். மிகுதியாக உள்ளோரில் வேலை செய்யம் தகைமை உள்ளோர் 2 கோடி 45 இலட்சத்து 20 ஆயிம் பேராவர். வேலை செய்தோரில் 2 கோடி 4 இலட்சத்து 20 ஆயிரம் பிரன்சின் மொத்தக் கடன் 35,20,000 கோடி இலங்கை நாணயமாகும். ஒவ்வொரு பிரான்ஸ் காரனின் மீதுள்ள கடன் சுமை 6 இலட்சம் ரூபாவாகும். அத்துடன் 1996 இல் வட்டியாக கொடுக்க உள்ள பணம் 2, 48, 600 கோடியாகும் இது பிரஞ்சு வரவு செலவில் 8.2 வீதமாகும். இக்கடன் 1989 தை விட இன்னும் இரு மடங்காக உள்ளது. பிரஞ்சு சமூகம் மொத்தத்தில் 2,45,80000 பேர் உழைப்புச் சார்ந்த வகையில் தன்னகத்தே ஒருங்கமைந்து உள்ளது. இந்த வேலை செய்யும் பிரிவுகள் எப்படி வேலைப் பிரிவினைக் கொண்டுள்ளது எனப் பார்ப்போம்.
வேலை செய்வோர் - 2,45,80,000
விவசாயம் 12,29, 000 5 வீதமாகும்
சிறு உற்பத்தி
கடை உரிமையாளர், முதலாளிகள் பெரும் அதிகாரிகள் 12,78,160 5.2
அறிவுத்துறை சார்ந்த தொழில் (ஆசிரியர்கள்….) 28,26, 700 11.5
தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையில் உள்ளோர் 49, 16,000 20.0
அலுவலக உத்தியோகத்தர் 64,64,540 26.3
தொழிலாளி 69,31,560 28.2
இராணுவர், பொலிஸ் 2,70,380 1.1
வேலை செய்தோர் - 2,04,20,000 பேர்
ஓய்வு பெற்றோர் 1,14,00,000 20.0
மாணவர்கள் 67,26,000 11.8
மற்றவை 78,9,000 13.7
இந்த வகையில் வேலை செய்யும் பிரிவுகளில் தொழிலாளர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும், அறிவு சார்ந்த பிரிவுகளுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை. இங்கு தொழிலாளர் உடல் உழைப்பு விற்கும் அதே நேரம் அலுவலக மற்றும் அறிவு சார்ந்த ஊழியர்கள் மூளை உழைப்பை விற்கின்றனர். மூவருக்கும் இடையில் சம்பள வேறுபாடு கிடையாது. ஆனால் பாவைனைத் தேவையை ஒட்டி , பிரஞ்சு சமூகத்தின் வளர்ச்சியுடன் ஒட்டிய சொத்துக்கள் மட்டுமே உண்டு. பரம்பரைக்கு கடத்தும் வகையில் சொத்துக்களைக் கொண்டிருப்பது பெருமளவு இல்லை. இந்த பிரிவு மொத்தமாக உழைக்கும் பிரிவில் 65.8 வீதமாகும். இம்மூன்று பிரிவிற்கும் சற்று மேலுள்ள பூர்சுவா வர்க்கப் பிரிவாக உள்ள 20 வீதமானோரில் ஒரு பகுதியினர் தொழிலாளியின் நிலையிலும், மொத்தத்தில் 75.8 வீதப்பிரிவினரிலும் ஒரு பகுதியினர் நீண்ட கடன் வீடுகளை அல்லது சொந்த வீடுகளை தமதாகக் கொண்டுள்ளர். இதைத் தவிர எந்தச் சொத்தும் பெரிதாகக் கிடையாது. சிறு சேமிப்புகள்,வீட்டுப் பொருட்கள் மட்டுமே அவர்கள் சொத்தாக உள்ளது. ஒரு மாதம் சம்;பளமில்லாமல் போயின் வேறு வழி கிடையாது. இந்த நிலைமை இந்த தொழில் சார்ந்த பிரிவுகளுக்கு இடையில் வர்க்க வேறுபாடு தகர்ந்து வருகின்றது. உடல் ,மூளை உழைப்பு சார்ந்த தொழில் வேறுபாடுகள் உள்ளனவே. ஒழிய வாழ்நிலையைப் பொறுத்த வகையில் அதிக ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.
மற்றும் விவசாயத்தில் ஈடுபடும் 5 வீதமான மக்களில் பெரும் விவசாயிகள் முதல் மற்றும் சிறு விவசாயிகள் வரைக் காணப்படுகின்றன. இவர்கள் நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ளதுடன் வீடுகளையும் சொந்தமாகக் கொண்டுள்ளனர். மற்றும் கால் நடைகள், இயந்திர உபகரணங்கள் எனக் கொண்டுள்ள இவர்கள் பெரும் பண்ணைகளைக் நடத்துகின்றனர். இந்த 5 வீதத்துக்கள் தான் அவ்விவசாய நிலத்தில் கூலிக்கு உழைக்கும் தொழிலாளர் பிரிவினரும் உள்ளடங்கியுள்ளனர்.
மற்றும் 5.2 வீத உடைமையாளர்கள் சிறு கடை முதல் பெரிய கடைகள் வரை தமது சொத்தாகக் கொண்டுள்ளனர். மற்றும் பொலிஸ் இராணுவம் என 1.1 விதமுள்ளவர் சொத்து எதுவும் அற்ற சிலர் சிறப்பு சலுகைகளைப் பெற்றவர். இவர்கள் சம்பளம் தொழிலாளியின் ஆகக் குறைந்த சம்பளத்தை விட 2 மடங்கு அதிகமில்லை. பிரஞ்சு சமூக 15 வீதமானோர் தான் சொத்துடைமைகளை (வீடு தவிர்ந்த) கொண்ட ஒரு பிரிவாக உள்ளனர். இதில் கூட பாரிய எற்றத் தாழ்வு காணப்படுகின்றது.
இன்று நவீன விஞ்ஞான வளர்ச்சியுடன் உலகைச் சூரையாடும் திட்டங்கள் ஊடாக யாரை உருவாக்ககிறது என ஆராய்வோமாயின்
வேலை இல்லாமல் பண்ணுவது 23.2 வீதம்
தொழிலாளி, உத்தியயோகத்தர் 32.3 வீதம்
சுயேட்சையான வேலை 2.7 வீதம்
படிப்பவர்களும் வேலைப் பழகுவோரும் 3.2 வீதம்
வேலை செய்யாமல் சும்மா இருக்கும் வேலை 9 வீதம்
உரிமையாளர்கள் 9.8 வீதம்
அறிவு ரீதியான உத்தியோகத்தர் 14.2 வீதம்
மற்றவை 5.6 வீதம்
இந்த வகையில் வேலை இல்லா திண்டாட்டத்தை நவீன விஞ்ஞானத்துடன் கூடிய சுரண்டல்கள் 23.2 வீதமானோர்கள் வேலையில்லாமல் செய்கின்றது. அதே நேரம் 32.3 வீதம் அடிமட்ட உழைக்கும் பிரிவை உருவாக்குகின்றது. சொத்து உரிமையாளரை 9.8 வீதமாக உருவாக்கும் இந்த சுரண்டல் சமூகம் 9 வீதமானோரை சும்மா இருந்து சுக போக வாழ்வை அடையும் பிரிவை உருவாக்குகின்றது.
வேலை இல்லாமல் போனோரும் , அதி குறைந்த உதவித் தொகை பெறுவோரும்
ஆண்டு 1990 1991 1992 1993 1994
அதி குறைந்த அரச உதவி பெறுவோர் 5, 10,100 5,82,400 6,71,200 7,92,900 ----
வேலை இல்லாதோர் 25 இலட்சம் 27 இலட்சம் 29,1,இலட்சம் 31,7இலட்சம் 33,5 இலட்சம்
இவர்களுக்கென பாவித்த பணம் 6,50,900 கோடி 6,76,400 கோடி 6,99,900 கோடி 7,08,900 கோடி -
அதி குறைந்த உதவி பெறுவோர் தொகையும், வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இது 1996 இதிலும் அதிகரிக்கச் செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
புதிதாக உருவான வேலை வாய்ப்புகள் பிரஞ்சு சமூக நெருக்கடியுடன் , அதிகூடிய சுரண்டல் முயற்சியின் ஊடாக பெண்கள் வேலையை இழந்து வருகின்றனர். அதைக் கீலுள்ள புள்ளி விபரங்கள் இனம் காட்டுகின்றது.
புதிதாக உருவாகும் வேலைகளில்
புதிதாகவே செய்வோர் மொத்த வேலை செய்வோர்
ஆண் 72 வீதம் 57 வீதம்
பெண் 28 வீதம் 43 வீதம்
நவீன சுரண்டலுடன் எற்படும் சமூக நெருக்கடி ஊடாக புதிதாக வேலை சேர்க்கும் போது பெண்கள் ஒதுக்கப்படுவதுடன் மூலம், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயநலம் பெற்று இருந்த தன்மை இழக்கப்படுகின்றது.
ஆண்டு 1970 1976 1981 1987 1994 1995
குழந்தை பிறந்த ஆகக் குறைந்த சராசரி வயது 27,2 26,7 27,1 27,9 28,7 28,8
குழந்தைகள் 8,47,783 7,20,395 8,05,483 7,20,00 7,10,500 7,29,00
ஒவ்வொரு பெண்ணுக்கும் 1990 இல் 1.8 குழந்தை பிறப்பு சராசரியாக இருந்தது. இது 1994 இல் 1.7 ஆகவும், 1995 இல் 2.5 ஆகவும் திடீரென அதிகரித்துள்ளது. இது 36 வீதம் அதிகரிப்பை 1994 ஐ விட கொண்டுள்ளது. கடந்த 10 வருடத்தில் 10 வீத அதிகரிப்பைக் கொண்டுள்ளது. அதாவது பெண்களின் வேலைவாய்ப்பு பரிக்கப்பட்டு பெண்கள் வீடுகளில் முடக்கப்பட்டு,ஆணின் அடிமையாக குழந்தை பெறும் இயந்திரமாக மாற்றப்படுவதை புள்ளி விபரம் காட்டுகின்றது. இதே நிலை 1970 நெருக்கடியின் போது இருந்துள்ளதை புள்ளிவிபரம் மேலும் காட்டுகின்றது.
இதே நேரம் அதிகரித்துச் செல்வதை கீழ் உள்ள அட்டவணைக் காட்டுகின்றது:
1980 79,600
1986 1,06,700
1989 1,03,600
1993 1,09,200
விவாகரத்துக்கள் மிக இலகுவாக பிரான்சில் பெற்று விட முடியாது. குழந்தைகள் இருப்பின், ஒருவர் வேலை செய்யாமலிருப்பின் விவாகரத்து என்பது ஒரு பாரிய சுமையாகவே எதிர் கொள்கின்றனர். ஏனெனில் உழைப்பவர் தொடர்ந்து மனைவிக்கும்,குழந்தைக்கும் அல்லது கணவருக்கும் பணம் கட்ட வேண்டும். என்பதில் விவாகரத்து எடுப்பதை தவிர்க்கின்றனர். அல்லது திருமணம் செய்யாமல் வாழ்தல் அதிகரித்துச் செல்கின்றது. இது குடும்பமாகவோ அல்லது தனித்தனியாகவோ சேர்ந்து இருத்தல் என்ற வகையில் சமூகம் தன்னளவில் இசைவாக்கம் அடைகின்றது. இது விவாகரத்து மீதுள்ள கடுமையான போக்கு,மற்றும் இவ்வரசு மக்கள் மீது சுமது;தும் பொருளாதாரச் சுமைகள், எனப் பல்வேறு நெருக்கடிகளை பிரஞ்சு மக்கள் எதிர்கொள்வதில் சமூகத்தக்கு இடையில் பாரிய பிளவுகளை எற்படுத்துகின்றது.
பிரஞ்சு சமூகத்தில் மக்களின் இணைந்து வாழும் தன்மை
வயது 35 க்கு குறைந்த 35 - 39 40-44 45 கூட 10க்கு குறைந்த 10-15 15 கூட
ஒன்றாக வாழ்வது இல்லை
ஆனால் துணை உண்டு 34 வீதம் 17 9 5 13 13 8
சோந்து வாழ்தல் 15 16 12 5 18 18 2
தனித்து வாழ்தல் 51 67 79 90 69 78 90
பிரஞ்சு சமுதாயம் தனிமனித முதன்மைப்படுத்தலுடன் கூடிய பொருளாதார கனவுகளுடன் குடும்ப அலகு சிதறிய வண்ணம் உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட பிள்ளை கூட பெற்றாருடன் ஒட்டி வாழ முடியாத வகையில் பிரஞ்சு பெற்றாரின் பொருளாதார, முதன்மைப்படுத்தல் பிரிந்து விடுகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் கூட குறைந்த வயதில் இருக்கும் பிணைப்பு வயது செல்லச் செல்ல பிரிவு அதிகரித்துச் செல்கின்றது. இங்கு ஆணாதிக்க பிளவுகளை விட பொருளாதார தனி நலன் முதன்மையான இடத்தைப் பிடிப்பதால் குடும்பங்கள் சிதறுவது மட்டுமன்றி தனித்தனியாக வாழ்வது அதிகரித்துச் செல்கின்றது. இவ்விடத்தில் பெண்களைப் பொறுத்தவரையில் வீட்டு வேலைகளில் பெண்களின் சுமை என்பது வீழ்ச்சி கண்டுள்ளது. அதைக் கீழுள்ள அட்டவணையில் பார்க்க முடியும்.
பெண்களின் வீட்டு வேலை நேரம்
வீதம் பேர் நேரம் ஒரு கிழமைக்கு
24.5 வீதம் 1 தொடக்கம் 2 மணித்தியாலம்
38.2 வீதம் 3 தொடக்கம் 5 மணித்தியாலம்
19.2 வீதம் 6 தொடக்கம் 9 மணித்தியாலம்
08.6 வீதம் 10 தொடக்கம் 19 மணித்தியாலம்
04.5 வீதம் 20 தொடக்கம் 29 மணித்தியாலம்
0.4 வீதம் 30 தொடக்கம் 39மணித்தியாலம்
இந்த வகையில் உள்ள புள்ளி விபரம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் சில விடயத்தில் வேறுபாடு கண்ட போதும் பொதுவாக சமனாகக் காணப்படுகின்றது. ஆனால் சம்பள வேறுபாடு பாரியளவில் வேறுபடுகின்றது. இந்த ஏற்றத்தாழ்வு என்பது எதிர்காலத்தில் நீங்கினாலும் கூட ஆணாதிக்கம் தொடர்வது தவிர்க்க முடியாது. கூலியில் உள்ள வேறுபாட்டை நாம் பார்ப்போமாகின்
வேலை பெண் ஆண் அதிகரிப்பு
பாதுகாப்புத் துறை 1,96,200 F 2,69,000F +37வீதம்
தொ.நுட்பவியல் 1,15,800 F 1,37,300F +18வீதம்
அலுவலகங்கள் 86,800 F 96,000F +11வீதம்
தொழிலாளர் 72,100F 93,600F +29வீதம்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் காணப்படும் இந்த சம்பள வேறுபாடு சட்டப்படி கிடையாது. ஆனால் ஒரே தெரிலுக்கு வழங்கப்படும் வேறுபட்ட சம்;பள வீதம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இங்கு தொழிலாளர்கள், அலுவலகர்கள் சம்பளம் உண்மையில் மேல் உள்ளபடி கையில் கிடைப்பது அல்ல. மாறாக இவை வரிசைகளை உள்ளடக்கியதே. அதாவது பென்சன், மருத்துவம் , வேலையில்லாதோர் வரி என பல வரிகள் கழிக்கப்பட்ட பின் குகள் மட்டுமே. அது பெண் தொழிலாளிக்கும் பொருந்தும். மாதச் சராசரி 5000 கு களை வருமானமாகப் பெறும் ஆகக் குறைந்த சம்பள விகிதம் பெண்ணுக்கும் ஆணுக்கும் சமனாகவே உள்ளது. இது அலுவலர்களுக்கு இடையில் அதிக வேறுபாடு இல்லை என்பது முக்கியமாகும். சம்பளமாகப் போட்டு மூன்றிலொரு பங்கு அரசுக்கு சம்பளம் தரும் போதே கட்டப்பட்டு விடுகின்றது. மிகுதியாகப் பெறும் மூன்றிலிரண்டு பங்கில் பொருட்கள், மற்றும் பாவணைப்பான வரியாக 20.6 வீதம் நேரடியாக அரசுக்கு விட்டுக்காப்புறுதி வரி, குப்பை அள்ள வரி , மின்சார வரி , தொலை பேசி வரி என எண்ணற்ற வரிகள் நேரடியாகக் கோரப்படுகின்றது.
அண்மையில் 18.6 வீதமாக இருந்த பொருட்களுக்கான மற்றும் பாவணைக்கான வரி 2 வீதமாக அரசு திடீரென அதிகரித்துள்ளது. இந்த 2 வீத அதிகரிப்பின் மூலம் அரசு திரட்டும் பணம் 1,21,000 கோடி இலங்கைப் பணம் ஆகும். பிரஞ்சு உழைக்கும் மக்கள் மீது வரி மூலம் சுமைகளை ஏற்றும் அதே நேரம் முதலாளிகளின் வரி குறைக்கப்படுகின்றது.
ஒரு முதலீட்டாளியின் வரி 1987 இல் 100 வீதமாக இருந்ததெனின்
1998 84 வீதம்
1989 71 வீதம்
1991 54வீதம்
1992 48வீதம்
1987 இல் 100 வீதமாக முதலீட்டாளர்கள் வரி அறிவிடப்பட்டது எனின், இது கடந்த 5 வருடத்தில் 50 வீதத்தால் குறைந்த 48 வீதமாக மாறியுள்ளது. அதாவது முதலாளிக்கு சலுகையும், கொள்ளயடிப்புக்கு கதவுகளையும் திறந்து விடவும் செய்யும் அரசு பிரஞ்சுத் தொழிலாளியின் முதுகில் சுமைகளை ஏற்றுவது தொடர்கிறது. அரசு வரி மூலம் மொத்த சமூகத்தில் இருந்து பெறும் பணம் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் வேறுபடுகின்றது.
பிரஞ்சு, இங்கிலாந்து 52 முதல் 46 வீதம் வரை
ஜேர்மனி, ஒல்லாந்து,டென்மார்க் ,இத்தாலி ,அயர்லாந்து 45 முதல் 31 வீதம் வரை
ஸ்பானியா, சுவிஸ், பெல்ஜியம் 30 முதல் 25 வீதம் வரை
அதாவது ஒன்றிணைந்த ஐரோப்பாவில் இவ்வரி வேறுபாடு என்பது காலப்போக்கில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இவ்வரி வேறுபாடு ஒரு புறம் இருக்க ஒரு தொழிலாளியின் சம்பளத்துக்கு தனியாக மொத்த வரி விதிக்கபட்டுள்ளது. உதாரணமாக திருமணமோ அல்லது குழந்தையோ இல்லாது இருப்பின் ஒரு மாதச் சம்பளம் வரியாகக் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. கணவன், மனைவி ஒன்றாக இருப்பின் குழந்தை இல்லாது இருப்பின் இருவரின் ஒருமாதச் சம்பளம் வரியாக அரசு பெறுகின்றது. இப்படியாக பிரஞ்சு சமூகம் வரிகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அதியுயர் சுரண்டலுக்கு கதவு திறந்துள்ளது. இங்கு தொழில்களைப் பொறுத்த வரையில் ஏதாவது ஒரு முதலீட்டை உள்ளடக்கிய மொத்த தொழிலமைப்புக்கள் 23 இலட்சகமாகவுள்ளது. இதில் 21 இலட்சம் சிறு முதலீடுகளை உள்ளடக்கியுள்ளது. மிகுதி 2 இலட்சம் தொழில்கள் இன்று புதிதாக தொழிலை தொடங்க விரும்புவோர் குறைந்தும் மற்றும் அதில் தோல்வி காண்பது அதிகரித்துச் செல்கின்றது.
உருவாகும் வேலைகள்
தனிப்பட்ட உற்பத்தியை செய்ய விரும்புவோர் 6 இலட்சம் பேர்
தனிப்பட்ட உற்பத்தியை செய்ய திட்டம் வைத்திருப்போர் 35 முதல் 40 இலட்சம் பேர்
ஒவ்வொரு வருடமும் புதிதாக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார் 6 முதல் 7 இலட்சம் பேர்
புதிய உற்பத்தி (ஒவ்வொரு வருடம்) (புதிதாக , மீள் உருவாக்கம்) 2,2 இலட்சம் பேர்
2 வருடம் நீடிக்கும் தொழில் 1,6 இலட்சம்
5 வருடம் நீடிக்கும் தொழில் 1,1 இலட்சம்
5 வருடமும் அதற்குக் கூடவும் நீடிக்கும் தொழில் 7000 மட்;டுமேயாகும்
அதாவது 5 வருடங்கள் பின் நீடிக்கம் வகையில் தொழில்கள் எஞ்சுவது 7000 மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. 2,2 இலட்சம் தொழில்களில் மிஞ்சுவது என்னவொ 7000 மட்டுமே. அதே நேரம் பிரஞ்சு மொத்த சனத்தொகையில் 10 வீதமானோர் புதிய முதலீட்டை செய்ய விரம்பகின்றனர். ஆனால் 5 வீதம் மட்டுமே திட்டத்தை வைத்துள்ளனர்இ அதே நேரம் உருவாகும் தொழில் முயற்சியில் ஈடுபடுவோர் 37 வீதமானோர் மட்;டுமேயாகும். இதன் மூலம் தொழில் பெறுவோர் மொத்த பிரஞ்சு மக்களில் 1.2 வீதமானோர் மட்டுமேயாகும். இதைத் கீழுள்ள அட்டவணை மூலம் ஆராய்வோமாயின்
உற்பத்தியில் ஈடுபடுவோர் (புதிய)
ஆண்டு மொத்தமாகத் தொழில் கிட்டத் தட்ட புதிய தனியார் மீளப்புதியது மீள ஈடுபடுவது
1987 2,90,000 1,90,000 60,000 40,000
1993 2,73,500 1,70,000 54,400 54,400
கடந்த ஆறு வருடத்தை எடுத்து ஆராய்வோமாகில் புதிய முதலீட்டில் ஈடுபடுவார் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. வளர்ச்சி பெற்ற பெரும் ஏகபோக முதலீட்டாளர்களுடன் போட்டி போட முடியாத வகையில் தொழில் ரீதியாக மூடப்படுகின்றன. அத்துடன் இந்நிலை ஏற்பட என்ன காரணங்கள் ஏற்பட என்ன காரணங்கள் என அராய்வோமாயின்
1. கடைகளில் 70 வீதம் நெருக்கடிக்கள் சிக்கியுள்ளது. ஏன்
அ. விற்பனை இலக்கை அடைந்துள்ளது.
ஆ. இழப்பை ஈடுசெய்ய முடியாமை
இ. உற்பத்தி பற்றாக்குறை
2. தொழிலை பராமரிப்பதில் 40 வீதம் நெருக்கடி உள்ளாக்கியுள்ளது.
அ. நிதியின்மை
ஆ. நிர்ணயம் செய்ததை விட அதிகளவு செலவு
இ. வாங்குவோர் பணத்தைக் கொடுக்காமை
3. தொழிநுட்ப நெருக்கடி 30 வீத நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
அ. தரமின்றிய உற்பத்தி
ஆ. தேவையான தொழில்நுட்பம் இல்லை.
இ. பிழையான உற்பத்தியில் ஈடுபடுதல்
4. கூட்டுதொழிலிலுள்ள நெருக்கடி 15 வீதம்
அ. குடும்பப் பிரச்சனை
ஆ. சேர்ந்த துணை நெருக்கடி
இந்த வகையில் மொத்த உற்பத்தியும் நெருக்கடியுள்ளாக்கி வருகின்றது. இது இன்று வேலையின்மையை ஏற்படுத்தி சமூக நெரக்கடியைத் தோற்றுவித்துள்ளது.
இன்னுமொரு புறத்தில் சிறு உற்பத்திகள் நெருக்கடிகுள்ளாக பெரிய பாரிய முதலீட்டு நடவடிக்கைகள் காரணமாக உள்ளன. உதாரணமாக 1993 ஆண்டு புள்ளிவிபரப்படி கடைகள் தொடர்பாக வரிவரியாக ஆராய்வோமாயின் அதிர்ச்சியைக் கொடுக்கும். இன்று உப்பு, புளி முதல் கம்பியூட்டர் ஈறாக கொண்ட பாரிய கடைகள் உருவாகி வருகின்றது.
ஒரு இலட்சம் பெருக்கு இது போன்ற கடைகள் எத்தனை உள்ளது என ஆரய்வோமாயின்
பிரான்ஸ் - 1.5
இங்கிலாந்து – 1.3
ஜெர்மனி – 1.3
பெல்ஜியம் - 1
என்ற விகிதத்தில் எங்கும் காணப்படுகின்றது. இது மற்றைய கடைகளுடன் ஒப்பிடும் போது மலிவான விலையைக் கொண்டிருப்பதுடன் எல்லாப் பொருட்களையும் ஒரே கடையில் வாங்கி விட முடியும். இப் பெரிய பூதாகரமான கடைகள் தமக்குள்ளும் விழுங்கிக் கொள்வது ஒரு பாரிய நிதி நிறுவனமாகும் மாறிவருகின்றது. உதாரணமாக உயசசகழரச ஐரோப்பாவில் 50 வது மிகப் பெரிய கம்பனியாகும். பிரான்சில் 5 வது பெரிய நிறுவனமாகும். பிரான்சில் காணப்படும்; மிகப் பெரிய கடைகளை வகைப்படுத்தலில் நாம் ஈடுபடின்
இடை நடுக்கடைகள் 660 சதுர மீற்றர் பரப்புக் கொண்டவை. (தரமானவை - 1010 சதுர.மீ)
இவை குறைந்தது 1000 உற்பத்தியை தாம் செய்கின்றன. அதே நேரம் பெரிய கடைகள் 10,000 க்கு மேல் வௌ;வேறு விதமான உற்பத்தியை செய்கின்றன.
கடைகளின் வகைகளும் அதன் பரப்பளவும் (சதுர மீற்றரில்)
Superelte 100 – 400
Super
Hyper
இந்த வகையில் வகைபிரிக்க கடைகள் பிரான்சில் எத்தனை எவ்வளவு முதலீட்டுடன் உள்ளன என அனைத்தையும் ஆராய்வோமாயின்
1.முதலீடு இலங்கை நாணயத்தில கோடி ரூபாயில்
2.கடை எண்ணிக்கை
3. பரப்பளவு சதுர மீற்றரில்
4.வேலையாள் எண்ணிக்கை
1 2 3 4
Carrefour |
1,44,430 |
61 heper 446 super champion 1875 super shop |
14 இலட்சம் |
76,000 |
|
Continent |
1,39,480 |
61 hyper , 446super champion 1875 super shop |
14 இலட்சம் |
47,000 |
|
Centre lectne |
1,25,400 |
263 hyper 264 super |
15 இலட்சம் |
51,000 |
|
Intermache |
1,24,850 |
46 hyper |
2,1 இலட்சம் |
65,000 |
|
Auchan |
88,000 |
1530 super |
4,8 இலட்சம் |
24,000 |
|
Casino |
70,400(1992 இல்) |
56 hyper 1285 super |
13 இலட்சம் |
44,000 |
|
nkhj;jk; |
6,92,560 |
629 hyper 5400 super |
81,8 இலட்சம் |
3,09,000 |
இந்த வகையில் உள்ள ஆறு மிகப் பெரிய முதலீட்டு நிறுவனங்கள், பல ஆயிரம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அதே நேரம் 7 இலட்சம் இலங்கைக் கோடிகளை முதலிட்டுள்ளனர். மொத்தமாக 3.1 இலட்சம் பேருக்கு மட்டும் வேலையை வழங்கும் இந்த முதலீட்டாளர்கள் பல சிறு உற்பத்திகளையும், கடைகளையும் மூடவைத்துள்ளனர். இந்த நிகழ்வு என்பது 1980 களுக்குப் பின்பு நிகழ்ந்துவருபவை தான். இதை ஆராய்வோமாயின்
மிகப் பெரிய கடைகள் திறத்தல் தொடர்பாக
ஆண்டு hyper super
1.மொத்த சதுர மீற்றரில் (இலட்சம்)
2.திறந்த புதிய கடைகள்
3.மொத்த கடை
4.மொத்த சதுர மிற்றரில் (இலட்சம்)
5.திறந்த புதிய கடைகள்
6.மொத்த கடை
1 2 3 4 5 6
1987 |
38,7 |
14 |
694 |
54,5 |
345 |
5912 |
|
1988 |
|
25 |
759 |
|
319 |
6100 |
|
1989 |
43,2 |
21 |
809 |
61,0 |
363 |
6400 |
|
1990 |
|
18 |
861 |
|
355 |
6550 |
|
1991 |
|
14 |
907 |
|
325 |
6200 |
|
1992 |
52,8 |
17 |
950 |
70,0 |
398 |
7100 |
|
1993 |
56,0 |
5 |
945 |
72,0 |
300 |
7400 |
இந்த வகையில் பெருகி வரும் பெரிய கடைகள் தமக்குள் விழுங்கிக் கொள்வதன் மூலம் இந்நிலையை அடைந்தள்ளது, 1957 க்கு முதல் பெரிய கடை 400 சதுர மீற்றர் பரப்பைக் கொண்டதாக இருந்தது. 1960 இல் உருவான உயசசகழரச 850 சதுர மீ பரப்பைக் மட்டுமே கொண்டிருந்தது. 1991 இல் முதன் முதலில் 1,10,000 கோடி இலங்கை ரூபா முதலீட்டை (10000 கோடி பிராங்குகள்) முதன் முதலில் இக்கடைகள் தொட்டன. ஆகப் பெரிய கடையை 1993 இல் உழசசகழரச 24,000 சதுர மீற்றரில் அமைத்தது. 1988 இல் மிகப் பெரிய கடை மட்டுமே இருந்தது. 1993 இல் 749 hலிநச கடைகளாக இருந்தது 1994 இல் 1000 கூடுதலாக அதிகரித்தது. அதே நேரம் 1992 இல் 58 வீதமாக புதிய கடைத்திறப்பு இருந்தது. 1994 இல் 1000 கூடுதலாக அதிகரித்தது. அதே நேரம் இருந்த hலிநச கடைகளில் 399 பிரஞ்சு முதலாளிகளுடையது. 350 வெளிநாட்டுக் கடைகள் ஆகும். அதே நேரம் இதில் வேலை செய்யும் தொழிலாளர் எண்ணிக்கை 1992 இல் 52 வீதமாக இருந்தது 1993 இல் 70 வீதமாக அதிகரித்தது. இதே நேரம் இது பிரஞ்சு மக்கயின் தேவை, மற்றும் உற்பத்தியில் பாரிய கட்டுப்பாட்டைக் கொண்டு இக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதில்
உற்பத்தி செய்து விற்பது 55 வீதம்
உற்பத்தி செய்யாத விற்பனை 45 வீதம்
குறிப்பாக பிரஞ்சுத் தேவையில் இறைச்சி விற்பனையில் 46 வீதத்தையும் பழம் + மரக்கறி 50 வீதத்தையும் பாண் வகைகள் , கேக்குகள் 40 வீதத்தையும் தாமே உற்பத்தி என்பது அதிகரித்துச் செல்வதை கீழ் உள்ள அட்டவணை நிறுவுகின்றது.
உற்பத்தியும் விற்பனையும் ( வீதம் ) உற்பத்தி செய்யாத விற்பனை ( வீதம் )
ஆண்டு குடிவகை போமால் பால் வகை ரவி, கமரா, வீடியோ ….. இலக்ரோனிக்
பெரிய கடை சிறிய மத்திய கடை வேறு விதமாக பெரிய கடை சிறிய கடை
1980 |
44,6 |
40,6 |
14.8 |
16.5 |
55 |
|
|
1988 |
56,1 |
30.3 |
13.6 |
---- |
----- |
|
|
1992 |
60.6 |
26.2 |
13.2 |
31.8 |
45,8 |
|
பெரிய கடைகள் சிறிய கடைகளை விழுங்குவதன் மூலம் மற்றும் உற்பத்தி விற்பனையில் பெரிய அளவு பங்கு வகிப்பதாலும் சிறிய உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் மூடப்படுகின்றன. இதன் மூலம் பாரிய தொழில் அதிகளவாக உள்ளதும் பெரிய தொழில்கள் குறைவாக உள்ளதும் கவனிக்கத்தக்கது. சிறிய தொழில்களின் மூடுவிழாவை பெரிய தொழில்கள் தொடக்கி வைக்கின்றன.
1993 புதிதாக உருவான வேலை வாய்ப்புக்களை ஆராயின்
1,26,299 சொந்த வேலை வாய்ப்புக்களை ஆராயின்
31,081 வேலை இடத்தில் வேலை செய்வோர் 1-2 பேர்
6,801 வேலை இடத்தில் வேலை செய்வோர் 3-5 பேர்
1741 வேலை இடத்தில் வேலை செய்வோர் 6-9 பேர்
1884 வேலை இடத்தில் வேலை செய்வோர் 10-19 பேர்
497 வேலை இடத்தில் வேலை செய்வோர் 20 பேர்
தனித் தொழில் சிறு தொழில்களில் பெரும் தொகையில் மக்கள் ஈடுபடுவதால் அதன் மீது பெரும் நிதி நிறுவனங்கள் தாக்குதலில் இங்கு வேலையிழப்பு அதிகரித்தச் செல்கின்றது. இதைக் கட்டுப்படுத்த முடியாத வகையில் சிறு தொழில் மூடு விழா வேலையின்மையை மேலும் மோசமாக்கி சென்ற வண்ணம் உள்ளது.
1994 இல் பிரான்சில் முதலீட்டு ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் தொழில் சொத்துக்கள் அடிப்படையில் ஆராயின்
முதலீடு கு நெருக்கடி சந்திப்பவை
0-10,000 20 வீதம்
10,000-26,000 16 வீதம்
50,000- 50,000 20 வீதம்
1,00,000-2,50,000 23 வீதம்
2,50,000-5,00,000 13 வீதம்
5,00,000- 10,00,000 5 வீதம்
5,00,000-10,00,000 2 வீதம்
10,00,000 ----- , 1 வீதம்
சிறு முதலீடுகளில் ஏற்படும் நெருக்கடியை மேலுள்ள அட்டவணை மேலும் தெளிவாக்குகின்றது. இன்று வேலையில்லாத்திண்டாட்டத்தை எடுத்து ஆராய்வோமாயின் ஐரோப்பிய நாடுகளில் மொத்த வேலையின்மை 1993 இல் 1 கோடி இலட்சம் பேர் ஆவர். இது ஸ்பெயினில் 23 வீதமாக உள்ளது. இதிலும் 15 தொடக்கம் 24 வயது வரையிலான இளம் சந்ததியில் வேலையின்மை அதிகமாக உள்ளது. இதை 1993 ம் புள்ளி விபரத்தைக் கொண்டு ஆராய்வோயின்
ஸ்பெயின் 43.2 வீதம்
இத்தாலி 30.6 வீதம்
பின்லாந்து 30.5 வீதம்
கிறிஸ் 28.8 வீதம்
அயர்வாந்து 25 வீதம்
பிரான்சு 24.6 வீதம்
இங்கிலாந்து 17.3 வீதம்
அமெரிக்கா 13.2 வீதம்
ஜெர்மனி 8.2 வீதம்
யப்பான் 5.2 வீதம்
ஐரோப்பிய சமூகத்தில் இளைஞர் சமுதாயம் முழுமையாகச் சூறையாடப்படுகின்றது. உடல் பலம் உள்ள இப்பிரிவினர் அரசின் கொடூர சூறையாடும் சுரண்டும் நோக்கில் கைவிடப்படுகின்றனர். இவர்கள் 25 வயதுக்கு முன் எந்த உதவியையும் அரசிடம் பெற முடியாது என்ற அடிப்படைக் காரணத்துடன், இயல்பாக பெற்றோரைச் சார்ந்து வாழ நிர்ப்பந்திக்கின்ற வழிகளில் இச்சுரண்டும் அரசுகள் சமூக நெருக்கடியை இளம் சந்ததி மீது சுமத்துகின்றது. ஆனால் இது மறுபுறம் லும்பன்; வாழ்வை நகர்த்துவதுடன், வன்முறைக் கும்பல்களை மட்டும் வாழும் மொத்த உழைகை;கும் தகுதியுள்ளவர்களின் புள்ளி விபரத்தை ஆராய்வோமாயின்
ஸ்பெயின் 18 வீதம்
அயர்லாந்து, டென்மார்க் 12 வீதம்
பெல்ஜியம் 10 வீதம்
பிரான்சு 7 வீதம்
சுவிஸ், இங்கிலாந்து 5 வீதம்
ஜெர்மனி 4 வீதம்
போர்த்துக்கல் 2 வீதம்
லக்சம்பேர்க் 1 வீதம்
இந்த புள்ளி விபரத்தின் படி அரசு உதவியையும் சார்ந்துள்ளவர்கள் மிகக் குறைவான அடிப்படைத் தேவைகயைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வாழ்வை வாழ்கின்றனர். உதாரணமாக பிரான்சில் ஆகக் குறைந்த சராசரிப் பணக்கொடுப்பனவு 2000 பிராங்காகும். இதைக் கொண்டு வீட்டு வாடகையைத்தானும் கட்ட முடியாது. இதனால் வீட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இன்று பிரான்சில் ஆறு இலட்சம் பேர் வீதிகளில் வசிக்கின்றனர். இன்று எந்தப் புகை வண்டியிலும் பிச்சை கேட்பவர்களை சாதாரணமாகச் சந்திக்க முடியும். இது 5 வருடத்திற்கு முன் கிடையாது.
இன்று வீட்டுப் பிரச்சனை என்பது ஒரு போதும் பிரச்சனையாக மாறியுள்ளது. இன்று பிரான்சில் 6 இலட்சம் பேர் வீதிகளில் வசிக்கும் அதே நேரம் 10 இலட்சம் பேர் அரசிடம் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதே நேரம் 50 இலட்சம் வீடுகள் அடிப்படை வசதியற்ற மிக மோசமான வீடுகள் ஆகும். இந்நிலையில் 20 இலட்சம் வீடுகள் யாருக்கும் கொடுக்காமல் வாடகை உயர்த்த வகையில் திர்மானிக்க பூட்டி வைக்கப்பட்டுள்ளது. 5,10 வருடமாக பாரிய மாடிக் கட்டடங்கள் வாடகைக்கு கொடுக்காது பூட்டப்பட்டுள்ளது. இதை அரசு எடுத்து விநியோகிக்க வேண்டும் எனக் குரல்கள் வாழும் இன்றைய நிலைமையிலும் அரசு மறுத்து வருகின்றது. அதைத் தனிமனித உரிமை என நியாயப்படுத்துகின்றது. இந் நிலையில் வீடுதேடுவோர் ஒரு சங்கமாக இணைத்துள்ளனர். 5,10 வருட வாடகைக்கு கொடுக்காத பூட்டிய வீடுகள் திடீர் எனப் புகுந்து கைப்பற்றுவதும், அதை விநியோகிப்பதும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் வீட்டு வாடகை எந்த வித கட்டுப்பாடும் இன்றி தனிப்பட்ட முதலாளிகள் அதிகரித்துச் செல்கின்றனர். இது வருடம் தொடர் கதையாக உள்ளது. அதாவது பொருட்களை தேங்க வைத்து அதைக் கடலில் கொட்டி விலையைக் கூட்டுகின்றனர். பிரான்சில் உள்ள பூட்டிய வீடுகள் 20 இலட்சத்தையும் பங்கிடின் பிரான்சில் வீட்டுப் பிரச்சனை தீர்வதுடன், வீட்டு வாடகையும் விழ்ச்சி காணும். அத்துடன் பணக்காரர் பாவணையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
பிரான்சு மக்களின் வீடு வாங்கும் தன்மை குறைந்து செல்கின்றது. இது சொந்த பணத்திலோ அல்லது 10 முதல் 20 வருட கடனடிப்படையிலும் வாங்குவது குறைந்துள்ளது.
ஆண்டு வாங்கிய வீடு
1985 5,06,000
1986 5,19,000
1987 5,69,000
1988 5,27,000
1990 4,84,000
1991 4,73,000
1991 4,19,000
1992 3,68,000
மற்றும் வாடகையும் 20 வருட கடன் வாங்கிய சொந்த வீட்டுக்கு கட்டும் கடன் பணமும் கிட்டத்தட்ட சமனாக இருந்தும் வீடு வாங்குகின்றது வீழ்ச்சியடைந்துள்ளது. கராணம் மக்களின் சமூகப் பொருளாதார நெருக்கடியேயாகும்.
அத்துடன் அலுவலக தேவைக்கு எனக் கட்டிய கட்டடங்கள் எந்த வித பயன்பாடும் இன்றி வருடக் கணக்கில் மூடியபடி உள்ளது. இதன் பரப்பளவு தலைநகரில் மட்டும் 43,000 வீடுகளை உருவாக்க முடியும். இந்த புள்ளி விபரங்களை பாரிசுக்கள் மட்டும் எடுக்கப்பட்டவையே. இந்தக் கட்டிடங்களை வீடுகளாக்கும்படி போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்து பாரிசில் வாழும் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது. அதிகரித்த வாடகை, மற்றும் கிராமத்துக்கும் நகரத்தக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு குறைந்து செல்வது முக்கிய காரணமாகும். பாரிசில் வாழும் எண்ணிக்கை ஆராயின்
போராடும் தொழிலாளிகளின் அலுவலகம்
ஆண்டு எண்ணிக்கை
1962 28,00,000
1968 26,00,000
1975 23,00,000
1982 21,70,000
1990 21,50,000
பாரிசில் வாழும் எண்ணக்கை குறைந்து சென்ற அதே நேரம் அங்கு தொழில் நிமித்தம் எப்படி பிரிந்து உள்ளனர் எனப்பார்ப்போம்.
1982 1990
முதலாளிகள்,சிறு கைவினையர்கள்,கடை உரிமையாளர் 81,000 79,900
உயர் அதிகாரிகள் 2,14,100 2,38,600
நடுத்தரமான தகுதியுடைய வேலையாட்கள் 3,58,400 2,93,400
அலுவலகர்கள் 1,95,400 1,64,300
ஒய்வு பெற்றோர் 3,22,500 3,34,500
இந்த புள்ளி விபரப்படி பாரிசில் நகரில் இருந்து அடிமட்ட ஊழியர்கள், தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது. பாரிசில் நகரிலிருந்து தொழிலாளர்கள் குறைந்து செல்வதும் அதிகரித்த வாழ்க்கைச் செலவும் இதைத் தூண்டுகின்றது. பிரான்சின் பல்வேறு துறைகளில் கடந்த 15 வருடத்தை எடுத்து ஆராய்வோமாயின்
1. 1981 இல் 53 இலட்சமாக இருந்த இயந்திரம் சார்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 1994 இல் 41 இலட்சமாக குறைந்துள்ளது.
2. 1981 இல் 10 வீதமாக இருந்த சம்பளக் கோரிக்கைப் போராட்டம் 1994 இல் 5 வீதமாக குறைந்தள்ளது.
3. 1981 இல் 40.64 மண் நேர வேலையாக இருந்து 1994 இல் 38.96 ஆகக் குறைந்துள்ளது.
4. 1981 இல் 18,000,000 நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1994 இல் 7,46,000 ஆகக் குறைந்துள்ளது.
5. 1981 இல் 18 வீதமாக பணத்தைச் சேமித்த தன்மை 1995 இல் 14 வீதமாக குறைந்துள்ளது.
6. 1981 இல் 18 இலட்சமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் 1994 இல் 33 இலட்சமாக அதிகரித்தது.
7. 1981 இல் 8090 கோhடி பற்றாக்குறையாக இருந்த பட்ஜட் 1995 இல் 32180 கோடி அதிகரித்தது
8. 1981 இல் 41,9 வீதமாக இரந்த வரிகள் 1995 இல் 44.2 வீதமாக அதிகரித்துள்ளது.
9. 1981 இல் 660 கோடி பிராங்குகள் மருத்துவ நெருக்கடி 1995 இல் 2300 கோடியாய் அதிகரித்தது.
10. இல் 4,26,800 மாக இருந்த அரச உதவி பெறுவோர் 1995 இல் 9,46,800 அக அதிகரித்துள்ளது.
மேலே எடுத்துள்ள 10 விடயங்களை எடுப்பின் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில் நெருக்கடியை பிரன்சு சமூகம் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. உதாரணமாக இயந்திர தொழிலிருந்து கடந்த 13 வருடத்தில் 12 இலட்சம் பேரை வேலைவிட்டு நீக்கி உள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
ஆண்டு வேலையை வழி நடத்துபவர்கள் வேலையாட்க்கள்
1983 2,19,.000 6,50,000
1998 1,10,000 4,50,000
இதே போன்று துணித்துறையைச் சார்ந்து ஐரோப்பிய முழுக்கு ஆராயின்
தொழிலாளர் தொழிநுற்பவியலாளர் உருவாக்குவோர் டிசைனர் நிர்வாகிகள் விற்பனையாளர்
1992 10,65,000 1,02,000 48,000 1,34,000
2002 6,10,000- 42வீதம் 67,000 -34வீதம் 51,000+6.2வீதம் 1,56,000
தொழிலாளர் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவதும் அதிகரித்துச் செல்கின்றது. அதே நேரம் சிறு துறைகளில் முதலீட்டாளர்கள் குறையும் அதே நேரம் சில துறையில் அதிகரிக்கின்றனர். இப்படி அதிகரித்துச் செல்லும் வேலை இழப்புக்கு இந்த சமுதாயத்தில் இந்த அமைப்புக்கள் தீர்வு எதுவும் தேடிவிட முடியாது.
இதற்கு எதிராக தொழிற்சங்க வெறும் பொருளாதார போரட்டங்கள் கூட கடந்த 13 வருடத்தில் 10 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைந்துள்ளது. இதைக் கடந்த 20 வருடத்தில் எடுத்து ஆராயின்
1974- 79 களில் சராசரி 40 இலட்சம் வேலை நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது
1981-85 களில் சராசரி 40 இலட்சம் வேலை நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது
1992-94 களில் சராசரி 40 இலட்சம் வேலை நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது
மேற்கண்டவாறான வகையில் வேலை நிறுத்தம் குறைந்து சென்றுள்ளது. தொழிற்சங்கங்களின் சீரழிவு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் காட்டிக் கொடுப்புக்கள் உடல் மக்களின் மேலான சுமை அதிகரித்து முகம் கொடுக்க முடியாத நெருக்கடிகள் ஊடாகவே போராட்டங்கள் தண்ணீரூற்றி அணைக்கப்பட்டன. இதே நேரம் இவ்வருடங்களில் நடந்த ஊர்வலங்கள் பெட்டிசன் ஆராயின்
இந்த வரைபுபடி பெட்டிசன் போடுவதுடன் தங்களை நிறுத்திக் கொள்ளும் வகையில் போராட்டம் கீழிறக்கப்பட்டது. அதன் எண்ணிக்கை அதிகரித்து போராடுவதுக்குப் பதில் வேண்டுகோள் மூலம் தொழிலாளர் போராட்ட உணர்வுகளை கீழிறங்கி அழித்து வருகின்றனர்.
மக்களின் கீழிறங்கிச் செல்லும் வாழ்நிலையுடன் பிரஞ்சு சமூகத்தின் கடனும் அதிகரித்துச் செல்கின்றது. இன்று 35,20,00 கோடி ரூபாயை (இலங்கை) கடனாகக் கொண்டுள்ள பிரான்சில் 1989 ஐ விட இது இரண்டு மடங்காக உள்ளது. ஒவ்வொரு பிரன்சு மக்களின் மீதும் 6 இலட்சம் கடன் சுமை உள்ளது. 1996 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2,48,600 கோடி ரூபா வட்டிக்காக செலுத்தும் தொகை மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 8.2 வீதமாகும். இவை ஒரு புறம் இருக்க இன்னுமொரு பக்கம் பிரன்சு மக்களின் நாளாந்த வாழ்வில் அவனின் கடனை ஆராய்க.
வருமானம் 5000 பிராங்குகள் 9000 பிராங்குகள் 21,000 பிராங்குகள்
வருமானத்தில் குடும்ப பழைய நிதிக்கடன் 5 வீதம் 10 வீதம் 16 வீதம்
வருமானத்தில் குடும்ப பொருட்கடன் 20 வீதம் 42 வீதம் 67 வீதம்
இன்று உலகு எங்கும் எல்லா நாடுகளும் கடனாக உள்ளன. அது மக்களின் முதுகில் சுமத்தப்படுவதுடன், அக்கடனை கட்ட மக்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் அப்பணத்தை எப்படி செலவு செய்தனர் என யாரும் கேட்க முடியாது. கேட்டால் அடக்கு முறை மட்டுமே மிஞ்சு நிற்கின்றது. உலகில் எல்லா நாடும் கடன் எனின் யாரிடம்? விரல் விட்டு எண்ணக் கூடிய சில பன்னாட்டுக் கம்பனிகள், நிதி நிறுவனங்களிடம் தான் உலக நாடுகளுடைய அடகு வைக்கப்பட்டு உள்ளது. அவர்களின் முதலை ஒருக்காலும் திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு ஒரு வருட சராசரி நாட்டு வருமானத்தையே மிஞ்சி செல்கின்றது. வட்டிக்காகவே ஒரு பெரும் தொகை செலுத்துவது தொடர்கிறது. இதைத் தகர்த்த இந்த சமுதாயத்தில் தீர்வு கிடையாது என்பது பிரான்சின் கடன் தொகையே வைத்தே புரிந்து கொள்ள முடியும். 1996 வரவு செலவு திட்ட தேவை 30,97,600 கோடி இலங்கை ரூபா ஆகும். இது பிரான்சின் மொத்தக் கடனை விட கிட்டத்தட்ட 5 இலட்சம் கோடி ரூபாய் குறைவாகும். அதே நேரம் பற்றாக்குறை 3 இலட்சம் கோடியாக ரூபாயாக உள்ளது.
அத்துடன் 31 இலட்சம் கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டத்தைக் கொண்ட பிரஞ்சு அரசு 16.5 இலட்சம் கோடி ரூபாயை வரிகள் மூலமே திரட்டுகின்றது. 5 இலட்சம் கோடி ரூபாயை கடனாக எதிர்பார்க்கும் இவ்வரசு மிகுதியை அரசு நிறுவனத்திலும் வட்டியாகவும் பெறுகின்றது.
அதாவது கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடியை இப்படி அரசு கோருகின்றது. அரசு சார்ந்த தொழிலுள்ள பிரஞ்சு உழைப்பாளிகள் 59 இலட்சம் பேர் மட்டுமேயாகும். மிகுதி 140 இலட்சம் பேரும் தனியார் தொழிற்றுறையிலுள்ளனர்.
அரசு தொழில் துறையிலுள்ளோர்
அரச அலுவலர், இராணுவம் , பொலிஸ் 24,30,000
ஆஸ்பத்தரி ஊழியர் 15,26,400
தொழிலாளர் 84,100
ளுNஊகு (மிகப் பெரிய புகையிரத சேவை) 1,89,100
சுயுவுகு பஸ், பாரிஸ், புகையிரதம் 69,000
மின்சாரம் + ஹால் 1,51,000
கடல் படை 1,14,300
கணக்கு மற்றும் எழுதுவினைஞர் 52,355
சுரங்கத் தொழிலாளிகள் 31,600
பிரஞ்சு வங்கி 28,700
சமய வாதிகள் 28,000
இந்த வகையில் அரசு தொழிற் துறையில் தொழிலாளர்கள் பிரிந்துள்ளனர். இதை இன்று தனியார் மயமாக்கம் செய்யவும், வேலை நீக்கம் செய்யவும் எல்லாவித முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. உதாரணமாக தொலைபேசித் துறையை தனியார் மயமாக்க தீவிரமாக முயல்கின்றது. அதன் தொடர்ச்சியாய் அமெரிக்கா அதைத் தீவிரப்படுத்த கோருகிறது. அதே நேரம் அரசு தனது இராணுவத்தின் எண்ணிக்கையை அரைவாசியாக்க தீவிரமான முயற்சியில் உள்ளது. ஏனெனின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு பெரிய படை வைத்து இருப்பதன் மூலம் எந்நேரமும் பெரிய படையை உருவாக்க முடியம் என இன்றைய நவின இராணுவ உத்திகளை கொண்டு தீர்மானித்தனர். இன்றைய இராணுவத்தின் எண்ணிக்கையை அரைவாசியாக்குவதன் மூலமும் , கட்டாய இராணுவப் பயிற்சியை ஒழிப்பது அல்லது காலத்தைக் குறைப்பது என்ற அரசின் இன்றைய முயற்சி மேலும் வேலையில்லாத திண்டாட்டத்தை தீவிரமாக்க உள்ளது. இவ்விராணுவக் குறைப்பு எந்த விதத்திலும் இராணுவ ஒழிப்பை கொண்டது அல்ல. மாறாக நவீன தேவையைக் கொண்டு உருவாகுவதேயாகும்.
இராணுவமும் அதன் பலமும்
தரைப்படை வான் படை கடற் படை மொத்தம்
பிரான்ஸ் 250,000 90,000 70,000 4,10,000
இங்கிலாந்து 1,16,00 70,500 50,500 2,37,000
இந்த வகையில் படைப்பில் வேறுபாடு இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் இருந்த நிலையில் அண்மைய ஆக்கிரமிப்பில் இங்கிலாந்து கூடுதல் செயல்பாட்டைக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
1991 இல் (புடுழுகு) ஈராக் யுத்தம் இங்கிலாந்து 30,000 பேரை ஈடுபடுத்திய அதே நேரம் பிரான்சு 13,000 பேரை ஈடுபடுத்தியது. 1996 இல் பொஸ்னியாப் பிரச்சனையில் பிரிட்டன் 13,000 பேரை ஈடுபடுத்திய அதே வேளை பிரான்சு 10,000 பேரை ஈடுபடுத்தியது.
அதாவது குறைந்தளவு படைகளைக் கொண்டு பிரிட்டன் பெரிய அளவுக்கு ஆக்கிரமிப்பு படையை நகர்த்த முடிந்தது. இதை பிரான்சு பல்வேறு துறைகளில் இனம் கண்டு படைக்குறைப்பு செய்கின்றது. ஒவ்வொரு வருடமும் கட்டாய இராணுவப் பயிற்சிக்குத் தேவையான செலவு 13,200 கோடி ரூபாய் ஆகும். இது ஒவ்வொருவருக்கும் பயன்படும் செலவு 77 இலட்சம் ஆகும். இதே நேரம் ஒவ்வொரு நபரையும் இணைத்துக் கொள்ள தேவையான ஒவ்வொரு நபருக்கான வருடச் செலவு 15 இலட்சம் முதல் 22 இலட்சம் ரூபா வரை தேவைப்படுகிறது. இது மொத்தமாக 15400 கோடி முதல் 22, 000 கோடி ரூபாவாகும்.
இதே நேரம் 1996 இல் 15 அணுகுண்டை செய்ய ஒதுக்கிய பணம் 2,20, 000 கோடி ரூபாவகும். மறுபுறம் தொம்சன் என்ற உலகில் மூன்றாவது மிகப்பெரிய இராணுவ , இலக்ரோனியக் நிறுவனம் தனியார் மயமாக்க அரசு அறிவித்தள்ளது. இது ஒரு புறம் நடக்க இந்த வருடன் பல பொருட்கள் மீதான விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவைகளை ஆராயின்
• ஆஸ்த்திரியாவில் தங்கி மருந்துவம் செய்யும் கட்டில் காசு 55 பிராங்கிலிருந்து 70 பிராங்குகளாக அதிகரித்துள்ளது - 27 வீதம்
• தொலைக் காட்சி வரி 670 பிராங்ககளிலிருந்து 700 பிராங்குகளாக அதிகரித்துள்ளது - 45 வீதம்
• சிகரட் விலை அதிகரிப்பு 4 வீதம்
• டீசல் விலை அதிகரிப்பு 3.98 கு இலிருந்து 4.14 க்கு – 4 வீதம்
• ரக்சி (வுயுஓஐ) கட்டணம் 3.1 வீதம் அதிகரிப்பு
• பெற்றோல் விலை 5.91 கு இலிருந்து 6.07 கு – 2.7 வீதம்
• முத்திரை உள்ளூர் செலவு 2.80 கு இலிரந்து 3 கு அதிகரித்துள்ளது.
(தொடரும்)