ஏனிந்த மாற்றம் என்னில்
எப்போதும் போல
இல்லை இன்று
அவ்வப்போது இப்படித்தான்
சில செய்திகள் என்னுள்
சந்தோசத்தில் மிதக்கின்றன
ஏனென்று தெரியவில்லை
ஆனாலும் இவற்றுக்காக
 சந்தோசப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன், இருப்பேன்….
பல செய்திகளுக்கு நானே
வருந்துவது  சில
செய்திகளுக்கு
வலிந்து மகிழ்வதும் ஏனென்று
புரியவில்லை……
nepal copy
 
எப்போதும் எரிச்சலுடன் தொடங்கும்
என் காலை  
இன்று நாளிதள்களை
புரட்டியவுடன் காணாமல்
போனது

நேற்று  ஆந்திரத்தில் விவசாயிகள்
தற்கொலை, முந்தா நாள்
கயர்லாஞ்சியில்
கொல்லப்பட்ட எம் மக்கள்
முந்தா நாளுக்கு முந்தி
மார்பு அறுக்கப்பட்ட தாய் மார்கள்…..

எல்லாம்  கவலையாய்
என்னுள் அடைத்து எங்காவது
எப்போதாவது  வெடிக்கும்
அப்படித்தான் இன்றும்…..

 
பல்லாயிரம் மைல்களுகளுக்கு
அப்பால் நேபாளத்தில்
ஒரு பார்ப்பன வெறியனின் பூணூல்
அறுக்கப்பட்டதாம், ஆடைகள்
கிழிக்கப்பட்டதாம்
அவன் முகம்
சிதைக்கப்பட்டதாம்….

அறுக்கப்பட்ட இடத்தில் தான்
நாங்கள் துளிர்க்கிறோம்
கிழிக்கப்பட்ட இடத்தில்
நாங்கள் மலர்கிறோம்
சிதைக்கப்பட்ட இடத்தில்
பிறக்கிறோம்….

அவர்களைப்போல
எல்லாம் கடவுள் செயல்,விதியென்று
சொல்வதில்லை,

இது தண்டனை
பூணூல் கொழுப்பில்
நான் விபச்சாரியின்
மகன் ஆனதற்கு
ஆக்கவைக்கப்பட்டதற்கு தண்டனை…..
 
இதென்ன கொடுமை வெறிபிடித்தவனே
தூற்றலாம் என்னை
அவன் அழுதால்
உனக்கு மகிழ்ச்சியா கேட்கலாம்

 

 

 
பூணூல் அறுபட்டால், எம் மக்கள்
கோயிலில் நுழைந்தால் துடிக்கும்
உன் தசைக்கு  தெரியுமா
 அந்த உணர்ச்சிக்கு பேர் என்னெவென்று? 
நீ சொல்லலாம் அது மனிதாபிமானம்….

நான் பெருமையாய் சொல்லுவேன்
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்