Language Selection

நூல்கள் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோவாவில் அநாதைச் சிறுவர்களுக்கான ஆச்சிரமம் நடத்தும் ஃபிரட்டி பீட் என்பவனை இவ் வழக்குத் தொடர்பாக காவல்துறையினர் சோதனையிட்ட போது இந்தியச் சிறுவர்கள் பலருடன் அவன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதைச் சித்தரிக்கும் புகைப் படங்கள் நூற்றுக் கணக்கில் சிக்கின. வாடிக்கையாளர்களை கவர்வதற்கான சாம்பிள்கைளாகவும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நூற்றுக் கணக்கான அத்தகைய புகைப்படங்களை ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவன் அனுப்பி வைத்திருந்ததும் தெரிய வந்தது. விபச்சார விடுதிகளாக அவன் பயன்படுத்தி வந்த இரு இடங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

 

“குழந்தை விபச்சாரத்தின் சொர்க்கம் என்று கூறப்படும் தாய்லாந்தில் சமீபத்தில் அரசுக் கெடுபிடிகள் அதிகமாகி விட்டதால் பொருத்தமான பாதுகாப்பான வேறொரு இடத்தை தெற்காசியப் பகுதியில் தெரிவு செய்ய வேண்டிய நெருக்கடி இச்சுற்றுலா தொழில் அதிபர்களுக்கு ஏற்படுள்ளது. கோவா அதற்குப் பொருத்தமான இடம் , பெண்களையும், சிறுவர் சிறுமிகளையும் இந்த வட்டாரத்தில் கொண்டு வந்து குவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்” என்று கூறுகிறது இன்டர்பொல் என்ற சர்வதேசக் காவல் துறை.

 

இது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் சமீபத்தில் வெளியான சிறியதொரு செய்தித் துணுக்கு. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்த செய்தியும் முதன் முதலில் வெளிவந்த போது செய்தித் தாழ்களில் இரண்டு அங்குல அகலம் நான்கு அங்குல உயரம் தான் இருந்தது.

 

வியட்நாமை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க இராணுவச்சிப்பாய்கள் ஓய்வெடுப்பதற்கும், பொழுது போக்குவதற்கும் தாய்லாந்தை பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் 1967 ல் அமெரிக்காவுடன் கையெழுத்தான போது அதன் விபரீதத்தை தாய்லாந்து மக்கள் பலர் அறிந்திருக்கவி;ல்லை.

 

1971 ல் உலக வங்கித் தலைவர் மெக்னமாறாவின் ஆணைப்படி உலக வங்கி உதவியுடன் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் நாடெங்கும் அறிவிக்கப்பட்ட போதும் விசயம் இன்னதென்று தாய்லாந்து மக்கள் புரிந்துகொள்ளவி;ல்லை.

 

1975 ல் “பொழுது போக்கு வளாகங்கள் சட்டம்” என்றொரு புதிய சட்டத்தைத் தாய்லாந்து அரசு கொண்டு வந்த போது , அச்சட்டத்தில் சிறப்புச் சேவைகள் என்ற பெயரில் ஆடை அவிழ்ப்பு நடனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததை பார்த்த போது தான் சதித் திட்டம் பலபேருக்குப் புரியத்தொடங்கியது.

 

ஆனால் அதற்குக் காலம் கடந்து விட்டது. அந்த எட்டு ஆண்டுகளுக்கள் நாடெங்கும் 20,000 புதிய விபச்சாரவிடுதிகள் தோன்றிவிட்டன. அமெரிக்க ஐரோப்பிய யாத்திரீகர்களின் விபச்சார திருத்தலமாக தாய்லாந்து மாற்றப்பட்டுவி;ட்டது.

 

மக்களின் வறுமையும் , நாட்டின் அந்நிய கடன்சுமையும் அதிகரிக்க அதிகரிக்க அதே நேரத்தில் விபச்சாரமும் அதிகரிக்க தொடங்கியது.


இன்று விபச்சாரத்திற்கு விரட்டப்பட்டிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் எண்ணிக்கை 6 லட்சம். 18 வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடி என்று வைத்தாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்போர் அதில் 10 சதவீதம் பேர்.

 

குழந்தை விபச்சாரத்தின் சொர்க்கமான தாய்லாந்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு எயிட்ஸ்: அரசுக் கெடுபடி அதிகரித்து விட்;டது. எனவே தாய்லாந்துக்கு மாற்றாக கோவாவைத் தெரிவு செய்துள்ளனர். சுற்றுலாத் தொழில் அதிபர்கள் - என்கிறது “இன்டர்போல்”

 

தாய்லாந்தின் வட பகுதி எல்லைNhரமுள்ள கிராமங்கள் அனைத்தையும் நேரில் பார்த்த ஒரு அமெரிக்க நிருபர் எந்தக் கிராமத்திலலும் சிறுமிகளையே பார்க்க முடியவி;ல்லை என்கினறார். தாய்லாந்தின் வட பகுதியிலிருந்த அடர்ந்த காடுகளை வெட்டி ஏற்றுமதி செய்து அப்பகுதியை பொட்டலாக்கி விட்டது அரசு. பாரம்பரியமாக காடுகளைச் சார்ந்து வாழ்க்கை நடத்தி வந்த கிராமப்புற மக்கள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக பெண் பிள்ளைகளை விற்றுவிடுவது சகஜமாகிவிட்டது. 

 

தாய்லாந்தில் ஒரு சிறுமியின் விலை 8000 டொலர்கள். ஜப்பானில் உள்ள விபச்சார விடுதிகளுக்கு 14,0,000 டொலர்களுக்கு அவர்கள் விற்கப்படுகின்றார்கள். அந்தத் தொகை அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டு 30,000 டொலர் திரும்பக் கட்டினால் தான் விடுதலை என்று அச்சிறுமிககளை விடுதிக்குள்ளேயே சிறைவைத்திருக்கின்றனர், விபச்சார விடுதிகளை நடத்தும் மாஃபியா குண்டர்கள்.

 

“இன்னொரு பிறவியே எடுத்தாலும் இந்தத் தொகையை அடைக்க முடியாது, பாலியல் வன்முறையையும் சகிக்க முடியாது.” என்ற நிலையில் சித்திரவதைக்கும் சாவுக்கும் அஞ்சாமல் விடுதியை விட்டுத் தப்பி ஓடி வந்து தாய்லாந்து தூதரகத்தில் சரணடைகின்றனர் நூற்றுக்கனக்கான சிறுமிமிகள்.

 

இப்படி ஒவ்வொரு மாதமும் தாய்லாந்திற்குத் திரும்பி அனுப்பப்படும் தப்பி வந்த சிறுமிகளின் எண்ணிக்கை 250.

 

கிராமங்களில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டு இவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவோர் போக மற்ற சிறுமிகள் தலைநகர் பாங்கொக்கில் உள்ள விபச்சார விடுதிகளுக்கு விற்கப்படுகின்றனர். அந்நிய செலாவனியை அள்ளி தருகின்ற அமெரிக்கர்களும் , ஜப்பானியர்களும் ஜேர்மனியர்களும் தான். இங்கே பிரதான வாடிக்கையாளர்கள்.

 

“தாய்லாந்திற்கே உரிய கதகதப்பை வழங்கும் குட்டி அடிமைகள்”, சொன்னபடி எல்லாம் கேட்டு நடக்கும் பெண் பிஞ்சிகள்“ என்று வக்கிரமமாகவும் பச்சையாகவும் விளம்பரம் செய்து காமவெறிபிடித்த வாடிக்கையாளர்களை கவர்கின்றன.” ஐரோப்பிய செக்ஸ் சுற்றுலா நிறுவனங்கள் “ ஒரு இளம் பெண்ணை மேற்சட்டையில்லாமல் புகைப்படம் எடுத்து அப்படத்தை காதல் சின்னத்திற்குள் பொருத்தி தாய்லாந்திலிருந்து காதலுடன்” என்று அச்சிட்டு விமானப் பயணிகளுக்கு விநியோகிக்கிறது இன்னோர் நிறுவனம். உலகில் எந்தெந்த நாடுகளில் எங்கெங்கே ஓரினச்சேர்க்கைக்கான ஆண், பெண்கள் கிடைக்கின்றனர் என்ற பட்டியலை ஜெர்மனி ஓரினச்சேர்க்கையாளர் அமைப்பு நடத்தும் பத்திரிகையில் பல மொழிகளில் வருகிறது.

 

“பருவமடைந்த விலை மாதர்களுடன் உறவு கொண்டால் “எயிட்ஸ் “ அபாயம் - சிறுமிகள் என்றால் அந்த பயமில்லை.” என்று பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதால் வெள்ளைக் காமவெறியர்களின் பார்வை முழுவதும் சிறுமியர்களின் மீது திரும்பிவிட்டது. பருவம் வராத நிலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் 8 முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கடுமையான இரத்த போக்கிற்கு ஆளாகின்றனர். அதனூடாகவே வாடிக்iகாளர்களைத் திருப்திப்படுத்தும் படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விளைவு 6 லட்சம் சிறுமிகளில் பாதிப்பேர் எயிட்ஸ் நோயாளியாகியுள்ளனர்.

 

நோயாளிகள் எனத் தெரிந்ததும் அச்சிறுமிகள் சொந்த கிராமத்தி;ற்கே விரட்டியடிக்கப்பட்டுகின்றனர். எயிட்ஜின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருந்த கிராமப்புறங்களிலும் இதன் காரணமாக எயிட்ஸ் பரவிவிட்டது.

 

பெண்ணுரிமை அமைப்புக்களும் குழந்தை நல அமைப்பக்களும் இந்தக் கொடுமைக்கெதிராகப் போட்ட கூச்சலை நேற்று வரை எந்த ஐரோப்பிய, அமெரிக்க கனவானும் காதில் வாங்கவில்லை. ஆனால் இன்று தங்கள் குரலில் ஆச்சரியம் தொனிக்க, அப்படியா? தாய்லாந்தில் சிறுமிகளா விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்? எவ்வளவுப் பேர் இருப்பார்கள்? என்று ஒன்றுமே தெரியாதவர்கள் போலக் கேட்கின்றார்கள்.

 

இன்று அவர்கள் கேட்பதற்கு காரணமும் தாய்லாந்து குழந்தைகள் மீதுள்ள அனுதாபமல்ல. விளையாடப் போன தங்கள் அருமைக் குடிமக்கள் எயிட்சை வாங்கி வந்துவிட்டார்களே என்ற மன வருத்தம் தான். புதிதாக ஏதேனும் ஒரு பாதுகாப்பான நாட்டை ஏட்பாடு செய்ய வேண்டும் என்ற கவலை தான்.

 

ஆர்மைன் என்ற தாய்லாந்து சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்படும் போது அவளுக்கு வயது 12 பருவத்திற்கு கூட வரவில்லை. கடற்கரையோர உணவு விடுதியில் நல்ல வேலை வாங்கித் தருகிறோம் என்று பொய் சொல்லி அவளது ஏழைப் பெற்றோரை ஏமாற்றி விபச்சாரத்திற்குப் பெயர் போன புக்கேட் நகரில் கொண்டு வந்து விற்றுவிட்டார்கள் விபச்சார தரகர்கள்.

 

“ஒரு இரவிற்குக் குறைந்தது 3 பேர் எல்லோரும் அமெரிக்கர்கள், யப்பானியர்கள், ஐரோப்பியர்கள் தான்“. என்கிறாள் ஆர்மைன். இரண்டு ஆண்டுகள் இந்த நகரத்தில் உழன்ற பின் அவளை விடுவித்தது காவல் துறை. ஆனால் அதற்குள் ஆர்மைன் எயிட்ஸ் நோயாளியாகி விட்டாள்.


இந்தியாவில் 4 லட்சம் சிறுவர் சிறுமிகள், பிலிபைன்ஸ் 60,000 பேர், பிரேசிலில் 2.5 லட்சம் பேர். அநேகமாக எல்லா ஏழை நாடுகளும் , முன்னால் சோசலிச நாடுகளும் ஐரோப்பிய அமெரிக்க காம வெறியர்களின் விருந்தினர்களாகிவிட்டனர்.


இலங்கை தேயிலை அழுத்தப் பொய் இப்போது பால்மணம் மாறாச் சிறுவர்களைக் கேட்கின்றார்கள் மேல் நாட்டு சுற்றுலா பயணிகள். இவர்களது ஓரினச் சேர்க்கைக்குப் பலியாக்கப்பட்டு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை 40,000.

 

ஒரு இரவுக்குக் குறைந்தது 3 பேர். எல்லோரும் அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள் தான் என்கிறாள் ஆர்மைன். பருவத்திற்கு வராத 12 வயது தாய்லாந்து சிறுமி இவள். 14 வயதில் விடுவிக்கப்பட்ட போது இவள் ஒரு எயிட்ஸ் நோயாளி

 

தனியார் மருத்துவமனைகளைச் சுற்றிலும் மருந்து கடைகள் பெருத்திரப்பது வழக்கம். ஆனால் படபாயில் சில நட்சத்திர மருத்தவ மனைகளைச் சுற்றி விபச்சார விடுதிகள் ஏராளமாக முளைத்திருக்கின்றன. அந்நியச் செலாவனியைக் குறிவைத்தே துவக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனைகளில் தலைவலி, காய்ச்சல் என்று ஏதேனும் ஒரு சாக்கைச் சொல்லி நோயாளியாகச் சேர்ந்துவிடும் அரேபியஷேக்குகள் தங்களுக்கு தேவையான சிறுமிகளை பாதுகாப்பாக வரவழைத்துக் கொள்கிறார்கள்.

 

வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து விபச்சாரத்தில் தள்ளபட்ட டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் போட்டியை பீஇபீ.சி தொலைக் காட்சி ஒளிபரப்பியது. அவர்கள் என்னை அடித்தார்கள். சூடுவைத்தார்கள், பட்டினி போட்டார்கள். 5 நாட்களுக்கு மேல் என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. கடைசியில் என் தன்மானத்தையும் கன்னித் தன்மையையும் வெறும் 25 டொலருக்கு இழந்தேன் என்று கண்களில் நீர் வழியக் கூறினாள் அந்தப் பெண்.

 

தங்கள் நாட்டின் இறையாண்மையையும் மானத்தையும் சில லட்சம் டொலர்களுக்கு அமரிக்காவிற்கும் உலக வங்கிக்கும் விற்றுவிட்ட நாடுகளின் பெண்கள் எல்லாம் தங்கள் மானத்தை ஒன்றிரண்டு டொலர்களுக்கு விற்க நேர்வது தவிக்க முடியாது.

 

பிரேசில் , மெக்சிகொ, பிலிப்பைன்சு, தாய்லாந்து…. அடுத்து இந்தியா


“நமது மரபென்ன , பண்பாடென்ன, வரலாறென்ன! வயிற்றுப் பசிக்காக பெற்ற பிள்ளைகளையே விற்கத் துணியும் தாய்லாந்து விவசாயியைப் போல நம் நாட்டு மக்கள் ஒருக்காலும் நடந்து கொள்ள மாட்டார்கள்.“ என்று யாரும் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டாம்.

 

“பசி வந்திட பத்தும் பற்ந்து போகும் என்பது தமிழ்ப் பழமொழியல்ல, உலகப் பொது மொழி. வயிற்றுக்காக சிறுநீரகத்தை உயிரை பணயம் வைக்கத் தூண்டும் ஏழ்மை, சிறுவர்களை மட்டும் விட்டு வைக்க முடியுமா? மீட்க முடியாது என்று தெரிந்தே சொந்த பிள்ளையைக் கொத்தடிமையாக விற்கத் தூண்டும் வறுமை , அத்துடன் நிறுத்திக் கொண்டுவிடுமா? உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்திலிருந்து சிறுமிகளும் , பெண்களுமாக ஆண்டுக்கு 7,000 பேர் பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிக்கு இறக்குமதியாக்கிறார்களே எப்படி?

 

நேபாளத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு 14 வயதுச் சிறுமியை பம்பாய் விபச்சார விடுதி ஒன்றில் வைத்து 3 வார சித்திரவதை செய்தார்கள். அவள் எதிர்த்து நின்றாள். பிறகு ஓர் இருட்டறையில் அவளை ஓரு நல்ல பாம்புடன் சேர்த்து அடைத்தார்கள். அச்சத்தில் உறைந்து போனாள். இரண்டு நாட்கள் கழிந்தன. முன்றாம் நாள் இணங்கினாள்.

 

தாய்லாந்தின் ஈவிரக்கமற்ற விபச்சாரத்தரகர்களைப் போல 8 வயதுக் குழந்தையைக் கொண்டு வந்து விபச்சாரியாக்குவது நம் நாட்டிலும் நடக்குமா என்ற ஐயம் யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே அது நடந்து கொண்டுதானிருக்கிறது. சிறுநீரகத் திருநாட்டின் தரகர்கள் வேரெந்த ரகம்?

 

மண்ணையும் மக்களையும் அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் ஆளும் நாட்டில் பெண்ணையும் குழந்தைகளையும் அவனுடைய படுக்கையிறைக்கு விற்கும் தரகர்களா இல்லாமல் போய்விடுவார்கள்?

 

“அது ஒன்றும் கஷ்டமில்லை ருமேனியாவுக்கப் போனேன். கேட்பாரில்லாத பெண்கள் யாரென்று தேடினேன். அவர்களை அழைத்து வந்து பெல்ஜியத்தில் விற்றுவிட்டான். பிறகு அவர்களை அழைத்து வந்து பெல்ஜியத்தில் விற்று விட்டேன். பிறகு அவர்கள் பல கைமாறி விற்கப்பட்டார்கள். எனினும் கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது. தொழில் ரொம்பச் சுலபம் ஒரு கிலோ ரொட்டியை விற்பது போலத்தான்.” என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தான் ஒரு கங்கேரிய விபச்சாரத் தரகன். முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிய நாடல்லவா!


“ஒன்று மதம் இன்னொன்று போலீசு இவையிரண்டும் தான் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள்“ என்று முதலாளித்தவத்தைக் கேலி செய்தார் லெனின். ஆனால் ஏட்டளவில் விபச்சார ஒழிப்புப் பற்றிப் பேசிய காலம் கூட இன்று ஒழிந்து விட்டது.


“ குழந்தை உழைப்பைத் தடை செய்வோம்” என்று முழங்கிவிட்டு இன்று குழந்தைத் தொழிலாளர் நலச் சட்டம் கொண்டு வந்து அதையே ஊக்கப்படுத்தி ஒழுங்குப்படுத்தவது போல.

 

விபச்சாரத்திற்கும் ஒரு வழி கண்டு பிடித்திவிட்டார்கள். “விலை மாதர்கள்“ என்ற சொல் அவர்களை இழிவுபடுத்தவதால் (நன்றாகக் கவனியுங்கள். அந்தத் தொழில்ல, சொல் தான் அவர்களை இழிவுபடுத்துகின்றதாம். பாலியல் தொழிலாளர்கள் என்ற புதிய கௌரவமான சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கின்றன முதலாளித்தவப் பத்திரிகைகள்.

 

சிவகாசி, மத்தாப்பூவுக்குக் குழந்தைகள்“ தவிர்க்கவியலாத “தேவையாகிவிட்டதைப் போல, நாளை சுற்றுலா வளர்ச்சிக்கும் அந்நிய செலவானி வருவாய்க்கும் குழந்தைகள் தவிர்க்கவியலாதவர்கள் ஆகலாம். “பருவம் வராத பாலியல் தொழிலாளர்கள்“ என்றொரு புனிதப் பெயர் சூட்டி இதையும் இந்த அரசு நிறுவனமாக்கிவிடலாம்.


பாலுறவு என்றால் என்னவென்றே தெரியாத, அதற்குரிய பருவமும் வராத சிறுவர்களும் , சிறுமிகளும் விபச்சாரத்திற்கு உட்படுத்துவதன் சமூக விளைவுகள் என்ன? சில ஆண்டுகள் இத்தகைய பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டபின் ஒருவேளை அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்? வாழ்க்கை மதிப்பீடுகள் என்னவாக இருக்கும்?

 

“திரும்பவும் எங்கள் நாட்டுக்குப் போய் என்ன செய்வது? குடும்பத்தோடு பட்டினி கிடப்பதா? ஆணாயிருந்தால் எவனையாவது கொலை செய்துவிட்டுப் பணம் திருடியிருப்பேன். பெண் என்பதால் விபச்சாரி ஆகிவிட்டேன்.” என்றாள் பம்பாய் விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஒரு நேபாளப்பெண்.

 

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க சிறார்களில் கணிசமானோர் அவ்வப்போதைய கை செலவுக்காக தொழிலில் ஈடுபடுபவர்கள் என்கிறது ஓர் அமெரிக்க ஆய்வு. இங்கே பெரும் நகர்பறங்களில் ஏற்கனவே தோன்றிவிட்டது இந்தப் பண்பாடு.

 

சில வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப மாரிக் என்ற சுறுவனுக்க பெண் வெடம்போட்டு அனுப்புகிறான் ஒரு தரகன். நடக்குமிடம் - பெல்சினின் மாஸ்கோ.

 

பம்பாய் விபச்சார விடுதிகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு மீட்டுக் கொண்டவரப்பட்ட பெண்களிற் சிலர் திரும்பவும் அங்கேயே சென்று விட விரும்பினர். காரணம்? “ இந்த நகரத்திற்கு அந்த நரகமேமேல்“ என்பது தான் அவர்களது பதில்.

 

தாய்லாந்தின் மரமும், இலங்கையின் தெயிலையும் , வங்களாதேசத்தின் சணலும், காஸ்மீரின் பனிமலையும், பாங்கொக்கின் பெண்களும், கோவாவின் சிறுவர்களும் தங்கள் நுகுர்வக்காகவே இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றன என்று கருதும் சொர்க்கபுரி வாசிகளாக அமெரிக்கர்கள் என்ன சொல்கிறார்கள்?


“மீண்டும் வியற்நாம்“ என்ற தலைப்பில் அமெரிக்கர்களிலிருந்து வெளிவரும் நியூஸ்விக் வார இதழ் (நவம்பர்”94) வெளியிட்டுள்ள புகைப்படக் கட்டுரை கீழ்க்கண்டவாறு துவங்குகிறது:


“வியற்நாமைப் போலவே வேறெந்த ஆசிய நாடும் அமெரிக்க மனங்களை ஆக்கிரமித்ததில்லை. ஒரு தலைமுறைக்கு முன் அமெரிக்க இரத்தத்தையும் செல்வங்களையும் ஏராளமாக உறிஞ்சிக் குடித்த ஒரு சிறிய ஏழை நாடு வியற்நாம்.” அமெரிக்கப் போர் விமானங்கள் வீசிய குண்டுகளின் கந்தக நெடி

 

பிரேசில் மெக்சிகொ , பிலிப்பைன்ஸ்;, தாய்லாந்து , இந்தியா தங்கள் நாட்டின் மானத்தைச் சில லட்சம் டாலர்களுக்கு அமெரிக்காவிடம் விலை பேசிவிட்ட நாடுகளின் பெண்கள் , தமது மானத்தை ஒன்றிரண்டு டாலர்களுக்கு விற்க போவது தவிர்க்க முடியாது.

 

கூட இன்னும்’ வியட்நாம் மண்ணிலிருந்து நீங்கவில்லை: அதற்கள் வரலாற்றைத் தலைகீழாக திரிக்கும் இந்தக் கயவர்கள் தான் இப்போது கோவாவிற்கு வரவிருக்கின்றார்கள்.


தாய்லாந்தை குதறிய நாய்கள் இப்போது தங்கள் பார்வையை நம்பக்கம் திரும்பியுள்ளன. இந்தியச் சிறுமிகளை விபச்சாரிகளாகவும், சிறுவர்களை விபச்சார தரகர்களாகவும் மாற்றிய பின் எழுதுவார்கள்.

 

“இந்தியா தனது சிறுமிகளையும் சிறுவர்களையும் வைத்து அமெரிக்க இளைஞர்களை மயக்கி , அவர்களது செல்வத்தையும் ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்ட வேசிகளின் தேசம்” என்று.


அனுமதிக்கப் போகிறோமோ இந்த அமெரிக்க நாய்கள்?


- சூரியன்
நன்றி : புதிய கலாசாரம்