உலகின் என்ன நடந்தாலும் அதில் தலையிட்டு ஆதிக்கம் புரியும் பிரஞ்சு, தனது சொந்த மக்களை குளிரில் விறைத்து நடுநடுங்கச் செய்கின்றனர்.

அண்மையில் எடுத்த புள்ளி விபரங்களின் படி , நான்கு லட்சம் பிரஞ்சு மக்கள் வீடு வாசலின்றி உள்ளனர். அவர்கள் வீதிகளிலும் புகைவண்டி நிலையங்களிலும் , வாகனங்களிலும், இடிந்த கட்டிடங்களிலும் வாழ்வதாக புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

 

பாரிஸ் நகரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் அரசாங்க வீடுகள் கோரி பல நீண்ட காலங்களாக காத்துக் கிடக்கின்றனர். உலகையும் , தனது சொந்த மக்களையும் சுரண்டிப் பெறப்படும் பணத்தை விரல்விட்டு எண்ணக் கூடிய சில பணக்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் இப் பணத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும், உலகைத் தமது கட்டுப்பாட்டுக்குகள் கொண்டு வரும் மேலாதிக்க எண்ணங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

 

வேலையற்றோர் தொகையே 34 லட்சமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நீக்கத்தை ஊக்குவிக்கும் வழிவகையில், வேலையற்றோருக்கு வழங்கும் சிறு தொகை உதவிப் பணத்திற்கும் ஒரு முதலாளியின் கீழ் வேலை வாங்க நிர்பந்திக்கிறது. இதன் மூலம் முதலாளி குறைந்த சம்பளத்தில் கூலிகளைப் பெறுவதால் பலரை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அதாவது அடிப்படைச் சம்பளத்தைக் குறைக்காமல் மறைமுகமாக அடிப்படைச் சம்பளத்தை சரி அரைவாசியாகக் குறைத்துள்ளனர்.