Language Selection

சமர் - 16 : 08 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமர்-13 ல் நாம் டி.சிவராம் பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைத்திருந்தோம். எமது விமர்சனம் சரியாகவோ இருந்ததை மீண்டும் சரிநிகர் - 69 ல் டி. சிவராமின் கட்டுரை உறுதி செய்துள்ளது.


கடந்த சமர் இதழ்கள் முதல் புலிகள் தொடர்பான எமது நிலை என்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலையின் எல்லைக்குள்ளேயே விமர்சித்து வந்தோம். அதாவது தமிழ் மக்கள் தமது சொந்த போராட்டம் சாராத எந்த வகையான புலிகளின் தோல்வியும் மொத்த தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும் என்பது சமரின் நிலை. இந்த வகையில் தமிழ் மக்கள் தமது சொந்த போராட்டத்தை கட்டி அமைக்கும் வகையில் புலிகளின் தவறுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றோம். இன்னும் ஒரு நிலையில் புலிகளின் வெற்றி என்பது சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே. இது மட்டுமே உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றியாக இருக்கும்.

 

எமது விமர்சனம் என்பது இதற்குள் இருந்தே செய்கின்றோம். சரிநிகர் இன்று புலிகளின் தவறுகளுக்கு பச்சையாகவே வாயுபச்சாரம் செய்ய புறப்பட்ட நிலைமைகளில் இவ்விமர்சனம் அவசியமானதாகவே உள்ளது. இதை சரிநிகர் பிரசுரிக்க மாட்டார்கள்


(எமது கட்டுரைகளுக்கு நடந்தது போல) என்பதால் நாமே பிரசுரிக்கின்றோம்.சரிநிகர் என்பது சரியான சமன் என்ற கோட்பாட்டைக் கைவிட்டு வருவது தெளிவானது. சரிசமன் எனக் கூறிய படி தவறுகளுக்கு மட்டும் எப்போதும் ஒரு தலைப்பட்சமாக கருத்து சுதந்திரம் வழங்கி வருபவர்கள்.

 

டி.சிவராம் என்பவர் யார்? இன்று அவர் எப்படி புலிகளைப் பாராட்ட முடிகின்றது? இது போன்ற கோள்விகளை கடந்த கால வரலாற்றுடன் தான் தேட வேண்டும். டி.சிவராம் Pடுழுவுநு அமைப்பில் உமா மமேஸ்வரன் செய்த எல்லாவற்றுக்கும் உறுதுணையாக நின்றும் , அவைகளுக்கு கொள்கை கொடுத்த ஆசாமி.

 

PLOT அமைப்பில் சில நூறு இளைஞர்களின் படுகொலைக்கு உற்ற துணையாக நின்றதும் அல்லாமல் பல கொலைகளை நேரடியாகத் தலையேற்றுச் செய்தவர்தான் இந்த டி.சிவராம். ஒரு சில பெண்களை கற்பழிக்க முனைந்தவர் பல பெண்களையும், ஆண்களையும் நிர்வாணமாக்கி சித்திர வதை செய்து மகிழ்ந்தவர். விடுதலைப் போராட்டம் என்ற போர்வையில் ஒரு புறமும், மறுபுறம் இலங்கை உயர இஸ்தானிகளுடன் இந்தியாவில் விருந்துகள் உண்டு காட்டிக் கொடுத்தவர். விடுதலைப் போராட்டமும் மறுபுறம் இந்திய றோ (RAW) வுடனும் கூடிக்குலாவி காட்டிக் கொடுத்து வந்தவர். விடுதலைப் போராட்டம் ஒரு புபறமும், பிற்போக்கு நாடுகளின் கைகூலிகளுடன் கூடிக் கூத்தாடியவர். இப்படி PLOT க்குள் நடந்த எல்லா பிற்போக்கு வியாதிகளுக்கும் சளைக்காமல் ஒத்துழைத்து பங்கு கொண்ட ஒரு நயவஞ்சகன்.

 

இன்று புலிகளுடன் ஓர் உறவு, நியாயப்படுத்தல், என்றால் அது புலிகளை மெச்சுவது அவசியமானது என்றே அர்த்தமாகும். புலி உறுப்பினர்கள் ஆறு பேரை சுழிபுரத்தில் இவரின் அமைப்பு படுகொலை செய்தபோது அதை மறைக்க உரத்துக் குரல் கொடுத்தவர். தேவையான இ;டங்களில் நியாயப்படுத்தியவர். அச்சுவேலியிலிருந்து இவரின் அமைப்புக்கு பயிற்சிக்குச் சென்ற ஒருவர் புலி ஊடுருவல் என்ற சந்தேகத்தின் பெயரில் அச்சுவெலியிலிருந்து சென்ற அனைவரையும் கொன்றபோது அதற்கும் உறுதுணையாக நின்று வக்காளத்து வாங்கியவர்.

 

PLOT யை புலிகள் தடை செய்த போது, PLOT யை இந்தியாவிடம் அடகு வைக்கவும், பின் இலங்கை அரசுடன் கூடிக் குலாவும், தேசிய விடுதலையை காட்டிக் கொடுக்கவும், துரோகம் இழைக்கவும் முக்கிய துரோக நடவடிக்கையில் ஈடுபட்டு PLOT க்குள் ஒரு தலைப்பட்ட சமாக புலி எதிர்ப்பை ஆரம்பம் முதலே ஊட்டி வளர்த்ததில் டி.சிவராம் மிகப் பெரும் பங்கு வகித்தவர். இன்று புலிகளைப் புகழ்ந்து வக்காளத்து வாங்குகிறார் எனின், புலிகளை அழிக்க சதி செய்கின்றார் என்பதே அர்த்தமாகும்.

 

புலிகளுக்கு வக்காளத்து வாங்க என்ன செய்கின்றார்? அதிலும் கூட மாபெரம் மோசடி! சொந்தக் கருத்துள்ள இரு சிங்கப் பத்திரிகை ஆசிரியர்களின் பெயரால், ஒரு பயணக்கட்டுரையின் மூலம் ஒரு நியாயப்படுத்தல். டி.சிவராம் தனது சொந்தக் கருத்துக்கள் என நேரடியாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் பாவம் இவ்விருவரும் நண்பன் என நம்பும் ஒரு மோசடிக்காரனின் கையொப்பமாக மாறியது சோகமானதே. அதாவது PLOT இன் தமிழீழ விடுதலைப் போராட்டம் போல..

 

அஜித் சமரநாயக்கா(ஒப்சேவர் பத்திரிகை ஆசிரியர்), விக்டர் ஐவன் (றாயவ பத்திரிகை ஆசிரியர்) ஆகிய இருவரின் பெயரால் அவர்கள்.

 

புலிகளை ஒட்டிய முன்னய கருத்தை மாற்றி உள்ளதாக அவர்களின் பெயரால் டி.சிவராம் ஒரு குழையடிப்பு செய்துள்ளார். இந்த மோசடிக்கு சரிநிகர் ஒரு பக்க விளம்பரம் மூலம் பாய்விரிப்பு.

 

அவர்கள் மூலம் டி.சிவராம் புலிகள் தவறிழைக்கவில்லை என்கிறார். புலிகள் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்கிறார். புலிகளின் தேசிய விடுதலையின் பால் சரியான சக்திகளைக் கைது செய்யவில்லை என்கிறார். முஸ்லிம் மக்களை விரட்டவில்லை என்கிறார். அதாவது டி.சிவராம் அந்த இரு பத்திரிகை ஆசிரியர்களின் பெயரால் புலிகள் பற்றிய ஒரு பொய்ப் படத்தை (புலிகளே ஒத்துக் கொண்டவைகளை) சரிநிகர் மூலமாக பிரச்சாரம் செய்ய முற்படுகின்றார். இதற்கு சரிநிகர் வேறு உடந்தை.

 

முஸ்லிம் மக்களை வெளியேற்றியது, கைதிகளாக உள்ளவற்றை எல்லாம் புலிகளே ஒத்துக் கொண்டது மட்டுமன்றி மீளக் குடியமர்த்துவது தொடர்பாகக் கூட அண்மையில் புலிகள் பேசினர். ஆனால் நடக்கவில்லை. இதை சிவராம் மறைத்து புலிகளுக்கு வாக்காளத்து வாங்க சரிநிகரானது பச்சையாக துணைபோகிறது. புலிகளின் சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என்பதை புலிகள் ஒப்புக் கொண்டும், அவர்களை விடுவிப்பது பற்றி அண்மையில் கூறினர். ஆனால் விடவில்லை. கைதிகளே இல்லையென டி.சிவராம் வாதிட அதற்குச் சரிநகர் என்ன வக்காளத்தா?

 

புலிகள் அரசியலில் தவறுவிட்டனர் என்தை(குறிப்பாக பிரேமதாஸா ஏமாற்றியதை ஒத்துக் கொண்ட புலிகள்) மறுக்கும் டி.சிவராம் அதன் துணையாக நிற்கின்றது சரிநிகரும். இது போன்று பல…… அவைகளில் பலவற்றை புலிகள் ஏதோ ஒரு வகையில் யாருக்காவது ஒத்துக் கொண்டது உண்மையே ஆகும்.

 

இச்சம்பவங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது, விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி சீரழிக்கின்றது. இது புலியையே சிலவேளை பாதிக்கின்றது. அதனால் ஒத்துக் கொள்ள சில வேளை நிர்ப்பந்தித்தாலும் அதில் சுய விமர்சனம் செய்யவோ, அவைகளைக் கைவிடவோ தயாராக இல்லை. மாறாக அதற்குள் வேகமாகச் செல்கின்றனர்.

 

இந்நிலையில் டி.சிவராம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சரிநிகர் வாசகர்களுக்கு புலி பற்றிய ஒரு பொய்ப் பிரச்சாரம். அதற்குச் சரிநிகர் பச்சையாகத் துணை போகிறது. டி.சிவராம் புலிகள் பற்றி இன்றைய நிலை என்பது புலிகளைச் சீரழிக்க. மேலும் அவர்கள் மக்கள் விரோதச் செயல்களைச் செய்ய தூண்டுவதன் மூலம் புலிகளுள் ஊடுருவி அதன் பாலுள்ள சிங்கள இனவெறிக்கு விட்டுக் கொடுக்க மறுத்துப் போராடும் உணர்வுகளை அழிக்க முனைப்புப் பெற்று நிற்கும் ஒரு மோசடிக் காரனின் தந்திரமாகும். இவை இட்டு தமிழ் மக்கள் எப்பொழுதும் மிக அவதானமாக இருக்க வேண்டும்.