இப்போது இந்திய முழுவதும் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு தனியார் மருத்துவமனைகளை பன்றி காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகளை அமைக்க கோரியது. அதுமட்டுமில்லாமல், அரசு கிங் நிறுவனத்தில் டெஸ்ட் செய்ய உதவும் என்றும் சொல்லியது. ஆனால், ஒரு தனியார் மருத்துவமனையும் இதற்கு முன்வரவில்லை.
இதற்கு அவர்கள் கூரிய காரணம், அவர்களுடைய மருத்துவமனை கட்டடங்கள் தனி வார்டுகளை அமைக்க வசதியாக இல்லை என்று (டைம்ஸ் ஆப் இந்தியா, 12/08/2009).
உண்மையிலேயே அவர்கள் நினைத்தால் தனி வார்டுகளை அமைக்க முடியாதா?
நாடே பன்றி காய்ச்சலால் அவதி படும்போது தனியார் மருதுவமனைகளால் இது கூட செய்ய முடியாதா?
ஆபத்து காலத்தில் உதவி செய்யாத தனியார் மருதுவமனைகளால் நாட்டிக்கு என்ன பயன்?
தனியார் மருத்துவமனைகளின் ஒரே நோக்கம் லாபம் மட்டும் தான?
தனியார்மையம் தான் சரி என்று சொல்லுபவர்களே, இப்போது சொல்லுங்கள் இதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் தரமா?
தனியார் மருத்துவமனைகளின் தரம் இதுதான்:
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் சொல்கிறார், “சில தனியார் மருத்துவமனைகள் யுனானி, ஆயுர்வேத டாக்டர்களை பயிற்சியில் உள்ள டாக்டர்களாக காட்டி பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்”. சில மருத்துவமனைகள் ஆயாக்களுக்கு நர்ஸ் உடை அணிவித்து நிறுத்தி விடுகின்றன (தினமலர் 28/05/2009).
இப்போது சொல்லுங்கள் தனியார் மையத்தின் உண்மை முகம் சேவையா? தரமா? அல்லது லாபம் மட்டும் தானா?
http://rsyf.wordpress.com/2009/08/13/பன்றி-காய்ச்சல்-நோய்க்கு/