Language Selection

சமர் - 16 : 08 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செப்டெபம்பர் 13 ம் திகிதி இரவு 1000 பாசிச விமாசனங்கள் லண்டன் மீது தாக்குதலைத் தொடுத்தது. இங்கு பிரிட்டீஸ் விமானங்களுடன் வானில் கடும் சண்டை நடைபெற்றது. ஜெர்மன் 60 விமானங்களையும் , பிரிட்டன் 26 விமானங்களையும் இதில் இழந்தது. இதையடுத்து லண்டன் மீதான தாக்குதல் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மொத்தமாக பிரிட்டன் மீத 46000 க்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய ஜெர்மன், இதில் 60,000 டன் குண்டுகளை வீசியிருந்ததுடன் 1, 700 விமானங்களையும் இழந்திருந்தது.

பிரிட்டன் 915 விமானங்களை இழந்து , 500க்கு அதிகமான விமானிகளைப் பறிகொடுத்தும் 10 லட்சம் கட்டிட சேதங்களுடன் 40,000 மக்களையும் இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து கிட்லரின் படைத் தலைமை இரண்டு முக்கிய விடயத்தை விவாதத்திற்கு உள்ளாக்கியது.

 

1. பிரிட்டீஸ் பிரச்சனை
2. கிழக்கத்தைய பிரச்சனை

 

என இரண்டு பிரச்சனைகள் உள்ளதென ஜெனரல் கால்டர் தனது நாட்குறிப்பில் எழுதினார். அதை பார்ப்போம்.

 

“ருஷ்யா முறியடிக்கப்பட்டால் பிரிட்டன் தனது கடைசி நம்பிக்கையை இழந்து விடும். “

 

1940 ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் ஜெர்மனி அட்லான்டிக்கில் தனது சக்தியைப் பலப்படுத்தியது. இதன் மூலம் நேச நாட்டினதும் , நடுநிலை நாடுகளினதும் 7.6 மில்லியன் டன் மொத்த எடையைக் கொண்ட போக்குவரத்து மற்றும் போர் கப்பல்களை மூழ்கடித்தது. இவற்றில் 53.4 வீதம் நீர் மூழ்கிகளை இழந்தது. பிரிட்டனின் கடல் போக்குவரத்துக்கள் முற்றாக சீர்குலைக்கப்பட்டது. இதையொட்டி பிரிட்டீசின் அதிகார பூர்வ வரலாற்றில் குறிக்கப்பட்டதை பார்ப்போம்.

 

“எதிரி மட்டும் தனது ஆரம்ப தாக்குதல் சக்தியை இன்னும் சிறிது காலம் மறாமல் அப்படியே வைத்திருந்தால் அது எங்களுக்கு பெரும் கேடான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். “  ஐh. படலர்.ஐh , குலாயர் - பெரும் போர்த் தந்திரம் -

 

பிரிட்டிஸ் படை தனது 1941 மே 27 ம் திகதி ஜெர்மனியின் பெரும் போர் கப்பலான “பிஸ்மார்க்“ கப்பலை மூழ்கடித்தது. இது ஜெர்மனிக்குப் பலத்த இழப்பாகவே அமைந்தது.

 

1940 மார்ச் 1 ம் திகதி ஜெர்மன் பல்கேரியாவுக்குள் நுழைந்தது. ஏப்பிரல் 6 ம் திகதி யூகோசிலாவாக்கியா, கிரிஸ்சுக்கள் புகுந்தது. ஏப்ரல் 15 ம் திகதி நிபந்தனை அற்ற சரணாகதியில் யுக்கோசிலாவாக்கியா கையெழுத்திட்டது. ஏப்ரல் 23 ம் திகதி கிரிசும் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்தி;ட்டது. ஏப்ரல் 27 ம் திகதி ஜெர்மன் எதென்சில் நுழைந்தது. இங்கு இருந்த பிரிட்டிஸ் படை 15 ஆயிரம் பேரை பறிகொடுத்து, சகல ஆயுதங்களை போட்டுவிட்டு நாட்டை விட்டே வெளியேறியது. இவ்வாறாக 1941 ஜீன் மாதங்களில் மத்திய ஐரோப்பாவின் எல்லா நாடுகளையும் ஜெ;மனியும் , இத்தாலியும் கைப்பற்றி இருந்தது. இவற்றின் சகல மூலப்பொருட்களையும் சோவித் யுத்தத்திற்காகத் தயாரித்தது.


இதே நேரம் 1940 ஆண்ட ஜீனில் மத்திய தரைக் கடல் பிரதேசத்திலும், வடக்கு ஆபிரிக்காவிலும் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் காலனிக்காகவும் போர் தொடங்கியது. 1940 கேஸ்டில் இத்தாலி , சோமாலி , கெனியா , சூடானின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. சூயஸ் கால்வாயைக் இலகுவில் கைப்பற்ற முடியுமென கனவு கண்ட இத்தாலியின் முடிவு தவறாக அமைந்தது. இதையடுத்து யுத்தம் நிறுத்தப்பட்டது. இதைப் பயன்படுத்திய பிரிட்டீஸ் எதிர் தாக்குதலைத் தொடுத்தது. இதற்கப் பின் 1941 ஆம வரை தேசபக்த சக்திகளின் உதவியுடன் சோமாலியா , எரிட்டரியா, எத்தியோப்பியா, ஆகிய பிரதேசங்களை விடுவித்தது. இதை அடுத்தும் இத்தாலியின் பெரும் இழப்பை அடுத்தும் ஜெர்மனிய படைகள் அனுப்பப்பட்டன. 1941 மார்ச் 31 ல் ஜெர்மனி - இத்தாலி தாக்குதல்களை மிண்டும் தொடங்கியது. ஆங்கிலேயர் குழப்பமடைந்து வேகமாக பின் வாங்கத் தொடங்கினர். இவர்கள் 90. கி.மீ வரைக்கும் முன்னேறினர். இது நிறுத்த வேண்டிய வகையில் ஜெர்மன் நிர்பந்திக்கப்பட்டது. ஏனெனில் சோவியத்தின் மீதான யுத்தத்தை அது தொடங்க இருந்தது. இதையொட்டி கிட்லர் முசேலினிக்கு எழுதிய கடிதத்தைப் பார்ப்போம்.

 

“ 1941 இலை யுதிர் காலத்திற்கு முன் எகிப்தின் மீது தாக்குதல் கிடையாது.” -Les letters secretes –


பிரான்சின் சரணடைவுடன் அதன் கடற்படை ஓரான் , அல்ஜீரியா, கசபிளான்கா, மற்றும் தோக்கான் போன்ற துறைமுகங்களில் இருந்தது. இதை பிரிட்டீஸ் படை அழிக்கும் வகையில் 1940 யூலையில் சுற்றி வளைத்தது. பெரும் தாக்குதலுக்கு உள்ளாக்கியது. ஒரு சில கப்பலைத் தவிர மிகுதி முற்றாக அழிக்கப்பட்டது. இதையொட்டி டேகோல் எழுதியதைப் பார்ப்போம்.


“காட்டுதிராண்டித் தனமான புயல் வீசின்.. ஆனால் பிரஞ்சுக் கடற்படை ஆங்கிலேயர்களுக்கு எதிரான பகைமை நடவடிக்கைகளை எப்பொழுதுமே திட்டமிட வில்லை. “ டேகோல் - யுத்த நினைவுக் குறிப்புகள் -


சோவியத் மீதான தயார்படுத்தப்பட்ட நிலையில் இதை கி;டலர் பின்வருமாறு ‘மாய்ன் காம்ஃப்’ என்ற நூலில் எழுதினான்.


“ ஐரோப்பாவில் எல்லா நிலப் பரப்புகளையும் பெறுவதைப் பற்றி பேசப்படுகையில் , இதை முக்கயமாக ருஷ்யாவிடம் இருந்து தான் பிடுங்க வேண்டும். அடிப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் புதிய ஜெர்மனியப் பேரரசு தெவ்தோன் வீரத்திருத்தகைகளால் இடப்பட்ட பாதையில் மீண்டும் பயணத்தைக் தொடங்க வேண்டும்.”  கிட்லர் -Mein kambf-


இந்த வகையில் சோவியத்தைக் கைப்பற்றுவதும் , அதன் முக்கியத்துவத்தையும் கிட்லர் அறிவித்தான். அதற்காக தனது சக்திகள் அனைத்தையும் சோவியத் முனையில் குவித்தான். அத்துடன் சோவியத்தை சுடுகாடு ஆக்கும்படி அறிவித்தான். அதை கிட்லர் ஜெனர்னர்கள் முன் பேசும் போது கூறியதைப் பார்ப்போம்.

 

“சோவியத்துடனான யுத்தத்தில் ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைப் பற்றிப்; பேசப்படுகிறது. நாம் இக்கண்ணோட்டத்தில் பார்க்காவிடில் நாம் எதிரியை ஏதோ நிறுத்தி வைப்பதற்காக நாம் யுத்தத்தை நடத்தவில்லை.” -ஃ பெ. கால்டர்- யுத்த நாட்குறிப்பு , தொ-2-


இந்த வகையில் கம்யூனிச அபாயம் மீது படுகொலைகளைத் தீர்வாக வைக்கப்பட்டு 2 கோடி மக்களை கொன்றழித்தான். அந்த வகையில் யுத்தம் சோவியத் மண்ணில் ஆரம்பித்தது.


மேற்கத்தைய ஊதுகுழல்கள் சோவியத்தின் பெரும் வீத பங்களிப்பை மறுத்து தாமே கிட்லரை தோற்கடித்தனர் என்ற கட்டுக் கதகைள் மூலம் மக்களை ஏமாற்ற முனைந்து நின்றனர்.


போலந்து 3 வாரங்களிலும் , பெல்ஜியம் 18 நாட்களிலும் , நோர்வே 2 மாதத்திலும் , பிரான்ஸ் 44 நாட்களிலும் ஜெர்மனியிடம் தோல்வி பெற்றன. ஆனால் சோவியத்தால் துரத்தியடிக்கபட்டது. சோவியத் தாக்குதலின் முன்னர் ஜெர்மனிய படை பெரும் பலத்துடன் இருந்தது.

 

1.முக்கிய குறியீடுகள் 

2.ஜெர்மனிய ஃ அஸ்திரியா 

3.ஜெர்மனியும் அதன் துணை நாடு – ஆக்கிரமித்த நாடு

1                                                                                   2                                      3
நிலப்பரப்பு(ஆயிரம் ச.கி.மீ)                         554                                  3277
மக்கள் தொகை (மில்லியன்)                      76                                    283
எஃகு உற்பத்தி (மில்லியன் டன்)               20                                      43.6
நிலக்கரி உற்பத்தி(மில்லியன் டன்)       185                                    348
எண்ணை உற்பத்தி (மில்லியன் டன்)       0.5                                   10
மின் சக்தி (மில்லியன் கிலோவைட்)     52                                    110
தானிய உற்பத்தி (மில்லியன் டன்)         13.6                                    54.8

 

இதை வகையில் 30 செக்கோஸ்லொவாக்கியா , 92 பிரஞ்சு , 12 பிரிட்டீஸ் , 32 பெல்ஜியம் , 18 ஹொலந் , மற்றும் 6 நோர்வே டிவின்களின் ஆயுதங்களும் , படைத் தளபாடங்களுக்கு ஜெர்மனிய வசம் இருந்தன. ஜெர்மனிய பொருளாதாரம் இராணுவ வழிகளில் கொண்டுவரப்பட்டும் இருந்தன.

 

1940-41 ல் ஆண்டு ஒன்றுக்கு 10,000 முதல் 11,000 விமானத்தையும் 14,000 கனரக டாங்கிகளையும் உற்பத்தி செய்தது. சோவியத்தின் மீது தாக்கதலைத் தொடுக்க முன் ஜெர்மன் விமானங்கள் 324 தடவைகள் எல்லையை மீறின. 5000 ஜெர்மனிய வேவுக் காரர்களை சோவியத் பரப்பில் கைது செய்தனர். 1940 டிசம்பர் 180ல் சோவியத் மீதான தாக்குதல் ஆனை மீது கிட்லர் கையெழுத்து இட்டான். 

 

இது “ பார்ரோஸ்ஸா “ என அடையாளப் பெயரைப் பெற்றது. 1941 ஆகஸ்ட் 15 வாக்கில் மொஸ்கோ விழுந்து விடும் , அக்டோபர் 1 க்கள் சோவியத்துடன் யுத்தம் முடிந்து விடும் அதாவது 2-3 மாதங்களுக்குள் கைப்பற்றி விட முடியுமென கிட்லர் அறிவித்தான். இதையொட்டி வெளியான ஆனையைப் பார்ப்போம்.


“பிரிட்டனுக்கு எதிரான யுத்தம் முடியும் முன்னதாகவே ஜெர்மனிய இராணுவம் குறுகிய கால நடவடிக்கையின் போது சோவியத் ருஷ்யாவை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். “  - கெ. ரெயன்ஹார்ட்- - மாஸ்கோ அருகே நடந்த திருப்பம்”